குருமஹிமை ...இசை ...மோகன ராகப்பாடல்கள் பகுதி ...3
"தவர்வாள் தோமர " என்று தொடங்கும் பாடல்
திருவோத்தூர் திருத்தலம்
இத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து 19 கி.மீ.தொலைவில் உள்ளது.
மற்ற விபரங்களுக்கு
http://temple.dinamalar.com/
"அகரமுமாகி "என்று தொடங்கும் பாடல்
பழமுதிர்சோலை திருத்தலம்
தல மகிமையைப்பற்றி அருளாளர் புனே ஜானகி மாமி அளித்துள்ளார் .நன்றிகள் பல.
முருகா சரணம். அறுபடைவீடுகளில் ஒன்றான, திருமலிவான ,பழமுதிர் சோலைக்கு -- அதாவது, செல்வ வளம் கொழிக்கும் பழமுதிர் சோலைக்கு வருகிறார், அருணகிரிநாதர். அந்த கங்கையே, காங்கேயனைக் காண வந்தாளோ எனும் படி, ஊற்றெடுத்துப் பொங்கும் நூபுர கங்கை. சரவண தீர்த்தத்தில் நீராடி, திருநீறு பூசி, முருகனை வழிபடும் அடியார் கூட்டம். பார்த்துப், பார்த்துப், பாடிப் பாடி பரவசமாகிறார் அருணகிரியார் " அகரமுமாகி ... ... வருவோனே" _அகரம் தமிழுக்கு முதற்சொல்.முருகா, அதுபோல் நீ பொருள்களுக்கெல்லாம், முதன்மையானவன். விண்ணோருக்கும், மண்ணின் மாந்தருக்கும் தலைவன் .எல்லோருக்கும் மேம்பட்டவன். உள்ளத்தினுள்ளே" நான் " என்று ஒளிர்கின்ற ஆன்மாவாய் இருப்பவன்.படைத்துக் , காத்து, அழிக்கும் மும்மூர்த்திகளின் ஒரே உருவமாய் வந்தவன். அவர் களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். பூவுலகாய், ப்ரபஞ்சமாய் விரிந்தவன் நீ. இனிமையnன என் இறைவா என. முருகன் என்ற ஸ்வ பத்தில் இருக்கும் பர தத்துவத்தை, விளக்குகிறார் சீலமுள தாயர், என்று தொடங்கும் பாடலில், "சீலமுள தாயர், தந்தை ........ தேடினது போக ........ அன்பு புரிவாயே" __ நல்ல குலம், நல்ல பெற்றோர், குணவதியான மனைவி, மக்கள் செல்வம், வீடு வாசல், சொத்து சுகம் இனவதான் நிரந்தரம் என நம்பினேன். செல்வத்தின் இறுமாப்பில் தீய வழி சென்ற பொழுது நிரந்தரம் என நினைத்த எல்லாம் கை விட்டுப் போயின. கடையனாய் வீழ்ந்து பட்டேன். உன் பாதம் சரணம் என வந்தேன். மயில் மிசை வந்து என் வினைகள் அழிப்பாய் வேலவா என வேண்டுகிறார். தன் வாழ்க்கையைப் பாடமாக எடுத்துக் கொன்டு எல்லோரும் நல்வழி நடக்க வேண்டுமென வலியுறுத்தும் பாடல். காரணமாக வந்து என்ற பாடல் - "காரணமதாக வந்து புவி மேலே ...... ஆரமுதமான தந்தி மணவாளா ". _ முந்தை வினைகளின் காரணமாக, மீள முடியாத, பிறப்பு - இறப்புச் சுழற்சியில் சிக்கித் தவிக்கிறேன் இதிலிருந்து நான் விடுபட வேண்டும். மரணமில்லா, நிலை வேண்டும். அந்த வீடு பேறான நற்கதியை நீ தான் தர முடியும். அதற்கு நீ என்னுளே, ஞான நடம் புரிய வேண்டும். முக்திக்கு வழிகாட்டும், அமுதம் போன்ற, தெய்வானையின் மணவாளா, ஆறு முகா, சரணம், என்ற உயர்ந்த வேண்டுதல். சோலைமலை மேவி நின்ற பெருமாளே சரணம் .
"கலைமேவு ஞான " என்று தொடங்கும் பாடல்
மதுரை திருத்தலம்
"சூழும் வினை " என்று தொடங்கும் பாடல்
வேதாரண்யம் திருத்தலம்
தலம் பற்றிய தகவலுக்கு
http://temple.dinamalar.com/
"மருவுமஞ்சு " என்று தொடங்கும் பாடல்
விரிஞ்சிபுரம் திருத்தலம்
தல மகிமைக்கு
"முத்துத்தெறிக்க " என்று தொடங்கும் பாடல்
திருத்தணிகை திருத்தலம்
மோகன ராகம் தொடரும்
முருகா சரணம்
முருகனை மோகித்து முன்னேற உதவும் மோகன ராகப் பாடல்கள் !பழமுதிர்ச் சோலை திருத்தல மகிமை மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது.
ReplyDelete