Wednesday, 2 March 2016

குரு மஹிமை இசை சிந்துபைரவியில் சித்து விளையாட்டு



குரு மஹிமை இசை   சிந்துபைரவியில் சித்து விளையாட்டு


முருகா சரணம்

என் உடல் நிலை சில காலம் குன்றியிருந்த காரணத்தால் பணியில் தொய்வு ஏற்பட்டதற்கு மிகவும் வருந்துகிறேன்.மருத்துவ மனையிலும் .இல்லத்திற்கு வந்தும் என்னை உற்சாக படுத்திய அன்பர்களுக்கும் ,பிரார்த்தனை செய்யும் அன்பர்களுக்கும் நன்றி கூறும்வழியாக மெதுவாக குருவருள்,திருவருளுடன் பணியை தொடருகிறேன்.

மும்பை வெங்கடராமன்.


                                                         சிந்துபைரவி 

ஹிந்துஸ்தாணி இசையிலிருந்து இறக்குமதி ஆனாலும் நம் சொத்தாகி விட்டது.நாட்டுப்புற இசையோடு உயரிய கர்நாடக இசையின் நுணுக்கங்களை உள்ளடக்கிய இந்த ராகம் எளிமையானது.சர்வ சாதாரண ,பாமர மக்கள் கூட இதய பூர்வமாக ரசித்து உணர முடியும் ஆனந்த ரசத்துடன் பல பாவங்களை யும் ,வர்ணங்களையும் கொண்டது.அதை வெளிக்கொணர்வது மெட்டமைக்கும் திறனாளிகள் கையில் உள்ளது. திரை இசையில்கையாளப்பட்டுள்ள பல பாடல்களில்  இதை உணர முடியும்.

மருத்துவ ரீதியாக நரம்பு சம்பந்தமான பிரச்னைகள்,தலைவலி,முதுகுவலி மார்புவலி முதலியவைகளை தீர்க்க வல்லது.மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.என்ற செய்தியையும் அறிய முடிகிறது.

இத்தகைய பெருமைகள் வாய்ந்த ராகத்தை நம் இசை வாணர்கள் கச்சேரி முடியும் தருவாயில் ஒரு சில நிமிடங்களில் துரித கதியில் ஒரு சடங்காக பாடி கச்சேரியை முடிக்கும் அவல நிலையை இன்றும் காணலாம்.

ஆனால் நம் மகான் குருஜி க்கு இந்த ராகம் ஒரு சமுத்ரமாகவே காட்சியளித்தது.அதில்குதித்தார்.மிகஆழத்தில்மூழ்கினார்.திளைத்தார்.மற்றவர்களுக்கு கிடைக்காத பொக்கிஷத்தை கைக்கொண்டார்.யோகத்தில் ஆழ்ந்தார்.வெளி வர மனமே இல்லை.இருப்பினும் நமக்கு அந்த ஆனந்தம்,நித்யானந்தம்,பரமானந்தம் சச்சிதானந்தம் முதலிய நிலைகளை  அளித்து நம்மை கரையேற்ற வந்து அருளினார்.

இந்த ராகத்தில் அமைந்துள்ள விருத்தங்கள்,பலகோணங்களில்,வெவ்வேறான மெட்டுக்களில் அமைந்த  பாடல்கள்  பிடிகள்,சஞ்சாரங்கள்,இசை நுணுக்கங்கள்,பாவங்கள்.வேறு எந்த இசையிலும் காண முடியாது என்று அடித்துக் கூறலாம்.மற்றும் தன்னிலை இழப்பது,யோகநிலையில் அமர்வது,போன்ற அபூர்வ மகிமைகளைக்கொண்டது.எல்லாவற்றிற்கும் மேலாக பெருமான் சன்னதிக்கு நம்மை அழைத்து சென்று அவனுடன் ஒன்றும் நிலை முதலிய தெய்வீக நிலைகள் சொல்ல வொனாதது.அனுபவிக்கத்தான் இயலும்.

இந்த பகுதியி ல்  சேகரித்த எல்லா வண்ணங்களும்,வடிவங்களும் முழுமையாக இடம் பெற விழைகிறோம்.

சிந்து பைரவியின் மீது தீராத காதல் கொண்ட காரணமாக வெளிப்பட்ட  இந்த முன்னுரைக்கு அன்பர்கள் பொருத்தருள வேண்டுகிறோம்.

                                                                             விருத்தம்


                                                                                விருத்தம் 

                                   முகப்பு காட்சி  செந்தூர் மாசி உற்சவத்தின்முதல் நாள்

                                                                       கொடியேற்றம்


                                                                                         
 

                                     வந்து வந்து என்று தொடங்கும் திருசெந்தூர் பாடல்.

                                                முகப்பு காட்சி இரண்டாம் திருநாள்

                                                                                                                                                                 

                                                                               விருத்தம்

                                                      முகப்பு காட்சி மூன்றாம் நாள்

                                                                                                 

                                              எலுப்பு தோல்  என்று தொடங்கும் சிதம்பரம் பாடல்


                                                                                                                                                                                                                     
                                                                      தொடரும்

                                                                    முருகா சரணம்









                                                                                                       

                                                                                                                             

1 comment:

  1. சிறிது கால இடைவெளிக்குப் பின் சிந்தையைச் சிலிர்க்க வைக்கும் சிந்து பைரவி!

    உடல் நலம் குன்றியிருந்த அன்பர் மும்பை வெங்கட்ராமன் உடல் தேறி மீண்டும் திருப்புகழ் பணியைத் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கின்றது! அவருடைய பணி மென்மேலும் சிறக்க ஆறுமுகப் பெருமானை வேண்டுகிறோம்!

    வருபவர் பிணி தீர்க்கும் வைதீஸ்வரன் பெற்ற முருகனே ! ஷண்முகா! முத்துக்குமாரா! சரவணா ! அன்பர் வெங்கட்ராமனைக் காப்பாற்று சக்தி வேலாயுதா! சூர சம்ஹாரா!

    ReplyDelete