திருப்புகழ்வழிபாடு புத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள்
வள்ளிமலை திருத்தலம் வள்ளிமலைவடஆற்காடுமாவட்டத்தில்ராயவேலூருக்கு12மைல்தென்
கிழக்கில்,திருவல்லத்துக்குவடக்கேஉள்ளது.வள்ளிதேவியர்அவதரித்த தலம்.மலைகளைக்குடைந்துஉருவாக்கிய பாலசுப்ரமணியஆலயம்
பாலாறு நதிக்கரையில் ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது.ஆலயத்தை அடைய 300 படிகளை மலைப்பாதையில் கடக்க வேண்டும் .
முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில்
திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு
திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது.
வள்ளிமலை ஸ்வாமிகள்
ராகம் ராமப்பிரியா தக தகிட தகிட தக
உதவி .....கௌமாரம் இனைய தளம் .நன்றிகள் பல.
குருஜியுடன் இணைந்து அன்பர்கள் பாடியுள்ள பாடல்
(476 முதல் 503 வரை )

முருகப்பெருமான்பேரில்அருணகிரிநாதர்பாடியுள்ளதிருப்புகழைத்
தொகுத்துதமிழ்நாடெங்கும்அதைமீண்டும்
பரப்பியவர்சச்சிதாநந்த ஸ்வாமிகள்ஆவார்
.திருப்புகழைப்பரப்பியதால்திருப்புகழ் ஸ்வாமிஎன்றும்அழைக்கப்பட்டார்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த இம்மஹான் தமதுஞானத்திலும் சித்தி அடைந்தார். திருப்புகழைப் பரப்புவதிலும்சித்தி அடைந்தார்.
இவரின்சமாதி இருக்குமிடம் வள்ளிமலையில் தான்.
அந்த மகானின் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்
http://temple.dinamalar.com/ திருப்புகழ்ப் பாடல் வரிசை எண் 8 புத்தகவரிசை எண் 192 | |
ராகம் ராமப்பிரியா தக தகிட தகிட தக
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் ...... தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன்
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
திசையொன்ற மந்திசந் ...... துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.
சொல் விளக்கம்
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம்
என்பு திண் பொருந்திடு மாயம் ...
தலை என்னும் உறுப்பு, அழகியகை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவைநன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல்
தலை என்னும் உறுப்பு, அழகியகை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவைநன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல்
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு ...
சில துயரங்களும்இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர்,
சில துயரங்களும்இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர்,
செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி ...
சிவந்த நெருப்பில்வெந்து உயிர் பிரிதல் உறும்படி,
சிவந்த நெருப்பில்வெந்து உயிர் பிரிதல் உறும்படி,
விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர்
கொண்டு அலைந்து அழியா முன் ...
சீக்கிரத்தில் நமன் போரிடவந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்குமுன்பு
சீக்கிரத்தில் நமன் போரிடவந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்குமுன்பு
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி ...
தீவினை யாவும்தொலைந்து நல்ல வினைகளே சேர,
தீவினை யாவும்தொலைந்து நல்ல வினைகளே சேர,
நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே ...
உனதுதிருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்துஅருள் புரிவாயாக.
உனதுதிருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்துஅருள் புரிவாயாக.
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல்
அண்டர்கண்டு அமர் அஞ்ச ...
(ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேகநிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி,
(ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேகநிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி,
மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து அணைந்து அகிலம்
பரந்து இரங்கிட ...
நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப்பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி)பரந்து ஒலிக்க,
நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப்பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி)பரந்து ஒலிக்க,
அன்று உடன்று கொன்றிடும் வேலா ...
அன்று கோபித்து(அவனைக்) கொன்ற வேலனே,
அன்று கோபித்து(அவனைக்) கொன்ற வேலனே,
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை
ஒன்ற ...
தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட,
தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட,
வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க,
மந்தி சந்துடன் ஆடும் வரையின் கண் வந்து வண் குற
மங்கை ...
குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி)
குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி)
மலைக்கு* வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின்
பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே. ...
பாதத் தாமரைவரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.
பாதத் தாமரைவரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.
உதவி .....கௌமாரம் இனைய தளம் .நன்றிகள் பல.
குருஜியுடன் இணைந்து அன்பர்கள் பாடியுள்ள பாடல்
முருகா சரணம்
ரம்மியமான ராமப்ரியா! ரசனைக்குரிய பாடல்!
ReplyDeleteரம்மியமான ராமப்ரியா ராக பாடல்! ரசனைக்குரிய பாடல்!
ReplyDelete