Wednesday, 26 February 2014

சிவராத்திரி

ஓம் நமசிவாய 


மாணிக்கவாசக பெருமான் அருளிய சிவபுராணத்தில் இறுதியாக... 

'தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 
சொல்லற்கு அரியானைச் சொல்லி த்  திருவடிகீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் 
சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏற்றப் பணிந்து "




என்று உரைக்கிறார்.

இந்த சிவபுராணம் பாடலின் பொருள் உணர்ந்து, உணர்ந்ததை பிறருக்கு எடுத்து உரைத்து துதிக்கத் தக்கவர்கள் சிவபுரமாகிய திருக்கயிலையில் சேரத்தக்கவர்கள் .அங்குள்ளோர் தம்மை புகழ்ந்து துதிக்க சிவபெருமானைப் பணிந்து அவனது திருவடிக்கீழ் வீடு (மோட்சம் )பேறாகிய பேரின்பம் பெறுவார்கள

அருணகிரியாரும் மயில்  விருத்தத்தில் (11) இதையே உரைக்கிறார்.

சிவபுரம் என்று  தனியாக இருக்கிறதா என்ன? சிவபெருமான் உறையும் எந்த இடமும் சிவபுரம்தான். அதுதான் கைலாசம். மயிலாப்பூர் ஆலயத்தில்  "மைலையே கயிலை...கயிலையே மயிலை " என்ற கூற்றை காணலாம். இருப்பினும் சில தலங்கள்சி வபுரம் என்று பெயர் கொண்டு அடியார்களுக்கு சிவ தரிசனம் அளித்து   பேரின்பத்தை அளிக்கின்றன. அத்தகைய ஒரு சிவபுரம் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது,

இந்த சிவராத்திரி நன்நாளில் நம் குருஜியின் சிவ  பஜனையுடன்  அந்த  சிவபுரி தலத்தை தரிசிப்பது நம் பாக்யமே:  


அதோடு சிவனார் மனம் குளிர சில திருப்புகழ் பாடல்களையும் குருஜியுடன் இணைந்து இசைப்போம்:








No comments:

Post a Comment