Tuesday, 4 February 2014

நெருல் பக்த சமாஜம் குடமுழுக்கு வைபவம் 12.02.14

முருக பக்தர்கள் தாங்கள் சென்று வாழ்க்கை நடத்தும் எல்லா இடங்களிலும் முருகப்பெருமானையும் கூட அழைத்துச்சென்று தங்களுக்கு அருள்பாலிக்க சிறந்த முறையில் ஆலயம் அமைத்து வழிபடுவதை  நாம் கண் கூடாக பார்த்துவருகிறோம்.

அவ்வகையில் சுமார் ஆறு லட்சம் மக்கள் வசிக்கும் புதிய மும்பை  பகுதியில் பக்தர்களால் 1988 ம் ஆண்டு துவக்கப்பட்ட" நெருல் பக்த சமாஜம் "  ராதா கல்யாணம்.ராம நவமி,பிரதோஷம் போன்ற  பல ஆன்மீக விழாக்களை நடத்தியதோடு  முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்க அரும்பாடு பட்டு பேருந்து நிலையம் அருகில் 2008ம் ஆண்டு நிலம் வாங்கி,2010ல் "ஸ்தல சுத்தி "வைபவத்துக்குப்பிறகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதமாக சுப்ரமணிய சுவாமிக்கு பாலாலயம் அமைத்து ஆலய நிர் மான பணியை மின்னல் வேகத்தில் தொடங்கினர் . பக்தர்களின் அயராத உழைப்பின் பயனாக ஆலயம் உருவாகி ,குட முழுக்கு வைபவம் 12.02.14 அன்று நடைபெற உள்ளது, பத்திரிகை  இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் நெருல்  பகுதியில் அமையும் 25வது ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.பெருமான்  "வள்ளி தேவசேனா சமேத பிரசன்ன கல்யாண சுப்பிரமணியன் "என்று திருநாமம் கொண்டுள்ளான்.அதோடு மகாகணபதி,மீனக்ஷி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமிகளும்  சன்னதி கொண்டு அருள்பாலிப்பார்கள்.  

நெருல் பக்த சமாஜத்தில் பெரும்பாலோர் நம் திருப்புகழ் அன்பர்கள்தான்.நம் அமைப்பின் பால் மிக்க அன்பும் ,மரியாதையையும் வைத்துள்ளார்கள்.பாலாலய பெருமான் சன்னதியில் நம் வழிபாடு சென்ற ஆண்டு ஆடிக்கிருத்திகை அன்றும் ,மற்றும் நம் குருஜி யின் ஜெயந்தி விழாசெப்டம்பர் மாதமும் நடைபெற்றன.அதோடு  அருளாளர் மும்பை கோபாலகிருஷ்ணனின்  திருப்புகழ் சொற்பொழிவுக்கும் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். வருங்காலத்திலும் இன்னும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பிரார்த்திக்கின்றோம்.

அன்பர்கள் பெருமளவில் குடமுழுக்கு வைபவங்களில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற பணிவன்புடன் வேண்டுகிறோம்.









No comments:

Post a Comment