குருஜி அன்பர்களுக்கு அறிவுறுத்தியது.அன்பர்கள் தாம் திருப்புகழ் கற்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் குறிப்பாக இளைய தலை முறையினருக்கும் கற்றுக்கொடுப்பதை தொண்டாக கருதி செயல் பட வேண்டும் என்பதே.அன்பர்கள் அதை தெய்வ கட்டளையாக கொண்டு தாம் அலுவலக நிமித்தம் காரணமாகவும் மற்ற காரணங்களுக்காகவும் உலகில் எந்த இடம் செல்ல நேர்ந்தாலும் .அங்கு முதல் காரியமாக திருப்புகழ் வகுப்புக்கள் தொடங்கி வெகு வேகமாக செயல் படுகிறார்கள்.
அந்த வகையில் உலகெங்கும் வகுப்புக்கள் பரவி வருகின்றன,அதற்கு பணம்.trusts ,நிர்வாகம்,அதிகாரம்,அந்தஸ்து முதலியன தேவையே இல்லை.தேவை நம் முருகப்பெருமானின் அருளும்,குருஅருளும் தான். அன்பர்கள் பெருமானிடம் கொண்ட சரணாகதி .தன்னலமற்ற தொண்டு மனப்பான்மை,.உயந்தபண்பாட்டின் காரணமாக பெருமானின் பரிபூர்ண அருள் அன்பர்களுக்கு கிட்டியுள்ளதில் ஆச்சர்யமில்லை.அத்தகைய அன்பர்களில் சிலரைப்பற்றி நம் youtube ல் அறியலாம்.
அதில் இடம் பெற்றுள்ள அன்பர் "தாரா மாமி "என்று பாசத்துடன் அழைக்கப்படும் திருமதி தாரா கிருஷ்ணன் 1982ல் கானடாவுக்கு குடியேற வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தது.குருஜி " நீங்கள் திருப்புகழ் தூதுவராகத்தான் செல்கிறீர்கள்.திருப்புகழை அங்கு பரப்ப வேண்டும் "என்று அருள் ஆணையிட்டு ஆசிர்வதித்து வழி அனுப்பினார்.அம்மையார் டொரோண்டோ வந்ததும் முதல் வேலையாக வகுப்புக்கள் தொடங்கினார்.பெருமானுக்கு பல விழாக்களும் எடுத்தார். அங்கு 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்த ஓர் அன்பர்.
நவராத்ரி ஷஷ்டி அன்று தாரா மாமி வழங்கிய திருப்புகழ் பஜனைக்கு பெருமானின் அருளால் கலந்து கொண்டார். அதுவரை திருப்புகழைப்பற்றி ஒன்றும் அறியாத அவர் மயங்கினார்.தன்னை இழந்தார்.முருகன் ஆட்கொண்டான்.வகுப்பில் சேர்ந்து கற்றார். எல்லா வழிபாடு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.சக்கரை பந்தலில் தேன் மாறி பொழிந்தது போல் நம் குருஜி 1988 மற்றும் 1990ல் இரண்டு முறை கானடா வில் இரு மாத கால அளவில் தங்கிய போது அவர் குருஜியின் எல்லா வகுப்புக்களிலும்,வழிபாடுகளிலு ம் கலந்துகொண்டார் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.பின் நயாகரா பகுதியில் அன்பர்களுடன் தான் கற்றதை பகிர்ந்து கொண்டார்.பின் ottawaa பகுதியில் சென்றபோது வகுப்புக்கள் தொடங்கினார்.1999ல் சொந்த மண் திருவனந்தபுரம் திரும்ப நேர்ந்த போது குருஜி கேரளாவில் திருவனந்தபுரத்தை தலைமையாக கொண்டு வகுப்புக்கள் நடத்த தம் ஆவலை தெரிவித்தார்.அதன்படி வந்து சேர்ந்த 10 நாட்களுக்குள் வகுப்புக்கள் தொடங்கி நடத்தி வருகிறார்.அடையாளத்துக்காக மட்டும் அவர் பெயர் பாலு ஐயர் என்று சொல்ல வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.அன்பர்களுள் ஒருவராக கலந்துள்ளதால் அன்பர் என்றே இனி குறிப்பிடுவோம்.
குருஜி யின் கட்டளைப்படி மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடலுக்கும் அர்த்தம்,அதில் அடங்கியுள்ள கருத்து,தத்துவம் போதிப்பதோடு மட்டும் அல்லாமல் தாள விளக்கங்களையும் அளித்து வருகிறார்.மற்றும் எர்ணாகுளம் ,பாலக்காடு போன்ற நகரங்களிலும் குறிப்பாக தாள விளக்கங்கள் நிகழ்சிகளை வழங்கி வருகிறார்.
குருஜி 2000மற்றும் 2002 ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் வழிபாடுகளில் கலந்து கொண்டது அன்பர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது.
அதில் கிடைத்த தகவல்கள்
- வகுப்புக்கள் பற்றிய முழு தகவல்கள்
- விழாக்கள் பற்றிய தகவல்கள்
- அருணகிநாதர் விழா (Aug 15),வருடாந்திர பஜனை (Dec 25)கந்தசஷ்டி 6நாட்கள் , தைபூசம்,வைகாசி விசாகம் ,சிவராத்திரி,மண்டலபூஜா சமாப்தி 2011 ல்விமரிசையாக நடைபெற்ற வ்ழாவில் 108 திருப்புகழ் பாடல்கள் இடம் பெற்றன.
- வள்ளி கல்யாணம் (2012)
- audio /vedio
- தளியல் வகுப்பில் இடம் பெற்ற பாடல்களின் தொகுப்பு (Audio ) பல youTubes
- Songs in Malayalam script (two editions in Book forms ) and also in Website for the benifit of all : http://www.thiruppukazh.com/
search-alphabetical-mal.html - Songs in English script : http://thiruppukazh.com/
search-tiv-eng.html - தாளம் பற்றிய விளக்கம் : http://thiruppukazh.com/
thALams-in-English.pdf - Thaalam in Malayalam : http://thiruppukazh.com/
thALams-in-Malayalam.pdf - சந்தம் பற்றிய விளக்கம் : http://www.thiruppukazh.com/
chandams - மற்றும் ,மலையாளத்தில் அநுபூதி,வள்ளி கல்யாண ம் ,கந்தர் அலங்காரம் ,திருப்புகழ் பராயணம் போன்ற நூல்களை இலவசமாக விநியோகித்துள்ளார்கள், Video Links: https://www.youtube.com/user/
drbaluiyer/videos
அனைவரும் ஆனந்தப்பட வேண்டிய விஷயம் .பல இளம் குழந்தைகள் வகுப்புகளில் கற்று வழிபாடு நிகழ்சிகளில் உற்சாகத்தோடு பெறும் அளவில் கலந்து கொள்வதுதான். நாம் குழந்தைகளை பாராட்டுவதை விட .அவர்களின் பெற்றோர்களையே பாராட்ட விரும்புகிறோம். convent பள்ளிகளில் தம் பிள்ளைகளை மூன்று வயதிலேயே சேர்த்து,அவர்களை வருத்தி,தங்களையும் வருத்திக்கொண்டுஅமெரிக்க வாழ்க்கை கனவில் நீந்திக்கொண்டிருக்கும் இன்றைய பெற்றோர்களிடையே திருப்புகழுக்காக குழந்தைகளை ஈடுபடித்தியுள்ள உயர்ந்த உள்ளங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.மற்ற பெற்றோர்களும் பின்தொடர்வார்கள் என்று நம்புவோம்.
குழந்தைகள் வழிபாடுகளில் பாடுவதை பார்ப்போம்,கேட்போம்:
இன்னும் பல பிரமிப்புக்களை Website ல் அறியலாம். Anbargal may get all information in ENGLISH in the Website
பெருமானின் அருளால் "ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து" என்ற அபிராமி பட்டரின் கூற்றுப்படி திருவனந்தபுரம் வகுப்புக்களும்,விழாக்களும் கேரளாவில் பல இடங்களில் விரிவதோடு மட்டுமல்லாமல் படி விழா ,சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக விழா போன்ற அகில உலக விழாக்களையும் கொண்டாட பெருமானின் அருளை வேண்டுகிறோம்.
கேரளா மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இத்தகைய பல நோக்கு வாய்ப்புகளை அன்பர்கள் பயன் படுத்த வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment