முன்பு கல்வி,மற்ற கலைகளை கற்றுக்கொள்ள சீடர்கள் குருவைத்தேடித்தான் செல்லவேண்டும் ஆனால் தற்போது சீடர்களை தேடி குருமார்கள் செல்ல வேண்டிய கால கட்டாயம்.அதனால் என்ன? குறிக்கோள் தான் முக்கியம்.நம் திருப்புகழ் வகுப்புக்களும் அதற்கு விதி விலக்கல்ல.நம் ஆசிரியர்கள் எவ்வளவு இடர்பாடுகளுக்கும் இடையில் தங்கள் தெய்வீக பணியை செவ்வனே செயல் பட்டு வருகிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
அந்த வகையில் .நம் திருப்புகழ் ஆசிரியர் குழு (மூர்த்தி சார் ,சித்ரா தம்பதியினர் )கும்பகோணம் சென்று .சாரதா பாடசாலை யின் நூற்றுக்கணக்கான இளம் மாணவர் களுக்கு எப்படி கற்பிக்கிறார்கள் என்பதை நேரில் பாருங்கள்.பாடல்
137.நினைத்ததெத்தனை
நினைத்த தெத்தனையிற் றவராமல்
நிலைத்த புத்தி தனைப் பிரியாமற்
கனத்த தத்து வமுற் றழியாமற்
கதித்த நித்தி யசித் தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக் கெளியொனே
மதித்த முத்த மிழிற் பெரியோனே
செனித்த புத்தி ரரிற் சிறியோனே
திருத்த ணிப்ப தியிற் பெருமாளே.
Kindly click
http://www.youtube.com/watch?v=Y9eUHNeHnPk&feature=em-uploademail-smbtn
குருநாதர் அருணகிரியார் பயணம் போல் குழுவின் பயணமும்,பணியும் மற்ற இடங்களுக்கும் பரவ பெருமானின் அருள் வேண்டுகிறோம்.தெய்வீகப்பணியில் ஈடுபட்டுள்ள அருளாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறோம்.நேர் காணலை அன்பர்களுக்கு வழங்கிய மாலதி ஜெயராமன் அவர்களுக்கு நன்றிகள் பலபல.
Kindly click
http://www.youtube.com/watch?v=Y9eUHNeHnPk&feature=em-uploademail-smbtn
No comments:
Post a Comment