Thursday, 12 December 2013

திருப்புகழ் ஆன்மீக பெருவிழா 2013: இரண்டாம் நாள் 14.07.13

அன்பர்கள் வகுப்புக்கு செல்கிறார்கள்.கற்றுக்கொள்கிறார்கள்.Tape /CD கேட்டு அபிவிருத்தி செய்து கொள்கிறார்கள். ஆனால்  இசைவழிபாடுகளில் கலந்துகொள்வதைத்தான் மிகவும் விரும்புகிறாகர்கள் ஏனெனில் ஆயிரம் குரல்கள் ஒரே குரலில் முருகன் சந்நிதானத்தில் ஒலித்து தெய்வீக நிலைக்கு கொண்டு செல்கிறது.கால அளவு கிடையாது உடல் உபாதைகள் ஓடி ஒளிகின்றன .தங்களை இழக்கிறார்கள்.பிற்பகலில் வசந்த அம்மையார் உணர்த்திய  மனோலயத்தில் திளைக்கிறார்கள்.ஆன்மீக விழாவில் .அந்த வழிபாடு  தொடங்கும் நேரத்திற்காக ஆயிரக்கணக்கான அன்பர்கள் .காலை முன்னரே வந்து இடம் பிடித்தனர் ,இடம் கிடைக்காதவர்கள் அரங்கத்தின் வெளியே அமர்ந்து கலந்துகொள்ள அமைப்பாளர்கள் செவ்வனே ஏற்பாடுகள் செய்திருந்தனர். சரியான நேரப்படி வழிபாடுதொடங்குமுன் உமா பாலசுப்ரமணியம் முன்னுரை வெகு அருமையாக இருந்தது.அருணகிரிநாதர் முத்துவில் தொடங்கினார்.நம் குருஜி முத்துவில் முடித்தார் என்று சுட்டிக்காட்டினார்.மற்றொரு அதிசயம்.இரண்டு பாடல்களுக்கும் பொருளும் ஒன்றே. மணிசார் குருமஹிமையைப்பற்றி விவரித்தது அன்பர்களை நெகிழ வைத்தது. வழிபாடு தக்க பக்க வாத்யங்களுடல்  தொடங்கி மூன்றரை மணி நேரம் நீடித்தது.அன்பர்கள் சொர்கத்தில்தான் சஞ்சரித்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?. 

   நாமும் கலந்து கொள்ளுவோம்.


நம் அன்பர்களில் பலர் முருக பத்தியில் திளைத்து பலவிதங்களில் அன்பர்களுடன் ,எழுத்துக்கள் மூலமாகவும்,சொற்பொழிவு,இசை சொற்பொழிவுகள் மூலமாகவும் அளித்து வருகிறார்கள்.ஆனால் அவைகள் குடத்தில் இட்ட விளக்கு போல் தன அடக்கத்துடன் தான் உள்ளார்கள். அவர்கள் மேன்மையைமஹாநாடு,கருத்தரங்கு சந்தர்ப்பத்தில்தான் நாம் அறிய முடிகிறது.அப்படிப்பட்ட அன்பர்களில் மூன்று பேரின்  சொற்பொழிவு அன்பர்களை அசரவைத்தது. முதல் நாள் சொற்பொழிவாற்றிய நீண்ட அனுபவம் வாய்ந்த பேச்சாளர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தார்கள்.
பிற்பகலில் முதன்மையாக  பெங்களூர் அன்பர் திருமதி வசந்தா பஞ்சபகேசன்  திருப்புகழில் மனோலயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சங்கீத உலகில் லயத்துக்கு முக்கியமான பங்கு உண்டு,அது தான் மற்ற கலைஞர்களை.கட்டுப்படுத்தி இணைத்து உயரிய இசையை அளிக்கிறது.கச்சேரிகளில் நாம் ஒழுங்காக தாளம் போட்டுகொண்டிருக்கிறோம்.சிலசமயங்களில் நம் தாளம் பிசகுவதுபோல் தோன்றும்.நமக்கே .நாம் தாளம் தப்புகிறோமா அல்லது கலைஞர்கள் பால் தவறு  உள்ளதா  என்று சந்தேகம். நான் ஒரு நிகழ்ச்சியின் பொது மேதை ரவிகிரானிடம் இந்த கேள்வியை எழுப்பினேன்.அவர் புன்னகை பூத்து, ஆம் சிலசமயங்களில் தவறுவது உண்டு. ஆனால் மிருதங்க வித்வான் எப்படியாவது சரி  செய்து வழிக்கு கொண்டு வருவார்.அது  எங்களுக்குத்தான் தெரியும் என்றார்.. இசையின் மகத்துவம் என்றார்.எனவே லயத்துக்கு வழி தவறியவர்களை திரும்ப நிலைக்கு கொண்டுவரும் ஆற்றளுள்ளது . மற்றொரு  நிகழ்ச்சி. அபிராமி அந்தாதி பின் ஒரு அன்பர் நீங்கள்  திருப்புகழ் பாடும்போது உங்களை கட்டுப்படுத்த தாளம் உள்ளது.ஆனால் அந்தாதிதியில் தாளம் இல்லையே எப்படி காலப்பிரமானத்தோடு நூற்றுக்கணக்கானோர் ஒரே குரலில் பாடமுடிகிறது  கேட்டார்.என்னால்  ஒன்றும் கூறமுடியவில்லை. சமாளித்து அனுபவத்தில் தான் பாடுகிறோம்.என்றேன்.வசந்தா அம்மையாரின் உரையைக் கேட்டபின் அதுதான் மனோலயம்  உணருகிறேன்..அம்மையாரின் உரையின் சாராம்சத்தை எடுத்துரைக்க முடியாது. உணரத்தான் த்தான் முடியும். ஐம்பது நிமிட உரையில் ,மனம்,வாக்கு,காயம்,யோகவஷிஷ்டம் ,புத்தி,அகங்காரம்,சித்தம்,பஞ்சகோசம்,அன்னமயம்.பிராணமயம்,விஞ்ஞா னம்,ஜபம்,தபம்,தியானம்,லயம்,நாதம்,ஒருப்படுதல்,கர்மா,நித்யகர்மா,நிஷ்களகர்மா ,ஞானம்,பக்தி,யமம்,நியமம்,ஆசனம்,யோகாசனம்,பிராணாயாமம்,ஆனந்தம்,சமாதிநிலை,அனுபூதிநிலை ஆனந்தம்,ஆசனம்,யோகாசனம்,சமாதிநிலை அனுபூதிநிலை.போன்ற தத்துவங்களும்,மகாபாரதம்,கீதை,அந்தாதி முதலியவற்றில் இருந்து மேற்கோள்கள்.

தொகுப்புரை ஆற்றிய சித்ரா மூர்த்தி அவர்கள்  எண்ணற்ற திருப்புகழ் பாடல்கள் இடம் பெற்றன .ஆனால் நான் குறித்துக்கொள்ளவில்லை .யாராவது குறித்துக்கொண்டார்களா  என வினவினார்.அவருக்காகவும்,மற்ற அன்பர்களுக்காகவும் அளிக்கிறேன். விட்டுப்போனதை  பதிவுகளிலிருந்து பிடித்தேன்.இன்னும் விட்டு போயிருந்தால் நான் மனோலயத்தில் இருக்கவில்லை என்றுதான் பொருள்.எத்தனை  பாடல்கள் பாருங்கள்.பாடல்களை திரும்ப திரும்ப படித்தால் தான் முழுப்பொருள் விளங்கும் .

இடம் பெற்ற பாடல்கள் :

குருதி புலாலென்பு ..துரிசற ஆனந்த வீடு கண்டிட 
கருப்பு வில் ....ஒருப்படுதல் .....
விழுதாதேனவே ... அழிய வரமே  தருவாயே 
இலாப ........சராசர வியாபக பராபர  சமாதி அநுபூதி 
தரையின் மானுட ...பகரொனாதது ...மனோலயம் வந்து தாராராய் 
கரைபடும் உடம்பு ..குறை வர நிறைந்த மோன 
ஆராதனர் ....நீ வாவென  நீ இங்கழைத்து 
பூரண வார ....காரண ......யோகிகளாய் விளங்க அருள்வாயே 
மூலங்கிளை வாயுவை .....பிரகாசம் 
ஆசார வீணன் 
புகரில் சேவல ..ஆருயிரும் கரணங்களும் 
சேமகோமள ...ஓமத்தீ வழுவார் 
பஞ்ச பாதகன்  பாவி .முழுமூடன் 
கிரி மொழி ..அமிழ்தலற்று எழுதலற்று 
 ஆசைகூர் பக்தன்.
உய்ய ஞானத்து ..ஞானநெறி 
மூலமந்திரம் ஒதலிங்கிலை 
பக்தியால் யான் உன்னை 
எதிலாத பக்திதனை.
மாத்திரையாகிலும் ..மனோலயம் 
ஐங்கரனை ஒத்த அந்திபகல் அற்ற நிலை 
கட்டழகு   மனோலயம் 
மாலினாலெடுத்த ..மனோலயம் 
நிகரில் பஞ்ச         நெஞ்சும் ஆவியும் 
விரகர நோக்கியும்....அழு அழுது 
வஞ்சத்துடன் 
அண்டர் உலகம் சுழல . வேல் விருத்தம் 
சீர் பாத வகுப்பு உரையவிழ உணர்வு அவிழ ..
பழனி வகுப்பு ..
ஒர வொட்டார் ......அலங்காரம் 
தோலால் சுவர் வைத்து ..."
போக்கும் வரவும் .."

முடிவில்  அதல விதல  என்று தொடங்கும் பழனி பாடலில்  எல்லாம் அமைந்துள்ளதாக கூறினார்.

.அதன் லிங்க்  கொடுத்துள்ளேன்.


திருப்புகழை அப்யாசம் செய்வதுதான் மனோலயத்தை அடைய சுலபமான,சிறந்த வழி என்று பதிய வைத்தார். என்றும் நினைவில் நிற்கும் உரையை மீண்டும் மீண்டும் கேட்போம் 


பிற்பகல் நிகழ்சிகளில்  இரண்டாவதாக  கலந்து கொள்ளவிருந்த  மும்பை ராதாக்ருஷ்ணன் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை.எனக்கு சிறிது மனக்குறை தான்.ஆனால் உமா உரையாற்றவந்தவரை அறிமுகப்படுத்தியவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சி .காரணம் சுப்ரமணியம் மும்பைவலா மட்டுமல்ல நான் பணியாற்றிய வங்கியில் பணியாற்றியவர். (எல்லாம் ஒரு  "இது" தான் )அதைவிட சிறப்பு அவர் ஈடுபட்டுள்ள தெய்வீக பணி .பின் விவரித்தவர் சித்ரா மூர்த்தி.

அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு "அடியார்கள் கூட்டத்தின் சிறப்பு  ".அடியார்கள் என்பது யார்? ' காவியுடுத்து`தாழ் சடை வைத்துங் காடுகள் புக்கும் " சாமியார்களா?என்று ஆரம்பித்தவர்,தான் அதிகம் திருப்புகழிலிருந்து விவரிக்கப்போவதில்லை என்று கூறி .புராணங்களிலும்.நீதி நூல்களிலும் உணர்த்தப்பட்ட கோட்பாட்டின் படி தற்காலத்தில் வாழ்ந்து காட்டிய அடியார் களை பட்டியலிட்டு,அன்பர்களை பரவசப்படுத்தினார்.அடியார்களின் இலக்கணமாக தூய்மை,சுய பரிசோதனை,ஒழுக்கம்.நாவினால் பிறரை புண் படுத்தாதவர்கள் , மனித நேயம், போன்றவற்றை உதாரணங்கள் மூலம் பதிய வைத்தார்.சுட்டிக்காட்டிய அடியார்கள்;பட்டினத்தார்,வள்ளலார்,காஞ்சி ஸ்வாமி ,கன்ப்யுசியஸ்,தாமஸ் ஆல்வா எடிசன்,காமராஜர்.முதலியோர்..தொகுப்புரை வழங்கிய சித்ரா மூர்த்தி அவரின் தன்னடக்கத்தை யும்,தெய்வீக பணிகளையும் பாராட்டியதோடு,அவரும் ஓர் அடியார்தான் தான் என்று அன்பர்களின் ஏகோபித்த உணர்வை வெளிப்படுத்தினார்.அன்பர்களின் ஆனந்த்தத்துக்கு அளவே இல்லை.அவரது அறிய உரையை கேட்போம்.அவர் பணி  மேலும் சிறக்க பெருமான் அருள் வேண்டுவோம்.



அடுத்து பேச வந்த டெல்லி அன்பர் அனந்த கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட தலைப்பு, நம் குருஜி போதித்துள்ள "அன்பும் அவிரோதமும் தான்."

பல திருப்புகழிலில் அன்பும் அவிரோதமும் நீக்கமற நிறைந்துள்ளன என்றும் ,ஞான மார்க்கத்தை அடைய அன்பு வழி,அவிரோதம் நெறி என்றும்,அன்பைகொடுத்தால்தான் அருளை பெறமுடியும்.ஆனால் இடையில் பல தடங்கல்கள் .அவை நீங்க"இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே "(அதிரும் கழல்) வேண்டுவதே வழி.திருப்புகழில் ஆராய்ச்சியில் இறங்காமல் "பக்தியால் மா திருப்புகழ் பாடி" அடுத்த தலைமுறையினரையும் ஈடுபடுத்தி ,இறைவனின் பாதகமலம் பற்றினால் தான் நம் பாதக  மலம் அகலும்,சினம்,பேராசை ஒழியும்  என்று உணர்த்தினார்.ககனமும் அநிலமும் என்று தொடங்கும் பாடலில் "உள்ளக்கண் நோக்கும் அறிவூரி ஒழி திகழும் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அதை நோக்க அருள்வாயே " சு ட்டிக்காட்டினார்.இறுதியில் "தண்டாயுதமும்,திரிசூலமும் "என்று தொடங்கும் கந்தர் அந்தாதியையும் கையாண்டார்.

விரிவாக கேட்போம்.



திருப்புகழ் பாடல்கள் பல முறையில் பல ராகங்களில்  பல குழுக்கள் இசைத்து வருவதை நாம் அறிவோம்.முழு நேர மேடைக்கச்சேரி கூட நிகழ்த்தியுள்ளார்கள்.அனால் பரம்பரையாக சந்தத்துடன் ,மரபுடன் இசைத்து வருபவர்கள் கோயிலைசார்ந்துள்ள ஓதுவார்களும்,தங்களையே அர்பணித்துள்ள அடியார் திரு கூட்டமும் தான். நம்முடைய விழாக்களில் அத்தகைய அடியார்களை அழைத்து  கௌரவித்து ,அவர்கள் இசையில் ஈடுபட்டு இன்புறுகிறோம்.பொன்விழா நிகழ்சிகளிலும் பழனி ஓதுவார்கள் இசைத்ததை அன்பர்கள் அறிவார்கள்.ஆன்மீக விழாவில் வல்லக்கோட்டை திருப்புகழ் சபையினர்   இசை இடம் பெற்றது.

வல்லகோட்டையின் மறு பெயர் கோடைநகர் இரண்டு பாடல்கள் நம் இசை வழிபாடு நூலில் இடம்  பெற்றுள்ளன  சித்ரா மூர்த்தியின் முன்னுரையில் குறிப்பிட்ட அறிய செய்தியை கேளுங்கள் .தலசிறப்பை பார்ப்போம். 

temple history:


இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற பல பாடல்கள் குருஜி கற்பித்தவை.கலைஞர்கள் வேறு ராகங்களில் பாடினாலும் நம் அன்பர்கள் நொடியில் வாங்கி கூட இசைத்தது ஓர் இனிமையான அனுபவம். பாடல்களை கேட்போம்.

isai:


விழா நிறைவை நெருங்குகிறோம்.ராமகிருஷ்ணா மடம்  ஸ்ரீமத் புத்திதானந்த மகாராஜ் திருப்புகழில் வேதாந்தம் என்ற தலைப்பில் அருளாசி வழங்கினார்.

"வேதம் ஞானம். ஞானம் முடியக்கூடிய இடம் வேதாந்தம்.அந்த விஷயங்கள் உபநிஷத்தில் தான் கிடைக்கும்.ஆனால் அவை வடமொழியில் தான் உள்ளன.தெரியாதவர்கள் எப்படி உணரமுடியும்.அக்குறையை நீக்க இறைவன் அடியார்களை அனுப்பி திவ்ய ப்ரபந்தம் .திருப்புகழ் தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களை அருளசெய்தான்.அப்படி வந்ததுதான் திருப்புகழ்.அதில் அத்தனை வேதாந்த கருத்துக்களும் அடங்கியுள்ளன,' என்ற முன்னுரையுடன் தொடங்கி அன்பர்களை மெய்மறக்கசெய்தார் உடலையும்,உயிரையும் துறக்கத்துணிந்த பின் தான் அருணகிரியாரை இறைவன் ஆட்கொண்டான் என்ற அருணகிரியாரின் வாழ்க்கை  சரித்திரமே சான்று என்று தொடர்ந்தவர் 

 கையாண்ட  சில பாடல்கள் :

அகர முதல ...நிகழும் வினை ......உணர்த்தி அருள்வாயே.(மாண்டோக்ய உபநிஷத்)

தோலொடு  மூடிய ...காரண காரிய ....அருளாதோ ...(அத்வைதம் )

அமலவாயு ...எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவனதீதம் அருள்வாயே 

சும்மாயிரு சொல் அற ....அநுபூதி 

முடிவில் ஏறுமயில் பாடலில் ஆறு முகங்களுக்கு  ஆறு விதமான தத்துவங்கள் உள்ளதுபோல் திருப்புகழில் ஈஸ்வர தியானம்,பராக்கிரமம்,பஞ்ச இந்திரிய சேஷ்டை,ப்ரம்ம ஸ்வரூபம்,லீலை,சரணாகதி  என்கிற  ஆறு விதமான வேதாந்தத கருத்துக்கள் அடங்கியுள்ளன என்று பதிய வைத்தார்.

விழாவின் நிறைவுரை வேதாந்தமாக அமைந்ததும் அன்பர்களின் பாக்கியமே.

அருளுரையை மீண்டும்,மீண்டும் கேட்போம்.


 



ஆன்மீக விழா குழு தலைவரும் ,சென்னை வட்ட செயலருமான ரா. தியாககராஜன் நன்றி நவிலளுடன் விழா நிறைவுற்றது  (என்று கூற மனம் வரவில்லை.அந்தாதிபோல் முடிவே அடுத்த  பெரும் விழாவுக்கு ஆரம்பம் என்றுதான் மனம் விழைகிறது)

அமைப்பாளர்கள் பலருக்கு நன்றி கூறினார்கள்.அவகளுக்கு நன்றி கூறுவது அன்பர்களின்  கடமையாகும்.அவர்களின் சார்பில்  நம் மத்ய செயற்குழு,விழாக்குழு,சென்னை வட்ட குழு,அனந்த பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகிகள்,தொண்டரடிப்பொடியாழ்வாராக பணியாற்றிய தொண்டர்கள்,அன்பர்களுக்கு தங்க வசதியளித்த அன்பர்கள்,விட்டுப்போனவர்கள் முதலியோருக்கு இதயம் கனிந்த  நன்றியையும் பாராட்டுதல்களையும்  தலை வணங்கி சமர்பிக்கிறேன்.

விழாவுக்கு முதுகு எலும்பு போல் அமைந்த தொகுப்பாளர்கள் உமா பாலசுப்ரமணியம்,சித்ரா மூர்த்தி அவர்களின் பணி  அளவிடமுடியாதது.இட்ட பணியை நேர்த்தியாக,செவ்வனே நிறை வேற்றினார்கள்.அவர்களது முன்னுரை,பின்னுரை,தொகுப்புரை,அறிய செய்திகள்,எல்லாமே மறைந்திருந்த உரையாக அமைந்தது.

மற்றும் வண்டுபோல் சாரத்தை தேடி அலைந்து ,சேகரித்து அன்பர்களுடன் புகைப்படம்,U Tube மூலம் பகிர்ந்து அவர்களோடு  இன்புறும்  அருளாளர்கள் ஐயப்பன்,மாலதி ஜெயராமன் அவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

குருஜி நமக்கு அறிவுறித்தியது பாடல்களில் பொருள் ,தத்துவம் உணர்ந்து அதை வாழ்க்கையிலும் கடை பிடிக்க வேண்டும் என்பதே.அந்த வகையில் இந்த விழா அன்பர்களுக்கு மேலும் தூண்டு கோலாக அமைந்து,மேலும்,மேலும் பாடல்கள் பொருள் உணர்ந்து கற்று தம் இளைய தலைமுறைகளையும் ஈடுபடுத்தி இன்புற்று.பெருமானின் பூரண அருளுக்கு பாத்திரமாவார்கள் என்பது திண்ணம்.

                             குருவாய்  வருவாய் அருள்வாய் குகனே 

-மும்பை வெங்கடராமன்

"Thiruppugazh Anmeegap Peruvizha 2013" photos are available at Smt. Malathi Jayaraman's following "GOOGLE PLUS" link: 


https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901078130212387473 

and 

https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901235897638280721 

No comments:

Post a Comment