Sunday, 29 December 2013

தில்லி --- உத்தர சுவாமிமலை

தில்லியில் உள்ள உத்தர சுவாமிமலை ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்த்தில் குருஜி தலைமையில் படி விழாவும் அக்டோபர் 2ம் தேதி அருணகிரிநாதர் விழாவும் நடைபெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே,

நாம் டெல்லிக்கு செல்லும்போது ஆலயத்தை கண்டிப்பாக தரிசனம் செய்துவிட்டுத்தான் வருகிறோம், ஆனால் காலத்தின் கோலத்தாலும் இயந்திர வாழ்க்கையின் வேகத்தாலும் நாம் ஆலயம் தோன்றிய வரலாறையும்,மற்ற சிறப்புகளையும் நாம் அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.,அந்த குறையை நீக்க பல அன்பர்கள் பத்திரிக்கைகளிலும்,இணைய தளத்திலும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆலயத்தின் முழு விபரங்களையும்,சிறப்புகளையும் பற்றி  அன்பர் சித்ரா மூர்த்தி அவர்கள் திரிசக்தி பொங்கல் மலரில் எழுதியுள்ளார்கள்.அது முருகன் பக்தி இணைய தளத்திலும் வெளிவந்துள்ளதுமலை மந்திர்   "மலாய் மந்திராக "மருவிய காரணத்தையும் அதற்கு தன் விளக்கத்தையும் காட்டுவது அவரது எழுத்து ஆற்றலை  வெளிப்படுத்துகிறது.. நம் அன்பர்களின் படைப்பை வெளி யிடுவது   நம் வலைத்தளத்தின் குறிக்கோள்  என்ற வகையில்  அதன் குறியீட்டினை கொடுத்துள்ளோம்.அன்பர்கள் பயன் பெருக.


திரிசக்தி பொங்கல் மலர்,முருகன் பக்தி.அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள மாலதி ஜெயராமன் முதலியோருக்கு நன்றிகள் பல பல 


கந்தர் அலங்காரம் ஒலி /ஒளி வடிவில்  

வழிபாடுகளில் பாடல்களுக்கு முன் கந்தர் அலங்காரம் விருத்தமாக பாடுவதை அனுபவித்து வருகிறோம்.அன்பர்கள் பல ராகங்களில் விருத்தம் பாடி நம்மை மெய்மறக்க செய்து.முருகன் சந்நிதானத்துக்கே அழைத்து செல்கிறார்கள்.குருஜி விருத்தத்தில் மூழ்கினால் எழும்பிவர நீண்ட நேரம் ஆகும்.இதெல்லாம் வழிபாட்டின் போதுதான்.மற்றபடி அலங்காரத்தை நாம் படிப்பதும் இல்லை.பாடுவதும் இல்லை.(கட்டுரையாளர்களும்,ஆராய்ச்சியாளர்களும் விதி விலக்கு )

அபிராமி அந்தாதியை எடுத்துக்கொள்ளுங்கள்.முதலில் விருத்தமாகததான் பாடப்பெற்று வந்தது.குருஜி மெட்டமைத்து ,ராக பாவத்துடன் கற்பிக்க ஆரம்பித்தவுடன் புதுப்பொலிவு பெற்று அன்பர்களின் சொத்தானது.ஆயிரக்கணக்கான முறை அன்பர்கள் கேட்டு கேட்டு பாடி பாடி மனனம் செய்துள்ளார்கள்.காரணம் பதம் பிரித்து பொருள் உணர்ந்து பாடுவதுதான்.பல ராகங்கள் மெருகேற்றி ஓர் உன்னத நிலையில் வைத்துள்ளதை நாம் நன்கு அறிவோமகந்தர் அனுபூதியும் அவ்வாறே.

குருஜி கந்தர் அலங்காரத்தை நமக்காக விட்டு வைத்திருப்பதாகவே உணருகிறோம்.விட்டதைப் பிடித்துள்ளார்கள் நம் டெல்லி அன்பர்கள்.ஆம் .அலங்காரத்துக்கு குருஜியின் ஆசியுடன் பதம் பிரித்து,பொருள் எளிதாக விளங்கும்படி  பல ராகங்களில் இசை அமைத்து பாடி  U  Tube ல் வெளியிட்டிருக்கிறார்கள்.இதன் நோக்கம் மாணவர்கள் கற்று நம் நிகழ்சிகளில் பாட வேண்டும் என்ற உயரிய எண்ணமும் எதிர்பார்ப்பும் தான்.2012 ம்ஆண்டு விஜய தசமி அன்று சமர்பிக்கப்பட்டது.பாடியுள்ள அன்பர்களின் பெயரை வெளியிடாதது அவர்களின் தன்னடக்கத்தையும்.பெருந்தன்மையையும் காட்டுகிறது.தங்களின் முயற்சி  சிறிதேனும் அன்பர்களுக்கு பயன் பட்டால் தாங்கள் மிக்க மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதாக கூறியுள்ளார்கள். 


அபிராமி அந்தாதிபோல் கந்தர் அலங்காரமும் நம் நிகழ்சிகளில் ஒரு தனி நிகழ்ச்சியாக விரைவில் இடம் பெற பெருமானின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறோம்.

அன்பர்கள்  .தங்களின் மேலான கருத்துக்க்களை  எழுதி படைப்பாளிகளை ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம்.

Kindly Click the LINK



KINDLY

Wednesday, 25 December 2013

மரணம் இல்லாப்பெரும் வாழ்வு

இந்த புலப்படாத தத்துவத்தையும்,மரணப்ப்ரமாதம் (கந்தர் அலங்காரம்)போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம்.புரிய வில்லைதான் .புரிய வைக்கிறார் வாகீச கலாநிதி கி. வா.ஜ அவர்களின் புதல்வி  அன்பர் உமா பாலசுப்ரமணியம்..மீன் குட்டிக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன?கட்டுரை  ஷண்முக கவசம் ஆகஸ்ட் இதழிலும்,பின்னர் முருகன் பக்தி வலைத்தளத்திலும் வெளிவந்துள்ளது.அதன் குறியீட்டை கீழே கொடுத்துள்ளோம்.


அதுமட்டுமல்ல.அருணகிரியார்   "புவனத்தொரு "பாடலில் விவரிக்கும் நரகத்தில் உயிர் படும் அவதிகளை யும் விளக்கியுள்ளார்.நரகம் ஏழு வகை உண்டாம்."மூல மந்திரம் ஓத லிங்கிளை " பாடலில் கோர கும்பி நரகம் பற்றி குறிப்பிடுகிறார்.இவை பயமுறு த்துவதற்காகவா ?இல்லை.CAUSE AND EFFECT,வினை விதைத்தவன் வினை அறுப்பான்  தத்துவங்கள் நாம் அறிந்ததே.தீவினைகளை அகற்றுவதே அதன் உபதேசம்.குருநாதர் "ஆதி முதனாளி "பாடலில் "பாழ் நரகெய்தாமல் உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே "என்று இறைஞ்சுகிறார்.

உன் புகழே பாடி நானினி அன்புடன் ஆசார பூசை செய்துய்திட வீணாள் படாதருள் புரிவாயே 

புவனத்தொரு   பாடலை குருஜியின் குரலில் கேட்போம் 


ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்துள்ள அன்பர் மாலதி ஜெயராமனுக்கும்,மேலே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கைகளுக்கும் நன்றிகள் பலபல 

Monday, 16 December 2013

திருப்புகழ் இசை வழிபாடு  புனே  தேஹு ரோடு  25.12.2013

கடந்த ஏழு ஆண்டுகளாக புனே தேஹு  ரோடு  சுப்ரமணிய  சுவாமி ஆலய அழைப்பின் பேரில் திருப்புக்ழ் இசை வழி பாடு தொடந்து நடைபெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே.இந்த ஆண்டின் எட்டாவது விழா 25.12.2013 புதன் கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெறும்.மும்பை,புனே அன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து அபிஷேகம் அர்ச்சனை பூஜைகளில் கலந்து கொண்டு முருகனின் திருவருளை அடைய வேண்டுகிறோம்.அழைப்பிதழ் இனைத்துள்ளோம்Displaying ScanImage001.jpg

Displaying ScanImage001.jpg

சென்ற ஆண்டு ,மும்பை அன்பர் ராதாகிருஷ்ணன் .வழிபாட்டின் இடையில் தேஹு ரோடு நாயகன் பேரில் பக்தியுடன் கவிதை நயத்துடன்,காப்பு,குருவணக்கம்,நூல் பலன் என்ற மரபோடு பாமாலை தொடுத்து பொருளுடன் பாடி பெருமானின் பாதகமலங்களில் சமர்ப்பித்து அன்பர்களை பரவசபடுத்தியதை நினைவு கூறுகிறோம்.

கவிதையை மீண்டும் வெளியிடுகிறோம்.

தாயாய்  உருவெடுத்து தண்டமிழ்த் தேன் பாலூட்டி 
சேயாய்  எனை அணைத்து  சீரிணக்கம் செய்வித்து 
மாயாப் பிறவிதனை மாற்றழிக்க நெறிசெய்தென் 
ஆயாகி நின்றானை ஐங்கரனை வாழ்த்துவனே //            1.

குருவணக்கம் 

வால  வயதினிலே நல்லதமிழ் பயிற்றுவித்து 
சால சீர்செய்த சற்குருமார் பொற்பதமும் 
சீல மிகு குருஜி இராகவனின் வழிநடத்தும் 
பாலமணி ராஜி பதமும் பணிவேனே                       
        2.

நூல் 

தலம் பலவும் சென்றுநான் சேவித்தேன் -ஆறுபடைத் 
தலம் பலவும் கண்குளிரக் கண்டுகொண்டேன் என்றன்மனம்
பலம்பெறவே கைதொழுது  நிற்கின்றேன்  நற்றேவர் 
நலம்  பரவும் சந்நிதியே தேஹுரோடின் நாயகனே //                  3.

பார் காக்கும் காவலனின் பன்னிருகைக் கோமகனின் 
சீர்போற்றி நல்லடியார் பாடிமகிழ் வேளையிலே 
கார்போல் கருணைமழை பொழிவித்து எங்கள் மனத் 
தேர்மேல் வலம் வருவாய் தேஹுரோடின் நாயகனே //             4.

புவிநாடி வலம்வரு நல புள்ளிமயில் வாகனனைக் 
கவிபாடிச்  சிறு துதியால் வணங்குகிறேன் பார்புகழும் 
தவஞானியார் பலரும் தொழுதேத்தும் பெருங்கோவே 
சிவஞானம் தெளிவிப்பாய் தேஹுரோடின் நாயகனே   //           5.

பூவினுளே சிறப்புளது புண்டரிகம் செம்மைதமிழ்ப் 
பாவினுளே பொற்புளது அருணகிரி திருப்புகழே - என்றன் 
நாவினுளே நின்றுளது நல்லடியார் பாதமலர் 
தேவருளே தேவன் நீ  தேஹுரோடின் நாயகனே   //                     6.

இருமலிலும் சருமலிலும்  காய்ந்து  எந்தன் உளம அலையும் 
பொருமலையும் பெருமலையும் போக்கி அருள்புரிவாய் - வான் 
தருமலையும் தனிமலையும் சேர்ந்தணைந்த இப்புவியில் 
திருமலை போல் தொல்மலிசீர்த் தேஹுரோடின் நாயகனே //      7.

பலன் 

அண்டமெலாம் தொழுதேத்தும்   தேஹுரோடின் நாயகனைத் 
தெண்டனிடு வோர்க்குச் சித்திக்கும் சிவபதமே 
மண்டு துயரிலா வாழ்வும் மாண்பு திருசேர்  வாழ்வும் 
பெண்டுபிள்ளை யுடன்வாழ்வும் மகிழ்வோடு  பெறுவாரே //    

 அன்பர் ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டும் மீண்டும் ஓர் அற்புத  கவிதையை சமர்ப்பிப்பார் என்று நம்புகிறோம்.

ஆலயத்தின் நிர்மாண  வரலாறையும் மற்ற விபரங்களையும் கௌமாரம் இணை ய தளத்தில் கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்.





கௌமாரம் இணைய தளத்திற்கு நன்றிகள் மிகப்பல 

Sunday, 15 December 2013

குடந்தையில் திருப்புகழ் வகுப்பு

முன்பு கல்வி,மற்ற கலைகளை கற்றுக்கொள்ள சீடர்கள் குருவைத்தேடித்தான் செல்லவேண்டும் ஆனால் தற்போது சீடர்களை தேடி குருமார்கள் செல்ல வேண்டிய கால கட்டாயம்.அதனால் என்ன? குறிக்கோள் தான் முக்கியம்.நம் திருப்புகழ் வகுப்புக்களும் அதற்கு விதி விலக்கல்ல.நம் ஆசிரியர்கள் எவ்வளவு இடர்பாடுகளுக்கும் இடையில் தங்கள் தெய்வீக பணியை செவ்வனே செயல் பட்டு வருகிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

அந்த வகையில் .நம் திருப்புகழ் ஆசிரியர் குழு  (மூர்த்தி சார் ,சித்ரா தம்பதியினர் )கும்பகோணம் சென்று .சாரதா பாடசாலை யின் நூற்றுக்கணக்கான இளம் மாணவர் களுக்கு எப்படி கற்பிக்கிறார்கள் என்பதை நேரில் பாருங்கள்.பாடல்


137.நினைத்ததெத்தனை

நினைத்த தெத்தனையிற்                றவராமல்       
      நிலைத்த புத்தி தனைப்             பிரியாமற்   
கனத்த தத்து வமுற்                        றழியாமற்   
      கதித்த நித்தி யசித்                 தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக்               கெளியொனே   
      மதித்த முத்த மிழிற்              பெரியோனே   
செனித்த புத்தி ரரிற்                    சிறியோனே   
      திருத்த ணிப்ப தியிற்             பெருமாளே.

Kindly click


http://www.youtube.com/watch?v=Y9eUHNeHnPk&feature=em-uploademail-smbtn


குருநாதர் அருணகிரியார்  பயணம் போல் குழுவின் பயணமும்,பணியும் மற்ற இடங்களுக்கும் பரவ பெருமானின் அருள் வேண்டுகிறோம்.தெய்வீகப்பணியில்  ஈடுபட்டுள்ள அருளாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறோம்.நேர் காணலை அன்பர்களுக்கு வழங்கிய மாலதி ஜெயராமன் அவர்களுக்கு நன்றிகள் பலபல.





                                                                 

Friday, 13 December 2013

Vallimalai Gurupoojai Isaivazhipadu 08.12.13

இசை வழிபாடு மிக சிறப்பான முறையில் நடந்தேறியது.அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் குரு பாலு சாரும் ,அப்பகுதியில் திருப்புகழ் கற்பிக்கும் குரு பாலசந்திரன் சாரும் தம்பதி சகிதமாய்  உயரிய முறையில் கௌரவிக்கப்பட்டார்கள். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
















Thursday, 12 December 2013

திருப்புகழ் ஆன்மீக பெருவிழா 2013: இரண்டாம் நாள் 14.07.13

அன்பர்கள் வகுப்புக்கு செல்கிறார்கள்.கற்றுக்கொள்கிறார்கள்.Tape /CD கேட்டு அபிவிருத்தி செய்து கொள்கிறார்கள். ஆனால்  இசைவழிபாடுகளில் கலந்துகொள்வதைத்தான் மிகவும் விரும்புகிறாகர்கள் ஏனெனில் ஆயிரம் குரல்கள் ஒரே குரலில் முருகன் சந்நிதானத்தில் ஒலித்து தெய்வீக நிலைக்கு கொண்டு செல்கிறது.கால அளவு கிடையாது உடல் உபாதைகள் ஓடி ஒளிகின்றன .தங்களை இழக்கிறார்கள்.பிற்பகலில் வசந்த அம்மையார் உணர்த்திய  மனோலயத்தில் திளைக்கிறார்கள்.ஆன்மீக விழாவில் .அந்த வழிபாடு  தொடங்கும் நேரத்திற்காக ஆயிரக்கணக்கான அன்பர்கள் .காலை முன்னரே வந்து இடம் பிடித்தனர் ,இடம் கிடைக்காதவர்கள் அரங்கத்தின் வெளியே அமர்ந்து கலந்துகொள்ள அமைப்பாளர்கள் செவ்வனே ஏற்பாடுகள் செய்திருந்தனர். சரியான நேரப்படி வழிபாடுதொடங்குமுன் உமா பாலசுப்ரமணியம் முன்னுரை வெகு அருமையாக இருந்தது.அருணகிரிநாதர் முத்துவில் தொடங்கினார்.நம் குருஜி முத்துவில் முடித்தார் என்று சுட்டிக்காட்டினார்.மற்றொரு அதிசயம்.இரண்டு பாடல்களுக்கும் பொருளும் ஒன்றே. மணிசார் குருமஹிமையைப்பற்றி விவரித்தது அன்பர்களை நெகிழ வைத்தது. வழிபாடு தக்க பக்க வாத்யங்களுடல்  தொடங்கி மூன்றரை மணி நேரம் நீடித்தது.அன்பர்கள் சொர்கத்தில்தான் சஞ்சரித்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?. 

   நாமும் கலந்து கொள்ளுவோம்.


நம் அன்பர்களில் பலர் முருக பத்தியில் திளைத்து பலவிதங்களில் அன்பர்களுடன் ,எழுத்துக்கள் மூலமாகவும்,சொற்பொழிவு,இசை சொற்பொழிவுகள் மூலமாகவும் அளித்து வருகிறார்கள்.ஆனால் அவைகள் குடத்தில் இட்ட விளக்கு போல் தன அடக்கத்துடன் தான் உள்ளார்கள். அவர்கள் மேன்மையைமஹாநாடு,கருத்தரங்கு சந்தர்ப்பத்தில்தான் நாம் அறிய முடிகிறது.அப்படிப்பட்ட அன்பர்களில் மூன்று பேரின்  சொற்பொழிவு அன்பர்களை அசரவைத்தது. முதல் நாள் சொற்பொழிவாற்றிய நீண்ட அனுபவம் வாய்ந்த பேச்சாளர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தார்கள்.
பிற்பகலில் முதன்மையாக  பெங்களூர் அன்பர் திருமதி வசந்தா பஞ்சபகேசன்  திருப்புகழில் மனோலயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சங்கீத உலகில் லயத்துக்கு முக்கியமான பங்கு உண்டு,அது தான் மற்ற கலைஞர்களை.கட்டுப்படுத்தி இணைத்து உயரிய இசையை அளிக்கிறது.கச்சேரிகளில் நாம் ஒழுங்காக தாளம் போட்டுகொண்டிருக்கிறோம்.சிலசமயங்களில் நம் தாளம் பிசகுவதுபோல் தோன்றும்.நமக்கே .நாம் தாளம் தப்புகிறோமா அல்லது கலைஞர்கள் பால் தவறு  உள்ளதா  என்று சந்தேகம். நான் ஒரு நிகழ்ச்சியின் பொது மேதை ரவிகிரானிடம் இந்த கேள்வியை எழுப்பினேன்.அவர் புன்னகை பூத்து, ஆம் சிலசமயங்களில் தவறுவது உண்டு. ஆனால் மிருதங்க வித்வான் எப்படியாவது சரி  செய்து வழிக்கு கொண்டு வருவார்.அது  எங்களுக்குத்தான் தெரியும் என்றார்.. இசையின் மகத்துவம் என்றார்.எனவே லயத்துக்கு வழி தவறியவர்களை திரும்ப நிலைக்கு கொண்டுவரும் ஆற்றளுள்ளது . மற்றொரு  நிகழ்ச்சி. அபிராமி அந்தாதி பின் ஒரு அன்பர் நீங்கள்  திருப்புகழ் பாடும்போது உங்களை கட்டுப்படுத்த தாளம் உள்ளது.ஆனால் அந்தாதிதியில் தாளம் இல்லையே எப்படி காலப்பிரமானத்தோடு நூற்றுக்கணக்கானோர் ஒரே குரலில் பாடமுடிகிறது  கேட்டார்.என்னால்  ஒன்றும் கூறமுடியவில்லை. சமாளித்து அனுபவத்தில் தான் பாடுகிறோம்.என்றேன்.வசந்தா அம்மையாரின் உரையைக் கேட்டபின் அதுதான் மனோலயம்  உணருகிறேன்..அம்மையாரின் உரையின் சாராம்சத்தை எடுத்துரைக்க முடியாது. உணரத்தான் த்தான் முடியும். ஐம்பது நிமிட உரையில் ,மனம்,வாக்கு,காயம்,யோகவஷிஷ்டம் ,புத்தி,அகங்காரம்,சித்தம்,பஞ்சகோசம்,அன்னமயம்.பிராணமயம்,விஞ்ஞா னம்,ஜபம்,தபம்,தியானம்,லயம்,நாதம்,ஒருப்படுதல்,கர்மா,நித்யகர்மா,நிஷ்களகர்மா ,ஞானம்,பக்தி,யமம்,நியமம்,ஆசனம்,யோகாசனம்,பிராணாயாமம்,ஆனந்தம்,சமாதிநிலை,அனுபூதிநிலை ஆனந்தம்,ஆசனம்,யோகாசனம்,சமாதிநிலை அனுபூதிநிலை.போன்ற தத்துவங்களும்,மகாபாரதம்,கீதை,அந்தாதி முதலியவற்றில் இருந்து மேற்கோள்கள்.

தொகுப்புரை ஆற்றிய சித்ரா மூர்த்தி அவர்கள்  எண்ணற்ற திருப்புகழ் பாடல்கள் இடம் பெற்றன .ஆனால் நான் குறித்துக்கொள்ளவில்லை .யாராவது குறித்துக்கொண்டார்களா  என வினவினார்.அவருக்காகவும்,மற்ற அன்பர்களுக்காகவும் அளிக்கிறேன். விட்டுப்போனதை  பதிவுகளிலிருந்து பிடித்தேன்.இன்னும் விட்டு போயிருந்தால் நான் மனோலயத்தில் இருக்கவில்லை என்றுதான் பொருள்.எத்தனை  பாடல்கள் பாருங்கள்.பாடல்களை திரும்ப திரும்ப படித்தால் தான் முழுப்பொருள் விளங்கும் .

இடம் பெற்ற பாடல்கள் :

குருதி புலாலென்பு ..துரிசற ஆனந்த வீடு கண்டிட 
கருப்பு வில் ....ஒருப்படுதல் .....
விழுதாதேனவே ... அழிய வரமே  தருவாயே 
இலாப ........சராசர வியாபக பராபர  சமாதி அநுபூதி 
தரையின் மானுட ...பகரொனாதது ...மனோலயம் வந்து தாராராய் 
கரைபடும் உடம்பு ..குறை வர நிறைந்த மோன 
ஆராதனர் ....நீ வாவென  நீ இங்கழைத்து 
பூரண வார ....காரண ......யோகிகளாய் விளங்க அருள்வாயே 
மூலங்கிளை வாயுவை .....பிரகாசம் 
ஆசார வீணன் 
புகரில் சேவல ..ஆருயிரும் கரணங்களும் 
சேமகோமள ...ஓமத்தீ வழுவார் 
பஞ்ச பாதகன்  பாவி .முழுமூடன் 
கிரி மொழி ..அமிழ்தலற்று எழுதலற்று 
 ஆசைகூர் பக்தன்.
உய்ய ஞானத்து ..ஞானநெறி 
மூலமந்திரம் ஒதலிங்கிலை 
பக்தியால் யான் உன்னை 
எதிலாத பக்திதனை.
மாத்திரையாகிலும் ..மனோலயம் 
ஐங்கரனை ஒத்த அந்திபகல் அற்ற நிலை 
கட்டழகு   மனோலயம் 
மாலினாலெடுத்த ..மனோலயம் 
நிகரில் பஞ்ச         நெஞ்சும் ஆவியும் 
விரகர நோக்கியும்....அழு அழுது 
வஞ்சத்துடன் 
அண்டர் உலகம் சுழல . வேல் விருத்தம் 
சீர் பாத வகுப்பு உரையவிழ உணர்வு அவிழ ..
பழனி வகுப்பு ..
ஒர வொட்டார் ......அலங்காரம் 
தோலால் சுவர் வைத்து ..."
போக்கும் வரவும் .."

முடிவில்  அதல விதல  என்று தொடங்கும் பழனி பாடலில்  எல்லாம் அமைந்துள்ளதாக கூறினார்.

.அதன் லிங்க்  கொடுத்துள்ளேன்.


திருப்புகழை அப்யாசம் செய்வதுதான் மனோலயத்தை அடைய சுலபமான,சிறந்த வழி என்று பதிய வைத்தார். என்றும் நினைவில் நிற்கும் உரையை மீண்டும் மீண்டும் கேட்போம் 


பிற்பகல் நிகழ்சிகளில்  இரண்டாவதாக  கலந்து கொள்ளவிருந்த  மும்பை ராதாக்ருஷ்ணன் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை.எனக்கு சிறிது மனக்குறை தான்.ஆனால் உமா உரையாற்றவந்தவரை அறிமுகப்படுத்தியவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சி .காரணம் சுப்ரமணியம் மும்பைவலா மட்டுமல்ல நான் பணியாற்றிய வங்கியில் பணியாற்றியவர். (எல்லாம் ஒரு  "இது" தான் )அதைவிட சிறப்பு அவர் ஈடுபட்டுள்ள தெய்வீக பணி .பின் விவரித்தவர் சித்ரா மூர்த்தி.

அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு "அடியார்கள் கூட்டத்தின் சிறப்பு  ".அடியார்கள் என்பது யார்? ' காவியுடுத்து`தாழ் சடை வைத்துங் காடுகள் புக்கும் " சாமியார்களா?என்று ஆரம்பித்தவர்,தான் அதிகம் திருப்புகழிலிருந்து விவரிக்கப்போவதில்லை என்று கூறி .புராணங்களிலும்.நீதி நூல்களிலும் உணர்த்தப்பட்ட கோட்பாட்டின் படி தற்காலத்தில் வாழ்ந்து காட்டிய அடியார் களை பட்டியலிட்டு,அன்பர்களை பரவசப்படுத்தினார்.அடியார்களின் இலக்கணமாக தூய்மை,சுய பரிசோதனை,ஒழுக்கம்.நாவினால் பிறரை புண் படுத்தாதவர்கள் , மனித நேயம், போன்றவற்றை உதாரணங்கள் மூலம் பதிய வைத்தார்.சுட்டிக்காட்டிய அடியார்கள்;பட்டினத்தார்,வள்ளலார்,காஞ்சி ஸ்வாமி ,கன்ப்யுசியஸ்,தாமஸ் ஆல்வா எடிசன்,காமராஜர்.முதலியோர்..தொகுப்புரை வழங்கிய சித்ரா மூர்த்தி அவரின் தன்னடக்கத்தை யும்,தெய்வீக பணிகளையும் பாராட்டியதோடு,அவரும் ஓர் அடியார்தான் தான் என்று அன்பர்களின் ஏகோபித்த உணர்வை வெளிப்படுத்தினார்.அன்பர்களின் ஆனந்த்தத்துக்கு அளவே இல்லை.அவரது அறிய உரையை கேட்போம்.அவர் பணி  மேலும் சிறக்க பெருமான் அருள் வேண்டுவோம்.



அடுத்து பேச வந்த டெல்லி அன்பர் அனந்த கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட தலைப்பு, நம் குருஜி போதித்துள்ள "அன்பும் அவிரோதமும் தான்."

பல திருப்புகழிலில் அன்பும் அவிரோதமும் நீக்கமற நிறைந்துள்ளன என்றும் ,ஞான மார்க்கத்தை அடைய அன்பு வழி,அவிரோதம் நெறி என்றும்,அன்பைகொடுத்தால்தான் அருளை பெறமுடியும்.ஆனால் இடையில் பல தடங்கல்கள் .அவை நீங்க"இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே "(அதிரும் கழல்) வேண்டுவதே வழி.திருப்புகழில் ஆராய்ச்சியில் இறங்காமல் "பக்தியால் மா திருப்புகழ் பாடி" அடுத்த தலைமுறையினரையும் ஈடுபடுத்தி ,இறைவனின் பாதகமலம் பற்றினால் தான் நம் பாதக  மலம் அகலும்,சினம்,பேராசை ஒழியும்  என்று உணர்த்தினார்.ககனமும் அநிலமும் என்று தொடங்கும் பாடலில் "உள்ளக்கண் நோக்கும் அறிவூரி ஒழி திகழும் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அதை நோக்க அருள்வாயே " சு ட்டிக்காட்டினார்.இறுதியில் "தண்டாயுதமும்,திரிசூலமும் "என்று தொடங்கும் கந்தர் அந்தாதியையும் கையாண்டார்.

விரிவாக கேட்போம்.



திருப்புகழ் பாடல்கள் பல முறையில் பல ராகங்களில்  பல குழுக்கள் இசைத்து வருவதை நாம் அறிவோம்.முழு நேர மேடைக்கச்சேரி கூட நிகழ்த்தியுள்ளார்கள்.அனால் பரம்பரையாக சந்தத்துடன் ,மரபுடன் இசைத்து வருபவர்கள் கோயிலைசார்ந்துள்ள ஓதுவார்களும்,தங்களையே அர்பணித்துள்ள அடியார் திரு கூட்டமும் தான். நம்முடைய விழாக்களில் அத்தகைய அடியார்களை அழைத்து  கௌரவித்து ,அவர்கள் இசையில் ஈடுபட்டு இன்புறுகிறோம்.பொன்விழா நிகழ்சிகளிலும் பழனி ஓதுவார்கள் இசைத்ததை அன்பர்கள் அறிவார்கள்.ஆன்மீக விழாவில் வல்லக்கோட்டை திருப்புகழ் சபையினர்   இசை இடம் பெற்றது.

வல்லகோட்டையின் மறு பெயர் கோடைநகர் இரண்டு பாடல்கள் நம் இசை வழிபாடு நூலில் இடம்  பெற்றுள்ளன  சித்ரா மூர்த்தியின் முன்னுரையில் குறிப்பிட்ட அறிய செய்தியை கேளுங்கள் .தலசிறப்பை பார்ப்போம். 

temple history:


இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற பல பாடல்கள் குருஜி கற்பித்தவை.கலைஞர்கள் வேறு ராகங்களில் பாடினாலும் நம் அன்பர்கள் நொடியில் வாங்கி கூட இசைத்தது ஓர் இனிமையான அனுபவம். பாடல்களை கேட்போம்.

isai:


விழா நிறைவை நெருங்குகிறோம்.ராமகிருஷ்ணா மடம்  ஸ்ரீமத் புத்திதானந்த மகாராஜ் திருப்புகழில் வேதாந்தம் என்ற தலைப்பில் அருளாசி வழங்கினார்.

"வேதம் ஞானம். ஞானம் முடியக்கூடிய இடம் வேதாந்தம்.அந்த விஷயங்கள் உபநிஷத்தில் தான் கிடைக்கும்.ஆனால் அவை வடமொழியில் தான் உள்ளன.தெரியாதவர்கள் எப்படி உணரமுடியும்.அக்குறையை நீக்க இறைவன் அடியார்களை அனுப்பி திவ்ய ப்ரபந்தம் .திருப்புகழ் தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களை அருளசெய்தான்.அப்படி வந்ததுதான் திருப்புகழ்.அதில் அத்தனை வேதாந்த கருத்துக்களும் அடங்கியுள்ளன,' என்ற முன்னுரையுடன் தொடங்கி அன்பர்களை மெய்மறக்கசெய்தார் உடலையும்,உயிரையும் துறக்கத்துணிந்த பின் தான் அருணகிரியாரை இறைவன் ஆட்கொண்டான் என்ற அருணகிரியாரின் வாழ்க்கை  சரித்திரமே சான்று என்று தொடர்ந்தவர் 

 கையாண்ட  சில பாடல்கள் :

அகர முதல ...நிகழும் வினை ......உணர்த்தி அருள்வாயே.(மாண்டோக்ய உபநிஷத்)

தோலொடு  மூடிய ...காரண காரிய ....அருளாதோ ...(அத்வைதம் )

அமலவாயு ...எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவனதீதம் அருள்வாயே 

சும்மாயிரு சொல் அற ....அநுபூதி 

முடிவில் ஏறுமயில் பாடலில் ஆறு முகங்களுக்கு  ஆறு விதமான தத்துவங்கள் உள்ளதுபோல் திருப்புகழில் ஈஸ்வர தியானம்,பராக்கிரமம்,பஞ்ச இந்திரிய சேஷ்டை,ப்ரம்ம ஸ்வரூபம்,லீலை,சரணாகதி  என்கிற  ஆறு விதமான வேதாந்தத கருத்துக்கள் அடங்கியுள்ளன என்று பதிய வைத்தார்.

விழாவின் நிறைவுரை வேதாந்தமாக அமைந்ததும் அன்பர்களின் பாக்கியமே.

அருளுரையை மீண்டும்,மீண்டும் கேட்போம்.


 



ஆன்மீக விழா குழு தலைவரும் ,சென்னை வட்ட செயலருமான ரா. தியாககராஜன் நன்றி நவிலளுடன் விழா நிறைவுற்றது  (என்று கூற மனம் வரவில்லை.அந்தாதிபோல் முடிவே அடுத்த  பெரும் விழாவுக்கு ஆரம்பம் என்றுதான் மனம் விழைகிறது)

அமைப்பாளர்கள் பலருக்கு நன்றி கூறினார்கள்.அவகளுக்கு நன்றி கூறுவது அன்பர்களின்  கடமையாகும்.அவர்களின் சார்பில்  நம் மத்ய செயற்குழு,விழாக்குழு,சென்னை வட்ட குழு,அனந்த பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகிகள்,தொண்டரடிப்பொடியாழ்வாராக பணியாற்றிய தொண்டர்கள்,அன்பர்களுக்கு தங்க வசதியளித்த அன்பர்கள்,விட்டுப்போனவர்கள் முதலியோருக்கு இதயம் கனிந்த  நன்றியையும் பாராட்டுதல்களையும்  தலை வணங்கி சமர்பிக்கிறேன்.

விழாவுக்கு முதுகு எலும்பு போல் அமைந்த தொகுப்பாளர்கள் உமா பாலசுப்ரமணியம்,சித்ரா மூர்த்தி அவர்களின் பணி  அளவிடமுடியாதது.இட்ட பணியை நேர்த்தியாக,செவ்வனே நிறை வேற்றினார்கள்.அவர்களது முன்னுரை,பின்னுரை,தொகுப்புரை,அறிய செய்திகள்,எல்லாமே மறைந்திருந்த உரையாக அமைந்தது.

மற்றும் வண்டுபோல் சாரத்தை தேடி அலைந்து ,சேகரித்து அன்பர்களுடன் புகைப்படம்,U Tube மூலம் பகிர்ந்து அவர்களோடு  இன்புறும்  அருளாளர்கள் ஐயப்பன்,மாலதி ஜெயராமன் அவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

குருஜி நமக்கு அறிவுறித்தியது பாடல்களில் பொருள் ,தத்துவம் உணர்ந்து அதை வாழ்க்கையிலும் கடை பிடிக்க வேண்டும் என்பதே.அந்த வகையில் இந்த விழா அன்பர்களுக்கு மேலும் தூண்டு கோலாக அமைந்து,மேலும்,மேலும் பாடல்கள் பொருள் உணர்ந்து கற்று தம் இளைய தலைமுறைகளையும் ஈடுபடுத்தி இன்புற்று.பெருமானின் பூரண அருளுக்கு பாத்திரமாவார்கள் என்பது திண்ணம்.

                             குருவாய்  வருவாய் அருள்வாய் குகனே 

-மும்பை வெங்கடராமன்

"Thiruppugazh Anmeegap Peruvizha 2013" photos are available at Smt. Malathi Jayaraman's following "GOOGLE PLUS" link: 


https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901078130212387473 

and 

https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901235897638280721 

திருப்புகழ் ஆன்மீகப் பெருவிழா 2013 : முதல்நாள் 13.07.2013

திருப்புகழ் ஆன்மீகப் பெருவிழா  2013ம் முதல்நாள் 


சென்னையில் சென்ற ஜூலை மாதம் 13,14 தேதிகளில் வெகு சிறப்பாக நடை பெற்ற ஆன்மீக விழாவில் கலந்து கொண்டவன் என்ற தனிப்பட்ட முறையில் எழுதி, என்னுடைய அனுபவங்களையும்,ஆனந்த நிலையையும் விழாவுக்கு வர இயலாத அன்பர்களூடன் பகிர்ந்து கொள்ளவும்  நிகழ்வுகளை ,பதிவு செய்யும்  நோக்கத்துடன் தான் அளிக்க விரும்புகிறேன்.தாமதத்துக்கு காரணம் ஒலி /ஒளி வடிவுடன் அளிக்க வேண்டும் என்ற ஆசைதான்.அருளாளர்கள்,ஐயப்பன்,மாலதி ஜெயராமன் பெரும் பாடுபட்டு தயாரித்துள்ள வடிவங்களுடன் அளிக்கிறேன் அவர்களுக்கு என் இதய பூர்வமான வணக்கங்கள் அனந்தம் .




விழாவுக்கு பல பாகங்களிலிருந்து அன்பர்கள் வந்து குவிந்தனர்.மூத்த வயதினர், உடல் ஊன முற்றவர்,குழந்தைகள் பல மொழியாளர் களை காண முடிந்தது.விழா நிகழ்ச்சியின் இடையில் சித்ரா மூர்த்தி கூறியதைப்போல். மற்ற கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கடமைக்காகவும், கட்டாயத்துக்காகவும் முறைக்காகவும் தான் கலந்து கொள்கிறார்கள் . கல்யாணத்தில் கவரை கொடுத்துவிட்டு,சாப்பிட்டுவிட்டு  பறந்து விடுகிறார்கள். ஆனால் நம் அன்பர்கள் குடும்பத்தோடு பல  இடர்ப்பாடுகளுடன்  இரண்டு தினங்களும் முழுமையாக கலந்துகொண்டு ஒப்பில்லா மன மகிழ்வுடனும் திருப்தியுடனும் விடை பெறுகிறார்கள். காரணம் முருகப்பெருமானின் மேலும் குருவினி டத்திலும் கொண்ட பக்திதான்.



விழா அடையாறு  அனந்தபத்மநாப சுவாமி ஆலய வளாகத்தில் அமைதியான சூழ்நிலையில் நடைபெற்றது. அங்கு தான் குருஜியின் 80 ஆண்டு நிறைவு விழா நடந்தது.குருஜி கடைசி யாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியும் அங்குதான்.வழிபாடுகள் நடப்பதும் அங்குதான்.நிகழ்ச்சியின் இடையில் அன்பர்கள் குழந்தைகளைப்போல் குருஜி இந்த இடத்தில் தான் சக்ர நாற்காலியில் அமர்ந்திருந்தார் போன்ற உரையாடல்களை கேட்க முடிந்தது.



அன்பர்கள் அரங்கத்துக்கு வருமுன் அனந்த பத்மநாப ஸ்வாமி  ஆலயத்துக்கு சென்று தரிசனம் செய்து விட்டுத்தான் அரங்கத்தில் பிரவேசித்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ ?ஆலயம் .திருவனந்தபுரததுக்கு அடுத்து அதே பாணியில் அமைந்த ஒரு வித்தியாசமான தலம் பெருமாளை மூன்று நிலைகளில் தான் தரிசனம் செய்யமுடியும்  மற்றும் விநாயகர்,கருடன்,ஆஞ்சநேயர்,நரசிம்மர்,அஷ்டபுஜங்கதுர்க்கை முதலிய மூர்த்திகளும் தங்க கவசம் அணிந்து திவ்யமாக தர்சனம் அருளுகிறார்கள்.ஆலயத்தின் வரலாறையும் ,சிறப்புகளையும் நிர்வாகி ஸ்ரீனிவாச ராவ் மூலம் கேட்டறிந்து,நாமும் தரிசனம் செய்வோம்.





அடுத்து நம் விழா அரங்கினில் நுழைந்ததும் ஒளி  வெள்ளம் நம்மை தாக்கியது.உதித்த செங்கதிர் ஆலயத்தின் மூர்த்திகள் அணிந்துள்ள தங்க கவசத்தின் மீது பாய்ந்து பின் அரங்கத்துக்குள் பிரவேசித்ததுதான் காரணமா அல்லது  மு ருகப்பெருமான்  எழுந்தருளி அன்பர்களுக்கு தரிசனம் தந்ததாலா அல்லது அன்பர்களின் வதனங்களில் மிதந்த பிரகாசத்த்தினாலா அல்லது அலங்கார மின் விளக்குகளாலா என்று என்று கூறுவது மிக கடினம்.எப்படியோ இடம் பிடித்து அன்னை அபிராமி எழுந்தருளுவதற்கு பரவசமாக காத்திருந்தார்கள்.எல்லோர் மனத்திலும் குருஜி இல்லையே என்ற இனம் புரியாத சோகம் நிலவுவதையும் உணர முடிந்தது.குருஜி அருவமாக அரங்கத்தில் எங்கேயோ அமர்ந்திருக்கிறார் என்று தாங்களே சமாதானமாகி சாந்தியாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.





உரிய நேரத்தில் அபிராமி அந்தாதி அன்பர்கள் உள்ளத்தி னில் கங்கை பிரவாகமாக பெருக்கெடுத்தது.ஆயிரம் ஆயிரம் குரல்கள் ஒரே குரலில் ,ஒரே துதியில் ஒலித்து ஒரு மணி நேரம் அன்னையின் சந்நிதானத்துக்கு சென்று ,கலந்து உள் உருகி .விழி நீர் மல்கி.மெய்புலகம் அரும்பி,ஆனந்தமாகி,அறிவிழந்துமொழிதடுமாரி,பித்தராகி முடிவில் அபிராமி சமயம் நன்றே என்று தீர்மானித்தது.கொடியே இளவஞ்சிக்கொம்பே,நாயகியே, நான்முகியே,நாராயணியே சாம்பவியே,சங்கரி யே,சியாமளையே மாலி னியே வாராகியே,சூளினியே,மாதங்கியே,பைரவியே,என்று பலவாறு துதித்து நன்றே வருகினும்,தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை.உனக்கே பரம் .எனக்கு உள்ளவெல்லாம் அன்றே உனதென்று அளித்து விட்டேன் என்று அர்ப்பணித்தார்கள்.பாபநாசம் சிவன் உன்னை அல்லால் என்ற கீர்த்தனையில் "நீயே மீனாட்சி ,காமாட்சி நீலாயதாட்சி என பல பெயருடன் எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலி லே எழுந்தருளிய தாயே " என்ற வரிகளை நினைவு கூர்ந்தோம். ஒரே குரலில் ஒலித்த அந்தாதியைக் கேட்போம்.

 இறை வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் 1தொடங்கின.நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்து முன்னும் பின்னும் மிக அருமையாக அறிமுகம்,ஆன்றோர்கள் பேசிய அரும் கருத்துக்களின் சாராம்சத்தை உடனுக்குடன் அளித்த  அன்பர்கள் சித்ரா மூர்த்தி,உமா பாலசுப்ரமணியம் அவர்களின்  அரிய பணியை இந்த சந்தர்ப்பத்தில்  பாராட்டியே ஆக வேண்டும்...அவர்களால் உட்காரமுடியவில்லை.மற்ற அன்பர்களோடு உரையாட முடியவில்லை.முக்கியமாக அன்பர்களோடு சேர்ந்து பாட முடிய வில்லை, ஆனால் அவர்கள் மட்டும் பாடக்கூடிய சந்தர்பத்தையும் பெருமான் அளித்தான்.பின்னர் பார்ப்போம்.கேட்போம்.

காஞ்சி ,சிருங்கேரி முதலிய ஆசார்யாள் இடமிருந்து வந்த ஆசிகளை அறிவித்தபின்  ஸ்ரீனிவாசராவ் சுவாமி தயானந்த சரஸ்வதிக்கும்,,ஜெயேந்திர பூரி  மகாஸ்வமிக்கும்  ஆலய மரியாதை  செலுத்தி கௌரவித்தார்.குத்து  விளக்கு  ஏற்றி விழா மங்களகரமாக தொடங்கியது.

,அமைப்பின் தலைவர் பத்மா வெங்கடராமன்.நிகழ்த்திய வரவேற்புரையில் அமைப்பின் சீரிய பணிகளை விளக்கியபின், நம் குருஜி திருப்புகழ் பாடல்களை செறிந்த பொருளோடு கற்றுக்கொள்ளுவதை மிகவும் விரும்பினார் என்றும்,அதற்கு துணையாக பல மகாநாடுகளும், கருத்தரங்கங்களும் நடைபெற்று வருவதாகவும்,அந்த வகையில் இந்த ஆன்மீக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  கூறி எல்லோரையும் வரவேற்றார்.

அன்பர்கள் ஆவலுடன் காத்திருந்த அனுக்ரஹ பாஷனையில் சுவாமி தயானந்த சரஸ்வதி ,நம்  குருஜியை முதற்கண் நினைவு கூர்வது நம் தலையாய கடமை என்றும் அவரது சேவை ஈடு இணையற்றது என்றும்,சங்கீத மும்மூர்த்திகளுக்கு ஒப்பானவர் என்றும் புகழாரம் சூட்டினார்.பின்னர்  ஆறுமுகம் ஆறுமுகம் என்று தொடங்கும் பாடலை சுட்டி காட்டி,அதில் 96 தத்துவங்கள் அடங்கியுள்ளது என்றார் எதிர்பாராதநிலையில் பாடலை பாட அழைத்தார். அன்பர்கள் சித்ராவும் ,உமாவும் பாடி மகிழ் வித்தார்கள்.சுவாமிகளின் உரையை விரிவாக கேட்போம்.

அடுத்து ஜெயேந்திர  பூரி மகாஸ்வாமி தன்னுடைய பாஷ்யத்தில் ' நாம் எல்லோரும் புகழுக்கு விரும்புகிறோம்,எதிர்பார்க்கிறோம்.ஆனால் அது நிலையானதல்ல.ஆனால் இறைவன் புகழ் பாடும் திருப்புகழ் தான் உயர்ந்தது,நிலையானது .மற்றும் பல தீய குணங்களை கொண்ட அருணகிரி நாதரை தடுத்தாட்கொண்ட முருகன் , தீய எண்ணங்களை கொண்ட நம்மையும் தூயவன்  ஆக்குவான் மிருகங்களை மாற்ற முடியாது.மனிதர்களை மாற்ற முடியும்.இறைவனை பல வடிவங்களில் வழிபடுகிறோம். ஆனால்  பிரம்மத்துக்கு உருவம் இல்லை. அந்த ப்ரம்மத்தையே   சுஸ்வரமாக   சுப்ரமண்யம் என்று நாமம் கொண்டுள்ளான்...... என்று அருளாசி வழங்கினார்..கேட்டு அனுபவிப்போம்.


பின்னர் புதிதாக நம் இசை வழிபாடு நூலில் சேர்க்கப்பட்டுள்ள 28 பாடல்கள் அடங்கிய  இசை குறுந்தகடு சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட்டார்.நூலின் கன்னட பதிப்பை  ஜெயேந்திர பூரி மகாராஜ் வெளியிட்டார்.


அடுத்து கருத்தரங்க நிகழ்ச்சிகளில் முதலாவதாக டாக்டர் திருமதி சுத் சேஷையன்  "திருப்புகழில் முருகனின் தன்மைகளும் மேன்மைகளும் "என்ற தலைப்பில்  ஏறுமயில்  பாட்டுக்கு பலகோணங்களில் பல் வேறு விளக்கங்களை அளித்தார்.கேட்டு அனுபவிப்போம்

https://www.youtube.com/watch?v=68vqwhfZgns


காலை நிகழ்ச்சிகளின் முடிவில்  அமைப்பின் செயலர் திருமதி பத்மா சுப்ரமணியன் முறையாக நன்றி நவின்றார்.


https://www.youtube.com/watch?v=6KCFqmT-Qf4



அன்பர்கள் மனத்தில் பொதுவாக நம் இளைய தலை முறையினர் திருப்புகழ் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும்,நம் அமைப்பின் நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபடுவதில்லை ..என்றும் பரவலான எண்ணம் உண்டு. ஏன் சிலர் மனத்தி ல் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற வேண்டாத பயமும் உண்டு.இதை முறியடிக்க அஞ்சேல் என அறைகூவலுடன் வந்து அரங்கில் குதித்தனர் இளம் தளிர்கள்.ஒரு வழி பாட்டையே நடத்தி அன்பர்களை அசத்தி தாம் வாழையடி வாழையாய் வந்த திருக்கூட்டம் என நிருபித்தனர்.ஏனெனில்.அவர்கள் முருகப்பெருமானால் ஆசியுடன் அனுப்பப்பட்டவர்கள்.ஆர்வத்துடன் கேட்போம்.முருகனின் பரிபூர்ண அருளுக்கு வேண்டுவோம்.




பிற்பகல் நிகழ்ச்சியில்முதலில் அமுதசுரபி ஆசிரியரும் சிறந்த ஆன்மீகவாதியும்,இலக்கியவாதியுமான டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் "அருணகிரிநாதர் -வாழ்வும்,பணியும்,பக்தியும் "என்ற தலைப்பில் நம் நெஞ்சில் என்றும் நிலைக்குமாறு அதி அற்புதமான உரை நிகழ்த்தினார்.அருணகிரி ஏன் முருகப்பெருமானை தேர்ந்தெடுத்தார் ?ராமர், கண்ணனைப்போல் எதிரிகளை வ தம் செய்யாமல் சூரபத்மனை சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார்..நாம் இரண்டையும் முருகனுடன் வணங்குகிறோம்.முருகன் தமிழ் இலக்கியங்களில் மிகப்பழமையான குறுந்தொகை,திருமுருகாற்றுப்படை நூல்களில் இடம் பெற்றுள்ளான்.இந்து மதம் கடவுளை எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம்.ஏன் நாத்திகர்களுக்கும் இடம் உண்டு.திருப்புகழ் தமிழ் வேத மந்திரம்.என்ற முன்னுரையுடன் அருணகிரியாரின் சரித்திரத்தை மிக விரிவாககூறி,நம் அமைப்பு ஒரு பேரலையை உருவாக்கி செயல்படுவதாகவும் ,நாம் அதை விட்டு விடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.அந்த சொல் பிரவாகத்தை கேட்போம்.



அடுத்து  " திருப்புகழில் ஞான மார்க்க அறிவுரைகள் "என்ற தலைப்பில் திருமதி இளம்பிறை மணிமாறன்  மிக எளிய முறையில் விளக்கினார்.அருணகிரியார் தன் சகோதரியிடமிருந்து கேட்கத்தகாத  வார்த்தைகளை கேட்டும் ஞானம் பிறக்கவில்லை.விரக்தி தான் மேலிட்டு கோபுர உச்சியிலிருந்துமுருகா என அழைத்து,குதித்ததும் பெருமான் தடுத்தாட்கொண்டதும் தான் ஞானம் பிறந்தது.பெருமான் வயலூருக்கு அழைத்தார்.முத்தைத்திரு பாடியவுடன் திருப்புகழ் என பெயர் சூட்டியது பெருமான்தான்.....பெருமானும் அருணகிரியாரும் சேர்ந்து பாடிய பாடல் ஒன்று உண்டு .அதுதான் "பக்கரை விசித்திர மணி"அதில் ....திருப்புகழ் விருப்பமொடு செப்பு   வரை பெருமான் அருளியது.பின் எனக்கு அருள் கை மறவேனே தொடர்ந்தது அருணகிரியார். திருச்செந்தூர் ஆலயத்தை நிர்மாணித்தது துறவிகள் போன்ற அறிய செய்திகளை கூறி.,ஞான மார்க்கம் சில குறிப்பிட்ட பாடல்களில் மட்டுமில்லை ஒவ்வொரு பாடலுமே மார்க்கத்தை அறிவுறுத்தும் பாடல் தான் என்று மிக எளிய முறையில் பதிய வைத்தார்.கூர்ந்து கேட்போம். சித்ரா மூர்த்தியின் அழகான பின்னுரையையும் அனுபவிப்போம்.


ஜெயேந்திர பூரி மகாஸ்வாமிகள் அருளாசி வழங்கியதை அடுத்து திரு K .N .கிருஷ்ணமூர்த்தி நன்றி நவிலலுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே முடிவுற்றன  









  குருவாய்  வருவாய் அருள்வாய் குகனே 

-மும்பை வெங்கடராமன்



"Thiruppugazh Anmeegap Peruvizha 2013" photos are available at Smt. Malathi Jayaraman's following "GOOGLE PLUS" link: 

https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901078130212387473 

and 

https://plus.google.com/photos/110776979289306679547/albums/5901235897638280721