உ
விநாயர் சதுர்த்தி நன்னாளில் பெருமான் அன்பர்களுக்கு தேக பலமும் ஆத்ம பலமும் அருள பிரார்த்திக்கிறோம் மற்றும் பெருமானின் அருள்ப்ரசாதம் நம் அங்கத்தினர் சாந்தா சுந்தர ராஜன் தம்பதியர் மூலமாக கிடைத்துள்ளது.
அபிராமி அந்தாதியின் பொருள் கொண்ட BLOG LINK அளித்ததை தொடர்ந்து அன்னையின் அருளால் நம் குருஜி தொகுத்து,இசையுடன் வழங்கியுள்ள 501 பாடல்களுக்கும் ,பெருமளவில் கட்டுரைகளை வழங்கிவரும் சுந்தரராஜன் தம்பதியினர் திருப்புகழ் அடிகளின் பதவுரையும் ,பொழிப்புரையும் எளிமையான முறையில் அன்பர்களுக்கு அளிக்க தனியாக "திருப்புகழ் அமிர்தம் " என்ற Blog (THIRUPPUGAZH AMIRUTHAM at "http:/thiruppugazhamirutham.
தற்போது 85 பாடல்கள் வெளிடப்பட்டுள்ளன.தம்முடைய Blog க்கு link செய்ய நமக்கு பிரத்தியேக அனுமதி வழங்கியுள்ளர்கள்.மற்ற பாடல்கள் வரிசையாக பின் தொடரும்.அவைகளின் மேன்மையை நாம் படித்துத்தான் உணரமுடியும்.அவைகளை அருட் பிரசாதம் என்றே உணருகிறோம்.
அவர்களுக்கு நன்றி என்ற உபசார வார்த்தை கூறி நின்று விடுவது நமக்கு அழகல்ல.அவர்கள் படைப்பை நன்கு படித்து,அசைபோட்டு ,உணர்ந்து,நம் வாழ்க்கை நெறியை அமைத்துக்கொள்வதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு. அவர்கள் மேன்மேலும் பல படைப்புகளை அளிக்க விநாயகர்,முருகப்பெருமானின் பொற் பாதக்கமலங்களை வணங்குகிறோம்.அவர்கள் வழி நடத்தட்டும்.
சுந்தரராஜன் தங்களுடைய புனிதப்பணிக்கு உறுதுணையாக நிற்கும் Dr கிருஷ்ணமூர்த்தி,திருவாளர்கள் ஐயப்பன்,நடராசன்,ரத்னசபாபதி முதலியோருக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்திருப்பது .அவரது உயரிய பண்பை எடுத்துக்காட்டுகிறது. அவர்களும் நம் வணக்கத்துக்குரியவர்கள்.
No comments:
Post a Comment