அமரர் சுப்ரமணிய ஐயரின் பெரு முயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் உருவானதுதான் நம் அமைப்பு என்பது நாம் அறிந்ததே . அன்னாரின் நினைவு நாள் ஆகஸ்டு/செப்டம்பர் மாதத்தில் வழிபாடாக சமர்பிக்கும் இத்தருணத்தில் அவரைப்பற்றி சில வார்த்தைகள் கூறுவது எங்கள் தலையாய கடமை என்று கருதுகிறோம்.
ஆரம்பத்தில் சில சங்கீத வித்வான்களும்,மாணவர்களும் விரும்பி நம் குருஜியின் வழியில் திருப்புகழ் பாடல்களை கற்க ஆரம்பித்தனர்.நாளடைவில் பஜனையும் சுக்கில ஷஷ்டி அன்று செம்பூரில் நடைபெற்றது.அது இன்றும் தொடர்கிறது.ஐயரின் விடா முயற்சியாலும் ,உந்துதலாலும் பல அன்பர்கள் திருப்புகழை கற்கவும் பிறருக்கு கற்பிக்கவும் ஆரம்பித்தனர் .முறையாக 1972 ம் ஆண்டு கோலிவாடா மற்றும் செம்பூர் பகுதியில் வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.
படிப்படியாக வளர்ந்து செந்தில் ஆண்டவன் அருளால் மும்பையின் பல சமுக ,ஆஸ்தீக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ,1975ம் ஆண்டு அருணகிரிநாதரின் 6வது நூற்றாண்டு கலந்ததன் பொருட்டு அருணகிரிநாதரின் விழா தொடங்கப்பட்டது, சக்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் அமைந்தது.பின் சிருங்கேரி ஆசாரிய சுவாமிகள் அருளாசியுடன் 1981 ம் ஆண்டு குருஜி தலைமையில் படி விழா தொடங்கப்பட்டது.
இவை எல்லாம் மனித அளவில் அமரர் ஐயரின் தன்னலமற்ற சேவையாலும்,அயராத உழைப்பினாலும்,யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மையாலும் தான் சாத்தியமாயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை.
இவற்றையெல்லாம் விட நாங்கள் மேன்மையாகவும் , உன்னதமாகவும், புனிதாகவும் கருதுவது ,இந்த தெய்வீகப்பணி தொடர தம் குடும்ப வாரிசுகளை முழுமையாக அர்ப்பணித்ததுதான்.இப்பொழுதும் அன்னாரின் துணைவி தள்ளாத வயதிலும் வழிபாடுகளில் ஈடுபடுவது அன்பர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
மாதுங்காவில் அவரது இல்லம் முருகப்பெருமானின் உறைவிடமாகவே உணரப்படுகிறது.அதுவே நம் அமைப்பின் அலுவலகமாக செயல் படுவது பெருமைக்குரிய விஷயம்.
பௌராணிகர்கள் கூறுவார்கள் இராமாயணக்கதை உபன்யாசம் எங்கு நடக்கிறதோ அங்கு ராம பக்த ஹனுமான் கலந்து கொண்டு அனுபவிக்கிறார் என்று.அதுபோல் நம் அமரர் ஐயர் அவர்களும் ஒவ்வொரு வழிபாட்டிலும் பிரசன்னமாகி நம்மை வழி நடத்துகிறார் என்றே கருதுகிறோம்.அவரது நெருங்கிய நண்பர்கள் அவருக்கு பேரானந்தத்தை அளித்தது வழிபாடுகளுக்கு பெருமளவில் வரும் அன்பர்களின் திரு கூட்டம் தான் என்று கூறுகிறார்கள்.அதை தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது அன்பர்களின் தலையாய கடமை மட்டும் அல்ல.நாம் செலுத்தவேண்டிய காணிக்கையும் கூட.
அன்னாரின் நினைவு நாள் செப்டம்பர் மாதம் 16 ம் தேதி .அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.அன்புடன் வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment