மும்பையில் குருஜியின் ஜெயந்தி விழா .......நிறைவு
குருஜியின் ஜெயந்தி விழா நவிமும்பை ஸ்ரீ வள்ளி தேவா சேனா சமேத பிரசன்ன கல்யாண சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 25ம் நாள் அதி விமரிசையாக ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி ,இசை வழிபாடு அருள் வேண்டலுடன் இனிதே நிறைவுற்றது.
வழிபாட்டில் இடம் பெற்ற சில பாடல்கள் இசை வடிவில்
"கனகந்திரள் கின்றபெருங்கிரி".. நீலாம்பரி ராகம் விருத்தம் நவி மும்பை கிருஷ்ணமூர்த்தி சார்
"அந்தகன் வரும் தினம் " ஹிந்தோளம் ராகம்
"சுருதிமுடி மோனஞ்சொல் "
நாட்டைகுருஞ்சி .. ராகம்..
விருத்தம் நவி மும்பை கிருஷ்ணமூர்த்தி சார்
சென்னைஅன்பர் ஐயப்பன் அனுபவித்து வழங்கியுள்ள ஒரு UTUBE வடிவம்
"அந்த இசைவழிபாட்டில் நமது திருப்புகழ் அம்மா அவர்கள் அருளிய, நமது குருஜிக்கு மிகவும் பிடித்த அலங்காரங்களை, சண்முகப்பிரியா இராகத்தில் விருத்தமாக இசைத்து, செறிதரும் எனத் தொடங்கும் காஞ்சி திருப்புகழை பாடியதைத் தான் இதோ பார்த்து கேட்டு செந்திலாண்டவனை பிரார்த்தனை செய்கிறோம் .
https://www.youtube.com/watch?v=UZGHOzAsotM&feature=youtu.be
"தவர்வாள் தோமர சூலந் தரியாக் காதிய சூரும் " மோஹனம் ராகம்.
.விருத்தம் ..நவி மும்பை திருமதி பிரியா
சிந்து பைரவி ராகம் . . விருத்தம் மும்பை திருமதி மீரா
கல்யாணி ராகம் .
. விருத்தம் ...மும்பை முலுண்ட்
திருமதி நித்யா கணேஷ்
"நாளு மிகுத்த கசிவாகி "..கமாஸ் ராகம் ..
"கீத விநோத மெச்சு குரலாலே " திலங் ராகம்
சில புகைப்பட தொகுப்பு
குருஜியின் நினைவலைகள் ..பின்னோக்கி
நமது குருஜி எந்தத் துறையிலும் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். இவ்வுண்மை அவருடன் நெருங்கிப் பழகின அனைவருக்கும் நன்கு புரியும்
அவர் நடிப்புத்துறையிலும் சிறந்தவராக விளங்கினார்.
இதோ ஒரு சான்று
அவர் நடித்தது ஒரே ஒரு நாடகமே. அதில் அவர் அப்பர் சுவாமிகளின் பாத்திரமேற்று அற்புதமாக நடித்திருக்கிறார்.
அந்த நாடகத்தின் ஒரு சில காட்சிகள் இதோ இங்கே பாருங்கள்.
(வழங்கியவர் ..அன்பர் ஐயப்பன் )
மேலும் அவர் நம் குருஜியின் இளமைப்பருவ புகைப்படங்களை YouTube மூலம் அன்பர்களுக்கு வழங்கியுள்ளார்.
http://youtu.be/5Tc_YZEGWO8
2004 ம் ஆண்டு பழநி திருத்தலத்தில் குருஜியின் வள்ளிகல்யாண வைபவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் முதல் நாள் அவருக்கு "குகஸ்ரீ " விருது கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதினம் பீடாதிபதி ராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது. அதன் காணொளி
விருதை ஏற்ற பின் குருஜியின் ஏற்புரை
https://www.youtube.com/watch?v=R9yoAySBVkE&feature=youtu.be
No comments:
Post a Comment