அருணகிரிநாதர் நினைவு விழா வைபவம் நிறைவு
விநாயகர் துதியுடன் தொடங்கி குரு பாலு சார் தலைமையில் இசை வழிபாடு பக்தி பரவசத்துடன் இசைக்க அருள் வேண்டலுடன் இனிதே நிறைவுற்றது.
அருணகிரி விழாவில் ஒவ்வொரு ஆண்டும் அன்பர் கோபாலகிருஷ்ணன் தன் கைவண்ணத்தில் முருகப்பெருமானை பலவித கோலங்களில் ,எழுந்தருளச் செய்து அன்பர்களை பரவசப் படுத்துவத்தை நாம் அறிவோம்.அந்தவகையில்
"அருவமும் உருவமுமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்ப் பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாகிக் கருணைகூர் முகங்களாரும் கரமது பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகனாய் வந்து அங்கு வந்து உதித்தனன் உலகம் உய்ய "
என்ற வாக்கின் படி சரவணப் பூந்தொட்டி அமைத்து அதில் ஆறு முகங்களுடன் பாலா முருகனை எழுந்தருளச்செய்திருந்தார்.வழிபாட்டில் 28 பாடல்கள் இசைத்தபின் குரு ராஜி மாமி மோஹனம் ராகத்தில் கந்தர் அலங்காரங்களை விருத்தமாக பாடி ஆறுமுகம் ஆறுமுகம் பாடுகையில் தொட்டிலை ஆட்டி பின் திரையிட்டு ,திரை விலகி அங்கே ஆறு முகங்கள் ஒரு முகமாகி குழந்தை வேலாயுதன் எழுந்தருள அன்பர்களின் பரவசத்தை வார்த்தையினால் சொல்ல இயலாது.
அலங்காரம் 5
திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.
அலங்காரம் 14
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.
சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.
"ஆறுமுகம் ஆறுமுகம் " இசை வடிவில் விருத்தம்.பாடல்,நிரவல்
குழந்தை முருகன் தரிசனத்தை கண்டு பரவசமுற்று " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நோக்குடன் , அன்பர் கிருஷ்ணமூர்த்தி சார் தன் பங்குக்கு குழந்தை முருகன் வரவை
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்
குன்றிடி யஅம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.
(அந்தகன் வரும் தினம் பாடலின் பிற்பகுதிகள் )
விருத்தமாக பாடி வழிபாட்டுக்கு மெருகூட்டியதை கேட்போம்
குருஜி
இந்த சந்தர்ப்பத்தில் நம் குருஜி குழந்தை முருகனை பிள்ளைத்தமிழ் வரிகளில் எப்படி அனுபவிக்கிறார் என்பதையும் கேட்டு நாமும் அனுபவிப்போம்.
https://www.youtube.com/watch?
வழிபாட்டில் இடம் பெற்ற சில பாடல்கள்
"உததியரல் ' என்று தொடங்கும் பாடல்... கீரவாணி ராகம்
"பாரியான " என்று தொடங்கும் பாடல் பாகேஸ்ரீ ராகம்
"அருத்தி வாழ்வோடு "என்று தொடங்கும் பாடல் பிலஹரி ராகம்
"ஆங்குடல் " என்று தொடங்கும் பாடல்.....ஆஹிரி ராகம்
"உரைத்த சம்ப்ரம " என்று தொடங்கும் பாடல்..சங்கரானந்தப்ரியா ராகம்
"தோலத்தியால் " என்று தொடங்கும் பாடல்..சுருட்டி ராகம்
"கடல் பரவு " என்று தொடங்கும் பாடல்..ஆரபி ராகம்
"நிமிர்ந்த முதுகும்" என்று தொடங்கும் பாடல்.....காபி ராகம்
"பிறவியான" என்று தொடங்கும் பாடல்....பீம்பிளாஸ்
சில புகைப்படத் தொகுப்புகள்
முருகா சரணம்
ஆடியோ ,புகைப்பட உதவி
அன்பர்கள்
கே.ஆர் .பாலசுப்ரமணியம் டோம்பிவலி
பிருந்தா கார்த்திகேயன் ..செம்பூர்
நன்றிகள் பல
No comments:
Post a Comment