Tuesday, 24 October 2017

பிரம்மஸ்ரீ அ சு. சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு நினைவு விழா





                                                               மஹா கந்த சஷ்டி 

                                        முருகன் புகழ் பாடி அருள் வேண்டுவோம் 

இந்நன்னாளில் அண்மையில் நடைபெறவுள்ள  நமது நிறுவனர்
அமரர்  பிரம்மஸ்ரீ அ சு. சுப்பிரமணிய ஐயர்  நூற்றாண்டு நினைவு விழா வுக்கு அனைத்து அன்பர்களையும் பங்குபெற   சிரம் தாழ்த்தி அன்புடன் அழைக்கிறோம்.
அ 

                                  


செந்திலாண்டவன் பேரருளால் 1958ல் தில்லியில் குருஜி மூன்று மாணவர்களுடன் தொடங்கிய திருப்புகழ் வகுப்பு அன்று  "திருப்புகழ் அன்பர்கள் " இயக்கத்தின்  ஆலமரத்தின் வித்தாக வேரூன்றியது.அன்பர்களின் குரு சமர்ப்பண  தத்துவத்துவம்,தன்னலமற்ற சற்றும் அயராத கடும் உழைப்பு,அன்பு,அவிரோதம்,அடக்கம்,போன்ற உத்தம குணங்களால் உந்தப்பட்ட அன்பர்கள் நாடெங்கிலும்,ஏன் உலகத்தின் பல பகுதிகளிலும் திருப்புகழை அடுத்த தலை முறையினருக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு வகுப்புகளைத் தொடங்கி வழிபாடுகளுடன் நடத்தி இயக்கத்தை அடையாறு ஆலமரத்தின் விழுதுகளை போல் நிலைக்கச் செய்துள்ளனர்.

அந்த வகையில் நம் மும்பையில் திருப்புகழ் அமைப்பை வேரூன்ற வைத்து ,பேணி வளர்த்து இன்றைக்கு ஒரு மகோன்னதமான நிலைக்குகொண்டு சென்று  நிலைக்கச் செய்தவர் நம் பக்தி நெறியுடன் வணங்கத்  தக்க மஹான் அமரர் பிரம்மஸ்ரீ  A .S .சுப்ரமண்ய அய்யர்.

அன்னாரின் நினைவாக ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வழிபாட்டுடன் நிறைவு  செய்து செய்கிறோம்.இந்த ஆண்டு அவரது நூற்றாண்டாக அமைந்ததின்  பொருட்டு நவம்பர் 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பை  செம்பூர்  சங்கராலயம் வளாகத்தில் அன்பர்களின் பேரவாவினால் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது 

இந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றி சில வார்த்தைகள் கூற கடமைப் பட்டுள்ளோம்.

அன்னார்குருஜியின்மூத்ததமையனார்என்பதுநாம்அறிந்ததே.தோற்றத்திலும்,பழகுவதிலும் எளிமையானவராகத் திகழ்ந்தார்.தேனீயைப்போல் சுறுசுறுப்பானவர்.பலநண்பர்களையும்,திருப்புகழ்ஆசிரியர்களையும்,தொண்டர்களையும் உருவாக்கியவர்.அமைப்பை ஈடு இணையற்ற   ஒரு "திருப்புகழ்குடும்பமாகஉருவாக்கிஅன்பர்களைஇணைத்தவர்.அன்பர்களின் குடும்ப மங்கல வைபவங்களை தான் முன் நின்று பொறுப்பேற்று நடத்தி அன்பர்களின் பாசத்தை வளர்த்தவர்.

ஆரம்பத்தில் சில சங்கீத வித்வான்களும்,மாணவர்களும் விரும்பி நம் குருஜியின்வழியில்திருப்புகழ்பாடல்களைகற்கஆரம்பித்தனர்.நாளடைவில் பஜனையும் சுக்கில ஷஷ்டி அன்று செம்பூரில் நடைபெற்றது.அது இன்றும் தொடர்கிறது.ஐயரின் விடா முயற்சியாலும் ,உந்துதலாலும் பல அன்பர்கள் திருப்புகழை கற்கவும் பிறருக்கு கற்பிக்கவும் ஆரம்பித்தனர் .முறையாக 1972 ம் ஆண்டு கோலிவாடா மற்றும்  செம்பூர்    பகுதிகளில் வகுப்புக்கள்  தொடங்கப்பட்டன.இன்றளவில்  15 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களினால்  40 வகுப்புக்கள் மும்பையின் பல பகுதிகளில் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

மும்பை வட்டார இயக்கம் படிப்படியாக வளர்ந்து செந்தில் ஆண்டவன் அருளால் மும்பையின் பல சமுக ,ஆஸ்தீக அமைப்புகளின்    ஒத்துழைப்புடன் ,1975ம் ஆண்டு அருணகிரிநாதரின் 6 வது நூற்றாண்டாக அமைந்ததின்   பொருட்டு   அருணகிரிநாதரின் விழா தொடங்கப்பட்டது சக்கரை பந்தலில் தேன் மாரி    பொழிந்தது போல் அமைந்தது.பின் சிருங்கேரி ஆசாரிய சுவாமிகள் அருளாசியுடன் 1981 ம் ஆண்டு குருஜி தலைமையில் படி விழா தொடங்கப்பட்டது.
   
இவை எல்லாம் மனித அளவில் அமரர் ஐயரின் தன்னலமற்ற சேவையாலும்,அயராத உழைப்பினாலும்,யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற பரந்த  மனப்பான்மையாலும் தான் சாத்தியமாயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை.

இவற்றையெல்லாம் விட நாம்  மேன்மையாகவும் , உன்னதமாகவும், புனிதாகவும் கருதுவது ,இந்த தெய்வீகப்பணி தொடர தம் குடும்ப வாரிசுகளான புதல்வர் மணி சார், புதல்விகள் ராஜி மாமி,கமலா மாமி முதலியோரை திருப்புகழ் தெய்வீகப் பணியில்  முழுமையாக அர்ப்பணித்ததுதான்.
மருகன்குருபாலசுப்ரமணியம்சார்அவர்களைகுருவாக,தலைவராக,இயக்குனராக, வழிகாட்டியாக  நாம் அடைந்துள்ளது நமது பாக்கியம்.

அன்னாரின்  துணைவி  கடைசி வரை தள்ளாத வயதிலும் வழிபாடுகளில் ஈடுபட்டு அன்பர்களுக்கு அன்பையும் ஆசிகளையும் வாரி வழங்கினார்.

மாதுங்காவில் அவரது இல்லம் முருகப்பெருமானின் உறைவிடமாகவே  அன்பர்களால் உணரப்படுகிறது.அதுவே நம் அமைப்பின்மும்பை வட்டத்தின்  அலுவலகமாக செயல் படுவது பெருமைக்குரிய விஷயம்.

பௌராணிகர்கள் கூறுவார்கள் இராமாயணக்கதை உபன்யாசம் எங்கு நடக்கிறதோ அங்கு ராம பக்த ஹனுமான் கலந்து கொண்டு அனுபவிக்கிறார்  என்று.அதுபோல்  நம் அமரர் ஐயர் அவர்களும் ஒவ்வொரு வழிபாட்டிலும்அருவமாக  பிரசன்னமாகி நம்மை வழி நடத்துகிறார் என்றே கருதுகிறோம்.உணருகிறோம்.

அவரது நெருங்கிய நண்பர்கள் " அவருக்கு பேரானந்தத்தை அளித்தது வழிபாடுகளுக்கு பெருமளவில் வரும் அன்பர்களின் திரு கூட்டம் தான்" என்று கூறுகிறார்கள்.அதை தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது அன்பர்களின் தலையாய கடமை மட்டும் அல்ல.நாம் செலுத்தவேண்டிய காணிக்கையும் கூட.

நூற்றாண்டுவிழாவைபவத்துக்குஆசிரியர்களையும்,மாணாக்கர்களை யும்,மும்பையிலிருந்து இடம் பெயர்ந்து மற்ற பகுதிகளில் வாழும் அன்பர்களையும் ,மும்பை /புனே அன்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

மற்றும்நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட படி  அய்யருடன் பழகிய அன்பர்கள் தங்கள் அனுபவங்களையும் சபையில் குழுமியுள்ள அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.  
                                                                             
                                                                                                   
                                                     
                                    




                                             
                                      

முருகா சரணம் 

No comments:

Post a Comment