Tuesday, 3 October 2017

சுப்ரமண்ய புஜங்கம் ...8

                                                 சுப்ரமண்ய  புஜங்கம் ...8
                                                                                             

                                                                                        
லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே

ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே |

ஸமுத்யத் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்

ஸதாபாவயே கார்த்திகேயம் ஸுரேசம் ||

 ஸ்வர்ணகேஹே’ தங்க கற்களால கட்டின ஒரு அறை. ஒரு க்ருஹம். 

‘லஸத் ஸ்வர்ணகேஹே’,

 அது ஒளி விடுகிறது. அதுல

 ‘ஸுமஸ்தோம’ – நல்ல வாசனை பூக்களால் 

‘ஸஞ்ச்சன்ன’ 

 அலங்கரிக்கப்பட்ட

 ‘மாணிக்ய மஞ்சே’

 மாணிக்க கட்டில். அதைச் சுத்தி, தேவலோகத்துல இருந்து வந்த பாரிஜாத மலர்கள் போன்ற ரொம்ப வாசனையோடு கூடிய, அழகான பூக்களைக் கொண்டு அலங்காரம் பண்ணியிருக்கா. அதுல 

‘ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்’

 ஆயிரம் சூரியர்களுக்கு சமமான ப்ரகாசத்தோடு 

‘ஸமுத்யதி’

 பகவான் விளங்குகிறார். 

ந்ருணாம் காமதோஹே’

மனிதர்களுக்கு எல்லா விதமான காமனைகளும் பூர்த்தியாகும்.

 ‘ஸதா பாவயே கார்த்திகேயம் சுரேசம்’ 

– கார்த்திகை பெண்களால் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த முருகப் பெருமானை ‘ஸுரேஷம்’ தேவர்களுக்கெல்லாம் தலைவனான அந்த ஸுப்ரமண்ய ஸ்வாமியை ‘ஸதா பாவயே’ – நான் எப்போதும் த்யானிக்கிறேன் என்பது இந்த ஸ்லோகம்..

இதைக்கூறும்போது நினைவிற்கு வருபவை நமக்கு குருஜி சொல்லிக் கொடுத்த திருப்புகழ் மற்றும் வகுப்புகள்....

திருமருகா மயிலேறிய மாணிக்கமே, மரகத மணிப்பணியின் அணிதழை உடுத்து உலவும்  வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனே,

உலா உதய பாநு சத கோடி உருவான ஔிவடிவானவனே,

அலர்தரும் புஷ்பத்தால் உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்தெண்காதம் வீசிய அணி பொழிலுக்கு சஞ்சார மாமளி இசையோடு

உவகையோடு கிருத்திகை அறுவரும் எடுக்க  

மொழி குழற அழுது தொழுது உருகும் அவர் விழி அருவி முழுகுவதும் வருக! வருக  !! வருக!!!

                                                              முருக சரணம் 

No comments:

Post a Comment