அன்னை அபிராமியே, உன் கோலம் அல்லாது மற்றொன்றை என் மனத்தில் நினைத்துக்கொள்ள மாட்டேன். அன்பர் கூட்டந்தன்னைவிள்ளேன்; உன் அடியார்களை பகைத்துக்கொள்ள மாட்டேன்.
"அன்பர் பணி செய்ய அனை ஆளாக்கி விட்டு விட்டால்,
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே" என்று பேசுகிறார் தாயுமானவர்.
"சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்
நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம்
நிச்சலதத்வே ஜீவன் முக்திஹி"
என்று பேசுகிறார் சங்கரர்.
இப்படி, பெரும் ஆன்றோர்கள் அனைவருமே, சத்சங்கத்தின் உயர்வினை, அன்பர் கூட்டம் தனில் இன்புற்று இருப்பதன் பெருமையை மிக உயர்வாகப் பேசியுள்ளார்கள்.
உன்னடியார்களை விட்டு நான் என்றும் விலகவே மாட்டேன்.. எனக்கு உற்றார்கள், சுற்றார்கள் எல்லாரும் நின் அடியார்களே... என்னருகே யார் வந்தாலும் அவர்களெல்லாம்
உனக்கடியார்களாகத்தான் இருக்கின்றார்கள்..
அபிராமிப் பட்டர் அன்னையின் அன்பராகவே இருப்பதால், காண்போரெல்லாம் அவருக்கு அன்னையின் அடியவராகவேத் தோற்றமளிக்கிறார்களாம்.
அப்படிப்பட்ட அடியவரின் கூட்டத்தை விட்டுத் தான் என்றும் விலகுவதில்லை என்று அன்னையிடம் தெரிவிக்கிறார்.
பரசமயம் விரும்பேன்; உன்னைத்தவிர மற்றொரு தெய்வத்தை விரும்ப மாட்டேன்.
அழகிய தாமரை மலர் போன்று தோற்றமளிக்கும் உன் அழகிய பொற்பாதங்களை வணங்கிய பின்னர்
இன்னொருவரை நான் பணிவது இல்லை
.எத்தனையோ சமயங்கள் இந்த உலகில் உள்ளன தாயே...ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை இறைவன் என்று உரைக்கின்றன... ஆனால் என் கண்ணிற்கு உன்னை விடுத்து வேறு யாரும் தெய்வமாகத் தோன்றாததால், உன் சமயத்தை விட்டு வேறு சமயத்தை நான் விரும்ப மாட்டேன்.
வியன் மூவுலகுக்குஉள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, மேல் உலகம், பூமி, கீழ் உலகம் ஆகிய மூவுலகிற்கும் உள்ளேயும். இவற்றிற்கு வெளியேவும் நிறைந்திருக்கும் அன்னையே,
அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப் பார்ப்போம்.
‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'
அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும் உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன்.
தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.
இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை.
தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண் இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.
அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.
சிலையில், படத்தில் அவனை வணங்கலாம்.
ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி இருக்கிறான்.
இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.
"வியம் மூவுலகுக்கும் உள்ளே" என்ன இது குழப்பம்.?
ஓரிடத்து ஏழுலகங்கள் என்றார். பிரிதோரிடத்தில் பதினான்கு உலகங்கள் என்றார்.. இப்பாடலிலோ மூவுலகம் என்று பாடுகிறாரே... இதென்ன? என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது.. ஆனால் அவ்விடத்திருந்து நீ இயக்குகின்றாய் என்ற விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகின்றது.. பூவுலகின் இயக்கங்களுக்குக் காரணமாக மூன்று உலகங்கள் உள்ளன..
அவை பிரம்மனின் சத்தியலோகம், திருமாலின் வைகுண்டம், சிவபெருமானின் கயிலாயம். இவ்வுலகங்களே உலகின் முக்கிய இயக்கங்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந்தொழில்களை இயக்குகின்றன... ஆனால் தாயே.. நீ அந்த மூவுலகினையும் இயக்குபவள் அல்லவா....? என்கிறார்..
உள்ளத்தே விளைந்தகள்ளே,
' கள்ளே ' - என்று அம்பாளைச் சொல்வது சுருதி பிரமாணம்.
717. மதுமதீ - மதுவுடன் இருப்பவள். மது - தேன் என்றும், மயக்கம் தரும் பொருள் ( கள் முதலியவை) என்றும் பொருளுடையது. ஸ்ரீபாஸ்கரராயர் ' மஹத்யை வா ஏதத்தேவதாயை ரூபம் யன்மது ' - என்று மேற்கோள் காட்டி இது ' சுருதிவாக்கு ' என்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வியாக்யானத்தில் கூறுகிறார். அதாவது ' அம்பாளுடைய ரூபமே தேன் போன்றது ' என்று பொருள்.
" எத்திக்கும் தானாகி என் இதயமே ஊறி தித்திக்கும் ஆனந்தத் தேனே ! " - என்பார் தாயுமானவர்.
அம்பிகையே ஆனந்த உருவமாக இருக்கிறாள் அல்லவா? அவள் அன்பர்களின் கண்ணுள் மணியாக நின்று இந்தக் காட்சியைக் காணச் செய்கிறாள். பக்தர்கள் பால் இரக்கம் கொண்டு இந்த நிலையை அருள்கிறாள்.
களிக்குங்களியே, அளிய என் கண்மணியே!
நீ என்னுள்ளத்தில் என்றும் ஆனந்தத்தை தரும் தேன் போன்றவள். ஆனந்தத்திற்கு ஆனந்தம் தருபவள். என் கண்மணி நீ.
ஆனந்த லஹரி என்று அம்பாளுக்கு ஒரு பெயர். அதாவது ஆனந்ததினை பிரவாஹமாக அருள்பவள்.
ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்தலஹரி என்றுதான் அழைக்கப்படுகின்றன. அதாவது ஆனந்த வெள்ளம் என்று பொருள். பின் இருக்கக்கூடிய 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி - அழகு வெள்ளம் நிரம்பியதாம்.
மனதினுள்ளே அப்படி அவள் ஆனந்த போதை தரும் ஒரு கள் போலே நிறைந்து இருப்பது எவ்விதம் கிட்டிற்று? சொல்கிறார் பட்டர்.
அன்னையின் திருஉருவங்களும், திருநாமங்களும் எண்ணிலடங்கா. இதை நன்கு அறிந்தவர் அபிராமிபட்டர். ஆனாலும் ' அன்னை அபிராமியின் ' திருவுருவக் கோலம் ஒன்றே தியானிப்பதற்குரிய பொருளாக அவர் உள்ளத்திலே நின்றது.
இதனையே, காரைக்கால் அம்மையார், ' ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணித்தொழிந்தேன் ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன் ' - என்று பாடுகிறார்.
மனதில் அந்த அபிராமியின் கோலம் அன்றி வேறொன்று குறிப்பதில்லை எனக்கொண்டிருந்தார் அவர். அப்படி மீண்டும் மீண்டும் மீண்டும் அவளையே த்யானம் செய்து வந்ததினால், அந்த மெய்ப்பொருள், எங்கும் நிறைந்து இருக்கும் அந்த பரம்பொருள், அவரது உள்ளத்தேயும் விளைந்தது. வேறொறு பொருள் அன்றி அந்த ஒன்றையே த்யானம் செய்ததினால், அந்த த்யானமும் சித்தியாயிற்று. வேறொறு சமயம் எதனிலும் நாட்டமின்றி, அம்பிகையையே, அபிராமியையே த்யானம் செய்து வந்ததினால், அந்த அம்பிகை, அந்த அபிரமி அவரது உள்ளத்தே விளைந்து, களிக்கும் களியாக நின்றாள்.
கள்ளை
அருந்துவோருக்கு அது மயக்கத்தை, இன்பத்தைத் தருகின்றது... ஆனால் அக்கள்ளே களிக்கும் களி... அக்கள்ளையே இன்பத்தால் மயங்க வைக்கும் பேரின்பம் நீயே அம்மா..... எளியவன் எனக்கு நீ என் கண்ணின் மணியைப் போன்றவள்னு சொல்றார்
கள்ளைக் குடிப்பதனால் உண்டாகும் மயக்கத்துக்கு ' களி ' என்று பெயர். இந்தக் கள்ளால் உண்டாகும் ஆநந்த அனுபவமும்
ஒருவகைக் களியே ஆகும்.
அளிய என் கண்மணியே!
அளிய - என்ற சொல்லுக்கு ஆதரிக்கத் தக்கவன் , இரங்குவதற்குரியவன் என்று பொருள். ' அளியன் தானே முதுவாய் இரவலன் ' - திருமுருகாற்றுப்படை.
அளி என்பதற்கு ' வண்டு ' என்ற பொருளும் உண்டு. அன்னை அபிராமியைக் ' கள்ளே ' என்று ' ' ' ' 'விளித்து ' அளி கூறியதால் - தேனைப் பருகும் வண்டாகத் தன்னை பட்டர் கூறிக்கொள்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
எனவே ' என் கண்மணியே ' என்று கூறி பாடலை நிறைவு பெறச் செய்கிறார் அபிராமிபட்டர்
மஹா கந்த சஷ்டி முருகன் புகழ் பாடி அருள் வேண்டுவோம் இந்நன்னாளில் அண்மையில் நடைபெறவுள்ள நமது நிறுவனர்
அமரர் பிரம்மஸ்ரீ அ சு. சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு நினைவு விழா வுக்கு அனைத்து அன்பர்களையும் பங்குபெற சிரம் தாழ்த்தி அன்புடன் அழைக்கிறோம்.
அ
செந்திலாண்டவன் பேரருளால் 1958ல் தில்லியில் குருஜி மூன்று மாணவர்களுடன் தொடங்கிய திருப்புகழ் வகுப்பு அன்று "திருப்புகழ் அன்பர்கள் " இயக்கத்தின் ஆலமரத்தின் வித்தாக வேரூன்றியது.அன்பர்களின் குரு சமர்ப்பண தத்துவத்துவம்,தன்னலமற்ற சற்றும் அயராத கடும் உழைப்பு,அன்பு,அவிரோதம்,அடக்கம்,போன்ற உத்தம குணங்களால் உந்தப்பட்ட அன்பர்கள் நாடெங்கிலும்,ஏன் உலகத்தின் பல பகுதிகளிலும் திருப்புகழை அடுத்த தலை முறையினருக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு வகுப்புகளைத் தொடங்கி வழிபாடுகளுடன் நடத்தி இயக்கத்தை அடையாறு ஆலமரத்தின் விழுதுகளை போல் நிலைக்கச் செய்துள்ளனர்.
அந்த வகையில் நம் மும்பையில் திருப்புகழ் அமைப்பை வேரூன்ற வைத்து ,பேணி வளர்த்து இன்றைக்கு ஒரு மகோன்னதமான நிலைக்குகொண்டு சென்று நிலைக்கச் செய்தவர் நம் பக்தி நெறியுடன் வணங்கத் தக்க மஹான் அமரர் பிரம்மஸ்ரீ A .S .சுப்ரமண்ய அய்யர்.
அன்னாரின் நினைவாக ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வழிபாட்டுடன் நிறைவு செய்து செய்கிறோம்.இந்த ஆண்டு அவரது நூற்றாண்டாக அமைந்ததின் பொருட்டு நவம்பர் 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பை செம்பூர் சங்கராலயம் வளாகத்தில் அன்பர்களின் பேரவாவினால் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது
இந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றி சில வார்த்தைகள் கூற கடமைப் பட்டுள்ளோம்.
அன்னார்குருஜியின்மூத்ததமையனார்என்பதுநாம்அறிந்ததே.தோற்றத்திலும்,பழகுவதிலும் எளிமையானவராகத் திகழ்ந்தார்.தேனீயைப்போல் சுறுசுறுப்பானவர்.பலநண்பர்களையும்,திருப்புகழ்ஆசிரியர்களையும்,தொண்டர்களையும் உருவாக்கியவர்.அமைப்பை ஈடு இணையற்ற ஒரு "திருப்புகழ்குடும்பமாகஉருவாக்கிஅன்பர்களைஇணைத்தவர்.அன்பர்களின் குடும்ப மங்கல வைபவங்களை தான் முன் நின்று பொறுப்பேற்று நடத்தி அன்பர்களின் பாசத்தை வளர்த்தவர்.
ஆரம்பத்தில் சில சங்கீத வித்வான்களும்,மாணவர்களும் விரும்பி நம் குருஜியின்வழியில்திருப்புகழ்பாடல்களைகற்கஆரம்பித்தனர்.நாளடைவில் பஜனையும் சுக்கில ஷஷ்டி அன்று செம்பூரில் நடைபெற்றது.அது இன்றும் தொடர்கிறது.ஐயரின் விடா முயற்சியாலும் ,உந்துதலாலும் பல அன்பர்கள் திருப்புகழை கற்கவும் பிறருக்கு கற்பிக்கவும் ஆரம்பித்தனர் .முறையாக 1972 ம் ஆண்டு கோலிவாடா மற்றும் செம்பூர் பகுதிகளில் வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.இன்றளவில் 15 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களினால் 40 வகுப்புக்கள் மும்பையின் பல பகுதிகளில் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
மும்பை வட்டார இயக்கம் படிப்படியாக வளர்ந்து செந்தில் ஆண்டவன் அருளால் மும்பையின் பல சமுக ,ஆஸ்தீக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ,1975ம் ஆண்டு அருணகிரிநாதரின் 6 வது நூற்றாண்டாக அமைந்ததின் பொருட்டு அருணகிரிநாதரின் விழா தொடங்கப்பட்டது சக்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் அமைந்தது.பின் சிருங்கேரி ஆசாரிய சுவாமிகள் அருளாசியுடன் 1981 ம் ஆண்டு குருஜி தலைமையில் படி விழா தொடங்கப்பட்டது.
இவை எல்லாம் மனித அளவில் அமரர் ஐயரின் தன்னலமற்ற சேவையாலும்,அயராத உழைப்பினாலும்,யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மையாலும் தான் சாத்தியமாயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை.
இவற்றையெல்லாம் விட நாம் மேன்மையாகவும் , உன்னதமாகவும், புனிதாகவும் கருதுவது ,இந்த தெய்வீகப்பணி தொடர தம் குடும்ப வாரிசுகளான புதல்வர் மணி சார், புதல்விகள் ராஜி மாமி,கமலா மாமி முதலியோரை திருப்புகழ் தெய்வீகப் பணியில் முழுமையாக அர்ப்பணித்ததுதான்.
மருகன்குருபாலசுப்ரமணியம்சார்அவர்களைகுருவாக,தலைவராக,இயக்குனராக, வழிகாட்டியாக நாம் அடைந்துள்ளது நமது பாக்கியம்.
அன்னாரின் துணைவி கடைசி வரை தள்ளாத வயதிலும் வழிபாடுகளில் ஈடுபட்டு அன்பர்களுக்கு அன்பையும் ஆசிகளையும் வாரி வழங்கினார்.
மாதுங்காவில் அவரது இல்லம் முருகப்பெருமானின் உறைவிடமாகவே அன்பர்களால் உணரப்படுகிறது.அதுவே நம் அமைப்பின்மும்பை வட்டத்தின் அலுவலகமாக செயல் படுவது பெருமைக்குரிய விஷயம்.
பௌராணிகர்கள் கூறுவார்கள் இராமாயணக்கதை உபன்யாசம் எங்கு நடக்கிறதோ அங்கு ராம பக்த ஹனுமான் கலந்து கொண்டு அனுபவிக்கிறார் என்று.அதுபோல் நம் அமரர் ஐயர் அவர்களும் ஒவ்வொரு வழிபாட்டிலும்அருவமாக பிரசன்னமாகி நம்மை வழி நடத்துகிறார் என்றே கருதுகிறோம்.உணருகிறோம்.
அவரது நெருங்கிய நண்பர்கள் " அவருக்கு பேரானந்தத்தை அளித்தது வழிபாடுகளுக்கு பெருமளவில் வரும் அன்பர்களின் திரு கூட்டம் தான்" என்று கூறுகிறார்கள்.அதை தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது அன்பர்களின் தலையாய கடமை மட்டும் அல்ல.நாம் செலுத்தவேண்டிய காணிக்கையும் கூட.
நூற்றாண்டுவிழாவைபவத்துக்குஆசிரியர்களையும்,மாணாக்கர்களை யும்,மும்பையிலிருந்து இடம் பெயர்ந்து மற்ற பகுதிகளில் வாழும் அன்பர்களையும் ,மும்பை /புனே அன்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம். மற்றும்நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட படி அய்யருடன் பழகிய அன்பர்கள் தங்கள் அனுபவங்களையும் சபையில் குழுமியுள்ள அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
மும்பையில் கந்த சஷ்டி வைபவம் அக்டோபர் 25 ன் நாள் புதன் கிழமை அன்று மாதுங்கா சங்கர மடம் வளாகத்தில் பிற்பகல் 4 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி திருப்புகழ் இசை வழிபாடு நடை பெற உள்ளது.
மும்பை,புனே அன்பர்களும் மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும்பெருமளவில்கலந்துகொண்டுபெருமானின்அருள்பெற வேண்டுகிறோம். அழைப்பிதழ் கீழே
கொடியே! இளவஞ்சிக் கொம்பே! எனக்கு வம்பே பழுத்த படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப் பிடியே, பிரமன் முதலான தேவரைப் பெற்ற அம்மே அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே! அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை
கொடியே' இளவஞ்சிக் கொம்பே!
அன்னை கொடி போல் இருக்கிறாள். மென்மையே உருவெடுத்தாற்போல் இருக்கிறாள். இளவஞ்சிக் கொம்பு போல் இருக்கிறாள். அந்தக் கொடியிலே என்ன பழம் கிடைக்கும்? 'அருள்' என்ற பழம் கிடைக்கும். அந்த அருளானது,
அன்னையை கொடியாகவும், கொம்பாகவும் சொல்வது மிகச் சிறப்பு. கொடி ஒரு சிறு காற்றுக்கும் ஆடக்கூடியது. அதாவது அன்பர்களுக்கு ஒரு சிறிய துன்பம் ஏற்பட்டாலும், அதைப் போக்க அவள் ஓடி வருவாளாம்.
அம்பிகை கொடியாகவும், கொம்பாகவும் ஆன வரலாற்றைக் கேட்கலாமா!!
சிவபெருமானும், சக்தியும் ஒன்றிணைவதும் பிறகு மீண்டும் பிரிவதும் இப்பிரபஞ்சத்தின் தோற்றமும், ஒடுக்கமுமாகும். ஒருமுறை சிவத்தைப் பிரிந்த சக்தி, நாகவடிவில் சிவனைக் கூட முயன்றாள். நாகத்துடன் கூட புற்று தான் சிறந்தது. ஆனால் சிவன் நதியாய் மாறி ஓடினார். சக்தி மீன்வடிவம் தாங்கி நதியுள் துள்ளி விழ சிவபெருமான் சேறாகி நின்றார். சேற்றில் பூக்கும் தாமரையாய் அம்பிகை உருமாற, சிவன் மரமாக மாறினார். அம்பாள் அதில் மலராகப் பூக்க, சிவன் ஒரு கொம்பாகி மண்ணில் ஊன்றி நின்றார்.
உடனே அம்பிகை, “பெருமானே! அனைத்தும் தாங்களே! எவ்வடிவம் எடுத்தாலும் உம்மை அடைவது எனக்கு பெருமை. இதை மாற்றவோ தடுக்கவோ தாங்களே நினைத்தாலும் நடக்காது. பின்பு ஏன் இந்த லீலை? நீங்கள் கொம்பாகி நின்றால் நான் கொடியாக மாட்டேனா? இதோ கொடியாகி உம்மீது தழுவிப் படர்வேன்!' என்று கூறி படரத் தொடங்கினாள். அப்போது கொடியின் பாரம் தாங்காதவரைப் போல் சிவனாகிய கொம்பு சாய்ந்தது. அம்பிகை சற்றே விலக, மீண்டும் எழுந்து நின்ற கொம்பில் தன் இலைகள், காய்கள், கனிகள் யாவற்றையும் உதிர்த்து பசும் கொடியாக கொம்பில் ஏறிச் சுற்றிப் படர்ந்தாள். இப்போது சிவனாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை; அமைதியாக நின்றார். சிவசக்தி சங்கமம் பரிபூரணமாக நிகழ்ந்தேறியது. இதைக் கொண்டு தான் கொடியே, இளவஞ்சிக் கொம்பே! என்று பட்டர் பாடியிருக்கார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் 'ஓம் அபர்ணாயை நம:' என அம்பிகை ஸ்தோத்திரம் உள்ளது, இதற்கு 'இலைகளற்ற கொடி' என்று பெயர். இலைகள் இருப்பின் எங்கே அவை எழுப்பும் சரசர ஒலியால் சிவனின் தியானம் கலைந்திடுமோ என்பதால் இலைகளற்ற கொடியாய் அம்பிகை சுற்றிப் படர்கின்றாள். இதனால் தான் துறவிகள் சிவமயம் பெற வேண்டி, இலைகளைக் கூடப் புசியாமல் கடும் விரதம் இருப்பார்களாம்.
353. பக்தி மத் கல்ப லதிகா - பக்தர்களுக்கு கல்பகக் கொடி போன்று வேண்டியதை அளித்து உதவுகிறவள்.
மற்றொரு விளக்கம் : ' கல்ப ' என்பது சற்று குறைவை உடையது என்று பொருள்படும். ( பூரணமான பக்தி இல்லாதவர்கள் அல்லது சற்று குறைந்த பக்தி உள்ளவர்கள்) இவர்கள் பக்திமத் கல்பர்கள் எனப்படுவர். ' லதா ' என்றால் கொடி. அதன் தன்மை படருவது. அதாவது, பக்திமத் கல்பர்களைக் " கொடி " போல படரச் செய்து தன்னை அடையச் செய்பவள். சிறிது பக்தி இருந்தாலும் அதை வளர்த்து தன்னுடன் சேர்த்துக் கொள்கிறவள். அந்தக் கொடிக்கு " கொம்பு " போன்று ஆதாரமாய் இருப்பவள். சரியான வழி தெரியாமலும், சிறிது பக்தி உள்ளவர்களையும் கூட, அம்பாள் பக்குவப்படுத்தி, தன்னை பூர்ணமாக உபாசிக்கும் சக்தியை அளிக்கிறாள் என்று கருத்து.
எனக்கு வம்பே பழுத்த படியே - ! அருள் கிடைக்கப் பெறுவதற்குக் கால நேரம் வேண்டும் அல்லவா? பொறுத்திருக்க வேண்டும் அல்லவா? தவங்கள் பல செய்திருக்க வேண்டும் அல்லவா? ஆனாலும், பட்டருக்கு அப்படிக் காலம் நேரம் எதுவும் பாராது கனிந்து அருள் தந்து விட்டாள் அந்த அம்மை. அப்படி, காலம் பாராது கனிந்த 'வம்பே பழுத்த' பழம் என்று பேசுகிறர் பட்டர்.
பக்குவமில்லாத காலத்தில் பழுக்கும் கனிக்கு ஒப்பான வடிவமே என்கிறார். " தானாகப் பழுக்காத பழத்தை தடியால் அடித்துப் பழுக்க வைப்பது ' - என்று ஒரு பழமொழிஉண்டு. அது போலப் பக்குவமாகாத என்னை உன் கருணை என்னும் தடியால் அடித்து வம்பாகப் பழுக்க வைத்தாய்
மறையின் பரிமளமே - அந்த வேதத்தின் நுட்பமான பொருளையெல்லாம் தாங்கி, நல்ல சுகந்தமான மணம் கொண்டு திகழ்கின்றது.
மணமில்லாத மலரை யாரும் விரும்புவதில்லை. மணம் மலருக்கு அவசியமான லட்சணம். அது போல இலக்கியங்களுக்கு மணம் அவற்றின் சொல் அழகும், பொருள் ஆழமும் ஆகும். வேதத்திற்கு அதன் சொல்லும், பொருளும் மணம் ஆகும். வேதமாகிய மலருக்கு மஹாவாக்யங்களே மணம் என்றும், அந்த மணம் அம்பாளே ஆகும்.
வேதங்களுக்கெல்லாம் தாயானவள் ஆதிபராசக்தி. ஆனால் அவளை வேதங்களில் பூத்த மலர்களின் பரிமளமே எனப் போற்றுகிறார் பட்டர்.
வேதங்களில் பூத்த மலர்கள் , அப்படியென்பது எவை? எவை?
வேதங்களின் தாயான பராசக்திக்கு வேதநாயகி, வேத ஜனனி என்றும் நாமங்கள் விளங்குகின்றன. வேதங்களின் சாரங்களாக உள்ளவை உபநிடதங்கள். அவற்றில் பொதிந்துள்ள மகாவாக்கியங்களே வேதங்களில் பூத்த மலர்கள். வேதங்கள் கொம்பினைப் போன்றவை. அதில் சுற்றிப் படரும் கொடிகளே உபநிடதங்கள். அக்கொடியில் பூத்த மலர்கள் மகாவாக்கியங்கள்.
பனிமால் இமயப்பிடியே,
இப்படித் தோன்றும் அந்த அபிராமி, பனி மூடிய அந்த இமய மலையிலே பிறந்தவள். அங்கு பிறந்து, ஒரு பெண் யானை போன்று உலவி வந்தவள்.
(பிடி =பெண்யானை )
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே -
அவளேதான் பிரமனையும் பெற்றெடுத்தவள். பிரமன் மட்டுமல்லாது, மற்ற தேவர்களையும் பெற்றெடுத்த தாயும் அவளே.
285. ஆப்ரஹ்மகீடஜனனி - ப்ரஹ்மா முதல் புழு, பூச்சி வரை உள்ள எல்லா ஜீவன்களையும் ஈன்றவள்.கீடம் - நுண்ணிய கிருமி. தேவிக்கு எல்லா உயிர்களிடத்தும் ஒரே மாதிரியான அன்புதான். இதனையே அபிராமபட்டர் ' பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே ' - என்றார்
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே - அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.
அம்மா அபிராமி, இப்படி எல்லாவற்றிற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறாயே; என் பிறவித் தொல்லையைக் கொஞ்சம் கவனியம்மா. தேவர்களுக்கு மட்டும் தான் தாயா, நீ எனக்கும் அன்னையில்லையா?' என்கிறார். இங்கே இன்னொரு உட்பொருள்: தேவர்களுக்குப் மரணம் கிடையாது; அதனால் மறுபிறவி கிடையாது. அப்படிப்பட்ட தேவர்களுக்கும் நீ தானே தாயானாய் அபிராமி; எனக்கு மட்டும் ஏன் மரணத்தையும் மறுபிறவியையும் கொடுக்கிறாய்? பிறவாமலிருக்கும் வழி உனக்கு மட்டும் தான் தெரியும்; அதனால் தேவர்களைப் போல் என்னையும் இனிப் பிறவாமல் தடுத்தாள வேண்டும்" என்று நேரடியாகவும் ஜாடையாகவும் கேட்கிறார் பட்டர்
'நான் இறந்த பிறகு, இனி இங்கு வந்து பிறவாமல் நீ அருள் செய்ய வேண்டும்' ; 'நீயே வந்து என்னை ஆண்டு அருள் செய்ய வேண்டும்' என்றும் கேட்டுக் கொள்கிறார்.
அன்னை அபிராமியிடம் ' பிறவா வரம் வேண்டும் ' என்று கேட்கிறார் அபிராமபட்டர். அவர் மனிதன் பிறந்தால் இறப்பு உண்டு என்பதை நன்குணர்ந்து ' இனி ' - பிறவாமை வேண்டும் என்று கேட்பது நயம் பொருந்தியது. இதணையே வள்ளுவரும், ' வேண்டுங்கால் லேண்டும் பிறவாமை ' - என்பர்.
பட்டினத்தாரும், ' பிறவாதிருக்க வரந்தர வேண்டும் ' - என்கிறார். அதாவது, அன்னை அடியாரை ஆட்கொண்டால், முத்திநிலை கிட்டும். பிறகு பிறவி இல்லை. எல்லா அடியார்களும் வேண்டுவது - 'அழியா முத்தி ஆனந்தமே'
' வினை காரணமாகவே பிறவி வருகிறது. அன்னைஅபிராமியின் திருவருளால் வினையற்று விடின் உடனே பிறவாத நிலையாகிய முக்தி கிடைத்துவிடும். " என்று அன்னை அபிராமியிடம் அன்புடன் சமர்ப்பிக்கிறார் அபிராமபட்டர்.