Wednesday, 6 July 2016

திருப்புகழ் பாக்களுக்கு விரிவுரை




                                                                                





                                                           திருப்புகழ் பாக்களுக்கு  விரிவுரை 

                                                                                    சொற்பொழிவு   

                           நிகழ்த்துபவர் அருளாளர் மும்பை  கோபால்  அவர்கள் 

                  அமைப்பாளர்கள்  நவி மும்பை  திருமுருகன்  ஆலய  செயற்குழு 


திருப்புகழ்  அன்பர்களில்  பலர் நம் பெருமானின் அருளால் திருப்புகழை பல விதங்களிலும் பரப்புவதில்  ஈடுபட்டுள்ளதை  அன்பர்கள் அறிவார்கள்.திருப்புகழ் விரிவுரைகள் ,இசை சொற்பொழிவுகள்  மட்டுமின்றி தங்கள் வலைத்தளம் மூலம் பல அறிய  சேவைகளை போன்று பல  விதங்களிலும் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அவ்வகையில் அருளாளர் கோபால் அவர்கள் பல முகங்கள் கொண்டவர்.தமிழ்ப் புலவர்.ஓவியர்.திருப்புகழ் இசை வழிபாடு நூலுக்கு ஒவ்வொரு பதிப்பிற்கும் பெருமானின் திரு உருவத்தை வரைந்தவர்.ஒவ்வொரு அருணகிரி நாதர் விழாவிற்கும் (ஆகஸ்டு  15)  நம் முருகப்பெருமானை  விதம் விதமான  உருவங்களை ,காட்சிகளை வடிவமைத்து அன்பர்களை பரவசப் படுத்தியவர்.எளியவர்.பழகுவதற்கு இனிமையானவர்.

நேரூல்  முருகன் ஆலய அமைப்பாளர்கள்  தாமாகவே முன் வந்து ஆடி கிருத்திகை, நம் குருஜியின்  நினைவு விழா முதலிய  இரு வழிபாடுகளை  நடத்தி வருகிறார்கள்.மற்ற ஆன்மீக  விழாக்களோடு,தேவாரம்,திருவாசகம் ,சொற்பொழிவுகள் முதலிய அறிய நிகழ்ச்சிகளையும் ,பல  வகுப்புக்களையும் நடத்தி வருகிறார்கள் .மொத்தத்தில் நித்ய வைபவங்கள் என்று கூறினால் அது மிகையாகாது,

அருளாளர் கோபாலின் சொற்பொழிவு அந்த ஆலயத்தில் நிகழ விருப்பது  பெருமைப் பட வேண்டிய  விஷயம். அவர்  முன்னரே இரண்டு முறை திருப்புகழ்  விரிவுரைகளை அங்கு நிகழ்த்தியுள்ளார்.

ஆலய நிர்வாகிகள் அன்புடன் அனுப்பியுள்ள அழைப்பு கீழே 

" அழகன் முருகன் பால் பேரன்பும்,பக்தியும் கொண்ட தமிழ் நல்நெஞ்சங்களே!

உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!


முருகன் என்றால் தமிழ்;அந்த தமிழில் நம்முருகனுக்கு ஒப்பற்ற கவிதை திருப்புகழ்.இது ஓர் தமிழ்மறை எனில் மிகையாகாது.


நமது திருப்புகழ் அன்பர்கள் குழாமில்,
திரு கோபால் என்றால் அனைவருக்கும் நன்கு தெரியும்.இவர்தான் நம் "திருப்புகழ் இசை வழிபாடு" எனும் நூலுக்கு எப்போதுமே முகப்பில் ஓவியம் படைப்பவர்.இவர் சிறந்த விரிவுரையாளரும் கூட.இவர் பல திருப்புகழ் பாக்களுக்கு பல மேடைகளில் சிறந்த பொருள் விளக்கத்துடன் விரிவுரையாற்றி உள்ளார்.


திரு கோபால் அவர்கள் நமது முருகன் கோவிலில்,வரும்9-7-2016,சனிக்கிழமை அன்று மாலை 6மணி முதல்7-30 மணி வரை பல திருப்புகழ்ப்பாக்களுக்கு பொருள் கூற அன்புடன் இசைவு தந்துள்ளார்.
அன்பர்கள் அனைவரும்  இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைய விழைகிறோம்.


நமது ஆதரவு தொடர்ந்து வந்தால் அன்னார் ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமையிலும் வந்து விரிவுரையாற்றுவார்

உங்கள் அன்புள்ள
நிர்வாக குழுவினர்"


 Date 9.7.2016     saturday

Time                    Evening  6.00 P.M  to 7.30 PM

Venue.. Sri Valli devasena Samedha Sri Prasanna kalyana Subramanya Swami Temple

Plot No 13  Phase 1
Opp BEST STOP
Sector 29 NERUL EAST
Navi Mumbai 400706

அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெறுவதோடு அருளாளர் கோபால் அவர்களை கௌரவிக்க  வேண்டுகிறோம்.

முருகா சரணம்  



1 comment:

  1. அருளாளர் கோபால் அவர்களின் திருப்புகழ் தொண்டு அளப்பரியது! அன்னார் மென்மேலும் சிறக்க ஆறுமுகனை வேண்டுவோம்!

    ReplyDelete