மகான் செந்தில் துறவி சித்தி
ஆன்மீக சிந்தனையோடு ,"மக்கள் சேவையே மகேசன் சேவை " என்ற மனித நேயமும் சமூக உணர்வோடும் நம் அன்பர்களுக்கு குருவாய் அருள்பாலித்த மகான் செந்தில் துறவி நம் பெருமானின் பாத கமலங்களை சென்று தழுவியுள்ள செய்தி அறிந்து பெரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ள அன்பர்களோடு நாமும் பங்கு கொள்கிறோம்
அருளாளர் சுந்தரராஜன் அனுப்பியுள்ள செய்தி நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
"செந்தில் துறவி அவர்கள் சித்தி அடைந்த செய்தி நம்மை வருத்தமடைய செய்யும் செய்தியாகும்அவர் சித்தி யான செய்தி யை எங்களுக்கு தெரிவித்தவர் அனுப்பிய செய்தி கீழே."
"இறைவன் செந்திலாதிபன் இணை அடிகளில் இரண்டற கலந்த செந்தில் துறவி அவர்கள் திருச்செந்தூர் பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம் .
தனது வாழ்வையே முருகனுக்காக அர்ப்பணித்த செந்தில் துறவி பொறியியல் வல்லுனராக இருந்த போது செந்தூர் வந்தார் . முருகன் அவரை அப்பொழுது ஆட்கொண்டார் .
கோடீஸ்வரி டிரஸ்ட் என்று ஒன்றை நிறுவிய அவர் சென்னையின் பிரபல ஜவுளி நிறுவனங்கள் தர்மத்துக்காக வழங்கிய எண்ணற்ற புடவைகள் , வேஷ்டிகள் அவற்றை ,வருடா வருடம் மார்ச் 8 ஆம் தேதி கடந்த 40 வருடங்களாக திருச்செந்தூர் வாழும் ஏழைகளுக்கு வழங்கி, தானும் பணம் பிரித்து அவர்களுக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக் போன்ற உயர்ந்த ரக இனிப்புகளும், பெரிய வடை , அவியல், புளியஞ்சாதம்,சாம்பார் சாதம் கொய்யா பழம், வாழை பழம் ஊறுகாய் சேர்ந்த அறுசுவை உணவை வழங்குவார்., ஒரே நிபந்தனை உணவை அவர்கள் பெறும் போது முருகா என்று கூற வேண்டும் என்பார் .
தினமும் அவர் டிரஸ்ட் சார்பாக சென்னை தேனாம்பேட்டயிலும் , திருச்செந்தூரிலும் கேன் கேனாக பால் முருகன் அபிஷேகத்திற்கு கொண்டு செல்லப் படும்.
தனக்கு என எதுவும் வைத்து கொள்ளாத அவர் தன் மூதாதையர் கொடுத்த 2 பங்களாக்களையும் திருச்செந்தூரில் உள்ள sringeri மடத்துக்கும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காஞ்சி மடத்துக்கும் கொடுத்து விட்டார் .
சாஸ்தா பதிப்பகம் மூலம் எண்ணற்ற நூல்களை எழுதி முருக பக்தி மட்டுமல்லாது தெய்வ பக்தி யும் மக்களிடையே வளர்வதற்கு வழி வகுத்தார் .
சென்னை வெள்ளத்தில் அவர் வாழ்ந்த இல்லமும் பெரும் துன்பத்திற்கு ஆளானது. மெடிக்கல் செக் அப் போதிய நேரத்தில் செய்ய இயலாத அவர் கிட்னி பழுது அடைந்ததால் , போரூர் டாக்டர்கள் சிகிச்சை செய்தும் மீண்டு வராமல் முருகன் இணை அடி அடைந்து விட்டார்.
இனி அவர் வளர்த்து முருகனுக்கே பாலை சொரிந்த அந்த பசுக்கள், அவருக்காக தொண்டு செய்த ராணி விவேக் அவர்கள் குடும்பத்தினர் என்ன ஆவரோ ! அவர் சீடர்கள் பார்த்து கொள்வார்கள் முருகன் அவர்களையும் காக்கட்டும் .
இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நம்மிடையே வாழ்ந்த இத்தகைய சான்றோர்களால் தர்மம் நிலைத்து இருக்கிறது .மால் மருக பக்தியும் செழித்து ஓங்குகிறது "
அடுத்து அருளாளர் ஐயப்பன் அனுப்பியுள்ள உருக்கமான செய்தி
அடுத்து அருளாளர் ஐயப்பன் அனுப்பியுள்ள உருக்கமான செய்தி
"அன்பர்களே
திருப்புகழ் அன்பர்கள் மேல் தீராத காதல் கொண்ட சுவாமிஜி செந்தில் துறவி நேற்று மாலை சுமார் 5-30 மணி அளவில் செந்திலாதிபதியின் இணையடிகளில் இரண்டறக் கலந்து விட்டார். மும்பை படிவிழாவில் 1984ல் நாயேன் முதன் முதலில் இம்மகரிஷியை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். இன்று நாயேன் தங்கள் முன் இருக்கிறேன் எனில் அதற்கு மூல காரணம் சுவமிஜியே. திருப்புகழ் அன்பர்கள் இசைக்கும் இசைவழிபாடுகளில் அவர் நேற்றும் இன்றும் என்றும் இருந்தார், இருக்கிறார், இருப்பார்
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
அருளாளர் G.V.நீலகண்டன்
அருளாளர் G.V.நீலகண்டன்
மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வாழ்ந்த மகான் செந்தில் துறவி சித்தியடைந்த செய்தியால் சித்தம் கலங்கினாலும் அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறை மனித நேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு !
ReplyDelete