திருப்புகழ் அன்பர்களின் " முக நூல் " தொடக்கம்
( முகநூலின் முகப்பு படம் )
சென்ற மாதம் பெங்களூரில் நடை பெற்ற மூத்த அனுபவம் வாய்ந்த அன்பர்களின் கருத்தரங்கின் தாக்கத்தினாலும்,நமது அமைப்பின் வளர்ச்சிக்கு தொழில் நுட்பங்களை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தொலை நோக்குடனும்அன்பர்கள் வேகமாக செயல் பட்டு நம்அமைப்புக்கென ஒரு முக நூலை உருவாகியுள்ளனர்.அது அன்பர்களின் கவனத்தை ஈர்த்து வேகமாக வளர்ந்து வருகிறது.
முக நூல் இயக்குனர் ,முக நூல் தொடங்குவதற்கான குறிக்கோளை மிக அருமையாக கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளார்.
"Thiruppugazh Anbargal launches its Facebook Page for the benefit the Thiruppugazh Anbargal spread all over the world and who follow the teachings of Guruji A.S. Raghavan …. Through this page, we wish to unite all the Anbargal throughout the world and request that they participate by providing information on events, classes and other news in your area for the benefit of all the members of this community
Please Like the page and invite other Anbargal in your contact list to come to the page and like the same.
முக நூலின் குறியீடு
https://www.facebook.com/
முருகப் பெருமானின் திருவருளாலும் குருவருளாலும் திருப்புகழ் அன்பர்களின் நீண்ட நாள் அவாவைத் தணிக்கும் வண்ணம் உருவாகியுள்ள இந்த முகநூல் நம் அமைப்பின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்.இந்த முகநூலை மற்ற பொது முகநூல்களைப் போல் கருதாமல் நம் குருஜியின் "குருபீடம் ' 'என்று மனதில் கொண்டு வணங்கி வரவேற்கிறோம்.
கடமை,கண்ணியம் ,கட்டுப்பாடு,குருஜியின் அன்பு அவிரோதம் கொள்கைகளை மனதில் கொண்டு இந்த புனிதபீடத்தைஅன்பர்கள் தகவல்மையமாகமட்டும்கருத்தில்கொண்டுநம்பெருமான்,அருணகிரியார்,திருப்பு கழ்,குருஜி,வழிபாடு,மற்ற நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட தகவல் களை மட்டுமே பதிவு செய்ய வேண்டுகிறோம்.
.நம் பெருமான் நம் அன்பர்களின் மனத்தில் என்றென்றும் உறைகிறான் என்ற தெய்வீக உணர்வுடன் மற்ற அன்பர்களைப்பற்றி பொதுவாகவோ /தனிப்பட்ட முறையிலோ விமர்சனங்களை எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறோம்.
மற்றும்,அமைப்பின் நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயங்களையும்,விழா அமைப்பாளர்களின் சிறிய குறை ஏதேனும் இருந்தாலும்,அது பற்றி இந்த முக நூலில் எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறோம்.
மற்றும்,அமைப்பின் நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயங்களையும்,விழா அமைப்பாளர்களின் சிறிய குறை ஏதேனும் இருந்தாலும்,அது பற்றி இந்த முக நூலில் எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறோம்.
சுய விமர்சனம்,சுய கட்டுப்பாடு முதலிய அற நெறிகளை கடை பிடித்து,உன்னத நிலையை எட்டியுள்ள அன்பர்கள் இந்த முக நூல் பீடத்தையும் தனித்து நிற்கும் ஒப்பற்ற உயர் நிலையில் இயங்கும் ஓர் அங்கமாக நிலை நிறுத்த ஒவ்வொரு அன்பரும் உறுதி பூண்டு செயல்பட பிரார்த்திக்கிறோம்.
மற்றும் நம் அமைப்பின் அதிகார பூர்வமான ஒரு WEBSITE நிறுவ வேண்டும் என்ற பல அன்பர்களின் கோரிக்கையை நம் பொதுக்குழு பரிசீலித்து செயல் படவும் வேண்டுகிறோம்.
முருகா சரணம்
முருகன் அன்பர்களுக்கு முக நூல்! முத்தான முயற்சி! முனைந்து செயல்படின் முருகன் அருளுவான்!
ReplyDelete