டெல்லி அன்பர்கள் சத்குரு அருணகிரி நாதரின் நினைவு விழா மற்றும் படிவிழாவின் பொன்விழா வைபவத்தை வரும் அக்டோபர் 11.12 தேதிகளில் நியு டெல்லி ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் (மலை மந்திர்) விமரிசையாக நடத்த உள்ளார்கள்.
திருப்புகழ் வழிபாடுடன் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் “ வாக்குக்கு அருணகிரி ,வாழ்க்கைக்கு திருப்புகழ் “என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற இசைந்துள்ளார்கள்.அவர் சென்ற ஆண்டு சென்னையில் நடந்த ஆன்மீக விழாவில் உரையாற்றி அன்பர்களை பரவச படுத்தியதை நினைவு கூர்கிறோம்.
விழாவின் முக்கிய அம்சமாக “வள்ளி கல்யாணம் “ வைபவமும் 10 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற உள்ளது. அழைப்பிதழ் கீழே
அன்பர்கள் யாவரும் பெருமளவில் கலந்து கொண்டு முருகனின் அருள் பெற வேண்டுகிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் வள்ளி கல்யாணம் பற்றி சில செய் திகள்.மற்ற சீதா கல்யாணம் ,ராதா கல்யாணம் ,ருக்மிணி கல்யாணம் போல் அல்லாமல் வள்ளி கல்யாணம் அருணகிரியாரின் நவ மணிகளாக திகழும் ஒன்பது நூல்களிலிருந்து தொடுக்கப்பட்ட பாமாலைகளால் மட்டும் நிகழ்த்தப்படும் இசை வழிபாடு .நம் குருஜியால் பந்ததியாக வடிவமைக்கப்பட்டு முறையாக நடந்து வருகிறது.
1985,1997 ம் ஆண்டுகளில் மும்பையிலும் 2004 ம் ஆண்டு பழனியிலும் குருஜி தலைமையில் ஆறுமணி நேர காலம் வெகு விமரிசையாக நடை பெற்றன.
அதிர்ஷ்ட வசமாக பழனி வள்ளி கல்யாண வைபவ நிகழ்சிகளை ,அருளாளர் G.V.நிலகண்டன் அவர்கள் ஆடியோ வடிவில் வழங்கியுள்ளார்கள்.அவருக்கு தலை வணங்குகிறோம்.
அதன் குறியீடு கீழே (Pl download and Play)
முருகா சரணம்!
|
No comments:
Post a Comment