குருஜியின் ஜெயந்திவிழா சென்ற ஆண்டு முதல்
மும்பையில் கொண்டாடப்படுகிறது. நேருல் பக்த சமாஜ் தாமாகவே முன் வந்து தங்கள் முருகன்
ஆலயத்தில் இசை வழிபாடுடன் விழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள்..இந்த ஆண்டும் செப்டம்பர் 14 ம் தேதி காலை 9.00 மணி முதல் பூஜையுடன் தொடங்கி நடைபெறும் அழைப்பிதழ் இணைக்கப்பட்ட்டுள்ளது..அன்பர்கள்
பெருமளவில் கலந்து கொண்டு முருகனின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுகிறோம்.
குருஜி முத்துவில் ஆரம்பித்து முத்துவில்
முடித்தார் என்று அன்பர்கள் பெருமையுடன் நினைவு கூர்கிறார்கள்.அந்தவகையில்
சமீபத்தில் நேருல் முருகன் ஆலயத்தில்
நடைபெற்ற ஆடி கிருத்திகை வழிபாடு
“முத்தை திரு” பாடலில் ஆரம்பித்து
“முத்து நவ ரத்னமணி “ பாடலில் முடிவடைந்தது.மற்றும் குருஜியின் இரு புதல்விகளும்
கலந்துகொண்டது ,குருஜியே கலந்து கொண்டதுபோல் அன்பர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்..நேருல்
பக்த சமாஜுக்கு அன்பர்கள் சார்பாகவும், வலைத்தளம் சார்பாகவும், இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொல்கிறோம். அருளாளர் ஐயப்பன் குருஜியின் வகுப்பில் கற்பித்த முத்து நவரத்னமணி பாடலை அவர் வர்ணனையுடன் கேட்போம்:
https://mail.google.com/mail/u/0/?tab=mm#inbox/145a307f611ab846?compose=148545c1d29a8dfe&projector=1
இந்த சந்தர்ப்பத்தில் குருஜியை பக்தியுடன்
நினைவு கூர்ந்து சில நிகழ்வுகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.
குருஜியின் 80ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் 2008 ம ஆண்டு அன்பர்களின் சங்கமத்தோடு
வழிபாட்டுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
அதன் அழைப்பிதழ் கீழே
இந்த சந்தர்ப்பத்தில்
மும்பை அன்பர்கள் சார்பாக சுந்தரராஜன்
புனைந்த ஒரு கவிதை குருஜிக்கு
சமர்ப்பிக்கப்பட்டது.
...குருஜியின் எக்காலத்துக்கும் பொருந்தும் உபதேசம் எழுத்துருவில்
இசை வழிபாடு
|
சங்கீத உலகில் உழன்று ரசித்து மெய் மறந்த அன்பர்கள் குருஜியின் இசை வழிபாடு களில் கலந்து கொண்டு தெய்வீக நிலையை எய்தினார்கள்..கச்சேரிகளில் இசை வேறு .வழிபாடு இசை வேறு என்று உணர்ந்தார்கள். அது இசைவாணர்களின் அயராத உழைப்பின் திறமையை வெளிப்படுத்து கிறது.ஆனால் வழிபாடுகளில் வெளிப்படும் இசை தெய்வீக ம.அதை உணர்ந்த அன்பர்கள் கச்சேரி இசையை பின்னுக்கு தள்ளினார்கள்.வழிபாடு இசையில் விருத்தம் வடிவில் ராக ஆலாபனையையும் ,பாவ பூர்வமான பாடல்களையும்,ஒப்பிடமுடியாத நிரவல் பகுதியையும் கண்டு அதிசயித்தார்கள்.மூழ்கினார்கள்.இன்னும் திளைத்துக்கொண்டு இருக்கிரார்கள்.குருஜியின் விருத்தங்களும், நிரவல்களும் அன்பர்களை பரவசப்படுத்தின.தன்னை இழக்க செய்தன.கண்ணீர் விட செய்தன.
அந்த வகையில்,அருளாளர் ஐயப்பன் அளித்துள்ள குருஜியின் ஒரு நிரவல் பகுதியை ,அவரின் உணர்ச்சிப்பெருக்கான உரையுடன் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment