தேவியைப்போற்றும் நமது ஆடிவெள்ளி வைபவமும் வரலட்சுமி விரதமும் ஒன்றாக வருவது மிக்க சிறப்பு.
வரலட்சுமி பூஜையை அவரவர்கள்.குடும்ப சம்ரதாயத்தோடு கடைப்பிடித்து மேற்கொண்டாலும் ஒரு ஆச்சார்யாவின் வழி நடத்தலோடு நடத்துவதையே நம் தாய்மார்கள் உயர்வாக கருதுகிறார்கள்.ஆனால் கால வேகத்தில் இது சாத்தியமில்லை.அந்த குறையை போக்க புத்தகம் ,ஒலிநாடா,குறுந்தகடு ,வலைத்தளம் போன்றவை கை கொடுக்.கின்றன.
அந்த வகையில் நம் நேருல் பக்த சமாஜம் வலைத்தளம் ,பூஜா விதிகளை விரிவாக அளித்துள்ளது.அதை அன்பர்களின் குடும்பத்துக்கு சேர்ப்பதை பாக்யமாக கருதுகிறோம்.பகலில் பூஜையை அர்ப்பணித்து,மாலையில் நம் ஆடி வெள்ளியில் தேவியை போற்றும் லலிதா சஹஸ்ரநாமம்,துர்கா சந்திரகலா ஸ்துதி,அபிராமி அந்தாதி,பதிகம்,திருப்புகழ் பாடல்களை துதிப்பது மேலும் சிறப்பு என்று சொல்லவும் வேண்டுமோ?
அழைப்பிதழ் முன்னரே பிரசுரித்துள்ளோம்.
தேவி சரணம். முருகா சரணம்.
பக்தர்களுக்கு சேவை செய்வதையே தன குறிக்கோளாக கொண்டுள்ள நேருல் பக்த சமாஜ த்துக்கு நன்றிகள் பல.
No comments:
Post a Comment