நொச்சுர் வெங்கடராம பாகவதர் பக்தர்களால் நோச்சூர் அண்ணா என்று பாசமாக அழைக்கப்படுகிறார்.பாகவதம், பகவத்கீதை,சிவயோகம் ,ஆதிசங்கரர், அருணாசலம் போன்ற பல தலைப்புகளில் உபன்யாசம் செய்துவருகிறார்.கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர் பன் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்.
நம் பாகவதர்கள் தமிழகத்திலேயே பிறந்து,தமிழில் பாண்டித்தியம் பெற்றும் மறந்து போய் கூட தமிழ் பக்தி நூல்களிலிருந்து ஒரு மேற்கோள் கூட காட்டுவதில்லை.அதை தங்கள் தரக்குறைவு என்று கூட நினைக்கிறார்கள்.முகநூலில் ஒருவர் காட்டமாக "கடவுள் தமிழில் அழைத்தால் வரமாட்டாரோ?" என்று கேட்டிருக்கிறார். பக்தர்களும் அப்படித்தான் .லலிதா சஹஸ்ரநாமம் ஓரிடத்திலும்,அபிராமி அந்தாதி மற்றொரு இடத்திலும் நடை பெற்றால் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது நம் அறிந்ததே. அதுபோல் நாராயணீயம்--திருப்புகழ் ,வால்மீகி ராமாயணம் --கம்பராமாயணம் நிகழ்ச்சிகளை உதாரணமாக கூறலாம்.காரணம் இறைவனுக்குத்தான் தெரியும். போகட்டும்.
நோச்சுர் அண்ணா இதற்கு விதிவிலக்கு.மலையாளத்தை தாய்மொழியாக கொண்டாலும்,தமிழ் இலக்கியங்களை மென்மையாக அறிந்து,தம் உபன்யாசங்களில் ,திருமூலர்,பட்டினத்தார், தேவாரம், திருவாசகம்,திருக்குறள், ராமலிங்க அடிகள் முக்கியமாக நம் திருப்புகழ் போன்ற அரிய நூல்களிலிருந்து விளக்கி காட்டுகிறார்.திருப்புகழ்பால் அளவு கடந்த ஈடுபாடு.அவரும் அன்பர்களுடன் சேர்ந்து பாடுவார்.அத்தகைய காட்சி முலுண்ட்ல் நடைபெறும் சப்தாஹா நிகழ்ச்சிகளில் காணமுடியும்.ஹரித்வாரில் நம் அன்பர்கள் ஓரு மணி நேரத்துக்குமேல் பாட அனுமதி அளிக்கப்பட்டார்கள்
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் அண்ணா நம் வழி பாட்டில் கலந்து கொண்டு , நிகழ்த்திய அரிய உரை YouТube வடிவத்தில் வந்துள்ளது.கேட்போம் ,பார்ப்போம்,அனுபவிப்போம்.
Thank you for posting Nochur Anna's participation in Thiruppugazh Anbargal's bhajan at Tiruvananthapuram. Being an ardent follower of Nochur Acharya, I found it very delightful and illuminating. In most of his discourses, Nochur Acharya used to refer to the Kandar Anubhuti stanza: "Yanagiya Ennai Vizhungi, Verum Thanai Nilai Ninrathu Tharparame". "Oh Muruga you have swallowed the false 'I' in me, the ego or the individuality in me, and helped me to realise my true Self, how graceful you are".
ReplyDelete