Monday, 24 March 2014

நெடிய மலை முருகன் கோயில்

இது ஒரு மலைக்கோவில், திருத்தணியிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் நகரிக்கு பக்கத்தில் உள்ளது. அருணகிரியார் திருத்தணியையும் நெடியத்தையும் சேர்த்தே பாடியுள்ளார் எனை அடைந்தகுட்டம் எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில். முருகப் பெருமானை "  நிலைபெறும் திருத்தணியில் விளங்கி சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே " என்கிறார். நெடியத்தைத் தரிசித்தப் பிறகே திருத்தணியை தரிசிக்க வேண்டும் என்பது ஒரு நடைமுறை வழக்கம்.

அண்மையில் அருளாளர் ஐயப்பன் அன்பர்களுடன் தரிசனம் செய்ததை அபிஷேக ஆராதனைகளுடன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.விஷேசம். குருஜி மும்பை படிவிழாவில் (26.1.1984 )நெஞ்சுருகி  சீர்பாத வகுப்பை விருத்தமாக சிந்து பைரவியில் பாடியுள்ளதை கேட்டுக்கொண்டே நாமும் தரிசனம் செய்வோம்.

அவர் அனுப்பியுள்ள குருஜியின் மற்றொரு குருஜியின் விருத்தத்தையும் கேட்டு அனுபவிப்போம். அருளாளர் ஐயப்பனுக்கு நன்றி கூறத்தேவையில்லை .அருள் வேண்டுவோம்.

Thursday, 20 March 2014


திருப்புகழ் பாடல்கள் 431முதல் 475 வரை இணைய தளத்தில்

 சென்னை அருளாளர்G .V  நீலகண்டன் அவர்கள் அன்பர்களின் சௌகரியம் கருதி ,குருஜி கற்பிக்கும் திருப்புகழ் பாடல்கள் 431முதல் 475  (7ம் பதிப்பு இசை வழிபாடு நூல்  எண் வரிசை)வரை இணைய தளத்தில் அளித்துள்ளார்கள்.அவற்றை எளிமையாக பதவிறக்கமும் ( download)செய்யலாம்.அதன் தொடர்பு குறி கீழே 

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற குறிக்கோளுடன் பெருமானின் கட்டளையுடன் இயங்கும் அருளாளர் நீலகண்டனுக்கு தலை வணங்குகிறோம்.அவரிடமிருந்து அடுத்து ,476--503 பாடல்களின் பதிவை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.

Comments are welcomeand may be given  if desired

Monday, 17 March 2014

கந்தர் அலங்காரம்

திருப்புகழ்அன்பர்களில்பலர்அயராதுபாடுபட்டுஅன்பர்களின்சௌகரியத்துக்காக பலஅரியதொண்டுகளிலஈடுபட்டுள்ளார்கள்.அவ்வகையில் அருளாளர் சித்ரா மூர்த்திஅவர்கள்  மிக அழகாக பதம் பிரித்து  தக்க உச்சரிப்புடன் எளிய முறையில் "கந்தர் அலங்காரம்" பாடல்களை  "முருகன் பக்தி" இணைய தளத்தின் மூலம்  வெளியிட்டுள்ளார்கள்.அதன் link கீழே கொடுத்துள்ளோம்


அன்பர்கள் கேட்கும் போதும்.தாங்கள் அவ்வாறு படிக்கும் போதும்,பாராயணம் செய்யும் போதும்   உட் பொருளையும்  கூடவே அனுபவிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அன்பர்கள்  பெருமளவில் பயன்படுத்தவும் தங்களின் மேலான கருத்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவிக்க வும் வேண்டுகிறோம்.


Sunday, 9 March 2014

நாடக நடிகராக நம் குருஜி

 நம் குருஜி சகலகலா வல்லவனாகத்திகழ்ந்தார்.என்பது முந்திய தலைமுறை அன்பர்களுக்கு நன்கு தெரியும். தன்  அடக்கம் காரணமாக அன்பர்கள் அதை வெளிப் படுத்துவதில்லை.

குருஜி சாதாரண மனிதனாக குடும்ப வாழ்க்கை கடமைகளை நிறைவேற்றி வெற்றி கண்டார். அகில இந்திய வானொலியில்  Grade .அலுவலகப்பணி களில் சுறுசுறுப்பாக செயல் பட்டார்.பல கட்டுரைகளின் ஆசிரியர்.பல தலங்களுக்கு யாத்திரை.சிகரம்போல் நமது திருப்புகழ்,அபிராமி அந்தாதி பாடல்களுக்கு ஈடு இணை அற்ற  இசை . உலகெங்கும் அன்பர்கள் திருக்கூட்டம். அன்பர்களை அற  வழியில் ஈடுபடுத்தி உத்தமர்கள் ஆக்கியது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அவர் ஒரு சிறந்த நாடக நடிகர் என்று சிலருக்குத்தான் ,குறிப்பாக டெல்லி அன்பர்களுக்குத்தான் தெரியும்.இந்த முன்னுரை எழுதும் அன்பர் இதை அறிந்தார்.அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு  சென்னையில் குருஜியை சந்தித்தபோது ,தைரியமாக  இது பற்றி கேட்டார். அப்போது குருஜி புன்முறுவலுடன் ஆமோதித்தது இன்றும் கண்ணில் நிற்கிறது.

இன்று அருளாளர் ஐயப்பன் அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப் படங்களோடு U tube  வடிவில் அளித்துள்ளார்கள்.பின்னணி இசையில்.குருஜியின் அருமையான விருத்தமும்    " சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித்திரியாதே " என்ற அருள் ஆணையும் அமைந்தது பெருமானின் அருளே குருஜி ஒரே ஒரு முறை அப்பர் சுவாமிகளாக நாடகத்தில் நடித்துள்ளார் என்ற அரிய செய்தியையும் காணலாம்.

அருளாளர் ஐயப்பனின் பகிர்வை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும்,பெருமையும் அடைகிறோம்.

ஐயப்பனின் பகிர்வு கீழே 


முருகா சரணம்
அன்பர்களே
நமது குருஜி எந்தத் துறையிலும் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். இவ்வுண்மை அவருடன் நெருங்கிப் பழகின அனைவருக்கும் நன்கு புரியும்
அவர் நடிப்புத்துறையிலும் சிறந்தவராக விளங்கினார்.
இதோ ஒரு சான்று
அவர் நடித்தது ஒரே ஒரு நாடகமே. அதில் அவர் அப்பர் சுவாமிகளின் பாத்திரமேற்று அற்புதமாக நடித்திருக்கிறார்.
அந்த நாடகத்தின் ஒரு சில காட்சிகள் இதோ இங்கே பாருங்கள்.

இதன் பின்ணயில் 1970 ல் டெல்லியில் நடந்த ஒரு பஜனையில் ஹிந்தோள ராகத்தில் ஒரு வித்தியாசமான குருவந்தனத்தைக் கேளுங்கள். சொற்களைச் இணைபபதில் அவருக்கிணை அவரே என்பதும் இதைக் கேட்டால் விளங்கும்
முருகா சரணம்




குருஜி மற்றொரு "மனமே மயங்காதே" என்ற சமூக நாடகத்திலும் 1960 -களில்  நடித்துள்ளார் என்று டெல்லி அன்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Thursday, 6 March 2014

நொச்சூர் அண்ணாவும் திருப்புகழும்


நொச்சுர் வெங்கடராம பாகவதர் பக்தர்களால் நோச்சூர்  அண்ணா என்று பாசமாக அழைக்கப்படுகிறார்.பாகவதம்,பகவத்கீதை,சிவயோகம் ,ஆதிசங்கரர், அருணாசலம் போன்ற பல தலைப்புகளில் உபன்யாசம் செய்துவருகிறார்.கேரளத்தில் பிறந்து  வளர்ந்தவர் பன் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்.

நம் பாகவதர்கள் தமிழகத்திலேயே பிறந்து,தமிழில் பாண்டித்தியம் பெற்றும் மறந்து போய் கூட தமிழ் பக்தி நூல்களிலிருந்து ஒரு மேற்கோள் கூட காட்டுவதில்லை.அதை தங்கள் தரக்குறைவு என்று கூட நினைக்கிறார்கள்.முகநூலில் ஒருவர் காட்டமாக "கடவுள் தமிழில்  அழைத்தால் வரமாட்டாரோ?" என்று கேட்டிருக்கிறார். பக்தர்களும் அப்படித்தான் .லலிதா சஹஸ்ரநாமம் ஓரிடத்திலும்,அபிராமி அந்தாதி மற்றொரு இடத்திலும் நடை பெற்றால் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது நம் அறிந்ததே. அதுபோல் நாராயணீயம்--திருப்புகழ் ,வால்மீகி ராமாயணம் --கம்பராமாயணம் நிகழ்ச்சிகளை உதாரணமாக கூறலாம்.காரணம் இறைவனுக்குத்தான் தெரியும். போகட்டும்.

நோச்சுர் அண்ணா இதற்கு விதிவிலக்கு.மலையாளத்தை தாய்மொழியாக கொண்டாலும்,தமிழ் இலக்கியங்களை மென்மையாக அறிந்து,தம் உபன்யாசங்களில் ,திருமூலர்,பட்டினத்தார், தேவாரம், திருவாசகம்,திருக்குறள், ராமலிங்க அடிகள் முக்கியமாக நம் திருப்புகழ் போன்ற அரிய நூல்களிலிருந்து விளக்கி காட்டுகிறார்.திருப்புகழ்பால் அளவு கடந்த ஈடுபாடு.அவரும் அன்பர்களுடன் சேர்ந்து பாடுவார்.அத்தகைய காட்சி முலுண்ட்ல் நடைபெறும் சப்தாஹா நிகழ்ச்சிகளில் காணமுடியும்.ஹரித்வாரில் நம் அன்பர்கள் ஓரு  மணி நேரத்துக்குமேல் பாட அனுமதி அளிக்கப்பட்டார்கள் 

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் அண்ணா  நம் வழி பாட்டில் கலந்து கொண்டு , நிகழ்த்திய அரிய உரை YouТube  வடிவத்தில் வந்துள்ளது.கேட்போம் ,பார்ப்போம்,அனுபவிப்போம்.




Sunday, 2 March 2014

இளமைப் பருவத்தில் நம் குருஜி

அருளாளர் ஐயப்பன் அவர்கள் நம் குருஜியின் இளமைப்பருவ புகைப்படங்களை  YouTube மூலம் அன்பர்களுக்கு வழங்கியுள்ளார்.அதோடு குருஜி 1969ல் கலந்துகொண்ட வழிபாட்டின் ஒரு பகுதியையும் ஒலி வடிவில் இணைத்துள்ளார்கள்.

அவர் ஆர்வத்துடன்அன்பர்களுக்கு  அனுப்பியுள்ள  செய்தியையும் அளிப்பதில் மிக மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.  அன்பரின் மின் அஞ்சல்:                          

முருகா சரணம்
அன்பர்களே

அடியேன் நமது குருஜி அவர்களை  1980 ம் ஆண்டு பம்பாயில் வைத்து நமது பாலு சார் மூலமாக அறிமுகப் படுத்தப்பட்டு சந்தித்தேன். நானும் திருப்புகழ் அன்பர்கள் குழாமில் சேர விரும்புகிறேன், அதற்கான பாரம் இருந்தால் கொடுங்கள் என்றேன். பாரம் ஏதும் கிடையாது. நீயே இப்போதிலிருந்து திருப்புகழ் அன்பன் தான் எனக் கூறி அப்போது என்னையும் ஏற்றுக் கொண்டார். அவருடை இளமை வாலிப பருவத்து புகைப்படங்களை அவரது திருமகன் ராஜீ கொடுத்தார். நீங்கள் அனைவரும் நமது குருஜியை சந்திக்க வேண்டுகிறேன். அத்துடன் நமது குருஜி அவர்கள்  1969ல் நடந்த ஒரு இசைவழிபாட்டில் பாடின திருச்செந்தூர் திருப்புகழ் - தண்டையணி - தன்யாசி ராகத்தில் - திருவடியும் - அலங்காரம் படியுள்ளார். பக்க வாத்தியமாக  ஸ்ரீ ஈஸ்வர் ஐயர் அவர்கள் மிருதங்கத்திலும் ஸ்ரீ நாராயணன் அவர்கள் ஹார்மோனியத்திலும் வாசித்துள்ளார்கள். இம்மூவருக்கும் இணை இவர்களே தான்.. கேளுங்கள்.
முருகா சரணம்

http://youtu.be/5Tc_YZEGWO8