அந்தமான் படகு விபத்தில் அருளாளர் ஐயப்பனின் உடன் பிறப்பு அரங்கநாதனின் மனைவி சுசீலா அம்மையாரின் அகால மரணம் பற்றிய மனம் கலங்கிய செய்தி அவரிடமிருந்து வந்துள்ளதை கீழே பிரசுரித்துள்ளோம்,அன்பர்கள் எல்லோரும் அவருடைய துக்கத்தில் பங்குகொள்கிறோம்.உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.அவர்களின் இழப்பை தாங்கும் மனோவலிமையை மற்ற குடும்பத்தினருக்கு அளிக்க பெருமானை வேண்டுகிறோம்.
செய்தி:
முருகா சரணம்
அன்பர்களே,
இந்த சுதந்திர தின விழா நமது ( எனது ) குடும்பத்திற்கு கருப்பு தினமாகி விட்டதை உங்களுடன் பகிர்ந்து நாயேனின் மனக்கவலையை குறைத்துக் கொள்ளும் முயற்சியே இந்த மெயில். நாயேனது இரத்தத்துடன் ஒட்டிய உறவினர்கள் பலர் இருப்பினும் அடியேனின் ஆவியோடு ஒட்டியவரகள் திருப்புகழ் அன்பர்கள் தான். நமது குருஜி சொல்லி இருக்கிறார் நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று..
நாயேனது உடன் பிறப்பு தம்பி அரங்கநாதன், மனைவி சுசிலா, மகன் குரு, மருமகள் பிரீதி. நால்வரும் அந்தமான் தீவிற்கு சுற்றுலா சென்றனர். திரும்பி வந்தவர்கள் மூவரே. சுசிலா நடுக்கடலில் தனுயிரை காலனிடம் ஒப்பிவித்து இந்த மூவருடைய உயிர்களையும் காப்பாற்றி இருக்கிறாள் இந்த உத்தமி . திருத்தம் ப்ளீஸ். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 பேர்கள் தமது இன்னுயிரைத் தந்து 8 பேர் உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். அனைவருடைய பூத உடல்களும் இன்று காலை 10 மணி அளவில் ( 28.01. 2014 ) காஞ்சியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளன. நீங்கள் மானசீகமாக வந்திருந்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய மவுனமாக பிரார்திக்க வேண்டிகிறேன்.
நமது முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு உதவிகளை செய்திருக்கிறார்கள் அவர்கள்.
நாயேன்
ஐயப்பன்
முருக சரணம்
No comments:
Post a Comment