திருப்புகழ் ஸ்வாமி என்னும்பெயர் உடையாய்!
சேஷாத் திரிப்பெயர் மாமுநி உனக்குத்
‘திருப்புக ழேமஹா மந்திரம்’ என்று
செப்புப தேசத்தால் தீஷைசெய் தருளக்
குருப்புகழ் பெற்றந்த வேங்கட ரமணர்
கோவணங் கோல்கொண்ட கோலங்கண் டுருகும்
தருப்புக ழார்வள்ளி மாமலை ஸச்சி
தாநந்த! நீபள்ளி எழுந்தரு ளாயே!
என்று அருட்கவி ஸாதுராம் ஸ்வாமிகளால் புகழப்பட்ட வள்ளிமலை ஸ்வாமிகள் எனப்படும் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸ்வாமிகள் திருப்புகழில் ஈடுபாடு எற்படுத்திய பாடல் வங்காரமார்பிலணி எனத்துவங்கும் பாடல். பழநியில் தங்கியிருந்த போது ஸ்வாமி வலம் வரும் சமயம் நாட்டியகாரர்கள் இந்தப் பாடலை பாடி “ சங்கோதைநாதமோடு கூடி ... வரிகளை திரும்ப திரும்ப பாடி ஆடும் சமயம் இவர் தன்னிடம் ஒரு மாற்றத்தைக் கண்டார். அன்று வரை தமிழ் தெரியாமல் இருந்தவர் தமிழைக்கற்று திருப்புகழைக்கற்று திருப்புகழ் பரவச்செய்தவர். அவரை மாற்றிய பாடலின் பொருளை இன்றைய ‘திருப்புகழ் அம்ருதம்’ blogல்ல படிக்கலாம்
Rajans
No comments:
Post a Comment