Thursday, 22 August 2013

வள்ளிமலை ஸ்வாமிகளை திசைத் திருப்பியத் திருப்புகழ்

திருப்புகழ் ஸ்வாமி என்னும்பெயர் உடையாய்!
சேஷாத் திரிப்பெயர் மாமுநி உனக்குத்
‘திருப்புக ழேமஹா மந்திரம்’ என்று
செப்புப தேசத்தால் தீஷைசெய் தருளக்
குருப்புகழ் பெற்றந்த வேங்கட ரமணர்
கோவணங் கோல்கொண்ட கோலங்கண் டுருகும்
தருப்புக ழார்வள்ளி மாமலை ஸச்சி
தாநந்த! நீபள்ளி எழுந்தரு ளாயே!

என்று அருட்கவி ஸாதுராம் ஸ்வாமிகளால் புகழப்பட்ட வள்ளிமலை ஸ்வாமிகள் எனப்படும் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸ்வாமிகள் திருப்புகழில் ஈடுபாடு எற்படுத்திய பாடல்  வங்காரமார்பிலணி எனத்துவங்கும் பாடல். பழநியில் தங்கியிருந்த போது ஸ்வாமி வலம் வரும் சமயம் நாட்டியகார்கள் இந்தப் பாடலை பாடி “ சங்கோதைநாதமோடு கூடி ... வரிகளை திரும்ப திரும்ப பாடி ஆடும் சமயம் இவர் தன்னிடம் ஒரு மாற்றத்தைக் கண்டார். அன்று வரை தமிழ் தெரியாமல் இருந்தவர் தமிழைக்கற்று திருப்புகழைக்கற்று திருப்புகழ் பரவச்செய்தவர். அவரை மாற்றிய பாடலின் பொருளை இன்றைய ‘திருப்புகழ் அம்ருதம்’  blogல்ல படிக்கலாம்
http://thiruppugazhamirutham.blogspot.in/2013/08/245.html

Rajans

திருநள்ளாறு பாடல் - திருப்புகழ் அம்ருதம்

சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு ஸ்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம். திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது.  இந்த  நினைவுறுத்தும் வகையில் அருணகிரிநாதரும்  திருநள்ளாரில் பாடியப் பாடலை “பச்சை” ஈன தொடங்கியுள்ளாறோஎனத்தோன்றுகிறது.

இந்த பாடலின் பொருள்  இன்றைய 'திருப்புகழ் அம்ருதத்தின் '  இடுக்கையில் கணாலாம்

Rajans

Sunday, 18 August 2013

முன்னோர் வகுத்தபாதை

புலவர் இரா.இராமமூர்த்தி
 Inline images 1
வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் தம் தமிழ்ப்புலமையால், சொற்பொழிவாற்றலால், எழுத்து வன்மையால், பக்தி நெறியால் புகழ் பெற்றவர். இறைவன் புகழைப் ‘பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே’ என்னும் திருமுறை மொழியை நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றி உறுதிப்படுத்தியவர் அவர். 
கந்தபுராணம், கந்தரலங்காரம், திருமுருகாற்றுப் படை, ஆகியவற்றின் விரிவுரைகளைத் தம் சொற்பொழிவுகளின் தொகுப்பாக நூல்களாக்கி வெளியிட்டுள்ளார். அவற்றுள் கந்தரலங்காரப் பாடல் ஒன்றின் விளக்கத்தைத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நம் வாழ்க்கையில் நாம் பிறந்த நட்சத்திரம், நாம் பிறந்த கிழமை, நம் இருவினைகள், வினைத்தொகுப்பு, ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு இராசிகள், மரணம் ஆகியவை மொத்தம் அறுபத்தொன்றாகும். நட்சத்திரம் 27, வாரம் 7, வினை 2, வினைத்தொகுப்பு 3, கிரகங்கள் 9, இராசிகள் 12 மரணம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையே 61. நம் வாழ்வில் நன்மை, தீமைகளை நிர்ணயிக்கும் இவற்றைப் பற்றி அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் ஒரு பாடலில் கூறியுள்ளார். அந்தப்பாடல்
நாளென் செயும்வினை தானென்செயும் எனை நாடிவந்த
கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே!
என்பதாகும்.
இப்பாடலின் முதல் இரண்டடிகளில் நாள், வினை, கோள், கூற்று என்ற சொற்கள் மேலே காட்டிய அறுபத்தொன்றையும் குறிக்கின்றன.

நாளென் செயும் என்ற தொடருக்கு வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் விளக்கம் அளிக்கும்போது, “நாள் என்பது நாம் பிறந்த நாளைக் குறிக்கும். அஸ்வனி முதல் ரேவதி வரை உள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றில்தான் நாம் பிறந்திருப்போம். இந்த நட்சத்திரங்கள் நம் ஜன்ம நட்சத்திரங்களாகி, ஏற்றத் தாழ்வுகளை உருவாகுகின்றன. முருகப் பெருமானை ஒருமுறை அவர்தம் திருவடி முதல் திருமுடி வரை கண்ணாரக் கண்டு, வழிபட்டால் இந்த இருபத்தேழு நட்சத்திரங்களின் பாதிப்பும் நம்மைத் துன்புறுத்த மாட்டா. இந்தப் பாடலில் குமரேசர் இருதாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! என்ற பகுதியில் இருதாள், இருசிலம்பு, இருசதங்கை, இருதண்டை, ஆறுமுகம், பன்னிரண்டுதோள்கள், ஒரு கடம்பமாலை ஆகியவற்றின் கூட்டுத்தொகை, இருபத்தேழாகிறது. இந்த இருபத்தேழையும் தரிசனம் செய்தால் நட்சத்திரங்களாகிய இருபத்தேழும் நம் ஜாதகப்படி தீமைதராமல், நன்மையே செய்யும் என்பது இந்தப் பாட்டின் “நாளென் செயும்” என்ற தொடருக்கு விளக்கமாகும்.
இதனைத் தம் சொற்பொழிவின் இடையே கி.வா.ஜ. அவர்கள் கூறி அவையோரின் கரவொலியையும் பாராட்டையும் பெறுவார். மற்ற பேச்சாளர்களும் இந்த விளக்கத்தை எடுத்துக் காட்டிப் பாராட்டுப் பெறுவது வழக்கம்.
கி.வா.ஜ அவர்கள் அப்பாடலில் நாளென் செயும் என்ற தொடருக்கு மட்டிலுமே விளக்கம் அளித்தார். அவர்களின் இலக்கிய நயம் உணரும் திறனை, அவர் வழியில் சிந்தித்து அவர்தம் ஆசியால் நானும் பெற்றேன். அப்பாடலில் உள்ள வினைதான் என் செயும் என்ற தொடருக்கும், அடுத்தடுத்த தொடர்களுக்கும் அடியேனால் இயன்ற விளக்கத்தை எழுதத்துணிந்தேன்.
நாளென் செயும்’ என்ற தொடரிலேயே நாம் பிறந்த வாரக்கிழமையாகிய ஞாயிறு முதலிய கிழமைகளும் புலனாகின்றன. ஞாயிறு முதல் சனிவரை உள்ள வார நாள்கள் ஏழு. இப்பாடலில் தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும் ஆகிய அவயவ அலங்காரங்களும் ஏழு. ஆகவே நாம் பிறந்த வாரக்கிழமைகளால் வரும் பாதிப்பை முருகப்பெருமான் திருமேனியில் காட்சியளிக்கும் தாள் முதல் கடம்பு ஈறாக உள்ள ஏழும் நீக்கி, நமக்கு நலம் தரும் என்ற புதிய விளக்கம் உருவாயிற்று.
அடுத்து ‘வினைதான் என் செயும்’ என்ற தொடர். நாம் செய்யும் செயல்கள் புண்ணியச் செயல், பாபச் செயல் என்ற இருவகையாகி நல்வினை, தீவினை எனப்படும். இவை இரண்டும் நம் முன்பிறவிகளில் செய்த வினைகளாகிய சஞ்சிதம்,கடந்த பிறவியில் செய்த வினையாகிய பிராரப்தம், இப்பிறவி வினைகளாகிய ஆகாமியம் என்ற மூன்று தொகுதிகளுள் அடங்கும். முருகப் பெருமானின் திருவடிகளில் அணியப்பெற்ற இரண்டு சிலம்பு, இரண்டு சதங்கை, இரண்டு தண்டை ஆகியவை மூன்று வகையில் விளங்குவதால் இருவினை, கர்மவினைகள் மூன்று என்ற வினைத் தொகுதிகளின் பாதிப்பு நமக்கு வாராமல் பாதுகாக்கும். ஆகவே முருகப் பெருமானின் திருவடிகளின் மூவகை அணிகலன்களையும் கண்ணாரக்கண்டு வணங்க வேண்டும்.
அடுத்து ‘நம்மை நாடிவந்த கோள் என்செயும்?’ என்ற தொடரில் ‘நாடிவந்த’ என்பது நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ‘தினபுக்தி’ பலன்கள் என்ற வகையில் சூரியன் முதல் கேது வரை உள்ள நவகிரகங்களின் கிரகசாரம் நம்மை ஆண்டு தோறும் நாடிவந்து நிர்ணயிக்கும்.
முருகப்பெருமானின் திருப்பாதம் இரண்டு, திருமுகம் ஆறு, கடம்பமாலை ஒன்று ஆகிய ஒன்பதையும் கண்டு, வணங்கி தியானித்தால் கிரகசார பலன்கள் நன்மையாகவே அமையும் என்பதை ‘நாடிவந்த கோள் என்செயும்’ என்ற தொடரின் புதிய விளக்கமாகக் கொண்டு மகிழலாம். இதையே ‘ஆசறுநல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவேஎன்றார் அப்பர்பெருமான்.
சூரியனின் போக்கில் சமஅளவில் பிரிக்கப்பட்ட பன்னிரண்டு இராசிகளின் போக்கும் வரவும் நம் இராசி பலனாக, சோதிடநூல்களில் குறிப்பிடப்படுகின்றன. முருகப்பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்களையும் இப்பாடல் ‘தோளும்’ என்ற சொல் குறிக்கிறது. இப்பன்னிரண்டு திருக்கரங்களையும் திருமேனியில் கண்குளிரக் கண்டு போற்றிப் பரவினால்பன்னிரண்டு இராசிகளின் பலன்களும் நன்மையாகவே விளங்கும்.
நிறைவாக இப்பாடலில் கொடுங்கூற்று என்செயும்? என்ற தொடர் அமைந்துள்ளது. நமக்கு வரும் அச்சங்களில் மரண பயமே மிகக்கொடியதாகும். ‘இன்று வருமோ, நாளைக்கே தான் வருமோ, என்று வருமோ அறியேனே’ என்று எப்போதும் நம்மை அஞ்சி நடுங்க வைப்பது மரணபயம்தான்.
இறைவன் திருவருளைப் பெற்றவர்கள் “யானேதும் பிறப்பஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன்?” என்று அஞ்சாமல் வாழ்வர். திருவருள் பெறாதவர் அடையும் மரணம், அடுத்த பிறவியை நோக்கி இடமாற்றம் பெறுவதற்குத்தான். ஆனால் முருகன் திருவருள் பெற்றவர்கள் நிரந்தரமாக இறைவன் திருவடிப் பேற்றைப் பெற்று அங்கே நிலைத்து நிற்பர்.
சிவபெருமான் யாரும் பொருட்படுத்தாத கொன்றைமலர் மாலையை அணிந்து கொண்டார். அம்மாலை அனைவராலும் வணங்கப்பெற்றது. அதுபோல முருகப்பெருமான் யாரும் அணிந்து மகிழாத எளிய கடம்ப மலரைத் தான் எடுத்து மாலையாக அணிந்து கொண்டான். எளிய குறவள்ளியை மணந்து கொண்டான். எளியோருக்கு உயர்வாழ்வுதரும் தெய்வம் ஒரே ஒரு கடம்ப மாலையை அணிந்து காட்சியளிப்பதை “உருளிணர்க்கடம்பின் ஒலிதாராயேஎன்று சங்க இலக்கியம் போற்றுகிறது. முருகனுக்குக் கடம்பன் என்பதும் ஒரு பெயர். அந்தக்கடம்ப மாலையை ஒரே ஒரு முறை கண்டு வணங்கிப் பணிந்தால், ஒரு ஒரு முறை நமக்கு வரும் கூற்றுவனின் செயலாகிய மரணம் நமக்கு நிரந்தர விடுதலை தந்து, முருகன் திருவடிப் பேற்றை அடைவிக்கும். ஆகவே ‘கடம்பு எனக்கு முன்னே வந்து தோன்றிடின், கொடுங்கூற்றும் எனக்கு நிரந்தர விடுதலை தரும் என்ற விளக்கம் உதிக்கிறது.
இந்தப் பாடலால் நாள், வினை, கோள், கூற்று என்ற நான்கு வகைகளில் அறுபத்தொரு விதமாக நம்மைத் துன்புறுத்தும் அனைத்தும், முருகப் பெருமான் திருக்காட்சியை தீபாராதனையின் போது கண்டு, தனியே அமர்ந்து தியானிப்பவர் முன்நில்லாது நீங்கிவிடும். இந்த முழுமையான பொருளைக் கண்டு மகிழ நமக்குப் பாதை வகுத்த வாகீச கலாநிதியின் நினைவைப் போற்றுகிறேன்."

Rajans

Arunagirinathar and Thiruchuzhi Nathar



Arunagirinathar was born in 16th century and Sri Ramana Maharshi appeared around three centuries later. While Arunagirinathar was born at Tiruvannamalai, graced by Muruga and went all over Tamil Nadu and beyond, Sri Ramana Maharshi born near Madurai reached Tiruvannamalai and never left from there. Blessed by Muruga, Arunagirinathar adopted the path of devotion and expressed it through his songs, Thiruppugazh, and blessed by Arunachala, Sri Ramana Maharshi adopted the path of Jnana.  While Arunagirinathar conveyed the message of Thiruppugazh in the most ancient language of Tamil, Sri Ramana Maharshi conveyed his teachings through the universal language of silence.   Arunagiri’s songs were rendered through vocal chord, heard through ears and reached the heart and Sri Ramana Maharshi’s teachings went through the intellect (Chith) and brightened up the Atman. While Arunagirinathar emphasized the importance of Nama Sankeertan through his poetic verses, Thiruchuzhi Nathar stressed the need for self-enquiry to reach the destination.  While the songs of Thiruppugazh were heard and recited mainly in the land of Tamils and by Tamil speaking devotees, the teachings of Sri Ramana Maharshi transcended the regional and national borders.   Each of them was unique in their own right and created a kind of spiritual upheaval,

Apparently, it appeared they differed widely but the differences are only peripheral and not vital.  In fact we find more areas where they agree and almost no area where they disagree.  Their approach may have varied but their destination; liberation from the repeated cycle of life and death remained same.  Strangely, it was the question of death that gave both of them the first step towards enlightenment.  Distressed by the way his body and mind were leading him, Arunagiri decided to end his life and fallen from the temple tower of Arunachala.  Surprisingly, he fell not on the ground but into the strong grip of two hands; the Abhaya Hasta of Lord Muruga.  While Arunagirinathar had chosen death as a solution for his ills, Sri Ramana Maharshi started ruminating about death more seriously.  He imagined himself to be dead and pondered over the question “Is this body represents ‘me’?  ‘The material body may die but the spirit transcending it cannot be touched by death. “The body may be burnt and turned to ashes but the ‘I’ will not become extinct”, he realized.  He then arrived at the conclusion that he is not the body; he is the deathless spirit, the indestructible conscious entity.

Appearing as Gurunatha, Lord Muruga rendered the saintly advice to Arunagirinathar.  Arunagirinathar then emerged as an enlightened sage and rendered songs which were considered as the essence of Vedas and Upanishad.   In Kandar Anubhuti, Arunagirinathar expresses this experience and appeals to Muruga to come as Guru (Guruvai Varuvai Arulvai Guhane).  Similarly, Sri Ramana Maharshi went direct to Arunachala and surrendered before Him and Lord Arunachala has graced his ardent devotee and taught him that the path towards Self-Realisation is through introspection and Vichara.    

 “Give me your grace, your Arul”;  this formed the refrain of almost all songs of Arunagirinathar. (Muktiye Servatharkku Arulvayee…song: Apakara Ninraipattu).  Similarly, Maharshi says: “Divine grace is essential for Realisation.  It leads one to God-realisation.  But such grace is vouchsafed only to him who is a true devotee who has striven hard and ceaselessly towards the path to freedom” (Talks  with Sri Ramana Maharshi No.29)

Arunagirinathar who was basically a devotee composed Kandar Anubhuti, a work on Jnana while Bhagavan, Ramana Maharshi who was basically a Jnani composed Akshara Mana Malai (The Marital Garland of Letters), an outstanding work of devotion.   It is a divine coincidence that both Arunagirinathar and Ramana Maharshi stressed the importance of silence and used the same term “Summa Iru” (be still).  Arunagirinathar recalls the saintly advice given by Lord Muruga thus:  “What a wonder!  The moment Lord appeared as a savior, he gave the advice; “be still” and there was no longer anything for me to know” (Summa iru Sol Ara Enralume…..Anubhuti). He says he knows no other means to realize God than the path of silence, solitude and stillness.  Centuries later, Bhagavan Sri Ramana Maharshi expressed the same view point (‘Sollathu Solli Nee Sol Ara Nil Enru Summa Irundhai Arunachala’).                                                                                                                       
                                                                                                                                                                The term, “Summa Iru” (Remain quiet) is not to be interpreted to convey a state of idleness or inactivity.  It does not mean refraining from talk.  The term of silence referred by Arunagirinatha Swamigal and Ramana Maharshi is a state, where the mind and body becomes still and the “Self” alone shines forth.  It is the state where the individual remains free from worldly thoughts and free from mental activity. Observing silence, looking inward and practicing ‘Siva Yoga’ paves the way for Self- realisation where the Jeevatma realises the eternal truth, Brahman, the self-guiding awareness, the supreme consciousness, which is present in all. 

The human body is very fascinating, the centre of all activities, the motivating force behind all human assertions and possessions and the centre where concepts like ‘I’ and ‘mine’ arise, but the fact remains that this body is inert (jada).  It cannot perceive. It changes every moment. It grows, decays and ultimately perishes.     Ramana Maharshi said in categorical terms that ‘you are not the body, nor are you the mind.  You are the Atman, the ever existing Self, the reflection of the eternal reality, Brahman.  Strictly in accordance with his belief, Maharshi lived beyond his body and attained the state of Jeevan Mukti.  Arunagirinathar also expressed the same view point in most of his songs.  In one of his songs, (“Tholal Suvar Vaithu"), he says that this body, consisting of five senses and kosas (sheiths) is a house made of flesh, veins, skin and bones and one should free himself from the influence of such a body to be able to realize his  inherent divinity (Atma Chaitanya).  

Arunagirinathar was able to able to differentiate himself from his body and mind and some of the songs he addressed to the mind itself.  He said: “Oh my friends, restrain your mind from going towards sense gratifications, eliminate anger and remain calm and quiet and composed. “  (Thadungol  Manathai …Kandar Alamgaram 16).  Bhagavan Sri Ramana Maharshi’s teachings always emphasized the need to transcend the mind and even eliminate it.  He said mind is a mere bundle of thought.  The only way the mind can be eliminated is by going to the source from where thoughts arise.  Once you reach the root, the stem and branches would automatically fall. 
                                                                                                                                                                    Sri Ramana Maharshi said that though one cannot see himself as an object, he is aware that he exists.  Though he sees the objects of the world through the aids of his senses, he is aware of his existence without any aid or help.  He needs the help of his ears to listen, the help of his eyes to see and the help of his nose to smell but to know himself he need not depend on his senses or mind. One need not see a mirror to know that he exists.  This consciousness that “I exist” is Self.   The ‘Self’ is the eternal light, the ever existing reality.  The Self, being self-luminous, is shining all the time and revealing its presence in all states of deep sleep, dream and waking.  The Self constitutes the true identity of an individual but because of the super imposition of the body and mind; he is not able to realize his essential nature (Thaan) and remains under the mistaken notion of “I am the body”. (Yaan).  In his immortal works, ‘Kandar Anubhutim Arunagirinathar says: “Oh Muruga, the source of all knowledge, what a grace that you have bestowed on me.  The ego that characterized my individuality has been thoroughly overpowered.  The false notion of “I” has disappeared completely in the effulgence of the Supreme Self.  The ego self having subsided, I am elevated to a supreme state of awareness where my real Self alone remains (Yaan Akiya Ennai Vizhungi Verum Thaanai Nilai Ninrathu Tharparame).  As the ego or individuality is swallowed by Arunachala, one is transcended from the realm of body or mind and reaches the state of Turiya where pure consciousness alone prevails.  This is the state of Sath Chith Ananda (knowledge, consciousness and bliss) where one lives in his body and is yet independent of it.  He becomes Jivan Mukta, free from Prarabda Karmas and liberated from the bondage of the world.  He need not come again to this world of sufferings and sorrows.   (Iha Chedskad Boddhum Prak Sarirasya Vistrasah tatah sargesu Lokesu Sriratvaya Kalpate (Kathopanishad VI-4).

In his song ‘Thenunthu Mukkanigal’ Arunagirinathar conveyed his prayer thus:  “Oh Lord Muruga, bless me to transcend myself to a state where there is no ‘I’, no ego, no illusion, no attachment and the real, pure  "I" remain in the vast space of emptiness in perfect harmony with Self.” In Akshara Mana Malai 91, we find the same state being mentioned.  Maharshi says:  “Oh Arunachala, come, we will go day and night, stay together in the vast expanse of the space, in perfect bliss.  (Rappakal Illa Verum Veli Veetil Ramithiduvom Va Arunachala, Akshara Mana Malai 91).

- V.S.Krishnan



Tuesday, 6 August 2013

AMARAR GURUJI SHRI A.S.RAGHAVAN JAYANTHI CELEBRATION "1st SEPTEMBER 2013"


நம் "மாதா பிதா குரு தெய்வம்"  அமரர்  குருஜியின் ஜெயந்தி விழா 01.09.13 அன்று நவி மும்பை  நெருல்  பகுதியில்  அமைந்துள்ள பிரசன்ன கல்யாண பாலசுப்ரமணிய சுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.அன்பர்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளையும்,அருவமாய் நம்மை வழி நடத்தும் குருஜியின் ஆசிகளை பெறவும் அழைக்கிறோம்.



ARUNAGIRINATHAR NINAIVU VIZHA "15th AUGUST 2013"

அருணகிரிநாதர் நினைவு விழா " 15 ஆகஸ்ட் 2013"

வழக்கம் போல் 1 5.8.13  அன்று  நடை பெற உள்ள  அருணகிரியார்  நினைவுவிழாவின் அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.அன்பர்கள் அனைவரும் பெருமளவில் பூஜையின் முதற்கொண்டு கலந்து கொண்டு முருகனின் அருள்  வேண்டி  வழிபட வேண்டுகிறோம்.



An appeal: As Anbars are aware,  Anbars based at Pune Centre are in need of Isai Vazhipadu Books and appealed for sparing  the used/extra Books from other Anbars.  Since they are expected to participate in the Vazhipadu to be held on 15.08.13, we request all our Anbars to spare their used/extra books (any condition /any edition) to the needy Anbars.The books may be handed over to Thiru S.Venkataraman.