தாண்டவ தரிசனம்
எந்நாட்டவர்க்கும் இறைவனாம் சிவபெருமான், பஞ்ச பூதங்களில் – எல்லையே காண முடியாத ஆகாயத்தைத் தனதாக்கிக்கொண்டு
அருளும் திருத்தலமாகிய சிதம்பரமத்தில் இருப்பவன். இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில், மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நிகழும்
ஆருத்ரா தரிசனம், மிக அற்புதமான வைபவம். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும்.
இந்தத் திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் திருநடனம் ஆடிக் காண்பித்தார் ஸ்ரீநடராஜ பெருமான்.
உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை.
இந்த நாளில் ஸ்ரீநடராஜரைத் வழிபட்டு வர, நம் இன்னல்கள் யாவும் அகன்று, வாழ்க்கை இனிமையாக இருக்கும்படி அருள்புரிய வேண்டுவோம்.
ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க,
பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர் என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம்,தாரைகள் (நீண்ட ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே மேலெழுந்து பொங்க,
இரத்தப் பெருக்கின் வெள்ளம் எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும் மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே,
மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும்,புலி உருவரான வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.
(சிதம்பரம் திருப்புகழ்)
சாந்தா, சுந்தர்
தில்லை சென்று திரு நடராஜனின் திரு நடனம் நேரில் தரிசித்த திருப்தி!
ReplyDeleteதிரு வாய் திற ! ஒரு வாய் களி ! (திருவாதிரை - ஒரு வாக்களி - ஓம் நம சிவாய!