Wednesday, 15 August 2012

Editorial dated 03 August 2012


ஆடி வெள்ளி இசை வழிபாடு:  03 ஆகஸ்ட்  2012 


வணக்கம் அன்பர்களே, நம் அன்பர்கள் லலிதா சஹஸ்ரநாமம் ,அபிராமி அந்தாதி முதலிய வற்றை தம் வீடுகளில் தினம் பாராயணம் செய்தாலும் கூட்டாக வழிபடுவதையே பரமானந்தம் என நம்புகிறார்கள்.அதை மனதில் கொண்டுதான் பல கூட்டு வழிபாடுகள் நடக்கின்றன.திருப்புகழ் அன்பர்களும் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் வழிபடுகிறார்கள்.திருப்புகழுக்காக பல வழிபாடுகள் உண்டு.ஆனால் அம்பிகைக்காக ஒரே ஒரு வழிபாடுதான்.அதில் தவறாமல் கலந்துகொள்ளவேண்டியது அன்பர்களில் கடமை.எனவே இந்த முறை வர முடியாதவர்கள் கண்டிப்பாக அடுத்த வழிபாட்டில் கலந்து கொள்ள சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.


இந்த மாதம் நடை பெற்ற ஆடிவெள்ளி வைபவத்தை எழுதவேண்டியது எங்கள் கடமை.அஹோபிலமடம் கல்யாண வீடாகவே காட்சி அளித்தது.பல மகளிர் சம்ப்ரதாய உடையில் காட்சியளித்தார்கள் .அவர்கள் சந்தனம் ,குங்குமம்,பல வண்ண வளையல்களுடன் வரவேற்கப்பட்டனர்.லலிதசஹஸ்ரநம நாமாவளி அர்ச்சனையுடன் தொடங்கிய நிகழ்ச்சி துர்கா சந்திரகலா ஸ்துதி ,அபிராமி அந்தாதி ,பதிகம் பாடல் வழிபாட்டுடன் அன்பர்களை அம்பாள் சன்னதிக்கே அழைத்துச்சென்றது .அம்பாளிடம் வரம் வேண்டி வந்தவர்கள்கூட அதை மறந்து அம்பாளுடன் ஒன்றினார்கள் என்பதே உண்மை.பாக்யசாலிகள். அன்பர்கள் தாம் அனுபவித்ததை எப்பொழுதும் நினை கூர்வார்களாக.

some photos for you:









No comments:

Post a Comment