Tuesday, 5 December 2017

சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்... 2


சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்...  2

                                                                                   




அன்பர்களே 

அமைப்பாளர் அன்பர் ஐயப்பனிடமிருந்து அண்மையில் வந்துள்ள செய்தி.

"அன்பர்களே 
 எல்லா அன்பர்களும் சுவாமி மலைக்கு செல்லுவதற்கான பயண ஏற்பாடுகள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பார்கள்.  கல்பாக்கம் அன்பர்கள் சுவாமி மலை வள்ளி கல்யாணத்திற்கு செல்ல  50 இருக்கைகள் கொண்ட ஒரு பஸ் ஏற்பாடு செய்துள்ளார்கள் அந்த பஸ் 9.12.2017 கலை 9 மணி அளவில் சென்னை கிண்டியிலிருந்து புறப்பட்டு தாம்பரம் கேளம்பாக்கம் வழியாக கல்பக்கம் செல்லும். அங்கு மதிய உணவிற்குப் பின் ஒரு மணி அளவில்  பாண்டி கடலூர் கங்கை கொண்ட சோழபுரம் வழியாக மாலை ஆறு மணி அளவில் சுவாமிமலை சென்றடையும். மறு மார்க்கத்தில் 10.12.2017 அன்று மாலை மூன்று மணி அளவில் சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு இரவில் சென்னை வந்தடையும். இந்த பஸ்ஸில் கொஞ்ச இடம் உள்ளது. அன்பர்கள் எவருக்கேனும் சுவாமி மலை சென்று வர இடம் தேவை எனில் அவர்கள் அடியேனை, 9444049061 கைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

திருப்புகழ் புத்தகத்தையும் வள்ளி கல்யாண புத்தகத்தையும் மறக்காமல் கொண்டு வர வேண்டும்.

குருஜி உபதேசித்துள்ள "வழிபாட்டில் நாம்   கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை " யும்  நினைவு படுத்துகிறார்.


"நமது குருஜி ஒவ்வொரு பஜனையிலும் சொல்லுவார்கள். நாம் திருப்புகழ் பாடும் போது ஏக சித்த மனதோடு முருகனையும் திருப்புகழையும் தவிர வேறு எந்த எண்ணத்தையும் மனதில் நுழைய விடக்கூடாது. திருப்புகழ் மட்டுமே பாடப் பட  வேண்டும் மற்ற சத்தம் வரவே கூடாது என்பார்கள். மற்ற நேரங்களிகளிலும் சாந்தி கீதம் முடிந்த பிறகும்  - அந்த அமைதி - அமைதியை கடைபிடிக்க வேண்டும். யாரும் பேசக்கூடாது. இது நமது குருஜி நம்மை அனுஷ்டிக்க சொன்னது. அதை செய்வோம்.
 அருணகிரி நாதர் சொல்லுவார். - விரித்த அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமோடு ஓத மகிழ்வோனே - என்று. அது போல காவடி சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை  ரெட்டியாரும், -  அருணகிரி நாவில் பழக்கம் தரு சந்தத் திருப்புகழ் முழக்கம் பல அடியார்கள் கணம் ஓதினில்    அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் - என்று.. அப்படி பாட வேண்டும் ஆறு மணி நேரம். பாடும் போது மூடிய கண்கள் மூடியபடியே இருக்க வள்ளி நாச்சியாரையும் முருகனையும் மனக்கண் முன் நிறுத்தி  நமது குழந்தைச் செல்வங்கள் அவரவர்கள் விருபப் படியே வரன்கள் அமையப்பெற்று சகல செல்வ மோக மிக்க பெருவாழ்வு வாழ , காதலாகி , கசிந்து  , கண்ணீர் மல்கி திருப்புகழ் பாட வேண்டும் அதற்கு நம்முடைய குருஜி நம் மனதில் சனித்தியமாக வீற்றிருந்து அருளுவார்."


முருகா சரணம்  முருகா சரணம்  முருகா சரணம்    

இந்த சந்தர்ப்பத்தில்   அன்பர்  தஞ்சை சேகர் மற்றொரு தளத்தில் தொடர்ந்து அளித்து வந்த கந்தர் அனுபூதி தொடர் விளக்கவுரையை 
"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்ற மஹா மந்த்ர வாக்கியத்தோடு  நிறைவு செய்தது வள்ளி கல்யாண வைபவத்துக்கு ஒரு முன்னோடி என்றே கூற வேண்டும்.

அதை   ஒரு யாக பூர்த்தியாகவே கருதுகிறோம்..அதோடு தினமும் நம்மை சுவாமிமலை வள்ளி கல்யாண வைபவத்தை நினைவு படுத்தி நம்மை தயார் நிலையில்  இருக்கச் செய்தார். "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே " என்ற நம் தாகத்தை தணிக்க குருமலைக்கு நம்மை அழைக்கும் தூண்டுகோலாகவும் அமைந்தது.

அந்த வகையில் ,அப்பாடலையும் விளக்கத்தையும்  மீண்டும் இங்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.



கந்தர் அநுபூதி பாடல் 51.
உருவாய், அருவாய், உளதாய், இலதாய், 
மருவாய், மலராய், மணியாய், ஔியாய்,
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

இறைவன் உருவாய் இருப்பான். அருவமாயும் இருப்பான். அருஉருவாயும் இருப்பான். எங்கேயும் எப்போதும். எல்லாவற்றிலும் நிறைந்திருப்பான். உரு, உருவரு, அரு என்ற மூன்று நிலைகளைக் கொண்டும் அதனை கடந்தும் உள்ளவன்.
முருகன் உதித்ததை கந்தபுராணம் கூறுகிறது: ' அருவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பு அது ஓர் மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய."

(நமக்கு உதித்தது 

உருவமாக ஏரகத்திறைவனையும் ,அருவமாக நம் குருஜியையும் ,உரு,....உருவரு, ,.......அரு  என்ற மூன்று நிலைகளிலும் இருவரையும் தரிசிக்கலாம். )

உளதாய் இலதாய் என்பதில் முருகனுடைய இருப்பு நிலையை அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார். அன்பு பாராட்டுபவர்களுக்கு அவன் இருக்கின்றான். பாராட்டாதவர்களுக்கு இல்லாதவன் போல மறைந்து கொள்கிறான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்னும் பழமொழிக்கு ஏற்ப அன்பர்களுக்கு அவன் என்றும் நீங்காத்துணையாய் இருக்கின்றான்.

(நமக்கு உதித்தது 
தொண்டராற் காணப் பெறுவோனே ... உன் அடியார்களால்
காணப்பெறும் தன்மை உடையவனே,


மிண்டராற் காணக் கிடையானே ... ஆணவம் மிக்கவர்களால்
காணக் கூடாதவனே,


 வண்டு எவ்வாறு மலர்களின்தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக்களிக்குமாறும்,. குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத்தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின்பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும்,செண்டாயுதத்தை* எறிந்தால்எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன்போராடி வெல்லுமாறும், அலைந்து திரியும் என்
மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக.)

மருவாய் மலராய்..

 மருவுதல் என்பது சேர்தல் ஆகும். மலரில் இருக்கின்ற பூந்தாது நம் மூக்குக்கு வந்து சேர்வதனால் அதற்கு மரு என்னும் பெயர் வந்தது.  

( நமக்கு உதித்தது 

குருஜி மருவாய் நம்முடன் சேர்ந்தார்.நம்மை எல்லாம் ஒன்றாய் சேர வைத்தார்.திருப்புகழ் சுகந்தத்தை நம்மிடம் சேர்த்து பரவசப்படுத்தினார்."

மருவிலும் மலரிலும் இறைவன் கலந்துள்ளதைப்போலவே மணியிலும் ஔியிலும் அவன் கலந்துள்ளான்.

எங்கும் நீக்கமற நிறைந்து அவற்றை இயக்கியும் அவை இயங்கும் பொருட்டுத் தானும் இயங்கியும் ஆன்ம முன்னேற்றத்தைச் செய்து வருகின்றான்.


(நமக்கு உதித்தது 

அவ்வாறே குருஜி நம்மை இன்றளவும் இயக்கிக் கொண்டுதான் உள்ளார்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

கரு என்றால் மூலப்பொருள்; வித்தானவன் இறைவன். எல்லாவற்றுக்கும் மூலமாய் முளைத்தவன். உயிருக்கு உயிராய் விளங்குபவன்..
ஆன்மாக்களுக்கு கருவைத் தந்து , அதில் உயிர் பொருந்தும்படிச் செய்கின்றான். எந்த உயிர் எந்த கருவில் சேர வேண்டுமோ அவற்றில் தானே கலந்து அவனே கருவாகவும் , உயிராகவும் விளங்குகின்றான். அவன் கருவாய் , உயிராய் ஒருமுறை இருந்து விட்டு ஒதுங்கிக் கொள்வதில்லை ..மாறாக அந்த கருவோடும் உயிரோடும் இருந்து , கலந்து இருந்து , பல பிறவிகளை எடுக்க வைத்து , அதன் குறிக்கோளை உணரவைத்து,  கதியாக உள்ள முக்தி நிலையை அடையும் வரை துணையாக இருக்கின்றான். அதன் பின்னரும் உடன் இருக்கின்றான்.

( நமக்கு உதித்தது 

குருஜி கரு. நாம் உயிர். நம்மைப் பொறுத்தவரையில் குருஜி இன்றும் நம் இதயத்தில் பிரகாசிக்கிறார்.

விதி  என்றால் வழி எனவும் பொருள் படும். இறைவனை நாடுவதற்கு வழியை அவன்தான் நம்முள் செலுத்த வேண்டும்.  வழி, வழி பாட்டு முறை, வழிபாட்டின் குறிக்கோள் யாவுமே கந்தனாக இருக்கின்றான்.

( நமக்கு உதித்தது 

குருஜி நமக்கு வழிகாட்டியாகவும்,இறைவனை நாடுவதற்கு வழியை நம்முள்  செலுத்தியும்,   வழி, வழி பாட்டு முறை, வழிபாட்டின் குறிக்கோள் யாவற்றையும் நமக்கு உணர்த்தி,நம்மை செம்மைப் படுத்தி யும்  கந்தனாகஎன்றும் அருள் பாலிக்கிறார்.


ஆடும் பரிவேல் அணி சேவல்  அதாவது வேலும் மயிலும் துணை என்று அநுபூதி பாடல் ஆரம்பமானது..

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று  அநுபூதி பாடல்  முடிகிறது.

இரண்டுமே மஹா மந்திர வாக்கியங்கள். 

கு -- அந்தகாரம், அஹங்காரம், அஞ்ஞானம் ஆகிய இருளை
ரு  -- அழிப்பவன். இருளை அழிக்க ஔி ஏற்றி வைப்பவர் குருவே. குரு என்றாலே ஞான போதகன். ஞான ஆசிரியன். அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஔியைத் தருபவன்.

குருவாய் வருவாய் அருள்வாய் என்கிறார்..முருகன் குருவாய் வந்தாலும் , அவன் அருள் இருந்தால்தான் அதனை உணரமுடியும்..
அருளவேண்டும்  என்ற தாகம் அன்பர்களுக்கு வேண்டும். 

அருணகிரிநாதர் உபதேசம் பெற்று , அநுபூதியை பெற்றவராய் இருந்த போதிலும் இந்தப் பாடலில் குருவாய் வர வேண்டும் என்று முருகனை ஏன் கேட்கின்றார். அதற்கு காரணம், இந்த வேண்டுகோளை அவர் தமக்காக செய்து கொள்ளவில்லை. தாம் பெற்ற அநுபூதி நிலையை மற்றவர்களும் பெற வேண்டும் என்பது அவரது கருணை உள்ளத்தின் விருப்பமாகும். நமக்காகவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் எனத் தோன்றுகிறது.

அந்த அருணகிரிநாதரின் உள்ளத்திற்கு நன்றி செலுத்த வேண்டும்.  எவ்வாறு செலுத்துவது அவர் கூறிய நெறி முறைகளை பின்பற்றி அநுபூதி பாடல்களை பாடிக் கொண்டே இருப்பது ஒன்றுதான் நம்மால் செய்யக்கூடிய கைம்மாறாகும். 

நமது குருஜி அவர்கள் இசைவழி பாடு என்ற வழி முறையை நமக்கெல்லாம் முருகனின் ஆணையால், அருணகிரிநாதரின் ஆசியால் வழங்கி உள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக வள்ளிக் கல்யாணம் என்ற பத்ததியை திருப்புகழ் பாடல்கள் மூலமாக இசையோடு இசைந்து பாடும் வழிமுறையையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

அந்த திருமணத்தை பழநியிலே, திருச்செந்தூரிலே, திருத்தணியிலே முருகன் நடத்திக்கொண்டான்.தற்போதுசுவாமிமலையில் .

(நமக்கு உதித்தது 

தந்தைக்கு உபதேசம் செய்த திருத்தலமான குருமலையில் அருள்பாலிக்கும் சற்குரு  பெருமானை 

"குருவாய் வருவாய் அருள்வாய்" என்று வள்ளி கல்யாணவைபத்தில் இறைஞ்சுவோம்.அருள் பெறுவோம்.    

ஏரகத்து இறைவன் பாடல் ஒன்றே இசை வடிவில் கேட்போம். 


                                                                                                                                                                             

                                                  முருகா சரணம்    

Sunday, 3 December 2017

புதிய வரிசை எண் 495 வழிபாடு புத்தக எண் வரிசை 200


குருமஹிமை   இசை  புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள்  476-503
 புதிய வரிசை எண்  495   வழிபாடு புத்தக எண்  வரிசை  200

"தூதாளரோடு " என்று தொடங்கும் பாடல் 


                                                             பாடலும் பொருளும் காண குறியீடு

                                         http://thiruppugazhamirutham.blogspot.in/2013/03/200.html


                                              விராலிமலை திருத்தலம் பற்றிய தகவல் 

                                                             http://temple.dinamalar.com/New.php?id=658

                                                                                     பாடல் இசையுடன் 

                                                                      17.10.2010 விஜய தசமி வழிபாடு 


                                                                                                           
                                              https://www.youtube.com/watch?v=e7gEPfctsp0&feature=youtu.be
                                    
                                                     விராலிமலை படிவிழா 


                                                                                                                                                             

                                                                       Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                                                https://www.youtube.com/watch?v=8revqyBck0s
                              
                                                              முருகா சரணம் 

Thursday, 30 November 2017

அபிராமி அந்தாதி - 25



                                                                   அபிராமி  அந்தாதி - 25
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
"பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்"..
உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.

உலகத்தோர் இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் அடுத்த பிறப்பில் தமது தகுதியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்..இதற்கெனவே தான தர்மங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்..ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடும் போது இப்பிறப்பின் எதிர்காலநன்மைகளுக்காக வேண்டுகின்றனர்.. இனி எனக்கு பிறவி கிடையாது என்று முழங்கும் அபிராமிப் பட்டர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். உன் திருவடியைப் பற்றியிருக்கக் கூடிய உனது அடியார்களைப் பின் தொடர்ந்து அவர்கட்கு வேண்டிய திருப்பணிகளை நான் செய்து வருகிறேன். எனவே எனக்கு

இனிமேல் பிறவி கிடையாது.. இத்திருப்பணிகளை நான் மேற்கொள்ள வேண்டிய புண்ணியம் எனக்கு எங்ஙனம் கிடைத்தது தெரியுமா? நான் முற்பிறப்பில் பல தவங்களை இயற்றி இவ்வரத்தினைப் பெற்றேன்.

பொருட்செல்வம் மிகப் பெற்றோர், தாம் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இந்நிலையை அடைந்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்.. ஆன்மீக வழியில், உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர் யாரும் தமது முற்பிறவிப் பயனால் இது எமக்குக் கிட்டியது என்றுமுழங்கியதில்லை.. ஆனால் அபிராமிப் பட்டர் மிக உறுதியாக தனது கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். மூன்று உண்மைகள்.. ஒன்று. தான் முற்பிறப்பில் செய்த தவங்கள். இரண்டு. அத்தவங்கள் வாயிலாக இப்பிறப்பில் அபிராமி அன்னையின் அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு. மூன்று. அத்திருத்தொண்டின் வாயிலாக இப்பிறப்புத் துன்பத்தை நீக்குதல். வேறெந்த பிறப்பும் ஏற்படாத உன்னத நிலையை அடைதல். இம்மூன்று உண்மைகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது அன்னையின் அடியாருக்குச் செய்யும் திருத்தொண்டுதான்.
"முதல் மூவருக்கும் அன்னே"

அன்னை அபிராமியே மும்மூர்த்திகளைப் பெற்றெடுத்தாள் என்பதை இன்னுமொருமுறை தனது பாடலின் வாயிலாகக் கூறுகிறார்.


"உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே" 

எதுவும் தேவையில்லை அன்னை அபிராமியை விடுத்து... என்னும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் அபிராமிப் பட்டர் அன்னை அபிராமி உலகத்தாருக்குக் கிடைத்த ஒரு அரிய மருந்து என்கிறார். அபிராமியை எண்ணித் துதித்தால் எந்தவித காயமும் ஆறிப்போகும். எல்லாவித நல்நிலையும் தேடிவரும் என்பதே நிச்சயமான உண்மை. உலகத்தார் செய்த புண்ணியம் அவ்வருமருந்தினைப் பெற்றிருப்பது.

"என்னே.?" 

உனது பெருமைகளையெல்லாம் எங்ஙனம் உரைப்பேன்...?

 "இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே"

இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.

 அன்னையை மறப்பது அபிராமிப் பட்டரால் இயலுமா? எக்கணமும் உன்னை மறவாது தொழுவேன் என்று பறைகிறாரே.... துன்பத்தில் இறைவனை நினைப்பது, இன்பத்தில் இறைவனை மறப்பது .. இதுதான் உலகத்தார் வாடிக்கை.. எனவேதான் குந்தி தேவி, கண்ணனிடம் தனக்கு எப்பொழுதும் துன்பங்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டினாள். அத்துன்பங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தால் 

 இறைவனை என்றும் மறவாது தேடிக்கொண்டே இருப்போம் என்பது அவரது கருத்து..

ஆனால் அபிராமிப் பட்டரால் அன்னையை மறப்பது முடியுமா? என்றும் மறப்பதில்லை... ஆயினும் தொழுதல் என்பது வேறு... மறவாதிருத்தல்
என்பது வேறு.. அன்னையை மறவாது நினைப்பது மட்டுமே புண்ணியம் தரும் செயலல்ல... நாத்திக அன்பர்கள் தினம் ஒருமுறையாவது "இறைவன் இல்லை" என்று சொல்லி இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இறைவனின் திருவருள் கிட்டுமா? எனவே தொழுதல் முக்கியம்.. இனிமேல், எக்கணமும் உன்னைத் தொழுது கொண்டேயிருப்பேன் 
அபிராமி சரணம் சரணம்!!


                                                          பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                                 

                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 

                                                               https://youtu.be/bzwYJnC3Ur4



                                                                             அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                                           

                                                               U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 


                                                                https://youtu.be/nz_5v1oKEJY


                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                        முருகா சரணம் 

Sunday, 26 November 2017

சுப்ரமண்ய புஜங்கத்தின் 11 வது ஸ்லோகம்


                                                         சுப்ரமண்ய புஜங்கத்தின் 11 வது ஸ்லோகம் 

                                         முருகப் பெருமானுடைய திருமார்பைப் பற்றிய  வர்ணனை 
                                                                                                     


புளிந்தேச கன்யா கநாபோக துங்க

ஸ்தனாலிங்கநாஸக்த காச்மீர ராகம் |

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் ||

அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

 முருகப் பெருமானுடைய மார்பு செக்கச் செவேல்னு இருக்காம். பரந்து விரிந்த அந்த மார்புகள், சிகப்பா இருக்கு. அதுக்கு ஆசார்யாள் ரெண்டு காரணங்கள் சொல்றார். 

‘ஹே தாரகாரே’’ தாரகாசுரனுக்கு சத்ருவான ஸுப்ரமண்யப் பெருமானே!

 ‘புளிந்தேச கன்யா கநாபோக துங்க ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீர ராகம்’ 

புளிந்தன் என்ற வேடனுடைய பெண்ணான வள்ளியம்மையினுடைய கடினமான பெரிய ஸ்தனங்களை ஆலிங்கனம் செய்து கொள்ளும் பொழுது, அந்த ஸ்தனத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ள குங்குமம் உன்னுடைய மார்பிலும் வந்துட்டதனால சிகப்பா இருக்கு, அப்படின்னு ஒரு காரணம்.

இன்னொரு காரணம், ‘ஸர்வதா ஸ்வபக்தாவனே’, 

எப்பொழுதும் உன்னுடைய பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்று உன் மனசுக்குள்ள எப்பவும் 

‘ஸானுராகம்’, 

அந்த அனுராகம், அந்த ஆசை இருந்துண்டே இருக்கிறதனால, ‘ராகம்’ ங்கிற ஸமஸ்கிருத வார்த்தைக்கு சிகப்புனு ஒரு அர்த்தம். உள்ளிருக்கக் கூடிய அந்த கருணை வெளில சிகப்பா தெரியறது.

 ‘தவ உர:’, உன்னுடைய மார்பு செக்கச் செவேல்னு ஆயிடுத்து. கருணையினால சிவந்திடுத்து உன்னுடைய மார்பு. 

அதை ‘அஹம் நமஸ்யாமி’, நான் நமஸ்கரிக்கிறேன்.

ஹ்ருதயம் எங்கு உள்ளது?
நெஞ்சம் எங்கு உள்ளது?
மார்பு எங்கு உள்ளது?  இதயம் எங்கு உள்ளது?
உள்ளம் எங்கு உள்ளது? அனைத்துமே ஒன்றா? 
இரத்தத்தை சுதப்படுத்தி உடல் முழுவதும் அனுப்பும் ரத்தத்தாலும் சதையாலும் ஆன உறுப்புதான் இதயமா?   இதயக்குகை என்கிறார்களே அது எங்கு உள்ளது..

சுப்ரமண்ய புஜங்கத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில் "மே ஹ்ருதி " என்னுடைய ஹருதயத்தில் என்கிறார்.

கவிதை வடிவில் பார்ப்போம் 

 திருமார்பின் சிறப்பு

வேடவேந்தன் திருமகள் வள்ளி
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.


(பலன்        ஆபத்து விலகும்)
  

குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்.
       

 (குறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு தனங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் முருகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதோ? அல்லது, தன் அன்பர் குழாம் மீது அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினால் மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ? அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன்.)


துங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்க
ள் 
.
அநுராகம் .....காதல். காதலின் நிறம் செம்மை என்பது கவி மரபு. 

சேத்தல் - சிவத்தல்.

 (நன்றி....   கௌமாரம் இணைய தளம்)

அருணகிரிநாதர்  அனுபவித்து நமக்கு அளித்தது 

 நெஞ்சக் கன கல்லு என கந்தரநுபூதியை ஆரம்பிக்கிறார்.

இதயம் தனிலிருந்து க்ருபையாகி என்கிறார்.

உள்ளக்கண் நோக்க அருள்வாயே என்கிறார்...

நான் என்று மார் தட்டும் பெருமாளே..

வஞ்சியை முனிந்த கொங்கை மென்குற மடந்தை செங்கை வந்தழகுடன் கலந்த மணி மார்பா என்கிறார்...

 செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி …… புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு …… மபிராம

இந்த்ர   கோபமு மரகத வடிவமு மிந்த்ர
 சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய …… பெருமாளே
என்கிறார். 

முருகா சரணம் 




Friday, 24 November 2017

சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர் 1

சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்   1


                                                                                                         




அடுத்து வள்ளி கல்யாண அமைப்பாளர் அருளாளர் அய்யப்பன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தியை அன்பர்களின்     கவனத்திற்கு  அளிக்கிறோம்.




"அன்பர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் சுவாமி மலையில் செவ்வனே  நடந்து பூரண நிலையில் உள்ளன. எவ்வளவு அன்பர்கள் வந்தாலும் நமது ஸ்ரீசுவாமிநாத சுவாமி நம்மை சுகப்படவே வைப்பார். இது அவனுடைய திருக்கல்யாணம்.

வரும் அன்பர்களின் வசதிக்காக பாட்ஜ் (BADGE) முறை இப்போது அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது உணவு கூடத்தில் ஓர் ஒழுங்கு முறை அவசியம் எனும் கருத்தில் உண்டாக்கப் பட்ட ஒன்று ஆகையால் பகவான் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை முன் கூட்டியே தெரிந்தால் தான் அவர்களைக்கான பேட்ஜ் (BADGE) தயார் நிலையில் வைக்க உதவும்.  

ஆகையால் இது வரை பெயர் தராத அன்பர்கள் நமது கூகில் ட்ரைவ் சீட்டிலோ , நேரிலோ அல்லது போன் , இ மெயில் மூலமாகவோ எங்கிருந்து எத்தனை பேர் வருகிறோம் என்பதை உடனே தெரிவித்து விட வேண்டுகிறேன். இவ்வளவுக்கும் பொருள் வேண்டுமே. அதையும் அவன் உங்களிடம் சொன்னது போல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்."

Those who wish to send their donations thro bank may please transfer the sum thro' NEFT to the following account.

P. C. Gopi,
Account number : 10912124541
STATE BANK OF INDIA
KALPAKKAM BRANCH
IFS : SBIN0002219


 கீழ் காணும் கூகிள் ட்ரைவ் எக்ஸெல் சீட்டில் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை  , நன்கொடை அனுப்பிய தொகை போன்றவற்றை எல்லா அன்பர்களும்,  பார்த்து , தாங்கள் விரும்பியதை அந்த அந்த சிஸ்ஸில் பதிவு செய்ய வேண்டுகிறேன். "

கூகிள் ட்ரைவ் எக்ஸெல்  ஷீட் 

Link 
  


Sheet  contains  3  Divisions


1.Details of donation paid/committed


Anbars can register their donations paid  /to be paid


2.Details of group/individuals participating in the Kalyana Vaibavam in numbers 


3.Details of accommodation details and contact person/Phone Numbers etc



We request all the Anbars  to make use of the  Sheet  and register the required  infomation.


தொடர்புக்கு 

Thiru  P.Aiyappan         cell   919444049061
E Mail Id                         p.ayappan@gmail.com




                                            முருகா சரணம் 






Wednesday, 22 November 2017

வள்ளிகல்யாணம் சுவாமிமலையில்



                                                              வள்ளிகல்யாணம் சுவாமிமலையில் 

                                                                  

                                                                                                                                                                              
இறையருளாலும் குருவருளாலும்,திருவருளாலும் அடுத்த வள்ளிகல்யாண வைபவம் அறுபடை வீடு சுவாமிமலையில் வரும்  டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் திருப்புகழ் அன்பர்களால் வெகு சிறப்பாக நடை பெற  உள்ளது என்பதை மீண்டும்நினைவூட்டுகிறோம்.இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் அன்பர்கள் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதில் ஐயமில்லை.

திருப்புகழ் தொண்டர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பில் மட்டுமே நடை பெற உள்ள இந்த வைபவத்துக்கு அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து  குடும்பத்துடன் பெருமளவில் கலந்து கொண்டு  வள்ளி தெய்வயானை சமேத முருகப்  பெருமானின் பேரருள் பெற வேண்டுகிறோம்.


அழைப்பிதழ் 


                                                                                                   



 இந்த சந்தர்ப்ப பத்தில்,அருணகிரியாரின் நவமணிகளாகத் திகழும் ஒன்பது படைப்புகளிலிருந்து எடுத்து தொகுக்கப் பட்டுள்ள வள்ளி கல்யாண பாடல்களின்  (TEXT) தொகுப்பை அன்பர்களின் பயனுக்காக வழங்குகிறோம்.

புத்தகத்தொகுப்பின் முன்னுரையில் வள்ளி கல்யாண வைபவம் சிறப்பை போற்றியும் எப்படி மற்ற சம்பிரதாய பந்ததிகள்,பாடல்களிலிருந்து மாறுபட்டு தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் திருமணத்துக்கு தமிழ்ப் பாடல்களைக் கொண்டே நிகழ்த்த வேண்டும் என்ற அன்பர்களின் எண்ணத்தையும்,ஆசையையும் அற்புதமாக விளக்கியுள்ளார்கள்.

பாடல்களை பார்ப்போம்.

Kindly  Click and you can view all 40 Pages of the Book

New Doc 2017-11-21 (5).pdf


மற்றும் குருஜி 2004ம்  ஆண்டு பழனியில் நிகழ்த்திய வள்ளி கல்யாண வைபவத்தையும் அளிக்கிறோம்.



                                                             U Tube Link for ANDROID  and   I PAD PHONE 
                                               https://youtu.be/XcniXigDaJk

                                                முருகா சரணம்