Friday, 25 October 2013

AKANDA THIRUPPUGAZH ISAI VAZHIPAADU AT USA ON 26th OCTOBER 2013 AT USA

MURUGA SARANAM

ANBARGALE,


OUR US THIRUPPUGAZH ANBAR HAS SEND THIS FORWARDED MESSAGE.

THEY ARE GOING TO HAVE AKANDA THRIPPUGAZH ISAI VAZHIPAADU AT USA TOMORROW 26TH.
LET US THANK OUR BANGALORE ANBARGAL FOR THEIR LEAD.

LET ALL GO THERE ( MENTALLY) AND PARTICIPATE IN THEIR VENTURE AND RECEIVE OUR GURUJI'S BLESSINGS


AYAPPAN
MURUGA SARANAM


முருகன் துணை! / Murugan Thunai! 


Dear Muruga bhakthaas
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத 
  நாடண்டி நமசிவாய வரையேறி 
நாவின்ப ரசம தான ஆனந்த அருவி பாய 
  நாதங்கள்  ஒடுகு லாவி விளையாடி 
ஊனங்கள் உயிர்கள் மோக நானென்ப தறிவி லாமல் 
 ஒமங்கி உருவ மாகி இருவோரும் 
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி 
  லோகங்கள் வலம தாட அருள்தாராய் 
gnAnangkoL poRigaL kUdi vAnindhu kadhiri lAdha
      nAdaNdi nama sivAya ...... varaiyERi
 nAvinba rasama dhAna Anandha aruvi pAya
      nAdhanga Loduku lAvi ...... viLaiyAdi
 Unanga LuyirgaL mOga nAnenba dhaRivi lAmal
      Omangi uruva mAgi ...... iruvOrum
 Orandha maruvi nyAna mAvinjai mudhugi nERi
      lOkangaL valama dhAda ...... aruLthAray


10/26/13, Saturday : 8:45AM start Akanda Thiruppugazh Bhajan
1522 Penrith Pl
Schaumburg
IL - 60194
847-452-1822
630-363-5030

Friday, 18 October 2013

"Thiruppugazh Anbargal " History

The short history of  our Movement finds place in " Thiruppugazh Isai Vazhipadu" book.Recently.our Delhi Anbar Arulaalar Ganesh Sundaram has taken efforts to meet  such involved and  devoted Anbars and obtained their experience in the growth of our Movement, their relationship with our Guruji   and so on  and produced a short Documentary Film with  the clippings of old Vazhipaadu  to present.on the occasion of  our Golden Jublee Celebration held at Bangalore during July 2008 .and the film was  shown to the Anbars  participated and   the same was highly appreciated.

It was our ambition to present the same in our Blog. Anbar Shri Gnesh Sundaram has kindly consented to our request. The film has been converted into Video  and the same is attached. We request all our anbars to post their appreciation  and comments to Shri. Ganesh through our Blog .

We like to convey our sincere thanksto him and expect many more from him.



நமது அமைப்பின் வரலாறு  திருப்புகழ் இசை வழிபாடு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ள பல பெருந்தகைகளைப் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களை பல அன்பர்கள் நேரில் பார்த்ததும் இல்லை . ஏன் நம் குருஜியையே பலர் நேரில் பார்த்ததில்லை.வழிபாடுகளிலும் அன்பர்களை சந்திக்க முடிவதில்லை, பேச முடிவதில்லை.
 
அந்த குறையை நீக்க டெல்லி அன்பர்  அருளாளர் கணேஷ் சுந்தரம் அரும் பாடுபட்டு பல பழைய தகவல்களை சேகரித்தது மட்டுமின்றி, பலரை நேரில் பேட்டி கண்டு , தொகுத்து ஒரு குறும்படமே தயாரித்து ,அதை பெங்களூரில் நடை பெற்ற நம் அமைப்பின் பொன் விழா நிகழ்ச்சியின் பொது ஒளி பரப்பினார். அது அன்பர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது.
 
நம் வேண்டுதலுக்கு செவிசாய்த்து , நம் Blog ல் வெளியிட மனமுவந்து அளித்துள்ளார்கள்.வெளியிடுவதில் மிக பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
 
அன்பர்கள் தங்களின் மேலான கருத்துக்களை படைப்பாளிக்கு நம் BLOG மூலம் வழங்க வேண்டுகிறோம்.


DISCOURSE ON THIRUPPUGAZH SONGS

Discourse on Thiruppugazh Songs  
by 
Anbar Thiru GOPALKRISHNAN 
on 
20.10.2013
Time: 

5.00 PM to 7.00 PM SHARP
Venue:

Subramanyaswamy  Temple,
Plot no 13 ,
Opp. to BEST BUS DEPOT, Secter-29, NERUL (east),
NAVI MUMBAI- 400706
ALL ANBARS ARE REQESTED TO ATTEND IN LARGE NUMBERS

Sunday, 8 September 2013

அருணகிரிநாதர் நினைவு நாள் 15.8.2013

செம்பூர் முருகன் ஆலய முகப்பில் அருணகிரியாரின் ஆசி...


விழா வழக்கம்போல் 108 பாடல்களுடன் சிறப்பாக நடந்தேறியது. மும்பை அன்பர்களுடன் புனே அன்பர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். 

அருளாளர் திரு கோபாலகிருஷ்ணன் கைவண்ணத்தில் பெருமான் ஆண்டுதோறும் பல கோலங்களில் வினோத பெருமானாக காட்சி அளித்து அருள் பாலித்ததை முன்னரே புகைப்படங்களில் கண்டுகளித்துள்ளனர்.

இந்த ஆண்டு விசித்ரம் விழா ஆரம்பத்தில் பழனி ஆண்டி கோலத்தில் எழுந்தருளிய பெருமான்...

சிறிது நேரத்தில் ராஜ அலங்காரத்தில் குடி கொண்டு அன்பர்களை பரவச படுத்தினான்...


மற்றுமொரு நிகழ்ச்சி நெருல் அருளாளர் திரு ராமகிருஷ்ணன் ஒரு பொறியியல் வல்லுநர், பஜனை பந்ததிகளிலும் கரைகண்டவர். குலதெய்வமான முருக பெருமானின் அருளால் முருக பக்தியில் ஈர்க்கப்பட்டு பல ஆராய்சிகளுக்கு பின் இதுவரை பல நூல்களை படைத்தது வெளியிட்டுள்ளார். அவற்றில்.. 
1. கந்தரனுபூதி விரிவுரை 
2. கந்தரந்தாதி விரிவுரை
3. கந்தரலங்காரம் விரிவுரை

...போன்ற நூல்களும் அடக்கம்.

தம் படைப்புக்களை இசை வழிபாடு நிகழ்சிகளில் பெருமானின் பாத கமலங்களில் சமர்ப்பித்து பின், நம் குருவின் ஆசியுடன்தான் வெளியிடுவதை தன் கடமையாக கருதி செயல்படுகின்றார்.

அவ்வண்ணம் இந்த நினைவு விழாவில் "கந்தர் அலங்காரம் விளக்கவுரை'" நூலை வெளியிட்டார். சில அன்பர்களுக்கும் வழங்கினார். அவரது படைப்புகளை வரும் காலத்திலும் எதிர் பார்க்கிறோம்.

அன்பர்களின் பிரார்த்தனையுடன் விழா இனிதே முடிந்தது.






அன்பர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி...







Thursday, 22 August 2013

வள்ளிமலை ஸ்வாமிகளை திசைத் திருப்பியத் திருப்புகழ்

திருப்புகழ் ஸ்வாமி என்னும்பெயர் உடையாய்!
சேஷாத் திரிப்பெயர் மாமுநி உனக்குத்
‘திருப்புக ழேமஹா மந்திரம்’ என்று
செப்புப தேசத்தால் தீஷைசெய் தருளக்
குருப்புகழ் பெற்றந்த வேங்கட ரமணர்
கோவணங் கோல்கொண்ட கோலங்கண் டுருகும்
தருப்புக ழார்வள்ளி மாமலை ஸச்சி
தாநந்த! நீபள்ளி எழுந்தரு ளாயே!

என்று அருட்கவி ஸாதுராம் ஸ்வாமிகளால் புகழப்பட்ட வள்ளிமலை ஸ்வாமிகள் எனப்படும் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸ்வாமிகள் திருப்புகழில் ஈடுபாடு எற்படுத்திய பாடல்  வங்காரமார்பிலணி எனத்துவங்கும் பாடல். பழநியில் தங்கியிருந்த போது ஸ்வாமி வலம் வரும் சமயம் நாட்டியகாரர்கள் இந்தப் பாடலை பாடி “ சங்கோதைநாதமோடு கூடி ... வரிகளை திரும்ப திரும்ப பாடி ஆடும் சமயம் இவர் தன்னிடம் ஒரு மாற்றத்தைக் கண்டார். அன்று வரை தமிழ் தெரியாமல் இருந்தவர் தமிழைக்கற்று திருப்புகழைக்கற்று திருப்புகழ் பரவச்செய்தவர். அவரை மாற்றிய பாடலின் பொருளை இன்றைய ‘திருப்புகழ் அம்ருதம்’  blogல்ல படிக்கலாம்
http://thiruppugazhamirutham.blogspot.in/2013/08/245.html

Rajans

திருநள்ளாறு பாடல் - திருப்புகழ் அம்ருதம்

சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு ஸ்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம். திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது.  இந்த  நினைவுறுத்தும் வகையில் அருணகிரிநாதரும்  திருநள்ளாரில் பாடியப் பாடலை “பச்சை” ஈன தொடங்கியுள்ளாறோஎனத்தோன்றுகிறது.

இந்த பாடலின் பொருள்  இன்றைய 'திருப்புகழ் அம்ருதத்தின் '  இடுக்கையில் கணாலாம்

Rajans