Tuesday, 4 June 2013

சேய்த் தொண்டர்: பாம்பன் சுவாமிகள்

ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிறு அன்று மாகான் ஒடுக்கத்தூர் மடத்தில் இசை வழிபாடு ஏற்பாடு செய்தால் '12 மணிக்குள் முடித்துக் கொள்ளுங்கள். பாம்பன் சுவாமிகள் குழு வரவிருக்கிறது' எனச் சொல்லக் கேட்டிருக்கோம். 'பாம்பன் ஸ்வாமிகள்' - அவர் யார்? பெரும் பாலருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் வலயப்பட்டி கிருஷ்ணன்  எழுதியிருப்பதைப் படிக்கலாமா?

Rajans

முருகனின் தொண்டர்கள்! - 29
சேய்த் தொண்டர்: பாம்பன் சுவாமிகள்
மயூரப்ரியா

'நான் நாளைக்குப் பழநி மலைக்குச் செல்லப்போகிறேன்'' என்றார் அப்பாவு. அதைக் கேட்ட அங்கமுத்துப்பிள்ளை, ''எப்போது திரும்பி வருவீர்கள்?'' என்றார்.
''எப்போது வருவேன் என்றெல்லாம் சொல்ல முடியாது'' என்றார் அப்பாவு.
இப்படிச் சொன்ன அப்பாவு, வீட்டுக்குத் திரும்பி வராமலேயே சந்நியாசியாகப் போய்விடுவாரோ என்ற அச்சத்தில், ''இது குமரக் கடவுளின் கட்டளையோ?'' என்று வினவினார் பிள்ளையவர்கள்.
பழநிக்குச் செல்லவேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் அதிகரிக்க, ''ஆம்'' என்றார் அப்பாவு.
அப்பாவு இப்படிச் சொன்னது, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான கந்தவேளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. 'தான் உத்தரவு ஏதும் கொடுக்காதபோது, தன்னுடைய உத்தரவு என்று அவர் (அப்பாவு) எப்படிப் பொய் சொல்லலாம்? இவர் போன்ற உத்தமர்களிடம் இந்தப் பொய்த்தனம் சிறிதும் வரக்கூடாது. இதனை உடனே களைய வேண்டும்’ எனத் திருவுள்ளம் கொண்ட ஆறுமுகப் பரம்பொருள், அப்பாவுவின் கண்களுக்குப் புலப்படும்படியாக காட்சி தந்தார். தமது வலது கை ஆள்காட்டி விரலை நிமிர்த்து அசைத்து, பற்களைக் கடித்து, கண்களில் கோபப் பார்வையை வீசினார்.
''என் கட்டளை என்று ஏன் பொய் கூறினாய்?' என்று கந்தப் பரம்பொருள் கேள்வி எழுப்ப... நடுநடுங்கிப் போனார் அப்பாவு. ''எம்பெருமானே! என்னை மன்னித்துவிடுங்கள். நிலம் நீச்சு, பொன் பொருள் வேண்டி நான் பொய் கூறவில்லை. ஆன்ம லாபத்துக்காகக் கேட்டேன். பொறுத்தருள்க!'' என்று மனத்தினாலே பதிலுரைத்தார்.
''அது என்னால் முடியாதா? அந்த ஆன்ம லாபம் உனக்கு எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது தவறாமல் நானே கொடுப்பேன். இனி, நான் கூறும்வரை நீ பழநி மலைக்கு வரக்கூடாது. வரமாட்டேன் என்று சொல்!'' என்று அதட்டினார் கந்தப் பெருமான்.
''அப்படியே செய்கிறேன்'' என்று அப்பாவு கரம் கூப்பிப் பதிலுரைத்தார். அதோடு, முருகனின் திருக்காட்சி மறைந்தது. (ஆனால், அப்பாவுவின் இறுதிக் காலம் வரை பழநிக்கு வரச் சொல்லி கந்தவேளின் உத்தரவு கிடைக்கவில்லை. அதனால் அவருக்கும் பழநிக்குச் செல்லும் பாக்கியம் கிட்டவில்லை).
இப்படி, கந்தனே கோபம் கொண்டு அதட்டி, ஆட்கொண்ட அடியார் யார் தெரியுமா?
அவர்தான் அத்தியாச்சிரம சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். நாம் எல்லோரும் 'பாம்பன் சுவாமிகள்’ என்று அழைக்கிறோமே, அவரேதான்!
ராமேஸ்வரத்துக்கு தென்மேற்கில், பாம்பன் என்னும் சிற்றூரில் உள்ள சிவாலயத்தில் பணிசெய்தவர் சாத்தப்பா பிள்ளை. இவரது மனைவி செங்கமலத்து அம்மாள். இந்தத் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் பாம்பன் சுவாமிகள். குழந்தைக்குப் பெற்றோர் சூட்டிய பெயரே அப்பாவு.
இளமையில் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் கல்வி பயின்ற அப்பாவுக்கு அவ்வப்போது தெய்விகக் காட்சிகள் தெரிவதுண்டு. ஒருநாள், தன் நண்பர் களுடன் குந்துகால் என்ற இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த ஜோதிடர் ஒருவர் அப்பாவுவின் கைரேகைகளை ஆராய்ந்து பார்த்தார். ''குழந்தாய்! எதிர்காலத்தில்  நீ பெரிய ஞானியாகவும், வாக்கு வன்மை உடையவனாகவும் பிரகாசிப்பாய்'' என்று ஆசி கூறினார். அதன்பிறகு, அப்பாவுவே அதை மறந்து போனார்.
அவருக்கு வயது 13 வயது இருக்கும் போது, அந்தப் பகுதியில் உள்ள நாகநாதர் கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்தார். அங்கே கிடைத்த 'கந்த சஷ்டி கவசம்’ நூலைத் தொடர்ந்து நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, சண்முகப் பெருமானைத் தாமும் செந்தமிழ்ப் பாடல்களால் பாடித் துதிக்க வேண்டும் என்கிற உந்துதல் அவருக்கு உண்டாயிற்று.அப்படி இருக்கையில், ஒருநாள் விடியற்காலையில் அவரது உதடுகள் 'கங்கையைச் சடையிற் பரித்து’ என்னும் மங்கல வரியை உச்சரிக்க, தொடர்ந்து ஒரு பாட லைப் பாடி முடித்தார்.
''பெருமானே! இந்தப் பாடலை ஏற்றருள வேண்டும். நான் பாடும் ஒவ்வொரு பதிகத்தையும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிப்பேனாக. அவரது வாக்குத் திறம் எனக்கும் வருமாறு அருள வேண்டும்'' என்று கந்தவேளிடம் வேண்டினார்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் பாடும் வழக்கத்தை மேற்கொண் டார் அப்பாவு. ராமேஸ்வரம் கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்த சேதுமாதவ ஐயர் என்ற முருகனடியார் அப்பாவுவின் பாடல்களின் அருமை பெருமைகளைப் படித்து உணர்ந்தார். அதன் தொடர்ச்சியாக, அவருக்கு அக்னி தீர்த்தக் கரையில் விஜயதசமி அன்று ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அத்துடன், சம்ஸ்கிருத நூல்களையும் கற்கும்படி அறிவுறுத்தி னார். அதன்படி ஜப, தப அனுஷ்டானங்களைத் தொடர்ந்தார் அப்பாவு.
ஒருநாள், இவரது கனவில் சிவனடியார் ஒருவர் தோன்றினார். ஓரிடத்தில் வாழை இலை விரித்து, அதில் அன்னமும் பாலும் இட்டுப் பிசைந்து இவரை உண்ணும்படி கூறினார். கந்தவேளே சிவனடியாராக வந்து பாற் சோறு பிசைந்து உண்ணச் செய்த இந்த அருள் அனுபவத்தின் விளைவாக, அப்பாவுவின் கவிபாடும் ஆற்றல் பன்மடங்கு அதிகரித்தது. வேதம், ஆகமம், உபநிடதம், இதிகாசம், புராணம், நிகண்டு என்று அனைத்தையும் பயின்றதால், அவரது ஞான ஆற்றல் பெருகியது.
இந்நிலையில் பெற்றோரின் விருப்பப்படி, 1878-ல் காளிமுத்தம்மாள் எனும் நங்கையை மணந்தார் அப்பாவு. இந்தத் தம்பதிக்கு சிவஞானாம்பாள், முருகையன், குமரகுருதாசர் என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
அப்பாவு வியாபாரப் பணிகளை கவனித்துக் வந்தாலும், அவர் மனம் என்னவோ முருக சிந்தனையிலும் ஞானத் தேடலிலுமே சென்றது. துறவு நோக்கமும் விரக்தி மனப்பான்மையும் மேலோங்கி இருந்த தால், பழநிக்குச் சென்று துறவு நிலை மேற்கொள்ள விரும்பினார். அப்போதுதான் பழநி முருகன் அவரை தடுத்தாட் கொண்டார். இனி, அவரை பாம்பன் சுவாமிகள் என்றே நாமும் அழைப்போம்.
ஒருநாள், தமது தென்னந்தோப்பு வழியாகப் பாம்பன் சுவாமிகள் சென்றபோது, முள் ஒன்று இவரது காலில் குத்தி ரத்தம் வழிந்தது. வலி தாங்க முடியாமல் கண்களில் நீர் கசிந்து வருந்தினார். ''இந்த  முள் குத்திய வலியையே தாங்க முடியவில்லை என்றால், உயிர் விடும்போது இந்த உடல் எத்தனை துன்பம் தருமோ பெருமானே!'' என்று கண்ணீர்விட்டார்.
பாம்பன் சுவாமிகள் தமது காலில் பாதக் குறடு (காலணி) இல்லாமல் சென்றதால்தான் முள் குத்தியது. அதனால் அவர் அடைந்த வேதனையை உணர்ந்த கந்தவேள், அன்றிரவு அந்தப் பகுதியைச் சேர்ந்த தச்சர் ஒருவரின் கனவில் தோன்றி, ''என் அன்பனான அப்பாவுக்குப் பாதக் குறடு செய்து கொடு'' என்று கட்டளையிட்டார். தச்சரும் அவ்வாறே பாதக் குறடு செய்து அளித்ததுடன், கந்தவேள் தனக்கு இட்ட உத்தரவையும் சொன்னார். அதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனார் பாம்பன் சுவாமிகள்.
ஒருமுறை, தமக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து விடுபட, 'சண்முக கவசம்’ என்னும் அற்புதமான ஸ்தோத்திர நூலைப் பாடியருளினார் பாம்பன் சுவாமிகள். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 ஆக 'அ’கரம் முதல் 'ன’கரம் இறுதியாக 30 பாடல்கள் அமைந்த இந்த அற்புதக் கவசத்தின் மகிமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. 1891-ஆம் ஆண்டில் சுவாமிகள் பாடியதுதான் இந்த அற்புத ஸ்தோத்திரம். அதே ஆண்டில், திருவனந்தபுரம் நா.சுப்ரமண்ய பிள்ளை என்பவரின் வேண்டுகோளின்படி 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்’ என்னும் அமுதமயமான வண்ணப் பாமாலை யையும் கந்தப்பெருமானுக்குச் சூட்டினார் சுவாமிகள்.
இந்நிலையில் ஒருநாள், அந்தப் பகுதியில் உள்ள பிறப்பன் வலசை என்ற ஊரில், மயானத்தில் 35 நாட்கள் சதுரக் குழியில் இருந்தபடி தவம் செய்தார். அந்த தவத்தின்போது, 6-வது நாள் அவரது மனம் அடங்கியது. 7-வது நாள் இரு முனிவர்களும் (அகத்தியர் மற்றும் அருணகிரி நாதர்), ஓர் இளைஞரும் இவர் முன்னே தோன்றினர். ரகசிய மொழியில் இவருக்கு உபதேசம் செய்தார் இளைஞனாக வந்த முருகன். 35-வது நாள் இவர் தலைக்கு மேல் பேரொலி உண்டாயிற்று. ஓர் ஒளியும் பரவியது. உடனே, உச்சி மேல் கைகுவித்து அந்த இடத்தை மும்முறை வலம் வந்து வணங்கி எழுந்தார்.
இந்த நிஷ்டையில் இருந்தபோது கிடைத்த உபதேச நிதியே பின்னர் 'தகராலய ரகசியம்’ என்னும் நூலாக சுவாமிகளால் பாடப்பெற்றது (1894-ஆம் ஆண்டு நடந்த இந்த அற்புத நிகழ்வுக்குப் பிறகு, 1969-ல் சுவாமிகள் தவமிருந்த இந்த இடம் முருகனருளால் அடியார் களுக்குத் தெரியவந்து, நினைவுக் கோயில் கட்டும் பணி தொடங்கி, 1971-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது).
இதன் பிறகு ஸ்தல யாத்திரை மேற்கொண்டார் பாம்பன் சுவாமிகள். அவ்வாறு பல தலங்களைத் தரிசித்துப் பாடி வருகையில், காஞ்சிபுரத்தில் உள்ள பல ஆலயங்களை வழிபட்டார். ஓர் இளைஞர் இவரை நோக்கி, ''குமரக்கோட்டம் தரிசித்தீரா?'' என்று வினவினார். ''அது எங்கே உள்ள கோயில்?'' என்று சுவாமிகள் கேட்க... ''என் பின்னே வருக!'' என்று கூறி, அந்தக் கோயிலுக்கு அழைத்துச்சென்ற இளைஞர் திடீரென்று மறைந்தார். கந்தக் கடவுளே இளைஞராக வந்து தமக்கு வழிகாட்டினார் என்பதை அறிந்த சுவாமிகள், அந்தக் கோயிலையும் தரிசித்துப் பாடி மகிழந்தார்.
இவர் காசி யாத்திரை மேற்கொண்டபோது, வெள்ளை ஆடையுடன் சென்ற சுவாமிகளுக் குக் காசி குமரகுருபர சுவாமிகள் மடலாயத்தில் காவியுடை அளிக்கப்பெற்றது. கயா, ஹரித்வார், அயோத்தி, பிருந்தாவனம், மதுரா முதலிய பல தலங்களைத் தரிசித்தார். பிறகு, சென்னை திரும்பிய சுவாமிகள், கந்தபுராணத்தை 'ஸ்ரீமத் குமார சுவாமியம்’ என்னும் காவியமாகப் பாடி முடித்தார்.
1923-ஆம் ஆண்டு, ஒருநாள் சென்னை தம்பு செட்டித் தெருவில் சுவாமிகள் வரும்போது ஒரு குதிரை வண்டிச் சக்கரம் இவரது இடது கணுக்கால் மீது ஏறி, கால் எலும்பு முறிந்துவிட்டது. சென்னை பொது மருத்துவ மனையில் இவரைச் சேர்த்தார்கள். கால் எலும்பு இணைவது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சுவாமிகளின் சீடரான சுப்ரமண்ய தாசர் என்பவர் அவரது கால் குணமாக வேண்டி சண்முக கவச பாராயணத்தை திடபக்தியுடன் செய்தார். அப்போது, சுவாமிகளின் முறிந்த கால் எலும்புகளை இரண்டு வேல் முனைகள் இணைந்து நிற்பதுபோலும், அடியிலே ஒருவேல் முனை தாங்கி நிற்பதுபோலும் தாசருக்கு அற்புதக் காட்சி கிடைத்தது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-ஆம் நாள் இரவு சுவாமிகளின் படுக்கை அருகில் இரண்டு மயில்கள் நடனமாடுவதை சுவாமிகள் மனக்காட்சியில் கண்டார். கைகூப்பித் தொழுதபோது, அவரது படுக்கையில் ஒரு செந்நிறக் குழந்தை அவரது அருகில் கால் நீட்டிப் படுத்து மறைதலையும் கண்டார். கந்தனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இதன்பிறகு, மருத்துவர்கள் சுவாமிகளுக்குக் கால் முறிந்த இடத்தை எக்ஸ்-ரே படம் எடுத்தனர். என்ன ஆச்சரியம்! முறிந்த கால் பொருந்தியிருந்தது. அதைக் கண்டு வியந்த மருத்துவர்கள், சுவாமிகளை வணங்கினர்.
தாம் கண்ட மயில் வாகன அற்புதக் காட்சியை, 'அசோக சால வாசம்’ என்னும் பெயரில் எட்டு பதிகங்களாகப் பாடியுள்ளார் சுவாமிகள். இந்த அருட்காட்சியை நினைவுகூரும் வகையில் 'மயூரவாகன சேவனம்’ என்ற பெயரில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் விழா நடத்தினார். தற்போதும் அது நடைபெற்று வருகிறது.
பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள மொத்தப் பாடல்கள் 6,666. இவை 6 மண்டலங்களாக வகுக்கப்பெற்றுள்ளன. இவர் இயற்றியுள்ள உரைநடை நூல் 32. சுவாமிகள் தம் எழுத்துப் பணியால் சுயமாகச் சம்பாதித்துச் சேர்த்திருந்த தொகையைக் கொண்டு, இன்றைய சென்னை யில் உள்ள திருவான்மியூரில் ஓர் இடத்தை வாங்கச் செய்தார். சுக்கில வருடம் வைகாசி மாதம், வியாழக்கிழமை (30-5-1929) அமர பட்ச சஷ்டி திதி, அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் அவரது ஆன்மப் பேரொளி முருகன் திருவடியில் கலந்தது. திருவான்மியூரிலேயே (கலாக்ஷேத்ரா அருகில்) அவருக்குச் சமாதி எழுப்பப்பட்டது.
'முருகப்பெருமானை பாடிப் பரவுவார் யாவரும் மகாதேஜோ மண்டலத்தார்’ என்னும் குகநெறி ஒருமைப்பாட்டை உருவாக்கிய பாம்பன் சுவாமிகள், இன்றும் தம்மை நாடிவரும் அடியார்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

-நன்றி - சக்தி விகடன்

Friday, 31 May 2013

THIRUPPUGAZH AANMEEKA PERUVIZHA ON 13th & 14th JULY 2013







Peerless propagator - The Hindu 31st May 2013

Guruji Raghavan


To Guruji Raghavan, who tuned and taught Tiruppugazh.

“Guruji Raghavan’s contribution to the propagation of Tiruppugazh is unparalleled,” say his admirers in one voice. While Paramacharya honoured him with the title ‘Tiruppugazh Gaana Ratnam,’ the pontiff of Sringeri Math declared that Guruji Raghavan was very close to his heart.
Two gentlemen – Narayana Iyengar and Mahalingam - requested Guruji Raghavan to set music to Tiruppugazh. They had heard the former sing in a concert in Delhi, where he had moved for employment. A ‘B’ grade artist of AIR in Mumbai, Raghavan had never sung Tiruppugazh in his concerts. He began learning the hymns to teach them in an informal class.
Rewarding experience
R. Thyagarajan, financial advisor and an active member of Tiruppugazh Anbargal Sangam, attended Guruji Raghavan’s class in 1991 after his retirement, in New Delhi. “I was at once drawn to his melodious singing and his elucidation of the hymns. I started attending his classes regularly and found them to be rewarding,” he says. Thyagarajan now heads the Chennai Region of Tiruppugazh Anbargal Sangam.
Born on September 4, 1928, to Subbaiah and Ramalakshmi, in Thoothukudi, he was brought up in Arumugamangalam, a small town on the way to Tiruchendur. Afflicted with polio, the young Raghavan could not walk easily. Sivalinga Nadar, a native vaidya and an ardent devotee of Lord Muruga, trained him to run from Thundugai Vinayaka temple to Shanmukha Vilasam in Tiruchendur in the sands and the defect was gone!
“It was an amazing fete to tune 503 songs of Arunagiri in over 110 ragas. This is the achievement of Guruji Raghavan!” says Chithra Murthy, a propagator of Tiruppugazh through her discourses. “His short bhajan sessions would last for about two hours and cover 20 hymns. The longer ones would go up to 108 songs! It was Kalyani Ramasamy, who followed Guruji Bhani here and his style of singing was established throughout.”
A self-effacing Guruji, however, did not want to take credit for tuning the songs and attributed everything to the grace of ‘Senthil Aandavan.’
“He was a pathfinder for all of us,” says Uma Balasubramaniam, daughter of the well known Tamil scholar and orator Ki.Va. Jagannathan. “We feel he was the incarnation of the sage, Arunagiri. That was why he was happy when people called him ‘Tiruppugazh Thondan.’
His participation in Padi Vizha and Sashti Bajanai in Chennai elevated the events to an ecstatic level. He tuned not only Tiruppugazh, but also Kandar Anubhuti, Kandar Alankaram, Kandar Andhadhi, Vel-Mayil-Seval Viruthangal, Thiruvaguppu and Thiru Ezhu-k-kootrirukkai.
“Guruji’s wife Janaki Mami is also well versed in Tiruppugazh. She took interest when he began singing the hymns and for over thirty years she was singing with him,” adds Chithra Murthy.
His popular serial in Kalki was ‘Thalam Thorum Thamizh Kadavull’ and he covered many temples of Lord Muruga in this serial.
N. Gopala Sundaram, who translated Tiruppugazh hymns into English, said he was shocked at hearing the news of the demise of Guruji. “I was in Mumbai when I heard the sudden passing away of our beloved Guruji. He was a great inspiration for me to take up the mammoth job of completing the translation and on May 4 this year, I had been to Tiruchendur to dedicate the 11th book in the sannadhi of Muruga. I wanted to pay my respects to him personally by handing over a copy of the book on my return to Chennai. This is impossible now,” tells Gopala Sundaram in a voice choked with emotion. As many as 30,000 copies of Guruji Raghavan’s compilation of ‘Tiruppugazh Vazhipaadu’ have been distributed at a nominal price all over the world.
Says scholar Dr. Lalita Ramakrishna of Tattvaloka, “Arunagirinathar’s Tiruppugazh is an invaluable tool to enhance our sensitivity to rhythm. The songs are powerful and are ideal for group singing.”
Guruji Raghavan rightly understood this truth and was successful in his mission of propagating Tiruppugazh inspiring Tamils spread all over the globe, to sing the praise of Muruga in the inimitable style he had evolved.

Rajans



Tuesday, 28 May 2013

"A.S. Raghavan, proponent of the Thiruppugazh hymns, breathed his last recently" - The Hindu

 
 

Return to frontpage

Friday Review » Music

NEW DELHI, May 23, 2013

Of hymns across time

Van Heusen FlexiWaist - Go for trousers in your exact waist size. Not Bigger. apps51.likemyworld.com/flexiwaist
Venkatesan Srikanth
Share  ·   Comment   ·   print   ·   T+   <a href="http://www.thehindu.com/features/friday-review/music/of-hymns-across-time/article4742969.ece?textsize=large&test=1" title="Large Text Size" >T+</a>  ·   <a href="http://www.thehindu.com/features/friday-review/music/of-hymns-across-time/article4742969.ece?textsize=small&test=2" title="Small Text Size">T-</a>
5

A.S. Raghavan, proponent of the Thiruppugazh hymns, breathed his last recently

Thiruppugazh Guruji A.S. Raghavan, who started a movement in the Capital in 1958 to spread the message of love,avirodham, self-discipline, unity and brotherhood through the ancient Thiruppugazh hymns, passed away last Friday in Chennai. Born in 1928, “Guruji”, as he was reverently called by his disciples, followers and others, spearheaded the movement that later came to be known as the “Thiruppugazh Anbargal”, when he started teaching the Thiruppugazh hymns to two of his students. He had been propagating the Thiruppugazh ever since, for more than five decades.
Saint Arunagirinadar, who lived in South India about 600 years ago, composed thousands of such hymns, of which only 1,400 are extant. The hymns are a treasure house of rhythmic intricacies and succinct presentation in the Tamil language and occupy a unique place in the sacred music of Tamil.
Guruji not only compiled in one work the available hymns of Saint Arunagirinadar and titled it “Thiruppugazh Madani”, he also set to tune more than 500 of these in more than 100 ragas to melodious music and precise tala, matching thechhanda (meter) of these hymns. He also evolved a pattern from the verses of Thiruppugazh for conducting an elaborate ‘wedding function’ titled “Valli Kalyanam”, which signifies the finality of life in the unification of “atma” with “paramatma”.
Besides Thiruppugazh, Guruji had also set to music the “Abhirami Andhadhi” and “Abhirami Padigam”, the verses on goddess Shakti.
When increasing numbers of people started joining the classes, which hitherto were conducted only at one place in the Capital, more and more centres too came into operation.
Guruji commanded instant respect and was a source of inspiration to hundreds of disciples and followers. People who did not have any knowledge of music, too, started joining the group. When his disciples assembled for a bhajan session, they came not for a performance but for a community prayer in which the entire audience would participate.
Some of Guruji’s disciples started migrating to other parts of the country and even to foreign countries. They took upon themselves the task of spreading Thiruppugazh by conducting classes in the places where they resided.
Thus, the “Raghavan School of Thiruppugazh singing” spread and became well established in India as well as in places like Hong Kong, Malaysia, Canada, Singapore and the U.S. Guruji’s efforts had blossomed into a large “Anbargal” family which accepted the principles enshrined in Thiruppugazh as a way of life.
Guruji shifted from the Capital to Chennai about eight years ago.
But his disciples in Delhi even today continue to perform the Thiruppugazh “Isai Vazipadu”, which strives for world peace through the medium of mass prayer, at various places in the Capital.
Apart from the regular monthly Shashti and Kirtigai bhajans that are organised in a number of localities in the Capital, the “Padivizha”, conducted on the first Sunday of January every year, and the “Saint Arunagirinadar Ninaivu Vizha” organised on October 2 every year, at New Delhi’s Malai Mandir, are most looked forward to.
While Guruji’s movement has risen to great heights, it is reassuring that the Thiruppugazh IsaiVazhipadu tradition evolved by the late A.S. Raghavan, too, will transcend generations.

Monday, 27 May 2013

குருஜி இராகவன்



600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரிநாதர் தன் திருப்புகழ் பாடல்கள் மூலம் முருகன் புகழ் இந்த தரணியில் பரவச்செய்தார். அவர் விட்டுச் சென்ற பணியையை இந்த நூற்றாண்டில் தொடர்ந்தவர் காலம் சென்ற இராகவன் அவர்கள். அவர் செய்த பணி மறக்கமுடியாததுமட்டுமல்ல மலைக்ககூடியதுமாகும். இளம் வயதிலேயே திருச்செந்தூர் முருகனினால் ஆட்கொள்ளப்பட்டார். உத்தியோக நிமித்தம் தலை நகர் டில்லியில் வசித்த போதிலும் தன் நண்பர்களுக்கு திருப்புகழ் கற்று தர ஆரம்பித்த முயற்சி இன்று ஆலமரமாய் விரிந்து பாரெங்கிலும் பரவி அருணகிரியாரின் வாக்கின் படி ‘பூர்வ பச்சிம உத்தர தக்ஷிண’ திக்குகளிலெல்லாம் ஒலிக்கின்றது. ‘கங்கையை பாரினில் கொண்டு வந்த பரதனின் முயற்சி போன்றுதான் இது’ என்பார் ஒரு அன்பர். ‘என் முயற்சி ஒன்றும் இல்லை. எல்லாம் செந்தில் ஆண்டவன் இச்சை’ என்பது இராகவன் அவர்களின் கூற்று. பக்தியால் எதனையும் சாதிக்கலாம். அதற்கு திருப்புகழ் இசை மிகச் சிறந்த சாதனம். திருப்புகழ் சந்த பா வகையில் அமைத்தொன்றாகும். அந்த சந்த பாடல்களை சந்தம் சிதையாமல் இராக தாளம் தவறாமல் பிழையின்றி திருப்புகழ் கற்று தந்து ‘திருப்புகழ் அன்பர்கள்’ என்ற அமைப்பின் மூலம் இன்று 5000க்கும் மேற்பட்டவர்கள் திருப்புகழ் இசைப்பணி புரிந்து வருகிறார்கள் என்பது இராகவனின் மகத்தான சாதனை. ‘அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ் பாடல்களை எப்படி பாட வேண்டுமென்று விருப்பட்டிருப்பாரோ அந்த விதத்தில் பாட இராகவனைத்தவிர இந்த தலைமுறையில் வேறு ஒருவரும் இல்லை’ என்பது கர்நாடக இசை விமர்சகர் காலம் சென்ற சுப்புடு அவர்களின் கருத்து. சமீபத்தில்  (2008) இந்த அமைப்பு  ‘பொன் விழா’ கண்டது. ‘திருப்புகழ் தொண்டர்’, ‘திருப்புகழ் சக்ரவர்த்தி’, ‘குகஸ்ரீ, ‘பக்த ரத்னா’ என்ற பட்டங்கள் அவரை சென்றடைந்தாலும் அவருக்கு பக்தர்களால் கொடுக்கப்பட்ட ‘குருஜி’ என்ற பட்டமே என்றும் நிலைத்திருக்கும் எண்பது திண்ணம். குருஜி இராகவன் அவர்கள் தன் ஸ்தூல சரீரத்தை உதறிவிட்டு முருகனின் பாதகமலத்தை அடைந்து விட்டாலும் அவர் திருப்புகழ் அன்பர்கள் மனத்தில் என்றும் நீக்கமற நிறைந்திருப்பார் என்பதுதான் நிரந்தர உண்மை .


-Rajans

(On the request of an anbar form Banglaore this letter was wriiten for publication in "Dinamlar")

Tuesday, 21 May 2013

முருகனின் தொண்டர்கள்!


காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை, இன்றைய காரியம் நாளைய காரணத்திற்கான விதை. விதை எதுவோ அதுவே விளைச்சல். 
மூலமான ஆதி பரம் பொருளே காரியத்தையும் காரணத்தையும் அறியும். நாம் விளைவு உண்ணிகள். விளைவுக்கு ஏற்றபடி இன்பமோ துன்பமோ நம் வாழ்க்கையாகி விடுகிறது.

தட்சன் ஆணவம் கொண்டு யாகம் செய்ததால் அன்னை மரகத வண்ண கிளிமொழியாள் தாட்சாயணி அவதாரம் முடிந்து. மலைமகள் உமையம்மை பார்வதி அவதாரம் நிகழ்ந்தது.
.
இடப்பாகம் உடைய அன்னை நீங்கியதால், இடப வாகனனாகிய அப்பன் ஆடும் பரம் பொருள் அசையா சிவமானது. 

அசையா சிவத்தை அசைக்க போனதால், மலர் கணையால் காம கனல் மூட்டும் காமன். ஈசன் விழிமலரால் கனல்பட்டு உயிர் பட்டுப்போனான். 

அகிலம் எல்லாம் ஈன்ற அன்னை அருளரசி பெரும்குடும்பி பெரிய நாயகி, நாளும் நலம் அருளும் தையல் நாயகி, பாரெல்லாம் சிறப்புற மலைமன்னன் மடி வளர்ந்த மலைமகள் நீலி நிட்கலி நித்தில முத்து நகைக் கொடி சித்திர நீல ரத்தினமிட்ட அறக்கிளி உமையாள் பார்வதி பாரெல்லாம் சிறப்புற ஈசனை மணந்ததால், தென்றல் வரும் பொதிகை மலைக்கு முத்தமிழ் வளர்க்கும் மாமுனி அகத்தியர் வந்தார். 

அமுத தமிழ்; அகத்தியர் வழி வர, ஆறுமுகமான அழகு பொருள், அடியார் குறை தீர்க்கும் ஞானபொருள், ஆறு முகமோடு, ஆறு வீடு அமர, அடியார் உள்ளம் அமர, அனல் வரும் விழி வழி ஞான புனலாய் வந்தார். 

அடியாரின் பொய்யான வாழ்வை மெய்யாக்க சரவணா பொய்கையில் ஒரு கமலத்தில் ஆறு கமலமாய் பூத்தார்.

எல்லாம் காரணத்திற்கான காரியம். அவனின்றி யார் அறிவார் காரியத்தின் காரணம் 

அருணாசலம் தந்த அருணகிரிக்கு, முருகன், செல்வமுத்துகுமரன், வள்ளி மணவாளன், அத்திக்கு இறைவன், முத்திக்கு வித்தான முதல்வன் திருப்புகழ் தர, அந்த திருப்புகழை நாம் பெற. என்றும் முற்றுபெறாத நடனத்தை தில்லை பொன் மன்றில் நடத்தும் சிவகாமசுந்தரி ஒரு பாகம் வாழும் நடராஜன் நடத்திய நாடகமா இந்த வழக்கு.

வழக்கு நடத்துவது அவனுக்கு வழக்கம் தானே. சுந்தரனை சொந்தம் கொண்டாட வழக்கு நடத்தியவன் தானே அவன். 

காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை, இன்றைய காரியம் நாளைய காரணத்திற்கான விதை. 

இந்த வாரம் வெளியாகிய முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்- திருப்புகழ் சுப்ரமனியார் வரலாற்றில் ஒரு அற்புதம் மறைந்து இருக்கிறது.

வழக்கு வந்தது சிதம்பரத்தில் இருந்து-தில்லை நடராஜர் வேறு, தில்லை தீட்சதர் வேறு இல்லை. மூவாயிரம் தீட்சதர்களை எண்ணிய போது 2999 பேர் இருக்க தன்னையும் சேர்த்து 3000 மாக காட்டியவர் நடராஜர்.
அருணகிரி(அப்பன் திருநாமத்தில் ஓன்று) திருப்புகழ் பட முருகன் கேட்டது அப்போது. 
நடராஜர் வடிவான தீட்சதர் வழக்குக்காக திருப்புகழ் பாட, அதை சுப்பிரமணிர் கேட்கிறார் இப்போது. 

அப்போதும் முருகன்தான் திருப்புகழை உலகுக்கு தந்தார். அவரும் வள்ளியம்மை மணவாளன்.
இப்போதும் சுப்பிரமணிர்தான் திருப்புகழை உலகுக்கு தந்தார். இவரும் வள்ளியம்மை மணவாளன்.

வழக்குக்காக திருப்புகழ் வந்தது சிவம் குடி கொண்ட சிதம்பரத்தில் இருந்து. கிடைத்த திருப்புகழை பிழை திருத்த சுப்பிரமணியர் கொடுத்தது சிவ சிதம்பரத்திடம். 

ஆறுபடை வீடு இருந்தும் அருணகிரிக்கு திருப்புகழை தந்தது அண்ணாமலை.
நம் சுப்பிரமணியருக்கும் திருப்புகழை தந்தது அண்ணாமலை. 
முருகபெருமான் திருப்புகழ் மீது உள்ள பேரன்பால் தானே பிறந்து திருப்புகழை தொகுத்தனோ.
1871-ஆம் ஆண்டில் ஒருநாள்.
கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட நீதிமன்றத்துக்கு, தில்லை நடராஜர் கோயில் வழக்கு ஒன்று வந்தது. ஹட்சன் துரை என்னும் ஆங்கிலேயர் அப்போது நீதிபதியாக இருந்தார். சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தங்களுக்குள்ள பரம்பரை பூஜை செய்யும் உரிமையை நிலைநாட்ட பல்வேறு தரப்பு வாதங்களை முன் வைத்தனர். அதில், ஒரு பாடலையும் சாட்சியாகக் காட்டினர்.
'வேதங்களில் சொல்லிய முறைப்படியே தவறுதல் இல்லாமல் நாள்தோறும் யாகங்களும் ஆராதனைகளும் செய்யும் அழகுடன் மூவாயிரவர் என்னும் பெருமைவாய்ந்த அந்தணர்களால் (தீட்சிதர்களால்) பூஜை செய்யப்படும் தலைவனே' என்பது பாடலின் பொருள்.
''வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யால்எழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே!''
இந்தப் பாடல் வரிகளில் உள்ள சந்த அழகும் பொருளழகும் அங்கு எழுத்தராகப் பணிபுரிந்த சுப்ரமணியம் எனும் அன்பரை மிகவும் ஈர்த்தது. இது என்ன பாடல் என்று அந்த தீட்சிதர்களை வினவினார். அருணகிரிநாத சுவாமிகள் சிதம்பரம் தலத்தில் பாடியுள்ள 'தாது மாமலர் முடியாலே...’ என்று தொடங்கும் திருப்புகழ் பாடல்தான் அது என்று அறிந்த சுப்ரமணியத்துக்கு, திருப்புகழ் பாடல்களைச் சேகரிக்க வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டது.
14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள், ஏறக்குறைய 400 ஆண்டுகள் கழித்தே அச்சில் ஏறின. அதற்குக் காரணமானவர்தான் இந்த சுப்ரமணியர். அதனாலேயே 'திருப்புகழ் சுப்ரமணியர்’ ஆனார்.
திருத்தணிகை முருகனுக்கு வழிவழியாகத் தொண்டு செய்து வருபவர்கள் வடக்குப்பட்டு கற்பகப் பிள்ளை குடும்பத்தினர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று திருத்தணிகை சென்று முருகனை தரிசித்த பின்பே உணவு உட்கொள்ளும் விரதத்தைக் கடைப்பிடித்து வந்தனர் இவர்கள். கற்பகப் பிள்ளையின் புதல்வர் வடக்குப்பட்டு தணிகாசலம். இவர், மனைவி லட்சுமி அம்மாளுடன் செங்கல்பட்டில் வாழ்ந்து வந்தார். முன்னோர் வழியில் இந்தத் தம்பதி தினமும் சிவபூஜையும் முருக வழிபாடும் செய்துவந்தனர். இவர்களது இறை வழிபாட்டின் பயனாக 1846-ஆம் ஆண்டு பிறந்தார் சுப்ரமணியர்.
சிறு வயதில், செங்கல்பட்டு மிஷன் கல்விக்கூடத்தில் பயின்ற சுப்ரமணியர், குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு கல்லூரியில் படிக்கமுடியாமல் சிரமப்பட்டார். அப்போது, மில்லர்துரை என்பவரது நட்பின் மூலம் 'மாகின்டாஷ் ஸ்காலர்ஷிப்’ என்ற பரீட்சையில் முதலாவதாகத் தேறி, மாதம் 8 ரூபாய் உபகாரச் சம்பளமாகப் பெற்றார். அதன் மூலம் எஃப்.ஏ. பரீட்சை எழுதி, முதலாவதாகத் தேர்ச்சியடைந்தார்.
சைவத்திலும் தணிகை முருகனது பக்தியிலும் ஊறித் திளைத்த இவருக்கு வள்ளியம்மை என்ற பெண்மணி மனைவியாக அமைந் தார். அந்த அம்மையாரும் தணிகைவேலனிடம் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். தினமும் பூமாலை தொடுத்து, பூஜைக்குத் தேவையான பணிகளைக் குறைவில்லாமல் செய்து வந்தார் அவர். திருத்தணிகேசன் திருவருளால் சண்முகம், செங்கல்வராயன், ஆறுமுகம் என்னும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்களில், திருப்புகழ் முதலான அருணகிரிநாதரின் அனைத்து நூல்களுக்கும் உரை எழுதிப் புகழ்பெற்றவர் 'தணிகைமணி’ வ.சு.செங்கல்வராயபிள்ளை.
சுப்ரமணியர் என்னும் வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்ரமணிய பிள்ளையவர்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லவராக இருந்தார். இவரது கையெழுத்து மிகவும் நேர்த்தியாக இருக்கும். இதைக் கண்ட கடலூர் மஞ்சக்குப்பம் நீதிபதி ஹட்சன் துரை, 1870-ல் இவரை எழுத்தர் வேலையில் அமர்த்தினார். அந்த நீதிமன்றத்தில் பணியாற்றியபோதுதான் தில்லை தீட்சிதர்களின் வழக்கு வந்தது. அதுவே, இவரது வாழ்க்கையில் அருணகிரிநாதரின் திருப்புகழ்ச் சுவடிகளைத் தேடும் பணியில் ஈடுபட வைத்தது.
அருணகிரிநாதர் பாடிய சந்தத் திருப்புகழ்ப் பாடல்கள் அந்தக் காலத்தில் ஆங்காங்கே சுவடி வடிவிலேயே இருந்தன. அது மக்களின் பார்வைக்கும் பாராயணத்துக்கும் வரவில்லை.
அருணகிரிநாதர் 16,000 திருப் புகழ்ப் பாடல்களைப் பாடியிருப் பார் என்று அக்காலத்தில் தமிழ் அறிஞர்களிடையே ஒரு கருத்து நிலவி வந்தது. அதில் ஓர் ஆயிரம் பாடல்களாவது தமக்குக் கிடைத்து, அதனை அச்சிட்டால், தாம் எடுத்த பிறவிப்பயன் தீரும் என்று முருகனை வேண்டி இப்பணியில் ஈடுபட்டார் சுப்ரமணிய பிள்ளையவர்கள்.
இதற்காகத் திருப்புகழ்ச் சுவடி களைத் தேடி பல இடங்களுக்கும் சென்றார். அவ்வாறு தமக்குக் கிடைத்த திருப்புகழ்ச் சுவடிகளை மஞ்சக்குப்பம் தமிழாசிரியர் சிவசிதம்பர முதலியார் என்பவரிடம் அளித்து, அவற்றில் பிழை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார்.
இந்த வகையில் காஞ்சிபுரம் அண்ணாமலைப் பிள்ளையிடம் 750 திருப்புகழ்ப் பாடல்கள் கொண்ட சுவடி கிடைத்தது. அதேபோல், பின்னத்தூர் சீனிவாசப் பிள்ளையிடம் 400 பாடல்களும், கருங்குழி ஆறுமுக ஐயரிடம் 900 பாடல்களும் கொண்ட ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். இந்தப் பணியில் சேலம் சரவணப்பிள்ளை, அனந்தராம ஐயர் போன்ற புலவர்கள் சுப்ரமணியருக்குப் பெரிதும் உதவினர்.
இப்படியிருக்கையில், ஒருநாள் இரவு முருகப் பெருமான் மயில் வாகனத்தில், பொன்னிற ஜோதி பொலிய வீற்றிருந்ததைக் கனவில் கண்டு களித்தார் சுப்ரமணியபிள்ளை. அதன் தொடர்ச்சியாக, இவரது முன்சீப் வேலையும் நிரந்தரமாயிற்று.
திருப்புகழ்ச் சுவடிகளைப் பரிசோதிக்கும் போது, ஒரே பாடல் பல சுவடிகளில் காணப்பட்ட தாலும், பாடபேதங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமாக இருந்ததாலும், அதனை அச்சிடுவதில் பலவித சிரமங்கள் இவருக்கு ஏற்பட்டன. எனினும், முருகன் புகழ்பாடும் இந்த அற்புதப் பாடல்களை எப்படியும் அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு அளிக்க வேண்டும் என்னும் விடாமுயற்சியுடன் தீவிரமாக உழைத்தார். பாடல்களை வரிசைப்படுத்துவதில்... முதலில் ஆறுபடை வீடுகள், அடுத்து பஞ்சபூதத் தலங்கள், தொடர்ந்து மற்ற தலப் பாடல்கள் என வகைப்படுத்தினார்.
அக்காலத்தில், தேவாரப் பாடல்கள் அச்சிட்ட முறைப்படி தொண்டைநாடு, நடுநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்ற வரிசையில் 450 பாடல்கள் கொண்ட முதல் பாகத்தை 1895-ல் அச்சிட்டு வெளியிட்டார். இரண்டாவது தொகுதி 545 பாடல்களுடன் 1902-ல் வெளிவந்தது. தற்போது அச்சிடப் பட்டுள்ள பல்வேறு திருப்புகழ்ப் பதிப்புகளுக்கு வடக்குப்பட்டு த.சுப்ரமணிய பிள்ளையவர் களின் பதிப்பே மூலப்படியாகும்.
முன்சீப் வேலை பார்த்தபோது, சுப்ரமணி யரின் தீர்மானங்கள் பல மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டன. சிறந்த ஒழுக்கம், இனிமை யாகப் பேசும் சுபாவம், பக்திப் பெருக்கு ஆகியவை இவரது நற்குணங்களாகும். கும்பகோணம், திருத்தருப்பூண்டி, மதுரை, மானாமதுரை முதலிய ஊர்களில் முன்சீப் வேலை பார்த்துள்ளார். அப்போது பல தலங் களை வழிபட்டதுடன், பல நூல்களையும் அச்சிட்டார். திருத்தருப்பூண்டி ஸ்தல மான்மியம், திருவாரூர் புராணம், வேதாரண்ய புராணம், திருநீடூர்புராணம், பிரம்மோத்திரகாண்ட வசனம், உத்தரகோசமங்கை பிள்ளைத்தமிழ், மானாமதுரை ஸ்தல மான்மியம் முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில் 176 தலங்களுக்கு நேரில் சென்று தரிசித்து, தலக் குறிப்புகளுடன் இவர் எழுதிய 'சிவஸ்தல மஞ்சரி’ சிவத்தல யாத்திரையில் வெளிவந்த முதல் நூல் எனக் கருதப்படுகிறது.
தமது ஆன்மிக சேவையின் தொடர்ச்சியாக திருத்தணிகையில் கருணீகர் மடம் ஒன்றைக் கட்டினார் சுப்ரமணிய பிள்ளை. மேலும், தணிகை சுப்ரமணிய ஸ்வாமி சந்நிதானத்தில் தூங்காவிளக்கு இடைவிடாது எரிய நிலம் வாங்கி, அதனை ஸ்வாமியின் பெயரில் சாசனம் செய்து, அதன் வருவாயில் விளக்கு களுக்கு எண்ணெய் வாங்க ஏற்பாடு செய்தார். இதனைத் தமது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையில் அவர் காலத்தில் ஆலயம் இல்லாமல் இருந்ததை எண்ணி, அதனை மறுபடியும் ஸ்தாபிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.
தணிகேசன் திருவருளை முழுமையாகப் பெற்ற வடக்குப்பட்டு த.சுப்ரமணிய பிள்ளையவர்கள் 1909-ஆம் ஆண்டில் தணிகை முருகனைத் தரிசித்து வழிபாடு செய்து திரும்பினார். அன்றிலிருந்து ஆறாவது நாள், முருகன் திருவடிகளை அடைந்தார். அவரது விருப்பப்படி அவரது அஸ்தியானது தணிகை கோபுர வாயிலுக்கு எதிரில் சைவர்கள் சமாதி வைக்கும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு, சிவலிங்க பிரதிஷ்டையும் செய்யப்பெற்றது.
மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வது போல், மாயாத இவரது புகழ் உடம்பு, இப்பூவுலகு உள்ளளவும் நிலவுமன்றோ!
.Yogah karmasu kausalam = gita 2-50

- Sundara Rajan