Tuesday, 22 January 2013

SONG LIST FOR THIRTY THIRD PADIVIZHA - 2013


33வது படிவிழா - 2013 

26 ஜனவரி 2013

At Thiruchembur Murugan Temple



படி விழா முதன்  முதலில்1917ம் ஆண்டு  திருத்தணியில் தான் துவங்கப்பட்டது என்று அறிகிறோம். துவக்கியவர் அருள் திரு வள்ளிமலை ஸ்வாமிகள் தான்.டிசம்பர் 31ம் தேதி இரவில் பாடியவண்ணம் படியேறி மறு நாள் புத்தாண்டில் முருகப்பெருமானை தரிசிப்பதே நோக்கம்.இன்று வரை தொடருகிறது.மும்பையில் சிருங்கேரி ஆசாரிய சுவாமி அருளாசியுடன் 1981ம் ஆண்டு குருஜி தலைமையில் துவங்கி இப்பொழுது 33ம் படிவிழா      26.01.2013அன்று நடை பெறுகிறது.அழைப்பிதழ் முன்பே வெளியிட்டுள்ளோம்.அன்பர்களின் வேண்டுகோளின்படி அன்று இடம் பெறும்   பாடல்களின் தொகுப்பை வெளியிடுகிறோம்.
 அன்பர்கள் நிகழ்ச்சியின் முன்பே வந்து குருவின் ஆசிபெற்று பாடல்களுடன்   திருப்படிகள் ஏறி முருகப்பெருமானின் தரிசனம் பெற அன்புடன் அழைக்கிறோம். 

எண்
பாட்டு
பாட்டு
புதிய  எண்
பழைய எண்
1.      
கைத்தல
1
1
2.      
பக்கரை
2
2
3.      
உம்பர் தரு
3
3
4.      
நினது திரு.
4
4
அகவல்
5.      
நெஞ்சக்
அநுபூதி
6.      
ஆடும் பரி
7.      
உல்லாச
8.      
வானோ
9.      
வளைபட்ட
10.                         
மகமாயை
11.                         
முத்தைத்.
5
5
12.                         
திணியான
அநுபூதி

13.                         
கெடுவாய்
14.                         
அமரும்
15.                         
மட்டூர்
16.                         
கார்மா
17.                         
தடக்கை
10
10
18.                         
இயலிசையில்
17
16
19.                         
படர்புவி
40
33
20.                         
நாலுமைந்து
36
29
21.                         
சேமக் கோமள
28
22
22.                         
தண்டையணி
30
24
23.                         
தந்த பசி
31
25
24.                         
கூகா என
அநுபூதி
25.                         
செம்மான்
26.                         
முருகன் தனி
27.                         
கைவாய்
28.                         
முருகன் குமரன்
29.                         
அபகார
57
47
30.                         
தமரு மமரு
77
65
31.                         
புடவிக்கணி
45
455
32.                         
வரதாமணி
90
77
33.                         
சீயுதிர
72
427
34.                         
அவாமரு
93
78
35.                         
கடிமாமலர்
99
84
36.                         
பேராசை
அநுபூதி
37.                         
யாம் ஓதிய
38.                         
உதியா
39.                         
வடிவும்
40.                         
அரிதாகிய
41.                         
செகமாயை
106
90
42.                         
ஒருருவாகிய
113
96
43.                         
இருமலு
117
97
44.                         
உடையவர்கள்
119
425
45.                         
அரகர
115
99
46.                         
கனைத்ததிர்
128
108
47.                         
எனக்கென
123
104
48.                         
ஈனமிகுத்துள
146
121
49.                         
கவடுகோத்தெழு
356
298
50.                         
கருதா
அநுபூதி
51.                         
காளைக்.
52.                         
அடியைக்.
53.                         
கூர்வேல்
54.                         
மெய்யே
55.                         
பச்சையொண்கிரி
246
206
56.                         
தவளரூப (from para 5)
172
144
57.                         
ஒருவழிபடாது
238
200
58.                         
அன்பாக
177
149
59.                         
மலைக்கு நாயக
170
482
60.                         
பக்தர் கணப்ரிய
180
152
61.                         
குருதி தோலி
359
484
62.                         
குடல் நிணமெ
307
256
63.                         
ஆதாரமிலேன்
அநுபூதி
64.                         
மின்னே
65.                         
ஆனா அமுதே
66.                         
இல்லே
67.                         
செவ்வான்
68.                         
நீதான்
266
223
69.                         
அவசியமுன்
261
218
70.                         
அறமிலா
256
214
71.                         
உரியதவ (from para 5)
239
201
72.                         
தோலெலும்பு
209
176
73.                         
பாழ் வாழ்வு
அநுபூதி
74.                         
கலையே
75.                         
சிந்தாகுல
76.                         
சிங்கார
77.                         
விதிகாணும்
78.                         
சீதமலம்
367
307
79.                         
வண்டுபோல்
275
230
80.                         
தீராப்பிணி
291
243
81.                         
பசையற்ற
311
490
82.                         
இல்லையென
313
456
83.                         
இறவாமல்
204
171
84.                         
நாதா குமரா
அநுபூதி
85.                         
கிரிவாய்
86.                         
ஆதாளியை
87.                         
மா ஏழ்
88.                         
வினை ஓட
89.                         
திருமகள்
155
129
90.                         
கொத்தார்
429
-
91.                         
பரிமள மிக
445
375
92.                         
இமராஜன்
448
376
93.                         
காணாத தூர
460
385
94.                         
சாகா தெனையே
அநுபூதி
95.                         
குறியைக்.
96.                         
தூசா மணியும்
97.                         
சாடும் தனி
98.                         
கரவாகிய
99.                         
சரக்கேறித்த
471
394
100.                    
காவியுடுத்தும்
482
405
101.                    
வாதினை
501
424
102.                    
ஆனாத ஞான
334
278
103.                    
என் தாயும்
அநுபூதி
104.                    
ஆறாறையும்
105.                    
அறிவொன்
106.                    
தன்னந் தனி
107.                    
மதிகெட்டு
108.                    
உருவாய்

"நித்தமு மோது வார்கள் சித்தமெ வீடதாக
    நிர்த்தம தாடு மாறு            முகவோனே
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
   சித்திர ஞான பாத                மருள்வாயே"


Sunday, 13 January 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2013




அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நன்னாளில் நம் வலைப்பூ ஓராண்டுகடந்து அன்பர்களை கவர்ந்து 10000 பக்கங்களுக்கு மேல் பார்வை இட வைத்துள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.முதலில் இந்த வலைப்பூவை மும்பை சார்ந்த அன்பர்கள் தங்கள் எண்ணங்களையும்,கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளவும்.நம் முருகப்பெருமான் மேல் தங்கள் படைப்புக்களை அளிக்கவும் நோக்கத்துடன் தான் தொடங்கினோம்.ஆனால் எங்களையும் மீறி,தானே மற்ற அன்பர்களையும் தன பால் இழுத்து ,ஈடு கொள்ள செய்துள்ளது.முருகன் அருள் தான் என்று உணர்கிறோம்.

படைப்புக்களை தொடர்ந்து அளித்து வரும் அன்பர்கள் யாவர்க்கும் நன்றி,நன்றி.மற்றும் நம் குரு விருப்பப்படி ,அன்பர்கள் வழிபாடுகளில் பெருமளவில் பூஜையின் முன்பே வந்து கலந்து கொள்ள சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.தங்கள் இளைய தலைமுறை மக்களையும் கூட அழைத்துவந்து அவர்களையும் நம் இயக்கத்தில் ஈடுபடுத்த வேண்டுகிறோம். வகுப்புக்களுக்கும் பெருமளவில் தவறாது சென்று ஆசிரியப்பெருமக்களை உற்சாகப்படுத்த இறைஞ்சுகிறோம்..முருகன் அருள் புரிவானாக.

இத்தருணத்தில் பெங்களூர் அன்பர் உமா வெங்கடராமன் புதிய வலைப்பூ.ஒன்றை தொடங்கியுள்ளார்.அதை பார்வை இடும்போது ஒரே பிரமிப்பாக உள்ளது.குறிப்பாக தமிழ் சரிவர அறியாத அன்பர்களுக்கு வரப்பிரசாதம்.Followings are the major highlights:
                                               1. Link to Our  Blog 
                                               2.Kanthar  Alankaram    English 
                                               3.Thiruppugazh isai Vazhipadu(our book) English
                                               4.Skanda Kumara  in Sankrit Tradition
                                               5.Excellant translation of Kandhar Anuboothi
                                               
மற்றும் நம் பாடல்களுக்கு வரி பிரித்து ஆங்கில மொழி பெயர்ப்பு அளித்துள்ளார்கள்.நம் குருஜியின் இசை வடிவமும்  இடம் பெற்றுள்ளன.அன்பர்கள் பெரு மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் புதிய பாடல்கள்  வரிசையாக குருஜியின் இசை வடிவத்தில் ஒவ்வொன்றாக இடம் பெறும் .இது வரை 15 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.(ADIO/VIDIO SECTION)Download  வசதி உள்ளது.

அன்பர் உமா அன்பர்களுக்கு பொங்கல் பிரசாதமாக படைத்துள்ளார்கள் என்றே உணர்கிறோம். அவர்  தன் வாழ்க்கையையே இந்த புனித பணிக்கு அர்பணித்து செயலாற்றும்போது ,குறைந்தபட்சம் நாம் மிகுந்த அளவில் பயன்படுத்தி பெருமான் அருள் பெறுவதை நம் கடமை என்று கருதுகிறோம்.அதுவே நாம் அவருக்கு செலுத்தும் நன்றிக்கடனாகும்.
அவருடைய  வலைத்தளத்துக்கு ,    THE NECTOR OF THIRUPPUGAZH (http://thiruppugazh-nectar.blogspot.in/)  என்ற பெயரில் link கொடுத்துள்ளோம்.அன்பர்கள் தம் கருத்துக்களையும்,பாராட்டுகளையும் எழுதி அவர்களை கௌரவிக்க வேண்டுகிறோம்.

Further, a sweet Pongal greetings made up of divine flavor of thiruppugazh from anbar  Malathi Jayaraman for all anbargal on https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mWFIJBZwP-o 
(kindly click the link and see)

All anbargal are requested to join this blog as members and drop their e-mail ID in the blank drop box for getting automatic news letters of this blog. You may also kindly introduce this blog to all other thiruppugazh anbargal. 

Sunday, 6 January 2013

Next Vazhipadu at Nerul on 17-01-2013 Thursday


அருவமாய் நம் எல்லோர் உள்ளத்தில் உறையும் முருகப்பெருமானை உருவமாய் பல ஆலயங்களில் தரிசித்து பரமானந்தம் அடைவது நம் அன்பர்களின் தீராத அவா.அதற்காகவும் பல கூட்டு வழிபாடுகள் நடத்தவும் அன்பர்களின் பெரு  முயற்சியால் பல ஆலயங்கள் உருவாகி உள்ளன .பல ஆலயங்கள் கட்டப்பட்டும்.வருகின்றன..அந்த வகையில்,நவீ மும்பையில் நெருல் பகுதியில் நெருல் பக்த சமாஜ அமைப்பினரால் ஸ்ரீ பிரசன்ன  கல்யாண சுப்பிரமணிய சுவாமி  திருநாமம் கொண்ட ஆலயம் பெருமானுக்கு கட்டப்பட்டு வருகிறது..பாலாலயம் நிறுவப்பட்டு ஆலய கட்டுமான பணிகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.முன்னோடியாக ராதா கல்யாண வைபவம் மற்றும் தைபூச விழாவும் ஏற்பாடு ஆகியுள்ளன.இந்த சந்தர்ப்பத்தில் 
 அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நமது  திருப்புகழ் இசை வழிபாடு நடை பெற உள்ளது.விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
                                                    

நாள்:17-01-2013 வியாழக்கிழமை.

நேரம்:  மாலை 5.30 மணி 
               
இடம்:Nerul Bhaktha samaaj

Plot 13,oppBEST BUS DEPOT
Sector 29, Nerul (E), Navi Mumbai-400706.
Tel 7720252,  27708368

அன்பர்கள் பெருமளவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Friday, 4 January 2013

தைபூசம் திருப்புகழ் இசை வழிபாடு: 27-01-2013


தைபூசம் வருகிற 27-01-2013 அன்று முருகன் உரையும் தலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.சில சிறப்புகளை மங்கையர் மலரில் படிக்கசந்தர்ப்பம் கிடைத்தது.

 "சிவபெருமான் முதன் முதலாக தில்லையில் (சிதம்பரம்)நடனமாடிய நாள்.அன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும் சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் வீடான மகரத்திலும் விழுகிறது.இது மிகவும் உயர்ந்த நிலையாகும்.சூரியனால் ஆத்மா பலமும்,சந்திரனால் மனோ பலமும் கிடைக்கிறது. வள்ளி திருமணத்தால் ஊடல் கொண்ட தேவயயானையை சமாதானம் செய்து இருவருடன் சேர்ந்து காட்சி அளித்த நாள்.ஸ்ரீ ரங்கநாதர் தன தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசை கொடுக்கும் நாள்.உலக நாடுகளில் பூசத்துக்காக விடுமுறை அளிக்கும் ஒரே நாடு  மலேசியா தான் "
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தைபூச விழாவை  நாமும் வழிபா ட்டுடன்  கொண்டாடி முருகன் அருள் பெறுவோம்.அழைப்பிதழ் இணைத்து ள்ளோம்.