அருவமாய் நம் எல்லோர் உள்ளத்தில் உறையும் முருகப்பெருமானை உருவமாய் பல ஆலயங்களில் தரிசித்து பரமானந்தம் அடைவது நம் அன்பர்களின் தீராத அவா.அதற்காகவும் பல கூட்டு வழிபாடுகள் நடத்தவும் அன்பர்களின் பெரு முயற்சியால் பல ஆலயங்கள் உருவாகி உள்ளன .பல ஆலயங்கள் கட்டப்பட்டும்.வருகின்றன..அந்த வகையில்,நவீ மும்பையில் நெருல் பகுதியில் நெருல் பக்த சமாஜ அமைப்பினரால் ஸ்ரீ பிரசன்ன கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருநாமம் கொண்ட ஆலயம் பெருமானுக்கு கட்டப்பட்டு வருகிறது..பாலாலயம் நிறுவப்பட்டு ஆலய கட்டுமான பணிகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.முன்னோடியாக ராதா கல்யாண வைபவம் மற்றும் தைபூச விழாவும் ஏற்பாடு ஆகியுள்ளன.இந்த சந்தர்ப்பத்தில்
அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நமது திருப்புகழ் இசை வழிபாடு நடை பெற உள்ளது.விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாள்:17-01-2013 வியாழக்கிழமை.
நேரம்: மாலை 5.30 மணி
இடம்:Nerul Bhaktha samaaj
Plot 13,oppBEST BUS DEPOT
Sector 29, Nerul (E), Navi Mumbai-400706.
Tel 7720252, 27708368
அன்பர்கள் பெருமளவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment