1958 ல் மிக சிறிய அளவில் டெல்லி அருளாளர் சுந்தரம் இல்லத்தில் துவக்கப்பட்ட அன்பர்களின் புனிதப் பயணம் ஓர் ஆங்கில கவிஞனின் "Miles to go before I sleep " என்ற உறுதி மொழி கவிதையை கைக்கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக பீடு நடை போட்டு,பல மைல்கல்களை கடந்து இன்று தன்னிகரற்றஅற்புதமான உன்னத நிலையை எட்டியுள்ளது. அதற்கு குருவருளும் திருவருளும் தான் துணை நிற்கின்றது.
முருகன் அருளையும், குருஜியின் ஆசிகளையும் ,அடிக்கல் நாட்டிய அருளாளர்கள் முதல் பல மைல் கற்களை கடக்க அரும்பாடுபட்ட மற்ற அருளாளர்களையும் போற்றி ,வணங்கி நினைவுகூறுவோம்.
முருகன் அருளையும், குருஜியின் ஆசிகளையும் ,அடிக்கல் நாட்டிய அருளாளர்கள் முதல் பல மைல் கற்களை கடக்க அரும்பாடுபட்ட மற்ற அருளாளர்களையும் போற்றி ,வணங்கி நினைவுகூறுவோம்.
அவர்களை பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு குறும்படம் "திருப்புகழ் அன்பர்கள் வரலாறு "என்ற தலைப்பில் 2008ல் பெங்களூரில் நடைபெற்ற பொன்விழா வைபவத்தில் திரை இடப்பட்டது.பி ன் U Tube வடிவிலும் வந்துள்ளது.
பார்ப்போம்.அருளாளர்களை வணங்குவோம்.
U Tube Link
https://www.youtube.com/watch?v=-mnRi4PFjE0
அடுத்து நாம் கடந்து வந்த மைல்கற்களையும் சற்று பின் நோக்குவோம்.
என்ன ஆச்சரியுமாக உள்ளதா ?"இது சாதனையல்ல .பெருமானின் அருள்தான்."என்ற சித்தத்தின்படி படி அன்பர்களின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
செந்திலாண்டவன் ஆண்டவன் திருவருளால் , குருஜியிடம் தாங்கள் பயின்ற திருப்புகழை மற்றவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களாலும் .மற்ற தன்னலமற்ற அருளாளர்களாலும் நம் இயக்கம் நம் பாரத தேசம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி எண்ணற்ற அன்பர்களின் இதயத்தில் குடிகொண்டதோடு மட்டுமல்லாமல் தன்னிகரற்ற ஓர் அமைப்பாக உலவி வருகிறது.
செந்திலாண்டவனுக்கும் நம்மை ஆளாக்கிய குருஜிக்கும் நன்றிக் கடன் செலுத்தும் வகையிலும் மற்ற அடியார்களை நினைவு கூறும் வகையிலும் நம் இயக்கத்தின் மணி விழாவை செந்திலாண்டவன் அருளாணை வண்ணம் அன்பர்கள் தலமைப் பீடமான புது தில்லியில் சங்கர வித்யா கேந்திரத்தில் வரும் செப்டம்பர் மாதம் 8 ம் நாள் மற்றும் 9ம் நாள் இரு தினங்களில்விமரிசையாகக் கொண்டாட அன்பர்கள் தீர்மானித்து ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
விழாவில் அபிராமி அந்தாதி,பதிகம் துதியுடன் தொடங்கி 60 திருப்புகழ் பாடல்களுடன் வழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன திருப்புகழில் கையாண்டுள்ள தாள நுணுக்கங்களைப் பற்றி மிருதங்க வித்துவான் கும்பகோணம் ஸ்ரீ பத்மநாபன் அவர்கள் விளக்குகிறார்.
குருஜியிடம் தாங்கள் அடைந்த அனுபவங்களை அன்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அழைப்பிதழும் நிகழ்ச்சி விபரங்களும் இணைக்கப் பட்டுள்ளன.
இந்த மாபெரும் வைபவத்தில் அன்பர்கள் பெருமளவு கலந்து கொண்டு
செந்திலாண்டவன்அருள் பெற வேண்டுகிறோம்.
மற்ற விபரங்களுக்கு
Contact cell 91 9810413265,......91 9962576037...91 9911846777..91 9953727467
முருகா சரணம்
No comments:
Post a Comment