Wednesday, 1 August 2018

சுப்ரமண்ய புஜங்கம் 22


                                                                             சுப்ரமண்ய புஜங்கம்  22 
                                                      

ப்ரணம்யாஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா

ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம் |

நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே

நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா ||


ப்ரபோ’ – என் துரையே... நமக்கெல்லாம் துரை.... முருகன் தான்..

ஹே ப்ரபோ ‘க்ருபாப்தே’ – கருணை கடலே

தே பாதயோஹோ:’ உன்னுடைய சரணங்களில் 


‘பதித்வா’ விழுந்து வணங்கி,


 ‘ப்ரணம்ய – நமஸ்காரம் பண்ணி, 


‘அனேகவாரம்’ – பலதடவை


 ‘ப்ரஸாத்ய’ – உன்னை சந்தோஷப்படுத்தி உன்னுடைய நாமங்களை பாடி, 


‘க்ருபாப்தே’ கருணைக் கடலே, முருகா! நான் உன்னை என்ன வேண்டிக்கறேன்னா 


‘ததாநீம்’ என்னுடைய பிராண வியோக காலத்துல என் உயிர் பிரியும் போது


 “அஹம் வக்தும் ந க்ஷமஹ” எதுவும் பேசறதுக்கு சக்தி இல்லாம போயிடுவேன் நான். 


‘அந்தகாலே’, அந்த அந்திம  காலத்துல 

‘மனாகபி’ கொஞ்சம்கூட ....என் விஷயத்தில் 

‘உபேக்ஷா’ ஒரு அலட்சியம் பண்ணிடாதே, வந்து என்னை காப்பாற்று 

அருணகிரிநாதர் 

நாசர்தங் கடையதனில் எனத் தொடங்கும் திருப்புகழில் 
மா மணங் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவோனோ என்கிறார்..

பாதி மதி நதி போது எனத் தொடங்கும் திருப்புகழில் 
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே சுவாமி மலை தனில் உறைவோனே என்கிறார்.

நமது குருஜி இசை வழி பாட்டின் மூலம் வழிபட ஓர் வழிமுறையை ஏற்படுத்தி உள்ளார்கள்..

அதன் வழி நடந்து குகனின் சரண கமலாலயத்தை தியானம் வைக்க  முயல்வோம்.

                                                   முருகா சரணம் 

No comments:

Post a Comment