சுப்பிரமணிய புஜங்கம் 18
இஹாயாஹி வத்சேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
ஹ்வயத்யாதராச் சங்கரே மாதுரங்காத் |
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் ||
அன்பரின் விளக்கவுரை
அன்பரின் விளக்கவுரை
இதை யாராவது சித்திரமா எழுதினா அவ்ளோ அழகா இருக்கும்
மாதுரங்காத்’ -அம்மாவான பார்வதி தேவியின் மடியில் உட்கார்ந்திருக்கும்
‘பாலமூர்த்தி’ – குழந்தையான முருகப் பெருமானை ‘சங்கர:’ சங்கரர் என்ன பண்றார்?
‘இஹாயாஹி வத்ஸ’ – குழந்தாய் இங்க என்கிட்ட வான்னு
‘ஹஸ்தான் ப்ரஸார்ய’ – இரண்டு கைகளையும் நீட்டி
ஆஹ்வயதி’ – கூப்பிடறார். ‘ஆதராத்’ -ரொம்ப செல்லமா கூப்பிடறார். அப்படி கூப்பிடும் சங்கரரிடத்தில்,
‘ஸமுத்பத்ய’ குதிச்சு வந்து
‘ஹராஸ்லிஷ்டகாத்ரம்’ அப்படி ஓடி வந்த உடனே
‘ஹர:’ பரமேஸ்வரன் என்ன பண்றார், அப்படியே அணைச்சுக்கறார்
(அப்படி அம்மா மடியிலிருந்து துள்ளி அப்பா மடிக்கு வந்து, அப்பா கட்டியணைச்சுண்ட அந்த குழந்தையை, பால மூர்த்தியான முருகப் பெருமானை ‘)
பஜே’ நான் வழிபடுகிறேன்னு ரொம்ப அழகான ஸ்லோகம்.
சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.).
இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்
குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
அழகான மழமேனி மறவாது நினைவேன். ...... 18
அம்மையின் மடியில் மழமேனியுடன் முருகன் வீற்றிருக்கக், 'குமரா' என்றழைத்துச் சங்கரன் கைகளை நீட்டுகின்றார். அம்மையின் மடியினின்றும் முருகன் குதித்துச் சென்று அப்பனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடுகின்றார். இவ்வாறு பரனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து விளையாடுகின்ற செந்தூரனாகிய எம்பிரானின் அழகான இளமேனியை நான் மறவாது நினைப்பேன்.
கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல
அருணகிரிநாதர் படைப்பில்
சீர்பாத வகுப்புல ரெண்டு வரிகள் இருக்கு.
இறைமகிழ வுடைமணி யொ டணிசகல மணிகலென இமையமயில் தழுவுமொரு ....திருமார்பி லாடுவதும் ......10
(கொன்றையும்,அளவற்ற கிளைகளை உடைய ஆகாச கங்கையையும்,
அறுகம் புல்லையும்,அஞ்சாமையையும் வீரமும் உடைய வாசுகி என்கின்ற சர்ப்பத்தையும்,குளிர்ந்த ஒளி கிரணங்களை உடையதும் இளமை பொருந்தியதும் நட்சத்திர கூட்டங்களுக்கு தலைவனான சந்திரனையும், சேர்த்து வைத்துக் கொண்டுள்ள,. ஜடையாளராகிய,
எல்லாப் பொருள்களிலும் விளங்கும் சிவ பொருமான், இன்பமடைய,
அரை மணியில் அணிந்துள்ள, அணிந்திருக்கும் தண்டை, வெண்டையம், கிண்கிணி சதங்கை முதலிய ஆபரணங்களின் கலின் என ஒலிக்கும்,
இமவான் மடந்தையாகிய பார்வதி தேவி தழுவிக் குழையும்,
ஒப்பற்ற பரமனின் மார்பில் விளையாடல் செய்வதுவும் (மண நாறு சீறடியே)
இதே போல குழந்தயாக, முருகா நீ குழந்தையா என் மடியில தவழ்ந்து எனக்கு முத்தம் கொடுக்கணும்னு
"செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த" என்ற பாடலில்
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
.
"விந்து பேதித்த "என்று தொடங்கும் திருப்புகழில்
மைந்தர் தாவிப் புகழ தந்தை தாய் உற்றுருகி
வந்து சேயைத் தழுவல் சிந்தியாதோ என்கிறார்..
அடுத்து ஆரவாராமாயிருந்து எனத் தொடங்கும் திருப்புகழில்
"நீதனான தோர்குழந்தை பெருமாளே " என்கிறார்.
நாமும் பெருமானை குழந்தையாக பாவித்து என்றென்றும் இன்புறுவோம்.
முருகா சரணம்
நாமும் பெருமானை குழந்தையாக பாவித்து என்றென்றும் இன்புறுவோம்.
முருகா சரணம்
No comments:
Post a Comment