சுப்ரமண்ய புஜங்கம் 12
பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்களைப் பற்றி ஒரு ஸ்லோகம்.
விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான் |
ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் ||
பாஹு-ன்னா கைகள், முருகப் பெருமானுக்கு நல்ல நீளமான பன்னிரு கைகள். அதைப் பத்தி இந்த ஸ்லோகம்.
விதெளக்லுப்த தண்டான் –
விதி-ன்னா ப்ரம்மா,
விதெள-ன்னா ப்ரம்மாவிடத்தில்,
தண்டம்-ன்னா தண்டனை,
க்லுப்த தண்டான்-னா தண்டனை கொடுத்தார். முருகப் பெருமான் தன் கைகளால் அவர் தலையில குட்டினார், அவர் ப்ரணவத்துக்கு அர்த்தம் தெரியாது-ன்னு சொன்ன போது. அந்தக் கைகள்-னு சொல்றார். ப்ரம்மாவுக்கு தண்டனை கொடுத்த கைகள்.
‘ஸ்வலீலாத்ருதாண்டான்’
அண்டங்களை எல்லாம் விளையாட்டாக ‘ஸ்வலீலா’ வெறும் விளையாட்டாக அண்டங்களை எல்லாம் தாங்கி கொண்டு இருக்கிறார்.
‘த்ருத அண்டான்’
நிரஸ்தேபசுண்டான்’ , இப:-ன்னா யானை,
இபசுண்டம்-னா யானையோட தும்பிக்கையை,
நிரஸ்த: யானையோட தும்பிக்கையை பிடிச்சு அதோட திமிரை அடக்கினார், மதத்தை அடக்கினார்-ன்னு இங்க வர்றது.
த்விஷத்காலதண்டான்’ எமனுக்கு சத்ருவா இருந்து எமனையே துவம்சம் பண்ற கைகள்-னு சொல்றார்.
ஹதேந்த்ராரிஷண்டான்’ இந்திரனுக்கு அரி – இந்திரனுக்கு எதிரிகளான சூரபத்மன் முதலிய அசுரர்களை ‘ஹத:’ வதம் பண்ணினார்.
‘ஜகத்ராண செளண்டான்’ இந்த கரங்கள் உலகங்களை எல்லாம் காப்பாத்தறதுல ரொம்ப சாமர்த்தியத்தோட, ரொம்ப சக்தி வாய்ந்த கைகளா இருக்கு.
‘ப்ரசண்டான்’ இந்த கைகள் எதிரிகளுக்கு ரொம்ப பயங்கரமா இருக்கு, அவர் கையில வேலை எடுத்தார்னா எல்லாம் பயந்து ஓடறா. அப்படி பயத்தை கொடுக்கக்கூடியதாக உள்ள
‘பாஹுதண்டான்’ உன்னுடைய தண்டம்-ன்னா நீண்டு தொங்கி கொண்டு இருக்கக் கூடிய, பன்னிரு கைகளையும்
‘சதா ஆச்ரயே’ நான் எப்பொழுதும் நம்பி இருக்கிறேன். நான் அவைகளை பற்றுக்கோடாக கொண்டிருக்கிறேன்-ன்னு , இந்த அழகான ஸ்லோகம்.
திருக் கைகளின் சிறப்பு
கவிதை வடிவில்
கவிதை வடிவில்
அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே.
பொருள்
பொருள்
பிரமனைப் புடைத்துச் சிறையிலிட்டு, அண்டங்களை எல்லாம் காத்தருளி, யானையின் தும்பிக்கையையும் வடிவினால் வென்று, எமனை ஓட்டி, சூரபதுமனைக் கொன்று இந்திரனின் துயரை நீக்கி, தனை அடைந்தோருக்கு என்றும் அபயமளிக்கின்ற நின் கை எனக்குத் துணை செய்தருள்க.
அயன் - பிரமன். அண்டநிரை - உலகக் கூட்டங்கள். அபயம் என்றல் - அஞ்சேல் என்பது.
பலன் ... ப்ரம்ம ஞானம் கிட்டும்
வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.
(நன்றி.... கௌமாரம் இணைய தளம்)
அருணகிரிநாதர் கூறுகிறார்
ஆராத காதலாகி எனத் தொடங்கும் திருப்புகழில்
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரு நீப வாச மாலையும்
இன்னொரு திருப்புகழ்
சீரான கோல கால நவமணி என தொடங்கும் திருப்புகழில்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளும் நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள்
என்கிறார்..
பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனுக்கு
No comments:
Post a Comment