சுப்ரமண்ய புஜங்கம் 4
யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ |
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் ||
யதா’ .............................................................................. எப்பொழுது,
‘மானவா’ .............................................................................மனிதர்கள்,
‘மே ஸந்நிதானம் கதாஹா’, .......................................என்னுடைய இந்த
சன்னதியை வந்து
அடைகிறார்களோ
‘
சன்னதியை வந்து
அடைகிறார்களோ
‘
தே’........................................................................................ அந்த மனிதர்கள்,
‘ததைவ’ ............................................................................. அப்பொழுதே,
‘ததைவ’ ............................................................................. அப்பொழுதே,
‘பவாம்போதி பாரம் கதாஹா’.....சம்ஸாரம் என்னும் சமுத்திரத்திலிருந்து
விடுபட்டு அக்கரையை அடைந்தவர்களாக ஆவார்கள்
‘இதி வ்யஞ்ஜயன்’..... ன்னு ஒரு விஷயத்தை புரிய வெச்சுண்டு
சூசனை பண்ணிண்டு
‘இதி வ்யஞ்ஜயன்’..... ன்னு ஒரு விஷயத்தை புரிய வெச்சுண்டு
சூசனை பண்ணிண்டு
‘ஸிந்து தீரே’..................................................................... இப்படி கடற்கரையிலே
‘ய ஆஸ்தே’...... எந்த பகவான் இருக்காரோ, பூரண சான்னித்தியதோடு விளங்குகிறாரோ, இருக்காரோ,
‘பவித்ரம்’ .......................... .............. மஹா பவித்ரமானவரும்
‘பவித்ரம்’ .......................... .............. மஹா பவித்ரமானவரும்
‘பராசக்தி புத்ரம்’....பரா சக்தியின்பத்திரருமான் அந்த ஸுப்ரமண்யரை
‘ஈடே’ ..................... .............. ......... நான் ஸ்தோத்ரம் பண்றேன்
இந்த ஸ்லோகத்தை படித்தவுடன் தற்போது ஞாபகத்திற்கு வரக்கூடிய திருப்புகழ்
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது எனப் பல பேசி , அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி பெரியோர்களிடைக் கரவாகி
நினைவால் நின் அடித் தொழில் பேணித் துதியாமல்
தலையான உடற்பிணி ஊறி பவ நோயின் அலைப்பல வேகி
சலமான பயித்தமாகி தடுமாறி
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தல மீதில் பிழைத்திடவே நின் அருள் தாராய் முருகா....
கலியாண சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோத கவினாரு புயத்தில் உலாவி விளையாடி
களிகூரும் உனை துணைத் தேடும் அடியேனை சுகப்படவே வை முருகா..இது உனக்கு கடனாகும், மிக கனமாகும் முருகோனே...
பலகாலும உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படி மீது துதித்துடன் வாழ அருள்வேளே
பதியான திருத்தணி மேவும் சிவலோகம் எனப்பரி வேறு
பவரோக வைத்திய நாத பெருமாளே...
அருணகிரிநாதர் பார்வதி தேவியை, சக்தியை கூறும் பொழுது பல அழகழகான நாமங்களை கூறி தேவியின் குமார என குறிப்பிடுவதை நிறைய பாடல்களில் பார்க்கலாம்..
கமலமாதுடன் என தொடங்கும் திருப்புகழில் பராசக்தியை எப்படியெல்லாம் அழைக்கிறார் என பார்ப்போம்..
1)குமரி, 2)காளி, 3)பயங்கரி, 4)சங்கரி, 5)கவுரி, 6)நீலி, 7)பரம்பரை, 8)அம்பிகை, 9)குடிலை, 10)யோகினி,11)சண்டினி, 12)குண்டலி, 13)எமதாயி,14)குறைவிலாள்,15)உமை 16)மந்தரி, 17)அந்தரி ,18)வெகு வித ஆகம சுந்தர
ஆதி சங்கரரை நினைத்தால் மஹா பெரியவாளின் உருவமோ அல்லது ஆதி சங்கரரின் சிலை உருவமோ அல்லது யாரோ வரைந்த வரைபடத்தின் உருவமோ தோன்றலாம்...
அருணகிரிநாதரை நினைத்தால் திருப்புகழ் வரிகளும் சந்தங்களும் போட்டோவில் உள்ள உருவங்களோ தோன்றலாம்..
ஆனால் ஆனால் நமது குருஜியை நினைத்தால் உருவத்தோடு உணர்வும் உண்டாகிறது முருகா..அவரோடு பேசிய பேச்சுக்கள் நினைவில் தோன்றுகிறது.. குருஜியை நேரில்.பார்க்காத அன்பர்கள் கூட அவர் பாடிய ராகத்தை திருப்புகழ் இசைவழிபாட்டின் மூலமாக பார்க்கிறார்கள்..
நம்மையெல்லாம் கரை சேர்க்க வேண்டும் என்று வாழ் நாட்கள் முழுவதும் அக்கரையோடும் அன்போடும் வழிகாட்டுகினார்கள். தற்போதும் இசைவழி பாட்டின் மூலம் வழி காட்டுகிறார்கள்..
நிலையாத சமுத்திரமான பாடல்
முருகா சரணம்
Utube Link for ANDROID and IPAD PHONE
No comments:
Post a Comment