அருணகிரிநாதர் நினைவு விழா நிறைவு
இசை வழிபாடு கணபதி ஹோமத்துடன் தொடங்கி 6 மணி
காலஅளவில்108 திருப்புகழ் பாக்களுடன் தொடர்ந்து பூஜா விதிகளுடன் நிறைவுற்றது.மும்பையின்பலபகுதிகளில்இருந்தும் அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் பெருமானை பல வாறாக எழுந்தருளச் செய்து அன்பர்களை பரவசப் படுத்தும் அருளாளர் கோபாலகிருஷ்ணன் இந்த வழிபாட்டில் பெருமானை செம்பொன் மயில் மீது எழுந்தருளச்செய்து
தரிசனம் தந்தருளி அன்பர்களை பரவசப் படுத்தினார்.
Utube Link for ANDROID and IPAD PHONE
https://www.youtube.com/watch?
மயிலை நீல நிறத்தில் ,பச்சை நிறத்தில் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் தரிசித்துள்ளோம்.அருணகிரியாருக்கு விசித்திரமான ஒரு ஏக்கம்.
"முந்து தமிழ் மாலை " பாடலில்
திந்திதிமி தோதி தீதித் தீதி, தந்ததன தான தானத் தான,
செஞ்செணகு சேகு ... (அதே ஒலி) என்றதாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும்
சிவந்தசிறியகால்களைஉடையதும்,விரித்ததோகையைஉடையதும்,பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வைகொண்டதும்,தீரமும், செம்பொன் நிறத்தையும்கொண்ட மயில்மீது,எப்போது தான் வரப்போகிறாயோ?
என்று விண்ணப்பிக்கிறார். அருணகிரியாரின் ஏக்கத்தை போக்க செம்பொன் மயில் மீது காட்சி அளித்தார் நம் வழிபாட்டில். நமக்கும் தான்.
Utube Link for ANDROID and IPAD PHONE
https://www.youtube.com/watch?
கோபாலகிருஷ்ணன் விளக்கவுரை (Audio)
குரு வந்தனம் கிருஷ்ணமூர்த்தி சார் குரலில்
Utube Link for ANDROID and IPAD PHONE
https://www.youtube.com/watch?
கோபாலக்ரிஷ்ணனின் கைவண்ண அலங்காரத்தில் சதகோடி சூரியனைப்போல் ஒளி வீசிய பெருமானுக்கு அன்பர்கள் தம் பங்குக்கு " கந்தர் அலங்காரம் " பாமாலைகளை சூட்டி மேலும் அலங்கரித்தனர்.
குரு பாலசுப்ரமணியம் சார் குரலில்
"தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே."
Utube Link for ANDROID and IPAD PHONE
https://youtu.be/_RdnSflsQzQ
மணி சார் குரலில்
"குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே."
"சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே."
Utube Link for ANDROID and IPAD PHONE
https://youtu.be/AcYqU-XKYSQ
நாராயணன் சார் குரலில்
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே.
Utube Link for ANDROID and IPAD PHONE
ராஜாமணி சார் குரலில்
"சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. "
கந்தர் அந்தாதி
Utube Link for ANDROID and IPAD PHONE
https://www.youtube.com/watch?
சில புகைப்பட காட்சிகள்
புகைப்படம் மற்றும் ஆடியோ உதவி அன்பர் மும்பை கே.ஆர்.பாலசுப்ரமணியம்.
வீடியோ உதவி ..அன்பர் கார்த்திக் சுப்ரமணியம்.
சென்னையில் குடியேறியும் என்றும் மும்பை நினைவில் இன்புறும் அருளாளர் அய்யப்பன் அனுப்பியுள்ள செய்தி
முருகா சரணம்
அன்பர்களே
அடியேனை வளர்த்து ஆளாக்கி தந்த மூதூர், மும்பை மாநகர் தான். அடியேனுக்கு திருப்புகழ் அமுதை ஊட்டி விட்ட தாயான நகர் அது. அந்த நகரில் நமது அருணை முநிவரின் நினைவு திருப்புகழ் விழா. நெஞ்சக் கன கல்லையும் உருக வைக்கும் எங்க பாலு சார் மாமி அவ்வளவு அழகாக பாடியுள்ளார்கள். பாருங்கள், கேளுங்கள். நம்முடைய குருஜியும் செந்திலாண்டவனும் அருள் மழையை விடாது பொழிந்து கொண்டே இருப்பார்கள்.
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
அன்பர்கள் அடுத்த வழிபாட்டிற்கு ஆவலுடன் கார்த்திருக்கிறார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?
முருகா சரணம்
It is a divine experience to see the images and listen to Thiruppugazh songs and Virutham. I feel blessed.
ReplyDelete