Thursday, 31 August 2017

அபிராமி அந்தாதி 16


                                                      அபிராமி அந்தாதி  16

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

தொகுத்து அளித்துள்ள அன்பரின் விளக்கம்.

கிளியே 

அழகும் குரலினிமையும் வாய்ந்த கிளி நாம் சொல்வதைத் திரும்பச்சொல்கிறது. நாம் சொன்ன வார்த்தைகளைக் கிளி பேசினால் நமக்குஎவ்வளவோ மகிழ்ச்சி.ஏன் தெரியுமா?கிளி நாம் சொன்னதைப்பேசுகிறது என்பது மட்டுமல்ல.அது நமக்காகப் பேசுகிறது.ஒரு குழந்தையிடம் அதன் தாய் பேசுவதைப்பாருங்கள்…! அந்தத் தாய் எவ்வளவு தேர்ந்த அறிஞராக இருந்தாலும்குழந்தையின் மழலை உச்சரிப்பைத்தான் தன் குரலில் பேசுவாள்.
சரியான சொற்களைத் தேர்ந்த உச்சரிப்பில் சொல்ல அவளுக்குத்
தெரியும்.ஆனால் அன்னை தன்னைப்போலவே பேசுகையில்
குழந்தை அடையும் குதூகலம் அவளுக்கு மிகவும் உகப்பானது.
அதுபோல் அம்பிகையாகிய அன்னை அடியவர்களின் சிரமங்களை
இறைவனிடம் எடுத்துச் சொல்வாளாம் .
“வேய்முத்துப் பந்தரின்கீழ் இறைவனும் நீயும் இருக்கையில் என் மனக்குறை சொன்னால் உன் வாய்முத்து உதிர்ந்திடுமோ”
என்று அடியவர் ஒருவர் கேட்டதும் இந்த உரிமையில்தான்.
எனவே அபிராமிபட்டர் அன்னையை கிளியே என்று அழைக்கிறார்.
கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே - 

கிளைஞர் என்பதுஅன்னையின் அடியவரைக் குறிக்கும். அன்னை ஒரு மரமெனில் அதன் கிளைகளாக அவளது அன்பர்கள் உள்ளனர்... எனவே அவளது அடியவரை கிளைஞர் என்று .குறிப்பிடுகிறார்.

கிளர்ந்தல் நல்ல எண்ணங்கள் உருவாகுதல் அது எவர் மனத்தில் உருவகுமோ அவர்கள் கிளைஞர்.எனவே கிளியே, கிளர்ந்து, என்பதற்கு பொருந்தும் வகையில் கிளைஞ்ர் என்ற சொல்லைப்போட்டு இருக்கலாம் 

கிளையென்றால் என்ன? ஒன்றிலிருந்து ஒன்று வருவது. அந்த ஒன்றிலிருந்து மற்றொன்று. இப்படி கிளைத்துக் கொண்டே இருக்கும். அதுபோல அன்னையைப் பற்றிய எண்ணம் கிளைத்துக் கொண்டே இருப்பவர்கள் கிளைஞர்கள்.

இளைஞர்கள் மனதில் ஒரு எண்ணம் உண்டானால் அது வேறொரு எண்ணத்திற்குத் தாவி...அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் 


ஆனால் கிளைஞர்கள் அம்பிகையைப் பற்றிச் சிந்தித்தால் அது அம்பிகை பற்றிய இன்னொரு கிளையாகி...அது மற்றொரு  கிளையாகி......


ஒளிரும் ஒளிக்கு இடமே - 

உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே!

அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே!அவ்வொளி ஒளிரும் இடமான அத்தனை உள்ளங்களின் ஆன்மாவும் நீயேதான்......ஒலியும் அவளே ஒளியும் அவளே
எம்பெருமாட்டியை த்யானம் செய்பவர்க்கு அவள் ஒளி வடிவாகக் காட்சி தருவாள். அவளுடைய தேஜோமய உருவத்தைத் தியானிக்கிறார்கள். அம்பிகை தன் ஜோதி வடிவத்தை அன்பர்கள் உள்ளத்தே நிறுத்தி மேன்மேலும் ஒளிவிடும் படி செய்கிறாள்.
" அகந்தை கிழங்கை அகழ்ந்தெடுக்கும்
தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே" - குமரகுருபரர்
தேவர்களே ஒளிமயமான திருஉரு உடையவர்கள் என்றால் அம்பிகையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? அவள் ஒளிவடிவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
449. காந்தி : காந்தி ரூபமாக இருப்பவள். பிறரை வசீகரிக்கும் மேனி ஒளி காந்தி எனப்படும்.
தேஜோவதி : தேஜஸ்ஸை ( ஒளியை )உடையவள்.
ஸ்வப்ரகாஸா : ஸ்வயம் ப்ரகாசமாக இருப்பவள். அதாவது தன்னிடமிருந்து வேறல்லாத ப்ரகாசத்துடன் கூடியவள்.
275. பானு மண்டல மத்யஸ்த்தா - சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவள்.
240;. சந்த்ரமண்டல மத்யகா - சந்திர மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்.
எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே -

எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே!
உன்னை என்னதான் சொல்லி வர்ணணை செய்தாலும், உன்னை நான் தியானம் செய்யும் செய்ய எண்ணும் போது நீ ஒன்றும் இல்லாதவளாக அரூபியாக அல்லவா காட்சியளிக்கிறாய்... மனிதர்கள் தங்கள் மனத்திற்கேற்ப பற்பல வடிவங்களில் அன்னையைக் கண்டாலும், ஆன்மீகத்தில் நாம் முன்னேறிச் செல்லச் செல்ல இறைவடிவம் என்பது ஒன்றுமில்லாததாக வெளியாகத் தென்படுவதை நாம் அறிய இயலும்...

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு நாத்திகர் இறைவனைக்காண்பி என்று கேட்ட பொழுது அவர் இறைவனைக் காற்றுக்குவமையாக்கினார். காற்றுக்கு வடிவமில்லை... ஆனால் அது எல்லாவிடத்திலும் பரவியிருக்கிறது. அதனை நம்மால் உணர முடிகிறது... அதையே நாம் வெவ்வேறு வடிவ பலூன்களில் அடைக்கும் பொழுது, காற்றின்வெவ்வேறு வடிவ நிலைகளைக் காண இயலுகிறது... இறைத் தன்மை என்பது இதுதான்.
வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே -
அண்டசராசரங்களையெல்லாம் படைத்த அகிலாண்ட கோடி நாயகிவெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து  அருள்பாலிக்கிறாள்..

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே 
என்னைப் போன்ற எளியவன், சிறியவன் அறிவுக்கும் எட்டுமளவுக்கு நீ உன்னைக் குறுக்கி என்னை உன்பால் ஈர்த்தாயே... பஞ்சபூதங்களாகி விரிந்த அன்னை, இந்த எளியவன் அறிவுக்கும் எட்டுமளவிற்கு சிறியவளானது ஓர் அதிசயமே 

பனைமரம் எவ்வளவு நெடியது? ஆனால், நம் சிறிய கண்களால் அதனை முழுவதுமாகக் காண்கிறோம் அல்லவா? அதுபோலவே, மகத்தான அந்த அம்பிகை அவளது அருள்பெற்ற அடிகளாரது கண்களுக்கு அளவான உருவமாகத் தன்னை சுருக்கிக்கொண்டு காட்சி தருகிறாள்.
அன்னையின் பெருங்கருணையைப் பெற பக்தி மட்டுமே போதுமானது... பக்தி வந்திடில் மற்றன எல்லாம் தொடரும்... 

                                                           பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 




                                                                                             

                                                   Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                         https://youtu.be/qUy8RmIn4Ws


                                                                 அன்பர்கள் இசைக்கிறார்கள் 
                                                                                                

                                                            Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                                                                                                                                                                                               https://youtu.be/OQ90HuIJ6lA




                                                                  அன்னை அபிராமியே சரணம் 




                                                                                முருகா சரணம் 

Monday, 28 August 2017

வள்ளிகல்யாணம் சுவாமிமலையில்


                                                                                                                                                                                                            வள்ளிகல்யாணம் சுவாமிமலையில் 

                               



இறையருளாலும் குருவருளாலும்,திருவருளாலும் அடுத்த வள்ளிகல்யாண வைபவம் அறுபடை வீடு சுவாமிமலையில் வரும்  டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் திருப்புகழ் அன்பர்களால் வெகு சிறப்பாக நடை பெற  உள்ளது வழக்கம்போல்  அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகன் வள்ளியம்மை அருள் பெற வேண்டுகிறோம். 

அழைப்பிதழ் 


                                                                                               


மற்ற தகவல்களை அருளாளர் ஐயப்பன் அளிக்கிறார்                                                       
அன்பர்களே 

பெங்களூரு அன்பர் திரு சேகர் அவர்கள் தினமும் வாட்ஸ் ஆப் மூலம் திருப்புகழ்  செய்திகளோடு இனி எத்தனை நாட்க்கள்  சுவாமிமலை வள்ளி கல்யாணத்திற்கு உள்ளன என்பதை தினமும்  நினைவு படுத்திக்க கொண்டே இருக்கிறார். அவர் கணக்குப் படி இன்னும் 106 நாட்கள் உள்ளன. ஆம்  நாட்கள் நொடி என பறந்து கொண்டே இருக்கின்றன. 

எந்த விழாவானாலும் அதில் சம்பந்தப்படட அன்பர்கள் அனைவரும் முழு மனதோடு பங்கு எடுத்துக் கொண்டால் தான் அது பூரணமான  பலனுள்ளதாக அமையும் . அந்த வகையில் அனைத்து எல்லா அன்பர்களும் சுவாமிமலை வள்ளி திருக்கல்யாண மஹோத்சவத்தில் கலந்து கொண்டு நம்மாத்து குழந்தை செல்வங்கள் அவரவர்கள் விருப்பப்படி நல்ல  வரன்கள் அமைய பெற்று ,  சகல செல்வ யோக  மிக்க பெருவாழ்வு வாழ செந்திலாண்டவனை வணங்குவோம் .

பல அன்பர்களுக்கு இந்த செய்தி போய் சேரவிலலை எனும்  செய்தி அடியேன் செவிக்கு வந்தது. அடியேனது லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கும் இந்த மெயில் போகிறது.

 அடியேனது விண்ணப்பம் எதுவெனில். இந்த மெயில் கிடைக்கப் பெற்ற அன்பர்கள். தங்கள் தங்கள் மெயில்  லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கும் இந்த மெயிலை பார்வேடு ( திரும்ப அனுப்புதல் ) செய்ய வேண்டும் என்பதே . தயவு செய்து இந்த உதவியை மறக்காமல் செய்ய வேண்டுகிறேன் . அழைப்பிதழ் இணைப்பில்  கீழே உள்ளது 
பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை   ஆகையினால் எதற்கும், நல்ல பல காரியங்கள் நடைபெற ,  பொருள் அவசியம். 

 ஆகையினால் , அன்பர்கள் ,  செந்திலாண்டவன் அவரவர்கள் மனதில் தோன்றி எவ்வளவு பணம் தர சொல்லுகிறானோ அவ்வளவு பணத்தை கீழ் காணும் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதன் விபரத்தை அடியேனிடம் மெயில் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

P. C. Gopi,
Account number : 10912124541
STATE BANK OF INDIA
KALPAKKAM BRANCH
IFS : SBIN0002219

திருக்கல்யாண மஹோத்சவத்திற்கு வருகை தரும் அன்பர்களின் வசதிக்காக  அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. 

கீழ் காணும் கூகிள் ட்ரைவ் எக்ஸெல் சீட்டில் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை  , நன்கொடை அனுப்பிய தொகை போன்றவற்றை எல்லா அன்பர்களும்,  பார்த்து , தாங்கள் விரும்பியதை அந்த அந்த சிஸ்ஸில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 

https://docs.google.com/spreadsheets/d/1OQM_vtub8mcDWNz7G00NMOpfryx3EoW0GF-Qf_rIDQI/edit?usp=sharing


                                         முருகா சரணம் 
                        


                                                                           








                                                                                                     

Sunday, 27 August 2017

சுப்ரமண்ய புஜங்கம் 5


                                                                           சுப்ரமண்ய புஜங்கம்   5



                                                       

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:

ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே |

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||


அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 

 ‘யதா(2)’.................................  .எப்படி, 

‘அப்தேஸ்தரங்கா’ ............   கடலின் அலைகள்,

‘துங்காஹா’...............   

 பெரியஅலைகள்  திருச்செந்தூரிலேகடற்கரைக்குவந்த உடனே  
   
‘லயம் யாந்தி’....

அலைகள் எல்லாம் அடங்கி, கரையில ஒதுங்கிடறது   இல்லையா? எப்படிஅந்த   மாதிரி அலைகள் லயம்    அடைகிறதோ                                                                                                                                                                                                  

ததைவ ........

அப்படியே என்னுடைய தரிசனத்தை செய்யும்  ஜனங்களுக்கு 
                                                   
‘ஆபாதஹ’ ..........................    எல்லா விதமான ஆபத்துகளும், 

ஸந்நிதெள’.......................     என்னுடைய சன்னிதியில்

 ‘லயம் யாந்தி’ ...................     லயத்தை அடைந்து விடும்

 ‘இதி’........................................  என்று 

 ஊர்மிபங்திஹி’ .................. 


 கடற்கரையிலே   வரிசையா  வந்து  மோதிக்கொண்டே இருக்கும்   அந்த அலைகளை   
                                                                                                                          
 ‘தர்சயந்தம்’ ..      காண்பிச்சிண்டு இந்த ஸுப்ரமண்ய ஸ்வாமி    கடற்கரையிலே இருக்கார்   

                                                      
‘தம் குஹம்’........................      அந்த  குஹனை

 ‘ஸதா’ .................................    . எப்பொழுதும், 

‘ஹருத்ஸரோஜே’ ................என் ஹ்ருதய தாமரையில்,

 ‘பாவயே’................................. த்யானம் செய்கிறேன்”, 


கடல் அலை போல துனபம் வந்தால், திரும்ப திரும்ப இப்பிறவியெனும் பெரும் கடல் சுழியில் விழாமல் இருக்க அழுதும் ஆ ஆ என இரங்கித் தொழுதும் பக்தியால் நெகிழ்ந்தும் அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று, 

பிறவி பெருங்கடல்  சுழியிலே போய் விழப் பெறுவதோ  நான் இனி புகல்வாயே முருகா, முத்து  எறி மீன புணரி கோ கோ என சுருதி கோ கோ என பொருத வேலாயுத பெருமாளே...

முத்துக்களையும் , மீனையும் வீசி எரியும் கடல் கோ கோ என்ற அலை வீச வேதம்.கோ.கோ என்று முழங்க கடற்கரையில் போர் புரியும் வேலாயுதப் பெருமாளே...

முத்து முத்தான  திருப்புகழ் கடலில் மூழ்கி கோ கோ என  கதறினாலும் சரி அல்லது  சுருதியான சுப்ரமண்ய புஜங்கத்தை கோ கோ என முழங்கினாலும் சரி முருகன் நமது பிறவிப் பிணி மற்றும் மனக்கவலையை போக்கிடுவான் என்று நமது குகஸ்ரீ குருஜி கூறுவது போல் உள்ளது


                                                                                             
                                                                Utube  Link for ANDROID  and   IPAD   PHONE 

                                                     https://www.youtube.com/watch?v=aJ1GtmTn5Po

                                                  முருகா சரணம் 

Wednesday, 23 August 2017

அபிராமி அந்தாதி - 15


                                                    அபிராமி அந்தாதி - 15
                                                                                                


தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே!!


அன்பரின் விளக்க உரை 


தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்- உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர்


 என்றென்றும் தாம் வெப்பமுடன், ஆங்காரத்தோடு இருந்தாலும், அவள் தன் மக்களான உலகின் மாந்தருக்கு அருளும் அருளோ குளிர்ச்சியானது... இதனால்தான் அவள் தமிழகத்தில் மழையின் பெயரால் மாரியம்மன் என்றழைக்கப் பட்டாள்.. வெம்மை நோயை நீக்கி குளிர்ச்சியான இன்பத்தைத் தருபவள் அன்னை அல்லவா? அதனால்தான் அபிராமிப் பட்டர் இங்கு  திருவருளை மிகக் குளிர்ச்சியானது என்று குறிப்பிடுகிறார்.

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் - இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்?


மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் - சிறந்த வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும்


அழியா முக்தி வீடும் அன்றோ - என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.

பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே - இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பசுங்கிளியே.
கிளியே' என்று அழைத்துப் பேசுகிறார் பட்டர். அந்தக் கிளி என்ன பண்ணுகிறது? இனிய பண்களைப் பாடுகிறது. நல்ல சுகந்தமான மணம் கொண்டு திகழ்கிறது.
அம்பாளைக் கிளி என்றதில் ஓர் விசேஷார்த்தம் உள்ளது. கிளியின் உடல் பச்சை. அன் மூக்கு சிவப்பு. சிவன் - சிவந்த மேனியன். அம்மையின் நிறம் பச்சை. ( மதுரை மீனாட்சி அம்மன் பச்சை நிறத் திருமேனியுடன், தனது திருக்கரத்தில் கிளியைக் கொண்டிருப்பதும் காண்க) இவ்விரண்டு நிறங்களும் கலந்திருப்பது சிவசக்தி சம்மேளனத்தைக் குறிக்கும். சிவனும், சக்தியும் சேர்ந்தே பூர்ண வஸ்துவாகின்றது.
ஸ்ரீ லலிதா த்ரீசதீ ( 215) - ஹ்ரீங்கார - பஞ்சரசுகீ - ஹ்ரீங்காரமாகிய கூண்டில் உறையும் பச்சைக் கிளி.

ஆதிசங்கரர் ( நவரத்ன மாலா) - " ஓங்கார - பஞ்சரசுகீ - ஓங்காரமென்னும் கூண்டில் வாழும் கிளி.
அதி கோமளமும், சியாமளமும், சந்த்ரகலை அணிந்ததுமான உன் திருஉருவை த்யானிப்பவனுக்கு எந்த சித்தி தான் சாத்தியமாகாது? அவனுக்கு சமுத்திரம் விளையாடும் குளம். இந்திரனுடைய நந்தவனம் விளையாடும் சோலையாகும். பூலோகம் பத்ராஸனமாகும். ஸரஸ்வதி பணிப்பெண்ணாவாள். ஸ்ரீ தேவி தானாகவே வந்து அவனது வேலைக்காரி ஆகின்றாள்.

அம்பாளின் மாதுர்ய வசனத்தை, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் " நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர்பர்த்ஸித கச்சபீ " என்கிறது. தன்னுடைய  பேச்சின்  இனிமையால்கச்சபீ எனப்படும் ஸரஸ்வதி தேவியின் வீணையையும் வென்றவள். .


வீணையில் ஸாஹித்யங்களிலன் ஒலி கேட்காது. ஸ்வர ஒலி மட்டும் தான் கேட்கும். ஆனால் சரஸ்வதி நாத ரூபிணி, சப்தரூபிணி என்பதால் அவள் வீணையில் அக்ஷர ஒலியும், ஸ்வர நாதத்துடன் சேர்ந்து ஒலிக்கும். ஆனாலும் அவ்வக்ஷர ஒலி கிளி, சிசு, இவர்களது மழலை போலவே ஸ்பஷ்டமாகப் புரியாது. இப்படிப்பட்ட ஸரஸ்வதீ தேவியின் வீணை ஒலியையும் தேவியின் பேச்சின் இனிமை வென்றுவிடுகிறது.
இந்த வாக்கினிமையை விளக்குவதாக ஸௌந்தர்ய லஹரீ ( 66) வது பாடல் ஸ்லோகம் " விபஞ்ச்யா காயந்தீ " - சொல்கிறது. ஸரஸ்வதீ தேவி வீணை வாசிக்கும் போது,அதன் இனிமையை ரசித்த தேவீ "ஸபாஷ்" என்று வாய்விட்டு கூற முற்பட்டதுமே, தேவியின் வாக்கின் இனிமையினால் வெட்கிய சரஸ்வதீ தன் வீணையை உறையிலிட்டு மூடினாள் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட ஸ்யாமளை என்கிற அந்தக் கிளி என்னெல்லாம் தருகிறதுன்னு கேட்டால், வேண்டுவன எல்லாம் தருகின்றது. ஆனால், எதை வேண்டுவது? அந்தப் பைங்கிளியான அம்பிகையிடம், என்ன வேண்டுவது? எது கேட்டாலும் தந்துவிடும் அந்தத் தாயிடம், என்ன கேட்க வேண்டும்? சொல்லித் தருகிறார் பட்டர். செல்வம் கேட்கலாமா? குபேர நிதியையே அல்லவா கொடுத்து விடுவாள்? ஆனால், என்ன செல்வம் கேட்பது? பட்டர் அழகாக சொல்லுகிறார் : அப்பா, வெகு கஷ்டப் பட்டு, பல கோடி காலம் தவங்கள் செய்து, சாதாரணமான செல்வமா பெறுவது? இல்லை. நீ பெறும் செல்வம் எல்லா செல்வங்களையும் விடவும் மிகச் சிறந்த செல்வமாக அல்லவா இருக்க வேண்டும்? பொன்னும், மண்ணும் கேட்டு என்ன பெறப் போகிறாய்? மண்ணளிக்கும் செல்வத்தினால் என்ன பயன்? அது காலப் போக்கில் அழிந்து விடும். அழியாத செல்வம் அல்லவா நீ பெற வேண்டும்? விண்ணவர் செல்வம் அல்லவா நீ கேட்க வேண்டும்? அந்த தேவர்கள் அனுபவிக்கும் வீடுபெறு அல்லவா நீ கேட்க வேண்டும்? அம்பிகையிடம், அவளையே அல்லவா கேட்க வேண்டும்? அவளது பொற் பாதங்களையே அல்லவா கேட்க வேண்டும்? இதனை விட்டு விட்டு, எனக்கு பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெல்லாம் கேட்பது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது என்று பேசுகிறார் பட்டர் பிரான்
!இதே கருத்தினையே, பெரிய பெரியவாளும் நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறார். அந்த அம்பிகையிடம், எதுவும் கேட்காமல், அவள் அருள் ஒன்றை மட்டுமே கேட்பதுதான் சிறந்தது என்று சொல்லுவார் பெரியவாள். அதற்கு அழகாக உதாரணம் ஒன்று சொல்லுவார் : "ஒரு குழந்தை அழுகிறது. அதற்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. சாக்லேட் கேட்டு அழுகிறது. அம்மா சிறிது நேரம் பார்ப்பாள். பிறகு, போனால் போகிறது என்று கொடுத்து விடுவாள். அந்த அம்மாவிற்கும் தெரியும் - இந்த இனிப்பு குழந்தைக்கு ஆகாது என்று. ஆனாலும், குழந்தை விடாமல் அழுதால், அவளும்தான், என்ன பண்ணுவாள்? இனிப்பையும் கொடுத்துவிட்டு, அதனால் அந்த குழந்தை கஷ்டப்படும்போது மருந்தும் கொடுப்பாள். அந்த மருந்து கசக்கத்தான் செய்யும். வேறே என்ன செய்வது? அந்தக் குழந்தை போல்தான் நாமும் இருக்கிறோம். மனமுருகி ப்ரார்த்தித்துவிட்டு, இது கொடு , அது கொடு என்று ஏதேனும் கேட்டு விடுகிறோம். அந்த அன்னைக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று? அவளைப் ப்ரார்த்தித்துவிட்டு, பேசாமல் இருந்து விட்டால், அவளே பார்த்துக் கொள்வாளே" என்று சொல்வார்.
'சிவன் அவன் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " என்று பேசுவார் மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில். இதற்குப்  பொருள் : அவனைப் பணியவும் அவன் அருள் இருந்தால்தான் முடியும் என்பது. இதற்கு, இன்னொரு பொருளும் உண்டு என்று தோன்றுகிறது. அவன் அருளைப் பெறுவதன் நோக்கமே, அவன் தாள் பணிவது மட்டும்தான் என்றும் பொருள் கொள்ளலாம் போலிருக்கிறது!அந்த அபிராமியைப் பணியும் வரம் மட்டுமே நாமும் கேட்போம்!! அவள் தாளினைப் பணியும் வரம் மட்டுமே நாமும் பெறுவோம்!
அபிராமி சரணம் சரணம்!!


                                                           பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 

                                                                                                 


                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                      https://www.youtube.com/watch?v=3GaZ7Fi7vlU


                                                                   அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                           

                                                                                                 

                                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                         https://www.youtube.com/watch?v=RsaA7vbn_VY

                                                                                                                                                                                                                                                                    முருகா சரணம்                

Monday, 21 August 2017




அருணகிரிநாதர் நினைவு விழா   நிறைவு 

                                

இசை வழிபாடு  கணபதி ஹோமத்துடன் தொடங்கி  6 மணி 
 காலஅளவில்108 திருப்புகழ் பாக்களுடன் தொடர்ந்து பூஜா விதிகளுடன் நிறைவுற்றது.மும்பையின்பலபகுதிகளில்இருந்தும் அன்பர்கள் பெருமளவில்  கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் பெருமானை பல வாறாக எழுந்தருளச் செய்து அன்பர்களை பரவசப் படுத்தும் அருளாளர் கோபாலகிருஷ்ணன் இந்த வழிபாட்டில் பெருமானை செம்பொன் மயில் மீது எழுந்தருளச்செய்து  
தரிசனம் தந்தருளி அன்பர்களை பரவசப் படுத்தினார்.




                                                        Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                              https://www.youtube.com/watch?v=UeViWBFAHck

மயிலை நீல நிறத்தில் ,பச்சை நிறத்தில் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் தரிசித்துள்ளோம்.அருணகிரியாருக்கு விசித்திரமான ஒரு ஏக்கம்.


"முந்து தமிழ் மாலை "    பாடலில்                                                                                                      

திந்திதிமி தோதி தீதித் தீதி, தந்ததன தான தானத் தான,
செஞ்செணகு சேகு
 ... (அதே ஒலி) என்றதாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும்
 சிவந்தசிறியகால்களைஉடையதும்,விரித்ததோகையைஉடையதும்,பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வைகொண்டதும்,தீரமும், செம்பொன் நிறத்தையும்கொண்ட மயில்மீது,எப்போது தான் வரப்போகிறாயோ?


என்று விண்ணப்பிக்கிறார். அருணகிரியாரின் ஏக்கத்தை போக்க செம்பொன் மயில் மீது காட்சி அளித்தார் நம் வழிபாட்டில். நமக்கும் தான்.



                                                                                                       




                                                        Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                 https://www.youtube.com/watch?v=ESSQMzAs_B4

                                                       கோபாலகிருஷ்ணன் விளக்கவுரை (Audio)
                                                 https://www.youtube.com/watch?v=4U2vXFfKwRc

குரு வந்தனம் கிருஷ்ணமூர்த்தி சார் குரலில் 


                                          
      



                                                        Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                              https://www.youtube.com/watch?v=-dCjzRuslv0&feature=youtu.be

கோபாலக்ரிஷ்ணனின் கைவண்ண அலங்காரத்தில் சதகோடி சூரியனைப்போல் ஒளி வீசிய பெருமானுக்கு அன்பர்கள் தம் பங்குக்கு " கந்தர் அலங்காரம் " பாமாலைகளை சூட்டி மேலும் அலங்கரித்தனர்.

                                                                                                                           

                                               குரு பாலசுப்ரமணியம் சார் குரலில்                                                                                      
"தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
 பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
 மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
 சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே."


                                                      


                                                                   

                                   


                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                     https://youtu.be/_RdnSflsQzQ


                                                                         மணி சார் குரலில் 


"குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த

  இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
  அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்
  சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே."


"சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்
  உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
 குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
 களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே."


                                                                       


      


                                                        Utube  Link for ANDROID  and   IPAD   PHONE
                                                                https://youtu.be/AcYqU-XKYSQ



                                                                நாராயணன் சார் குரலில் 



பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே.



                                                                                                                                            
       


                                                        Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                           https://www.youtube.com/watch?v=8LoZhO_utow&feature=youtu.be
                                     
                                                           ராஜாமணி சார் குரலில் 

     "சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
     சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
     சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
     சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. "

                                                        கந்தர் அந்தாதி                                                             


                          


                                                              Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                       https://www.youtube.com/watch?v=X-SVQxAEF-Y



சில புகைப்பட காட்சிகள் 


                                                                                                 


                                                                                                        
                                                                   
                                                                                 
                                                                            

                                                                                


                                                         

புகைப்படம் மற்றும் ஆடியோ உதவி அன்பர்  மும்பை கே.ஆர்.பாலசுப்ரமணியம்.

வீடியோ உதவி   ..அன்பர் கார்த்திக்  சுப்ரமணியம்.                     

சென்னையில் குடியேறியும் என்றும் மும்பை நினைவில் இன்புறும் அருளாளர் அய்யப்பன் அனுப்பியுள்ள செய்தி 

                                                      
முருகா சரணம்
அன்பர்களே
அடியேனை வளர்த்து ஆளாக்கி தந்த மூதூர், மும்பை மாநகர் தான். அடியேனுக்கு திருப்புகழ் அமுதை ஊட்டி விட்ட தாயான நகர் அது. அந்த நகரில் நமது அருணை முநிவரின் நினைவு திருப்புகழ் விழா. நெஞ்சக் கன கல்லையும் உருக வைக்கும் எங்க பாலு சார் மாமி அவ்வளவு அழகாக பாடியுள்ளார்கள். பாருங்கள், கேளுங்கள். நம்முடைய குருஜியும் செந்திலாண்டவனும் அருள் மழையை விடாது பொழிந்து கொண்டே இருப்பார்கள்.
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்



அன்பர்கள் அடுத்த வழிபாட்டிற்கு ஆவலுடன் கார்த்திருக்கிறார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?


முருகா சரணம்