அபிராமி அந்தாதி வரிசை ...8
பாடல்
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
அன்பரின் விளக்கவுரை
இப்பாடல் அபிராமி அந்தாதியின் எட்டாவது பாடல் என்பது சிறப்புஅம்சம்.
துர்கா தேவிக்கு உரிய திதி" அஷ்டமி "
துர்க்கம் - அகழி.
கடலின் நிறம் - நீலம்.
கடல்போல்எங்கும்காளியானநீலியாகஇருந்துநம்மைக்காப்பாற்றுகிறாள்,,
அபிராமியே - துர்கா என்று கூறுகிறார்.
துர்க்கம் - அகழி.
கடலின் நிறம் - நீலம்.
கடல்போல்எங்கும்காளியானநீலியாகஇருந்துநம்மைக்காப்பாற்றுகிறாள்,,
அபிராமியே - துர்கா என்று கூறுகிறார்.
இந்தப் பாடலை நாம் அவர் செய்யும் துர்கா த்யானம் என்று கொள்ளலாம். அருமையான பாடல்! மகிடன் தலை மேல் நின்ற கோலத்தில் அம்பிகை துர்கா என்றும் சாமுண்டி என்றும் அழைக்கப்படுகிறாள்.
அம்பிகையின் வடிவங்கள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் ஒன்றான துர்கை வடிவத்தைப் பட்டர் இங்கு சுட்டியுள்ளார்.
போகேச பவானி,
புருஷேச விஷ்ணு,
கோபேச காளீ,
ஸமரேச துர்கா,
ஆலயங்களில், சிவமூர்த்தியின் வடக்குபுற சுவற்றில் கோமுகிக்கு மேல், சங்கு சக்கரம், அபயம், வரதம் என்ற நான்கு திருக்கரங்களும் கொண்டு, கரண்ட மகுடம், பருத்த ஸ்தனங்களும், திருவடியின் கீழ் மகிடன் தலையும் இருக்கும் துர்கா தேவியைக் காணலாம். இவள் - மோஷ பிரதாயினி, சத்ருவிநாசினி. ஜீவர்களின் சகல அரிஷ்டங்களையும் (அரிஷ்டம்னா கஷ்டங்களை) போக்குபவள் - எனவே துர்கா. ( துர்கமன் என்ற அசுரனை வதம் செய்தவள்
சுந்தரி
அபிராமியே, லலிதா மஹாதிரிபுர சுந்தரியாக விளங்குகிறாள். இந்திரனின் யாகத்தில் தோன்றிய பேரழகு வடிவம் கொண்டவள். எனவேதான் சுந்தரி
எ'ந்தை துணைவி (என்+தந்தை )
அம்பிகை கன்னிகையாக இருக்கும்வரை பாண்டாசுரனை வதம்செய்ய முடியாது என்பதால் தேவர்கள் யாவரும் ஒன்றாக சென்று சிவபெருமானிடம் அம்பிகையை மணம்புரிந்து அருளும்படி வேண்ட, அவரும் சுந்தரியாகிய பேரழகு மிக்க அம்பிகைக்கு இணையாக ஸ்ரீகாமேஸ்வரர் என்னும் வடிவம் எடுத்து அம்பிகையை மணம் புரிந்தார்.
எனவே அவள் என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவி.
கடந்த பாடலில் சிவன் வந்து வணங்கும் சேவடிகளைக் கொண்ட அபிராமியே என்று விளிக்கும் அபிராமிப் பட்டர், இப்பாடலில் நீ என் தந்தையின் துணையாக நிற்கிறாய் என்று போற்றுகின்றார்.
அபிராமி பட்டர். 'என் தலைவி' என்று சொல்லவில்லை. 'எந்தை துணைவி' என்று சொல்வது மிகவும் விசேஷம். ரொம்பவும் உரிமையாக, 'இவன் என் நண்பன்' என்று சொல்வது போல சொல்கிறார் பட்டர். என்றும் துணையாக நிற்பவள் இல்லையோ இவள்.
பேரழகு கொண்டு என் தந்தைக்குத் துணையாய் என்றென்றும் நிற்பவளே... (மனைவி வேறு துணைவி வேறு அல்ல என்பதை இவ்விடத்து நினைவிற்கொள்க...இருவரும் ஒருவரே.
வாழ்க்கை என்பதே வினைநீக்கும் ஏற்பாடுதான்.அது எவ்விதம் நிகழ்கிறது என்பதில்தான் எல்லாம் நிகழ்கிறது. தன்னுடைய உயிரின்
வினைகள் நீங்கப்பெற வேண்டும் என்னும் விருப்புணர்வோ
விழிப்புணர்வோ இல்லாமலும் கூட எத்தனையோ பிறவிகளாய்
பாசமாம் பற்றை வளர்த்து வருகிறோம். செவ்வண்ணப் பேரழகியாம்
அபிராமி எவ்வண்ணம் அந்த வினைகளை அகற்றுகிறாள் என்பதை
சுவைபடச் சொல்கிறார் அபிராமி பட்டர்.

அவளைப் பேரழகி என்ற கையோடு “எந்தை துணைவி”என்றும்
அழுத்தம் தருகிறார்.சிவபெருமான் பேரழகனாகவும் இருக்கிறான்.
அகோரமூர்த்தியாகவும் இருக்கிறான். அவருக்கேற்ற பேரழகி
என்றும் சொல்லலாம்.அவரைவிடப் பேரழகி என்று கொள்ளலாம்.
அழுத்தம் தருகிறார்.சிவபெருமான் பேரழகனாகவும் இருக்கிறான்.
அகோரமூர்த்தியாகவும் இருக்கிறான். அவருக்கேற்ற பேரழகி
என்றும் சொல்லலாம்.அவரைவிடப் பேரழகி என்று கொள்ளலாம்.
என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி
வந்தரி
வாழ்க்கை என்பதே வினைநீக்கும் ஏற்பாடுதான்.அது எவ்விதம் நிகழ்கிறது என்பதில்தான் எல்லாம் நிகழ்கிறது. தன்னுடைய உயிரின்
வினைகள் நீங்கப்பெற வேண்டும் என்னும் விருப்புணர்வோ
விழிப்புணர்வோ இல்லாமலும் கூட எத்தனையோ பிறவிகளாய்
பாசமாம் பற்றை வளர்த்து வருகிறோம்.
இவ்வுலகப் பற்றுதலை ஒழிக்க அபிராமியின் அருளை வேண்டும் பட்டர், பிரம்மனுக்கும் சிவனுக்கும் நடந்த போர், மகிஷாசுரனை வதைத்த காளியின் உக்கிரம், என்று அங்கே இங்கே சுற்றி விஷயத்துக்கு வருகிறார். பற்றுதலை ஒழிக்க வேண்டுபவர் சுற்றி வளைப்பானேன்? அழகி, சிவப்பு நிறத்தவள் என்று குளிர்மொழி சொல்லி நேரே கேட்க வேண்டியது தானே? பிரம்ம-சிவ-மகிஷாசுரப் போர்களின் அடிப்படைக் காரணத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். பற்றுகளினால் உருவாகும் நோய்களில் மோசமானது ஆணவம். ஆணவம் அறிவை மறைக்கும் நோய். பிரம்ம-சிவ-மகிஷாசுரப் போர்களின் காரணம் ஆணவம். பொய்ப்பகட்டின் மேலிருந்த பற்றினால் வந்த ஆணவம் பிரம்மனுக்கு; மெய்ப்பகட்டினால் வந்த ஆணவம், கோபம் சிவனுக்கு; மகிஷாசுரனுக்கோ தன்னை எவராலும் வெல்ல முடியாத அந்தஸ்தினால் வந்த ஆணவம். பிரம்ம-சிவ-மகிஷாசுர போர்க்கதைககளில் தொலைந்து போகாமல், பாடலுக்கு வருகிறேன். இவர்களின் ஆணவத்தையெல்லாம் அறுத்தெறிந்தவள் யார்? அபிராமி. அதனால் தான் பற்றினை ஒழித்தெறிய பார்வதியை வேண்டுகிறார். முந்தைய பாடல்களில் 'பாசாங்குசம்' கொண்டவள் என்று வர்ணித்து விட்டார். பாசத் தொடர்களை வந்து அரி, சுந்தரி என்று இந்தப் பாடலில் வேண்டுகிறார். 'பாசாந்தரி' என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வணங்கப்படுகிறாள் திருபுரசுந்தரி.
சிவபெருமான்பற்றுகளை அறுக்கும் பரமன். வலிக்க வலிக்க அகற்றுவார்.

"பாசமாம்பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனின்" (சிவபுராணம் ) காரியம் அப்படி.
குழந்தை உறங்கும் நேரத்தில் அதன் துயிலைக் கலைக்காமல்அது முகத்தைக்கூட சுளிக்காமல், மெதுவாய்..மிக மெதுவாய் நகங்களைக் களையும் அன்னைபோல் வினைகளைக் களைகிறாளாம் அபிராமி.
மஹிடன் தலைமேல் அந்தரி
மனமென்னும் அந்தரங்கத்தில் நிறைபவளாய்,ஆகாயமென்னும் அந்தரத்தை ஆள்பவளாய் இருக்கும் அபிராமி,மகிடனின்தலைமேல் திருவடி பதித்துஅவனுடைய அகந்தைக்கு மட்டுமின்றிஅறியாமைக்கும் அந்தமாய் நிற்கிறாள்.
நீலி
சரபோஜி மன்னர் அபிராமி பட்டரிடம் “சுவாமி! இப்பாடலில் தாங்கள் அன்னையை 'நீலி' என்றழைத்தது மட்டுமன்றி 'நீலநிற மேனியள்' என்று விளக்கமும் தந்துள்ளீர்கள். அவள் கருமை நிறமுள்ளவள் அல்லவா! நீல நிறம் தோன்றியது எவ்வாறு?” என்று பணிவுடன் வினவினார்.
புன்னகைத்த பட்டர் கூறினார்.
“மன்னா! தங்கள் சந்தேகம் நியாயமானதே. அம்பிகையை நீலியாக வழிபடும் தாத்பர்ய மிகப் பழமையானதும், அதீதமான சக்தி மிக்கதும் ஆகும். மேலும் விளக்கமாகக் கூறுகிறேன்,” கேளுங்கள்,” என்றவர் தொடர்ந்தார்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வந்த நஞ்சை சிவன் பருகினார். நஞ்சுண்டேஸ்வரர் ஆகிய சிவபெருமான். அதை பார்வதி தடுத்த போது, சுவாமியின் கழுத்தில் தங்கி விட்டது. 'ஸ்ரீ' என்ற சொல்லுக்கு 'விஷம்' என்ற பொருளும் உண்டு. எனவே அன்றுமுதல் சிவன் 'ஸ்ரீ கண்டர்' ஆனார். அப்போது பார்வதிதேவியின் உடலிலும் நீல நிறம் பரவியது. அந்த உடலில் இருந்து தாராம்பிகை என்ற தேவியைப் படைத்தாள் பார்வதி. அப்போது தான் வானமும், கடலும் நீலமானது. அந்த தாராம்பிகையே 'நீலி' எனப்பட்டாள்.
அவளிடம் பார்வதி, “உனக்கு நான் வசிக்கும் ஸ்ரீபுரத்தில் 'மனோஸாசலம்' என்ற இடத்தை உருவாக்கி தருகிறேன். அங்கே அமர்ந்து நீ அருளாட்சி செய்வாயாக!” என்று ஆசி கூறினாள். அங்கு தங்கிய தேவிக்கு பணிவிடை செய்ய ஆயிரம் தோழிகள் வந்தனர். தாராதேவியாகிய நீலியை 'நீல சரஸ்வதி' என்றும் 'தாரிணி' என்றும் சொல்வர்.
தாரா என்பதில் இருந்தே 'தாரக மந்திரம்' என்ற சொல் பிறந்தது.
தாராதேவி உதித்த ராத்திரியே காளராத்திரி எனப்படுகிறது. தாராவே திரேதாயுகத்தில் ராமராக அவதாரம் செய்தாள். பிரம்மனே நீல சரஸ்வதியை வணங்கி வேதத்தின் உட்பொருளை அறிந்தார்.
தாராதேவி உதித்த ராத்திரியே காளராத்திரி எனப்படுகிறது. தாராவே திரேதாயுகத்தில் ராமராக அவதாரம் செய்தாள். பிரம்மனே நீல சரஸ்வதியை வணங்கி வேதத்தின் உட்பொருளை அறிந்தார்.
அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே
ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் -
"வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே"
நான்முகனின் அகந்தை அழியுமாறு அவனுடையசிரசினை சிவபெருமான் கொய்தார்.அந்தபிரம்மகபாலத்தைஅம்பிகைதன்னுடையகைகளில் கைகளில்கொண்டிருக்கிறாள் .அவளுடையதிருவடிகளைநான்என்மனத்தில்கொண்டிருக்கிறேன் என்கிறார் அபிராமி பட்டர்.
கந்தரி என்ற சொல்லை கம்+தரி என்று பிரிக்க வேண்டும். கம் என்றால் தலை என்று பொருள். கம் தரி கைத்தலத்தாள் என்றால் தலையைக் கையில் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். தலை இங்கே தலையோட்டைக் குறிக்கிறது
ஆரணம் என்றால் வேதம் என்று பொருள். ஆரணத்தோன் என்று பிரம்மனுக்கு ஒரு பெயர் உண்டு. பிரம்மனுடையை தலையோட்டை சிவனிடமிருந்து வாங்கி அவரைக் காப்பாற்றியவள் என்ற பொருளில் ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் என்று பொருள் கொள்ளலாம்.
பாம்பை மாலையாக அணிந்தவன் என்ற பொருளில், ஆரணத்தோன் என்று சிவனுக்கும் பெயர் உண்டு. பிரம்மனின் தலையோடுகளை மாலையாக அணிந்தவன் என்ற பொருளில் கந்தரி ஆரணத்தோன் என்று சிவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. எப்படிப் பிரித்தாலும் தவறில்லை; பொருட்சுவை தான் கூடுகிறது. தலையோட்டை வாங்கிக் கொண்டு சிவனைக் காப்பாற்றியவள் என்பதே சாரம்.
மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.
இருவேறு உண்மைகள் இப்பாடலில் வெளிப்படுகின்றன. துன்பத்திற்கடிப்படை பாசம், அந்த பாசத்தை அறுத்துவிடவேண்டி அன்னையிடம் முறையிடுகிறார். மேலும் இவ்விடத்து எதற்காக அகந்தை கொண்ட மகிடனைப் பற்றிய நினைவூட்டல்... ? தாயே... அன்று அகந்தை
கொண்ட மகிடனை அழித்தாயே... இன்றைக்கு என் மனத்தில் இருக்கின்ற அகந்தைகளை அழித்துவிடம்மா என்று வேண்டுகிறார்... பிரம்மனின் அகந்தையை அழித்தவள் அவனது ஒரு திருமுகத்தைத் தன் கையில் தரித்தாள்... பிரம்மனை சக்தியானவள் படைக்கும் போது
அவனுக்கு ஐந்து திருமுகங்களைத் தந்தருளினாள்... ஆனால் பிரம்மதேவனுக்கேற்பட்ட செருக்கினை அவரிடமிருந்து பிரித்தெடுக்க அவனது ஒரு திருமுகத்தைக் கொய்து தன் கையில் தரித்தாள்... பிரம்மனின் அகந்தைக்கும், மகிடனின் அகந்தைக்கும் என்ன வேறுபாடு... ? மகிடன் தனக்கேற்பட்ட தலைச்செருக்கால் மானுடர்க்கும், தேவர்க்கும் சொல்லொண்ணா துன்பமளித்தான்.. தன் அன்பர்களை அவனிடமிருந்து காக்க அன்னை துர்க்கையாக அவதரித்தாள் அவனை அழித்து அருட்செய்தாள்...
ஆனால் பிரம்மனின் அகந்தையால் யாருக்கும் துன்பமேற்படவில்லை. அது அவருக்கே துன்பமாய் இருந்தது... கர்வம் தலைக்கேறியதால் யாரையும் மதியாதிருந்த அவரது செருக்கினை அடக்கியருள அவனது ஒரு திருமுகத்தை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டாள் அன்னை.... எனவே எனது அகந்தையால் எனக்கும் துன்பம் வேண்டாம், அது மிகுதிப்பெற்று அயலாருக்கும் துன்பம் வேண்டாம், பாசத்தின் தொடர்ச்சியால் வருந்துன்பமும் எனக்கு வேண்டாம் தாயே... என்னைக் காத்தருள்.... என்பது அபிராமிப் பட்டரின் வேண்டுதல்.

அபிராமி சரணம் சரணம்..
குருஜி கற்பிக்கிறார்
Utube Link for ANDROID and IPAD PHONE
Utube Link for ANDROID and IPAD PHONE
No comments:
Post a Comment