சுப்ரமண்ய புஜங்கம்...1
ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கம் திருப்புகழ் அன்பர்களால் பல பகுதிகளில் வைகாசி விசாகம் வழிபாட்டின் முன்பாக இசைக்கப்பட்டு வருகிறது,
முருகப்பெருமானின் அருளாசியுடன் புஜங்கத்தைபொருளுடன் தொடர்ந்து அன்பர்களுக்கு அளிக்க விருப்பம் கொண்டுள்ளோம்.
முருகப்பெருமானின் அருளாசியுடன் புஜங்கத்தைபொருளுடன் தொடர்ந்து அன்பர்களுக்கு அளிக்க விருப்பம் கொண்டுள்ளோம்.
முதலில் சுப்ரமண்ய புஜங்கம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.
ஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச் செய்தார். இந்நோயால் இவர் தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவப் பரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி 'ஜயந்தி புரம்' எனும் திருத்தலத்தில் சூரபத்மனை வென்றழித்துவிட்டு, 'ஜய வின்ப வடிவமாய்' விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.
மறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி புரத்தை அடைந்தார். அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே 'பாம்பு' எனும் பொருளைத் தரும் 'புஜங்கம்' என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்திலாதிபன் திருவடிக்குச்
சூட்டினார். இது தான் 'திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்' தோன்றிய வரலாறாகும்.
நம் வலைத்தளத்தில் அத்தகைய அன்பர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்கள் படைப்புக்களை வெளியிடுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
அத்தகைய ஓர் அன்பர் சுப்பிரமணிய புஜங்கம் அவரை எப்படி ஆட்கொண்டது என்ற முன்னுரையுடன் தொடங்குகிறார்.
"சுவாமி மலை வள்ளி-முருகன் திருக்கல்யாணம் என்ற அழைப்பிதழை பார்த்தவுடன் நாட்களை எண்ணத்தோன்றியது. அந்த எண்ணம் வருவதற்கு ஒருவாரம் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்பர் ஒருவர் இல்லத்தில் திருப்புகழ் இசை வழிபாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அளித்தான் முருகன்...அங்கு திருப்புகழ் இசை வழிபாட்டிற்கு செல்லும்போது சுப்ரமண்ய புஜங்கத்தை கேட்கவைத்தான் முருகன் ...திரும்ப திரும்ப படிக்க வைத்தான்...அந்த ஸ்லோகத்தில் உள்ள ஒத்த வரிகள் திருப்புகழில் உள்ளது போல் தோன்றியது...
அருணகிரிநாதரை நாம் கண்ணால் காணவில்லை..
ஆதி சங்கரரை கண்ணால் பார்க்கவில்லை..
ஆனால் இரு மஹான்களின் வாக்குகளையும் , மந்திரமாக கேட்கமுடிகிறது....
அதில் ஓர் ஒற்றுமை இருப்பதையும் காண முடிகிறது.
ஆதி சங்கரர் ஜெபித்த சுப்ரமண்ய புஜங்கத்தின் முதல் ஸ்லோகத்தை நமது குருஜி அவர்கள் திருப்புகழ் இசைவழிபாடு ஆரம்பத்தில் விநாயகர் ஸ்துதியில் அமைத்துள்ளார்கள்..."
ஸ்லோகம்
ஸதா பால ரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ
மஹா தந்திவக்த்ராயி பஞ்சாஸ்ய மாந்யா
விதீந்த்ராதி ம்ருக்யா கணேசா பிதாமே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி:
விளக்கம்
'ஸதா' ன்னா எப்பொழுதும்...
'பாலரூபாபி' ன்னா குழந்தை வடிவாக இருப்பவர்...
எப்பொழுதும் குழந்தை மாதிரி மனஸை உடையவர்..
'விக்னாத்ரீ ஹந்த்ரீ'
விக்னம் என்ற மலையை பொடி பொடி ஆக்குபவர்.அருணகிரியார் கூற்று
"அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
"அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளளே ..
'மஹாதந்தி வக்த்ராபி ' பெரிய ஒரு தந்தம் இருக்கு அப்படீன்னா யானை முகம் னு அர்த்தம்.
'பஞ்சாஸ்ய மாந்யா'
'பஞ்ச 'னா அகன்றனு அர்த்தம்...ஆஸ்யம் னா வாய் ..அகன்ற வாயினை உடையஇன்னொரு அர்த்தம் பஞ்சாஸயம் னா சிங்கம்.
சிங்கத்தை கனவுல கண்டாகூட யானை பயந்து பிளிறுமாம்..இதைத்தான் சிம்ம சொப்பனம் அப்படினு சொல்வார்கள் போல் உள்ளது..ஆனால் இவர் யானையாக இருந்தாலும் சிங்கமெல்லாம் இவரை மதிக்கிறது என்று அழகாக சொல்கிறார்.
பஞ்சாஸ்யம் அப்படீங்கறதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.
ஐந்து முகங்களை படைத்தவர்ன்னு அர்த்தம்..ஐந்து முகங்களை படைத்தவர் சிவபெருமான்.
1) சத்யோஜாதம்.
2)வாமதேவம்
3) அகோரம்
4)தத்புருஷம்
5)ஈசான்யம் அப்படீன்னு ஐந்து முகங்களை படைத்த சிவபெருமானும் வணங்கும்....
(முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா)
விதீந்த்ராதி ம்ருக்யா'
விதி ன்னா பிரும்மா, இந்த்ராதி ன்னா இந்திரன்..பிரும்மா, இந்திரன் எல்லோரும் தேடிவந்து வணங்கும் பிள்ளையார்.
கணேசா பிதாமே...கணேசன் என்ற பெயர் கொண்டவர்..
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி;..
அவர் எங்களுக்கு மங்களங்களை .ஐஸ்வர்யங்களை ..கொடுக்கட்டும்
எப்போது நினைத்தாலும் சந்தோஷத்தை கொடுக்க கூடிய ரூபம் கணபதி ரூபம். பரம மங்களகரமான வடிவினர் விநாயகர்..
புஜங்கம் இசை வடிவில்
இளம் சிறார்கள் இசையில்
https://www.facebook.com/
.
முருகா சரணம்