சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்... 3
வள்ளி கல்யாணம் தத்துவம் பற்றி அருமையாக விளக்கமளிக்கிறார்
அன்பர் சாந்தா ராஜன் ( பெங்களூர்)
'நம் ஸநாதன தர்மம் (Sanatana Dharma) வேதங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நெறியில் அறம், பொருள், இன்பம்,வீடு என்ற நான்கு பேறுகளையும் விரிவாக உணர்த்துகிறது. உபநிஷத்துக்கள் வேதங்களின் சாரத்தை வேதாந்தமாகஎடுத்துரைக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கற்றறிந்த பண்டிதருக்கே உதவுகின்றன. சமுதாயத்தில் உள்ள பாமரர்களும்வேதநெறியில்செல்லவேண்டுமென்றால்,,உண்மையானமெய்ப்பொருளை அறிய வேண்டுன்றால்அவர்களுக்கு எளிதாகப் புரியும்படிஎடுத்துச் சொல்ல வேண்டும்.. தேனில் குழைத்து கொடுப்பதுபோல் புராணங்களின் மூலம் புகட்டினால் ஒவ்வொன்றின் தத்வார்த்ங்கள் புரியும்.
முருகன்வள்ளியைஆட்கொள்ளவேண்டிபல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான். பரமாத்மாவான முருகன் வலியச் சென்றுஜீவாத்மாவான வள்ளியை தனதாக்கிக் கொண்டதே இதன் தத்துவம்.
இது வள்ளியின் திருமணம் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் திருமணமும் கூட. ஆண்டவனை அடையும் பொருட்டு ஒவ்வொருஜீவனும் கொண்டுள்ள ஏக்கத்தை பக்தி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் பாடி, ஆடி, கசிந்து உருகி, ப்ரபஞ்சத்தின் ஒரேபுருஷனாகிய ஸுப்ரமண்யனை (பரப்ரம்மத்தை) அடைவதே இந்த திருமணத்தின் நோக்கமாகும்.
அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
ப்ரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு (பரப்ரம்மம்)
ஒரு மேனியாகி, முருகனாய் உலகமுய்ய உதித்தனன்.
உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் பிரதிநிதியாய் வள்ளி நிற்கிறாள். அவள் இச்சா சக்தியின் உருவகம். பரம்பொருளுக்குஎப்பொழுதுமே ஜீவன் மேல் கருணையுண்டு. ஒவ்வொரு ஜீவனும் பாச பந்தங்களுக்கு அப்பாற்பட்டு, பக்குவப்பட வேண்டியதருணத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்.
வள்ளி என்ற உருவகம் கொண்ட ஜீவாத்மாவை இப்பொழுது சந்திப்போம். அவள் பிறந்த குலம் வேடுவர் குலம். வேடுவர்கள்அற்றைக்கு இரை தேடுபவர்கள். அன்றைய பசியைத் தீர்த்துக்கொள்பவர்கள். அத்தத்திலும் (பொ: அன்றாட தேவைகளிலும்) ஆசைகொண்டவர்கள். இறைவனைப் பற்றி அறியாதவர்கள், அவனைப் பற்றத் தெரியாதவர்கள். அவர்களின் அரசனான நம்பி ராஜன்
முன்செய் பயனாய் ஒரு பெண் முத்தை வள்ளிக்கிழங்கு செடியடியில் கண்டெடுத்து வளர்த்து வருகிறான். வள்ளி என்ற ஜீவன் மற்றஜீவன்களைவிட மேம்பட்டு இருக்கிறது. அவள் இறைவனைப் பற்றி தெரிந்து இருக்கிறாள், இன்னும் அறியவில்லை. நேரே காணவிழைகிறாள். அற்றைக்கு இரை தேடாமல் மறுமைக்கு முக்தியை தேடுகிறாள்.
அஷ்டாங்க யோகம் மூலமாகப் பெரு முயற்சி செய்கிறாள். முதல் இரண்டு அங்கங்களான இயமம், நியமம் மூலம் உயிர் குடிகொண்டுள்ள உடலை கோவிலாக பேணுகிறாள். புற அழுக்குகள் படாமல் 'சிற்றேனல்' காக்கின்றாள். இதற்காகயோகாசனம்பயில்கிறாள். 'ஆலோலம்' பாடி மகிழ்கிறாள். 'ஹம்ஸோஹம்' என்ற பிராணாயாம தியான வழிபாடு உதவுகிறது. சுவை, ஒலி, ஊரு, ஓசை,
நாற்றம் என்னும் பஞ்சேந்திரியங்களை வெளி விஷயங்களிருந்து தன்னை அப்புறப்படுத்துகிறாள். ப்ரத்தியாகாரம் என்னும் யோகவகையில் எதிர்மறைகளான கோபம் மற்றும் மத மாச்சரியங்களை (பொ: பகைமை, பொறாமை) அறவே நீக்குகிறாள். இதையே 'குருவிஓட்டித்' திரிந்த பெண்ணாக அருணகிரியார் காண்கிறார். 'தியானம்' மற்றும் 'தாரணை' மூலாமாக மனதை ஒருமுகப்படுத்தித் தவம்மேற்கொள்கிறாள். 'சமாதி' எனப்படும் எட்டாவது அங்கத்தில் பரப்ரம்மத்துடன் ஒன்றுவதற்குண்டான நிலை பெற அவளுடையமுயற்சி மட்டும் போதவில்லை. அத்தருணத்தில் பரமாத்மாவான முருகன் அவளை ஆட்கொள்ள வருகிறான்.
முதலில் அவளை பரீட்சை செய்ய அவர்களில் ஒருவனான வேடுவனாக வந்து மணம் புரியக் கேட்கிறான். வள்ளி உலகவாழ்க்கையில் உழல மறுக்கிறாள். ஆனால் வந்தது பரப்ப்ரம்மம் என்று அறியவில்லை. முருகன் வேங்கை மரமாக உரு எடுக்கிறான்.அஞ்ஞான இருளை அகற்றி ஞானம் தரும் தருவாக நிற்கிறான். அதன் பின் கிழவனாக (தலைவனாக) வந்து ஆச்ரயிக்கிறான்.குருவாகி தீட்சை (தீக்கை) தந்து மும்மலங்களையும் இருவினையையும் போக்குகிறான்.
இப்பொழுது வள்ளி என்னும் ஜீவன், சத்தினிபாதத்திற்கு (பொ: மறைந்திருந்து அருள் பாலித்தல்) உரியவள் ஆகிறாள். ஓம்காரமந்திரத்தின் உட்பொருளை முருகன் உணர்த்துகிறான். ப்ரவணத்தின் நாயகனான விநாயகர், யானையின் உருவம் தாங்கி வருவது இதை குறிக்கிறது. பரமாத்ம - ஜீவ - ஸ்வருப - ஐக்யத்தை உலகுக்கு உணர்த்துவது தான் வள்ளி திருமணத்தின் உட்கருத்து.
சிவ யோகநிலையில் சித்திர தீபம் போன்ற அநுபூதி பெற அஷ்டாங்க யோகத்தை அருணகிரிநாதர்,
'ஆசை நாலு சதுரக்கமல'
என்ற பாடலில் எடுத்துரைக்கிறார். அவன் அருள் அல்லாது அதை அடைய முடியாது. ஆகவே நம் சார்பாக ஆண்டவனிடம் 'யோக பேதவகை எட்டும்' தந்தருள வேண்டுகிறார்.
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்திபெற
மூலவாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர்புகழ் ...... தம்பிரானே."
(கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றி )
தஞ்சை சேகரின் குதூகலம்
வைரவேல் சுவாமிநாதா சரணம்.
இன்று சுவாமிமலை சுவாமிநாதனுக்கு வைரவேல் சாத்துவார்கள். மிக அருமையாக இருக்கும். மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவே இன்றைய சரணமாக அமைந்துள்ளது. ஆற்றுப்படுத்திய அறுபடை வீடுடையவனின் சரணங்கள் எந்த வரிசையில் வருகின்றன என்ற வினா உள்ளத்தில் எழுந்தது. அது வள்ளிக்கல்யாணம் நடைபெற்ற, நடைபெறுகிற, நடைபெற உள்ள வரிசையிலே வருகின்றது.
பழநியிலே குருஜி அனைவரையும் வருக வருக என அன்பால் ஈர்த்து நடத்திய வள்ளிக்கல்யாணம் நினைவில் வருகின்றது. அடுத்து குருஜிக்கு மிகவும் இஷ்டமான செந்திலாண்டவனின் செந்திலம்பதியில் அருவாய் இருந்து ஆசி கூறி வள்ளிக்கல்யாணத்தை நடத்திக்கொடுத்தார்கள்.
அடுத்து திருத்தணியிலே முருகனே முன்னி்ன்று குருஜி கூறிய வழிமுறையிலே நடத்திக்கொண்டான்.
தற்போது சுவாமிமலையிலே..
நினைக்கும்போதே உள்ளமெல்லாம் பலப்பல நினைவுகளுடன் மகிழ்கிறது.
சரவணபவா என்ற ஷடாட்சர மந்திரத்தின் மூன்றாவது எழுத்து 'வ'.
வ என்பது முக்தி, சாத்விகம், நித்ய திருப்தி மற்றும் போக மந்திரம் இவற்றை குறிப்பதாக உள்ளது.
இரண்டாவது அநுபூதி பாடலின் மூனறாவது வார்த்தை யோக என்பதாகும். இது சிவயோக தயாபரனாக பழநியில் நிற்கின்ற அருட்கோலத்தை குறிப்பதாகும்.
சரவணபவ என வரும் திருப்புகழ்....
அரகர சிவனரி அயனிவர் எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில் சரவணபவனே என்றும் அழைக்கின்றார்.
பகர்தரு குறமகள் என்று வள்ளியையும்,
தருவமை வநிதை என்று தெய்வானையையும் அநுதினம் மனம் மகிழ்வுற அழைக்கின்றார்.
அருணகிரிநாதருக்கு ஷடாட்சர மந்திர உபதேசம் நல்கினான். பாத தரிசனம் தந்தான். ஜபமாலை தந்தான். புகழ் பாடுக என்றான். அருணகிரி அறியாது விழித்தார்.!
முத்தைத்தரு பத்தித்திரு நகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்துக்கொரு வித்துக் குருபர என ஓதும்
என்று அடியெடுத்துக் கொடுத்து ஆரம்பித்து வைத்தார்.
கந்தனே குருபரனாகி வித்தாகி பக்தியை பெருக்கி முக்தியை எய்திடச் செய்வான். திருப்புகழ் என பெயர் கொடுத்தான். விருப்பமொடு பாடு என்றான்.
அந்த பாடல்களுக்கு நமது குருஜி மூலம் இசை அமைத்துக் கொடுத்து இசை வழி பாடுக என்று அருளி உள்ளான் ..அந்த இசை வழிபாட்டின் மூலம் வள்ளிக்கல்யாணம் நடத்திடுக என்றும் அருளி உள்ளான்.
அதன்படி
முருகன் - வள்ளி திருக்கல்யாணம் சுவாமிமலையில் நடத்திக்கொள்ள முருகன் இசைந்துள்ளான்.
அதற்கு இன்னும் மூன்று காலைப் பொழுதுகளே.
அன்பர் அய்யப்பன் அனுப்பியுள்ள செய்தி
"நமது குருஜி இந்த வள்ளி கல்யாணத்தை செவ்வனே ப்ரத்தியேகமாக்கி இசை வழிபாடாக நடத்தி வைக்க திருப்புகழில் இருந்து வாக்கியங்களை பொருக்கி எடுத்து மாலையாக்கி வள்ளி மணாளனுக்கு அணிவித்தார்கள். அந்த மாலையின் ஞானப்பூக்கள் சேகரிகப்பட்டு கிடைக்கும் இடமாக உண்டாக்கப்பட்டதே அந்த சின்ன வள்ளி கல்யாண புத்தகம்.
கல்பாக்கம் திருப்புகழ் அன்பர்கள் அந்த புத்தகத்தை மறுபதிப்பு அச்சிட்டுள்ளார்கள். இந்த வள்ளி கல்யாண மலர் சுவாமி மலையில் வள்ளி கல்யாணத்தின் போது கிடைக்கச் செய்வான் நமது முருகன்.
அன்பர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்
இசைவழிபாடு புத்தகம் வள்ளி கல்யாண புத்தகம் கைவசம் உள்ளோர்கள் அதை மறக்காமல் கொண்டு வாருங்கள். வள்ளி கல்யாணத்தின் போது சுவாமி மலையில் சந்திப்போம்."
பெங்களூரு அன்பர்கள் முதற்கண் சிதம்பரத்துக்குச் சென்று 9.12.2017 சனிக்கிழமை அன்று மாலை 4.30 முதல் தொடங்கி மூன்று மணி அளவு திருப்புகழ் இசை வழிபாடு நிகழ்த்தி அருள் வேண்டுகிறார்கள்.ஆடல் அரசன் நடராஜப் பெருமானை கண்குளிர தரிசித்தபின் ஆடல் பாடலுடன் ஏரகத்துக்கு விரைகிறார்கள்.
அருகில் உள்ள அன்பர்கள் சிதம்பரம் வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்,
வள்ளிகல்யாண வைபவத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குருஜி உபதேசிக்கிறார்.
(பழனி வள்ளி கல்யாண வைபவம் நிகழ்ச்சியில் )
வள்ளி கல்யாணத்துக்கு விரைவோம் .ஏரகத்து இறைவனைப் போற்றுவோம்.
சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி,
மயிலின் மீது நடனம் செய்யும் சுவாமி,
எம்முடைய உள்ளத்திலே சிறப்பாகவிளங்கும் சுவாமி,
தனது திருவுருவத்தின் பேரொளியை அடியார்கள் காணுமாறு விளக்கமாகத்
தோன்றும் சுவாமி,
பிறவியை அடியோடுதொலைத்தருளும் சுவாமி,
பாவங்களைப் போக்கி ஒழிக்கும் சுவாமி,
முநிவர்கள் செய்யும்தவப்பொருளாக விளங்கும் சுவாமி,
அடியார்கள் செய்யும் பிழைகளைஎல்லாம் பொறுத்தருளும் சுவாமி,
தேவர்களை விண்ணில் குடிபுகச்செய்து அங்கு நிலைபெற வைத்த சுவாமி,
அசுரர்களைப்பொடியாகும்படி நெரித்து அழித்த சுவாமி,
யாம் செய்ய வேண்டிய தொண்டுஇன்னதென்று நிர்ணயிக்கும் சுவாமி,
சரவணபவனே,
தந்தைக்கு குருஸ்வாமியாக வந்த பெருமாளே.
என்று போற்றுவோம்.ஆடுவோம் பாடுவோம் அருள் பெறுவோம்.
கொசுறு
கும்பகோணம் தொண்டர்கள் செயலில் இறங்கி ,சீர் பட்சணம் தயாரிப்பதில் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள்
முருகா சரணம்