Thursday, 13 June 2013

AANI MOOLAM CELEBRATION ON 23rd JUNE 2013


ஆனி மூலம் இசை வழிபாடு:  23 ஜூன் 2013 

அழைப்பிதழ்


பஞ்சாமிர்த வண்ணம்

பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும்அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். பாப்பன் ஸ்வாமிகள். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். முருகப் பெருமானுக்கும் இந்தப் பாடல்கள் மேல் அளவு கடந்த ஆசை உண்டு. எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் அநுமன் இருப்பான் என எவ்வாறு ஸ்ரீராமர் சொன்னாரோ அப்படியே முருகனும்இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களில் மயங்கி, “இந்தப் பாடல்கள் எங்கெல்லாம் பாடப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எழுந்தருளுவேன்.” என்று கூறியதாகக் குறிப்புகள் சொல்லுகின்றன என்பர் முருகனிடம் பற்றுள்ள ஆன்றோர் பலரும். என்றாலும் இது வெளித் தெரியும்படி நடந்த ஒரு நிகழ்வும் உண்டு.


திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும்தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார்.  அவருடைய நண்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும்இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார்.  மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார்.  என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோஅல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காக்ஷி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காக்ஷி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும்காரியமும் யார் அறிய முடியும்?  ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார்.  
நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம்தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமாஅவனருகே சென்றால்! ஆஹாஅவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோபாராயணம் முடிந்ததும்அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.

 
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்லவீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்கமுத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த அந்தணர்கள் இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால்இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு.இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோஅங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே அல்லவாஆஹாஎன்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.

Rajans

Homage to Guruji

Arunagirinathar’s Thiruppugazh paakal

The proceedings of the 68th conference of the Music Academy started on Dec 21 ( year 1996) with the rendering of some rare compositions of Bhadrachala Ramdoss. The M. Ganesa Ayyar Birth Centenary Endowment lecture on Thiruppugazh was delivered by Mr.A.S.Raghavan of New Delhi assisted by some of his disciples.

Arunagirinatha, born six centuries ago, was blessed by Lord Muruga and sung Thiruppugazh paakal. They are based on Vedas, sastra, and religious rites and practices.. These are intended to remove the impurities of the mind and soul and show the way to a good life. Arunagirinathar even as the Alwars and Nayanmars did, took it upon himself to prey for the removal of bad qualities and for the uplift of the soul. These songs are replete with the beauty of word, content and music.

Chandam is a specialty of Thiruppugazh. There are also various references in them to isai and therefore meant to sung. There is a beautiful hymn on Thiruchendur which says that listening to the music, the tiger and cow will make milk from each other, stone will melt, the wizened tress will blossom again, the rouge elephant will be tamed and the flying birds will come down to earth.

The rhythmic or tala patterns are like an ocean and full of life. Difficult to reckon and render, chandam is of absorbing interest and is exclusively natural in flow, independent on its own. Thevaram do not have these patterns. He illustrated the different forms of Khanada, Misra, and Sankirna Chapu in one and the same avarta as rendered in different Thiruppugazhs. Concluding the lecture, he paid tribute to Devakkottai Sundararaja Iyengar from whom he had learnt these 
{ end of report}

Earlier too we had posted this message . We wish some one had recoded the talk and preserved it. World will be richer if it sees the light of the day. Chennai anbargal who took part in the programme can throw some light on this. If we can recreate the audio / video file and release it at the prosded function in Sept  will be the greatest homage to Guruji

Rajans


--
.Yogah karmasu kausalam = gita 2-50

Thiruppugazh Isai Vazipadu at Guruji's residence

kindly see the below link:

http://www.youtube.com/watch?v=3K-LYiA-YXU

Is Maragatham ammaiyaar Valli devi's reincarnation ?

ஆண்டவன் பிச்சை
மரகதம் அம்மையார் 
வள்ளி தேவியின் மறு அவதாரமா?

ஆங்கிலத்தில் : வீஎஸ் . கிருஷ்ணன்

தமிழில் : சாந்திப்பிரியா

பிரபலமான வழக்கறிஞரும் பெரும் கல்விமானுமான சங்கரநாராயண சாஸ்திரி ஒருநாள் தனதுவாசகசாலையில் அமர்ந்து கொண்டு இருந்தபோது யாரோ  தம் அறையில் நுழைவதைஉணர்ந்தார்.  சாதாரணமாக அவர் தனது வேலையில்  மும்முரமாக இருக்கும்போது அவர்அறையில் யாரும் நுழைய மாட்டார்கள்வந்தது யார் என அவர் திரும்பிப் பார்த்தபோது தனதுமகள் மரகதம் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பதைக் கண்டார்.

எப்போதுமே சிரித்த முகத்துடனும் விளையாடிக்கொண்டும் இருக்கும் மரகதம் அன்று ஏனோ சற்றுஇறுக்கமான முகத்துடன் இருப்பதைக் கண்டு வியந்து அதற்கான காரணத்தை அவளிடம் கேட்டார்.ஆனால் அவளோ அதற்குப் பதிலாக முருகன் மீதான பாடல் ஒன்றைப் பாடினார்அந்த  பாடலின்கருத்தாழத்தைக் கண்ட சங்கரநாராயண சாஸ்திரி  வியந்தார்பல விஞ்ஞானிகளும்ஆராய்ச்சியாளர்களும் பல நாட்களாகத் விடை தேடிக் கொண்டு இருந்த சாசுவதமான வாழ்க்கைஎன்பதற்கு விளக்கத்தைக் தந்த பாடலாக அது அமைந்து இருந்தது.

அவள் பாடி முடித்ததும் அதைக் குறித்து அவர் அவளிடம் கேட்டார்' 'இத்தனை அற்புதமாகவும்ஆழம் பதிந்த பொருளுடனும் உள்ள இந்தப் பாடலை யார் இயற்றினார்கள்இதை எங்கிருந்துகற்றுக் கொண்டாய்?'. அதற்கு அவள் பதில் தந்தாள் 'என் கனவில் நேற்று முருகப் பெருமான்தோன்றி இதை எனக்கு தந்தார் '

அவள் பாடிய பாடலின் கருத்து இது ' இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இருந்தது ஒன்றேஒன்றுதான்அதுவே இரண்டாகிபின்னர் மூன்றாகி அதன் பின் பல பொருட்களாகி விட்டது'.கற்றறிந்த சாஸ்திரிஜி அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்முதலில் ஒன்று என்பது இந்தபிரபஞ்சத்தைப் படைத்த பரப்பிரும்மன் எனும் பராசக்திஅதன் பின் தோன்றியது சிவன்பிரும்மா,விஷ்ணு.  அதன் பின் தோன்றியதே இந்த உலகம் மற்றும் பல தோற்றத்திலான கடவுட்கள். 'ஓர்உருவாக்கிய தாரகாஎனும் அருணகிரிநாதரின் பாடலை அது  நினைவு படுத்தியது.

சங்கரநாராயண சாஸ்திரி மற்றும் சீதாலஷ்மி அம்மையாருக்கு 1899 ஆம் ஆண்டு சென்னையில்உள்ள மயிலாப்பூரில் பிறந்த பெண்ணுக்கு இயற்கையில் கிடைக்கும் அரிய மரகதம் மற்றும் வள்ளிதேவியின் பெயரில் வரும் வள்ளியையும் சேர்த்து மரகத வள்ளி என்ற பெயரை சூட்டினார்கள்.குடும்பத்தில் அனைவருமே கல்விமானாக புகழ் பெற்றவர்களாக விளங்கி இருந்ததினால்மரகதமும் நன்கு படித்து தனக்கு உதவியாக இருப்பாள் என்ற எண்ணத்துடன் அவளுக்கு கல்விஅறிவு புகட்ட வீட்டிலேயே நல்ல ஆசானை அமர்த்தினார்கள்ஆனால் மரகதமோ படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாள்.

ஒரு கட்டத்தில் மரகதத்தின் தாயார் மரணம் அடையஅவளது தந்தையும் அவரது ஆராய்ச்சியில்மும்முரமாக கவனம் செலுத்தி வந்ததினால் மரகத வள்ளி தனது மாமனான வெங்கடசுப்ப ஐயரின்பொறுப்பில் வாழ்ந்து வரவேண்டி இருந்ததுஒரு காலத்தில் சாஸ்திரியின் தந்தை ஒருசொந்தக்காரருக்கு கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக சங்கரநாராயண  சாஸ்திரியும்காலாகாலத்தில் தனது பெண்ணான மரகதத்தை நரசிம்மன் என்பவருக்கு மணம் முடித்துவைத்தார்.  ஆனால்  திருத்தணி முருகனின் பக்தரான தனது பாட்டனாரிடம் இருந்து முருகன்மீதான கதைகளைக் கேட்பதிலேயே மரகதமும் ஆர்வமாக இருந்தார்மேலும் திருமணத்துக்குப்பிறகு எப்பொழுதெல்லாம் தனது தந்தையின் வீட்டிற்குப் போனாலும்  தனது பாட்டியை அழைத்துமுருகன் கதைகளைக் கூறுமாறு கேட்பார்பாட்டியும் திருத்தணி முருகனின் மகிமைகளைக்அவருக்குக் கூறுவது உண்டு.

ஒருமுறை நவராத்திரியில்  தந்தையின் வீட்டிற்கு சென்று இருந்தபோது அவருடைய பாட்டியிடம் முருகன் கதைகளைக் கேட்ட பின் உறங்கிக் கொண்டு இருந்த மரகதத்தின் கனவில் முருகப்பெருமான் தோன்றினார்அது முதல் அவளது வாழ்கை திசை திரும்பலாயிற்றுஎப்படிநம்பிராஜனின் மகளான மலைப்பெண் வள்ளியின் மீது காதல் கொண்டு  அவளை தன்னிடம்முருகன் அழைத்துக் கொண்டாரோ அது போலவே மரகதத்தையும் அவர் தன்னிடம் அழைத்துக்கொள்ளத் துவங்கினார் என்றே கூற வேண்டும்தனக்குள் உள்ள பக்திவிவேகம்  எனஅனைத்தையுமே முருகனே கொடுத்ததாகக் கருதிய மரகதமும் மெல்ல மெல்ல 'ஆண்டவன்பிச்சைஎன அழைக்கப்படலானார்இன்றும் அவர் இயற்றிய பல அற்புதமான பாடல்களில் பலஆலயங்களிலும் பாடப்படும் T.M. சௌந்திரராஜன் பாடி உள்ள 'உள்ளம் உருகுதையாஎனும் இனியபாடல் மனதை மயக்கும் வகையில் உள்ளது.


 முருகன் நினைவிலேயே தன்
வாழ்கையை கழித்து வந்தார் மரகதம் அம்மையார் 

பின்னர் மரகதம் தனக்கு வந்த கனவு குறித்து மற்றவர்களிடம் இப்படியாகக் கூறினார். '' முருகன்என் கனவில் வந்தார்என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்ட அவர் கூறினார் 'நான் உன்னைக்காதலிக்கிறேன்'. அதன் பின் அவர் என் உள்ளத்தை அவர் ஆக்ரமித்துக் கொண்டார்அதே கனவில்அவர் எனக்கு சன்னியாச தீட்சை தருவதை போலவும் உணர்ந்தேன்அவரே எனக்கு இத்தனைஅழகான பாடலைப் பாடும் திறமையைத் தந்து எனக்கு ஆசிகள் தந்துள்ளார்.  தனது பக்தையானஆண்டாளிடம் ரங்கநாதர் கூறியது போலவே முருகனும் என்னை அவருக்கு மல்லிகை அல்லதுரோஜா மாலைகளைப் போடாமல் அவர் மீதான பாடல்களை பாடி அவற்றையே மாலையாக்கிஅவருக்கு போடுமாறு கூறினார்ஆண்டாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியது போல முருகன்மீதான பாடல்கள் என்னை அறியாமலேயே எனக்குள் இருந்து தானாகவே வெளி வந்ததுஅவரதுபன்னிரண்டு தோள்களையும் பாடல்கள் எனும் மாலையினால் நான் அலங்கரித்தேன்.உண்மையைக் கூறினால் என்னுடைய இதயத்தினுள் முருகப் பெருமானே அமர்ந்து கொண்டுஅந்தப் பாடல்களை என் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் என்றே நினைக்கிறேன்''.

பல முறை மரகதம் முருகன்  மீதான பல பாடல்களையும் அவ்வபோது வெளிப்படுத்தி தனதுபெற்றோர்களையும்மற்றவர்களையும் பரவசப்படுத்தினார்அந்த கனவு சம்பவத்துக்குப் பிறகுமரகதம் முருகனின் பரம பக்தையானார்அவளை சுற்றி அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள்இருந்தாலும்அவரே குடும்ப வாழ்க்கையில்  ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும் மரகதம்மனதளவில் குடும்ப வாழ்க்கையில் பற்றற்றவராகவே வாழ்ந்து வந்திருந்தார்.  தனது கணவர்,குழந்தைகள் மற்றும் பிறருக்கு உடலால் சேவைகளை செய்து வந்தாலும் அவள் உள்ளத்தைமுருகப் பெருமானே முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு இருந்தார்.  குடும்ப வாழ்வில் இருப்பதுபோல வெளிக்கு தோற்றம் தந்தாலும் அவர் இதயமோ முருகனின் காலடிகளையே  சுற்றிக்கொண்டு  இருந்ததுஜொலிக்கும் நகைகளை பெண்கள் அணிந்து கொள்வது போல இதயத்தில் சுடர்விட்டுக் கொண்டு இருக்கும் முருக பக்தி எனும் நகையை அவர் அணிந்து கொண்டு இருந்தார்.

முருக பக்தியைப் பொருத்தவரை அவள் உள்ளமோ பளிங்குக் கல்லைப் போல தூய்மையாகவேஇருந்ததுசுந்தரவல்லி எனும் பூர்வ ஜென்மப் பெண் வள்ளியாக நம்பிராஜன்  தினை  விளைந்ததானியத் தோட்டத்தை காவல் காத்து வந்தபோது வள்ளிமலைக்கு அவளைத் தேடி வந்தார்முருகன்அது போலவே இப்போது மரகதத்தின் ஆசையை பூர்த்தி செய்ய முருகன் பூமிக்குவந்தபோது ஒரு குழந்தையைப் பெற்று எடுத்த நிலையில் மரகதம் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு  இருந்தாள்.

மரகதம் மருத்துவமனையில் இருந்தபோது முருகன் அவள் முன்னால் ஒரு சன்யாசியைப் போலதோன்றி தன்னை மறந்து அவரைப் போற்றிப் புகழும் பாடல்களைப் பாடத் துவங்கினார்தன்னைமறந்து அமர்ந்திருந்த மரகதம் அந்த நேரத்தில் தன்னுடையக் குழந்தை அழுவதைக் கூடபார்க்கவில்லைஅங்கிருந்த நர்ஸ் அவளை தட்டி எழுப்பி அழுது கொண்டு இருந்த குழந்தையைகவனிக்குமாறுக் கூறினாள்அந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவளது மாமனார் வீட்டினர்அவளை கடிந்து கொண்டு முருகன் மீது அவள் இயற்றி எழுதி வைத்து இருந்த கைபிரதிகளைஎடுத்துக் கொண்டு போய் ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து பூட்டி வைத்து விட்டார்கள்.
 முருகனை மரகதம் அம்மையார் ஆண்டிப் பண்டாரம் என்றே அழைத்தார்இப்படியாக பற்றற்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருந்த அவளுடைய நடத்தையை அவளது புகுந்த வீட்டினர்ரசிக்கவில்லைஅவர்களைப் பொறுத்தவரை  அவர்களது மனமோ செல்வத்தை பெருக்கிக்கொள்வதிலேயே இருந்ததுஇதனால் அவர்களது வீட்டில் அடிக்கடி சச்சரவுகள் தோன்றிக்கொண்டே இருந்தாலும்அவை எவற்றையுமே  மரகதம் பொருட்படுத்தாமல் அனைவரையும்விட்டு விலகி தண்டாயுதபாணியின் அருகில் வேகமாக சென்று கொண்டு இருந்தாள்.

அதன் பின்னர் மரகதத்தின் வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன.வீட்டில் பிரச்சனைகள் அதிகரித்தனஅவளுக்கு மேலும் சில குழந்தைகள் பிறந்தனஆனால்மரகதம் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருந்து வந்தார்அவள்மனதும் எப்போதும் போல முழுமையாக முருகனுடன் இணைந்தே இருந்ததுமுருகன் மீது அவள்பல பாடல்களையும் இயற்றிக் கொண்டே இருந்தாள்அவள் படைத்த பாடல்கள் சிலவற்றின்மூலம், 'முருகா என்னிடம் அவ்வபோது மட்டுமே நீ வந்து விட்டுச் செல்கிறாய்எப்போதுமேஎன்னுடன் இருக்க மாட்டாயா?' எனும் வேதனைகளை வெளிப்படுத்திய பாடல்கள் அதிகம்இருந்ததுஒருநாள் முருகன் அவளது கனவில் வந்து 'முட்டாள் பெண்ணே , உன்னுடையஇதயத்திலேயே எப்போதும் முழுமையாக அமர்ந்து உள்ள என்னை காணவில்லை என்றுவெளியில் என்னைத் தேடிக்க் கொண்டு நீ ஏன் வேதனைப்பட வேண்டும்?'

1948 ஆம் ஆண்டு அவள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதுஒருநாள் அவள் படிக்கட்டில்இறங்கி வந்து கொண்டு இருந்தபோது கால் தவறி கீழே விழுந்து விட்டாள்அவளைமருத்துவமனையில் சேர்த்தார்கள்அங்கு அவள் தனது சுயநினைவை முற்றிலும் இழந்தாள்.சிலநேரங்களில் அவளுக்கு நினைவு திரும்பினாலும்மீண்டும் மீண்டும் நினைவை இழந்துகொண்டே இருந்தாள்இப்படியாக அவள் ஆறு மாதங்கள் படுக்கையில் கிடந்தாள்எப்போவாவதுஅவளுக்கு சுய நினைவு வந்தால் ' நீங்கள் யார்?, நான் யார்?' என்று கேட்பாள்அவள் தான் யார்என்பதையோமற்றவர்கள் யார் என்பதையோ உணரமுடியாத நிலைக்கு சென்று இருந்தாள்.

நடைந்தேறிய மருத்துவ சோதனைகளின் முடிவுகள் அனைத்துமே அவள் வாழ்கையின் இறுதிநிலைக்கு சென்று விட்டாள் என்பதாகவே அமைந்து இருந்தனஆனால் அனைவரதுகருத்துக்களையும் பொய்யாக்கும் விதத்தில் மரகதம் பூரண குணம் அடைந்தாள்அதுவேஅவளுடைய புது வாழ்வு வெளிப்பட்ட நிலைமையாக அமைந்ததுமீண்டும் தன்னுடைய குடும்பவாழ்க்கைக்கு திரும்பினாள்.  ஆனால் அருணகிரிநாதரைப் போலவே தன்னை மாற்றிக் கொண்டஅவள் முருக பக்தியில் ஈடுபட்டுக் கொண்டும்  அவர் மீதான பாடல்களை  பாடிக் கொண்டும்மட்டுமே தனது வாழ்கையை கழிக்கலானார்.

மரகதம் மருத்துவமனையில் இருந்தபோது அவர் இயற்றிய பாடல்கள் பூட்டி வைக்கப்பட்டு இருந்தபெட்டியை அவரது உறவினர் ஒருவர் எதேற்சையாக திறந்து பார்த்து விட்டு அதில் இருந்தபாடல்கள் அடங்கிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய்  திருப்புகழ் மணி என்பவரிடம் கொடுத்துவிட்டார்அவற்றைப் படித்து விட்டு பெரிதும் புகழ்ந்த அவர் அவற்றில் இருந்து சிலவற்றை பிரசுரம்செய்தார்அதற்கு பதிலாக அருணகிரிநாதரின் ஒரு புகைப்படத்தை பிரசாதமாக கொடுத்துஅனுப்பினார்.
 1950 ஆம் ஆண்டு மரகதம் தனது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்குச் சென்று இருந்தார்இரவுபத்து மணி ஆகிவிட்டதுஇரவு வெகு நேரம் ஆகிவிட்டதினால் ஆலயத்தில் தரிசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றாலும் எப்படியோ மரகதமும் அவரது நண்பர்களும்ஆலயத்துக்கு உள்ளே சென்று விட்டார்கள்அருணாசலாவை வணங்கியப் பின்னர் உண்ணாமலைஅம்மன் சன்னதிக்கும் சென்றார்கள்.  அங்கு ஒரு இளம் வயது பண்டிதர் இருந்தார்.  அவர் அவர்கள்கேட்ட அனைத்து பூஜைகளையும் செய்து முடித்தப் பின் பிரசாதமும் தந்தார்அவர் பெயரைஅவர்கள் கேட்டபோது அவர் தன்னை தண்டாயுதபாணி என அறிமுகம் செய்து கொண்டார்அதன்பின் அந்த இளம் பண்டிதரே மரகதம் அம்மையாரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று வடக்குப் பக்கத்தில் இருந்த முருகன் சன்னதியில்  அவளை  அங்கேயே விட்டப் பின் அங்கிருந்துமறைந்து விட்டார்.
 அங்குதான் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு தரிசனம் கொடுத்தார்.  அந்த உண்மையை'அடலாருணை திருகோபுரத்தே அந்த வாயிலுக்கு அருகில் சென்று கண்டு கொண்டேன்என்ற பாடல்மூலம் அருணகிரிநாதர் வெளிப்படுத்தினார்மறுநாள் மரகதம் அம்மையாருடன் சென்றவர்கள்அந்த ஆலயத்துக்கு சென்று அந்த பூசாரியைக் குறித்து விவரம் கேட்டபோது அங்கிருந்தபண்டிதர்களோஆலயம் திறந்திராத அந்த இரவு நேரத்தில் யாருமே பூஜைகளை செய்திருக்கவாய்ப்பில்லை என்றும்அவர்கள் கூறியதைப்  போன்ற எந்த இளைஞரும் அங்கு பூசாரியாகஇல்லை என்றும் தெரிவித்தார்கள்.

திரு வீஎஸ்கிருஷ்ணன் என்பவர் எழுதி உள்ள  இந்த கட்டுரை முருகன் நியூஸ் லெட்டெர் எனும் வலைதள இதழில்வந்துள்ளது (Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.) .   அதை தமிழாக்கம் செய்து வெளியிட்டுக் கொள்ள அனுமதிதந்துள்ள  அதன் ஆசிரியர் பேட்ரிக்  ஹாரிகனுக்கு நன்றி .  அது போல அம்ரிதவர்ஷினி பத்திரிகை ஆசிரியரான வாசுதேவன்அவர்களும் அனுமதி தந்துள்ளார்கள்அவருக்கும் என் நன் றி.)
 Tamil translation by shanthi priya
Rajans
 ------------------------------------------------------------------------------------------------------------------
www.thiruppugazhamirutham.blogspot.in