திருவாளர் S .R .சுப்ரமணிய ஐயர் மும்பை அன்பர். பல ஆண்டுகள் இங்கு திருப்புகழ் பயின்று திருவனந்தபுரம் வாசம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும் , குருஜியின் கட்டளைப்படி அங்கே வகுப்புக்களை நிறுவி .பல மாணவர்களை உருவாக்கி உள்ளார்.அதற்கு துணைவி யார் சுப்பலக்ஷ்மி அம்மையாரும் உறு துணையாக நின்று தம் பங்கையும் செவ்வனே ஆற்றி இருக்கிறார்.சொந்த காரணங்களுக்காக திரும்பவும் மும்பை வந்து திருப்புகழ் அன்பர்கள் அமைப்புக்கு தொடர்ந்து தொன்றாற்றி வருகிறார்.திருவனந்தபுரம் அன்பர்களுக்கும் பல வழிகளில் வகுப்பு எந்த ஒரு இடையூறும் இன்றி நடக்க உறுதி பூண்டு செயலாற்றி வருகிறார், ஆன்-லைன் மூலமாகவும் வகுப்பு எடுக்கின்றார்.
திருவனந்தபுரம் அன்பர்களுக்காக நம் BLOG எந்த வித உதவியையும் செய்ய காத்திருக்கிறது.S .R .S ஐயர் மூலம் பங்கு பெற அழைக்கின்றோம்.
புத்தாண்டு தருணத்தில் ,அவர் ஒரே வாக்கியத்தில் அளித்துள்ள (அ முதல் ஓ வரை) பிரார்த்தனையை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். தொடர்ந்து பல கட்டுரைகள் அளிக்க வேண்டுகிறோம்.
ஓம் முருகா "ஏழு பிறவிக்கடலை ஏறிவிடும் ஓடக்காரன்."
"அவனிதனிலே பிறந்து ",ஆசார வீனன் அறிவிலி கோப பராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதனாகி""இருப்பவள் திருப்புகழ் விருப்போடு படிப்பவர் இடுக்கினை அரித்திடு "மென்ற உண்மையை உணராமல் "ஈளை ,சுரம்,குளிர்,வா தமெனும் பல நோய்கள் வளைந்தர""உடுக்கத் துகில் வேணும் நீள் பசி யவிக்க கனபானம் வேணும் .நல ஒளிக்கு புனலாடை வேணும் .மெய்யுறு நோயை ஒழிக்க பரிகாரம் வேணும் "என்ற தீராத பல ஆசைகளுடன்,"ஊனே ரெலும்பு சீ .சீ மலங்கலோடே நரம்பு கசுமாலம் ஊழ் நோய் அடைந்து மாசானமண்டும் ஊலோட"ழன்று ,''எத்தனை கோடி ,கோடி விட்டுடல் ஓடியாடி எத்தனை கோடி போனதளவேதோ "என்று சற்றும் சிந்தியாமல் ,"பாழ் வாழ்வென்னும் இப்படுமாயையிலே வீழ்வதை விடுத்து "ஏது புத்தி ஐயா எனக்கினி யாரை நத்திடிவேன் அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ"என்று கருணைக்கடவுள் கந்தனிடம் முறையிட்டு " ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலன் அகற்றி வளர் அந்தி பகலற்ற நினைவருள்வாயே"என்று அவனிடம் இறைஞ்சி " கருணை புரியாதிருப்பதென குறையி வேளை செப்பு "என மனமுருகிக்கூற ,அவனருளால்,"ஒரு பதும் இருபதும் அறுபதும் உடனறும் உணர்வுறு"ம் போது "ஒருருவாகி தாரக பிரமத்து ஒருவகை தோற்றத்து இருமரபெய்தி ஒன்றாய் ஒன்றில் இருவரில் தோன்றி மூவா" முருகன் "ஏழு கடல் மணலை அளவிடினதிகம் என திடர் பிறவி அவதாரம்" என்ற அவல நிலையை ஒழித்து "ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள்" தந்து அருளக்கூடிய தருணம் கைகூடி வரும்.
No comments:
Post a Comment