சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாக்கள் அண்மையில் நிறைவு பெற்றுள்ளன.சுவாமிகளின் ஜெயந்தி விழாவும் பல இடங்களில் குறிப்பாக அவர் அவதரித்த திருவாரூர் சேத்திரத்திலும் மற்றும் பல இடங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.அவர் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் அவதரித்தது அன்பர்கள் யாவரும் அறிந்ததே.
மும்பையில்,நம் குரு பாலு சார் தலைமையில் "நாத லோலா "என்ற திருநாமம்
கொண்டு இயங்கி வரும் அமைப்பு கர்நாடக இசைக்கு அரும் தொண்டு ஆற்றி வருவதும் அதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தியாக பிரம்மத்தின் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடை பெற்று வருவதும் ,அந்த சந்தர்ப்பத்தில் மும்பை நகரில் கர்நாடக இசைக்கு வகுப்புக்கள் நடத்தி ,பல மாணவர்களை உருவாக்கும் அரிய பணியில் ஈடு பட்டுள்ள நல் ஆசிரியர் ஒருவரை கௌரவிப்பதையும் தன் கடமையாக கருதி தொன்றாற்றி வருவதையும், மற்றும் அன்பர்களுக்கும்,குடும்பத்தினரு க்கும் தியாக பிரம்மத்துக்கு இசை அஞ்சலி செலுத்த வாய்ப்பையும் அளித்து வருவதை நாம் நன்கு அறிவோம்.
இந்த ஆண்டு,அன்பர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜெயந்தி விழா 21.04.13 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீணை விதூஷி திருமதி மாலதி கிருஷ்ணமோகன் அவர்கள் கௌரவிக்கப்படுகிரார்கள். வித்வான்களின் பஞ்சரத்ன கிருதிகள்,கீர்த்தனாஞ்சலி ஆஞ்சநேய உற்சவம் முதலியவற்றில் பங்கு கொண்டு சுவாமியின் கிருபைக்கு பாத்திரமாக அன்பர்களை அழைக்கிறோம்.
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment