Monday, 14 January 2019

நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்


                                                                                                                                                                                         முருகா சரணம்     


                                                             
அன்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.குருஜியின் பொற்பாதங்களா பணிந்து கொண்டாடுவோம்.பணியைத் தொடர்வோம்  



                              நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்                                   
                   தில்லி  திரு இராமமூர்த்தியின் அனுபவங்கள்                             
                                               பகுதி ..2


                                                                                             


அன்பர் ராம மூர்த்தியின் நினைவலைகள் ,நினைவலைகள் மட்டுமல்ல.பொக்கிஷம்.DOCUMENTATION.குருஜியின் மகிமை.ஆதார பூர்வமான விஷயங்கள்.பதிவுகள்.

அடுத்து குருஜியின் தாள ஞானம் ,அட்சரபிரயோகங்கள் ,அங்கதா லங்களுக்கு பெயர் சூட்டியது ,அன்பர்களுக்கு எளிய முறையில் கற்பித்தது போன்றவைகளை  மிக அருமையாக நினைவு கூர்கிறார் 

அதற்கு முன் சில வார்த்தைகள்

தாள விளக்கங்களை பற்றி விரிவாக இசை வழிபாடு புத்தகத்தில் காணலாம்.திருப்புகழ் பாக்களில் 1008 சாந்த வகைகள் இருப்பதாக பெரியோர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

503  பாடல்களில் பல பாடல்கள் திஸ்ர ரூபகம்,திஸ்ர த்ருபுடை ,திஸ்ரத்ருவம் , ,சதுஸ்ர த்ருபுடை ,சதுஸ்ர ரூபகம்,சதுஸ்ர ஏகம் ,சதுஸ்ர ஜம்பை,சதுஸ்ர அட,சதுஸ்ர மட் யம் ,ஸத்ஸர துருவம்,கண்ட த்ருவம் ,கண்ட ஜம்பை,மிஸ்ர அட,சங்கீர்ண சாபு காலங்களில் அமைந்துள்ளன

.அதை தவிர திஸ்ர நடை,கண்ட  நடை,மிஸ்ர நடை  போன்ற நடைகளில்

,மற்றும் 1/4இடம்,1/2 இடம் ,3/4 இடம் தள்ளி எடுப்பு.

இவை எல்லாம் தாண்டி பெரும்பாலான பாடல்கள் அங்க .தாளங்களில் .31/2, 41/2  ,51/2  ,6,  61/2,  71/2  ,81/2  ,9  ,91/2,  11  ,111/2,  121/2, 131/2 .14  ,151/2,  16 181/2, 20..............35 அட்சரங்களில் அமைந்துள்ளன.பாடல்களின் பொருளுக்கு ஏற்பவும் அமைந்துள்ளன.

'அவா மாரு வினா "  "வதன சரோருக " "புயவகுப்பு " போன்ற பாடல்களில் அமைந்துள்ள அங்க தாளங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. 

கணித மேதை ராமானுஜம் பற்றி சொல்வார்கள்."எண்கள் அவர் முன்னே எப்பொழுதும் நின்றுகொண்டு, அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்கள் இடத்தில் அமருமாம்."அதுபோல்பெருமானின் அருளால்  நம் குருஜியின் தேவைக்கு ஏற்ப எல்லா அட்சரங்களும்  ஓடி வந்து தங்கள் ஸ்தானத்தில் அமர்ந்ததிருக்க வேண்டும்.

இசை மேதை T .R .சுப்ரமண்யம்" ராகங்களை,பாடல்களை கற்றுக்கொள்வது வெகு சுலபம்.ஆனால்,தாள ஞானம் எல்லறோருக்கும் அமையாது.கடவுள் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் "என்று அடிக்கடி கூறுவார்.

கச்சேரிகளில் ,ரசிகர்கள் சுலபமான ஆதி தாளத்தை போடுவதையே எவ்வளவு  சிரமப் படுகிறார்கள் என்று நாம் காண்கிறோம்.

ஆனால் இங்கு அதெல்லாம் கிடையாது.அன்பர்கள் வெகு சுலபமாக,வெகு நேர்த்தியாக,நளினமாக,அமைதியாக, யதார்த்தமாக,அழகாக ,லாகவமாக தாளம் போட்டு மெய்ம்மறந்து வழிபாடுகளில் இசைப்பதை காண்பவர்கள் பிரமிக்கிறார்கள் ,வியக்கிறார்கள். சிலர் தாளம் போடாமலே லயத்தில் லயித்து பாடுபவர்களும் உண்டு. பாடலுக்கு ஏற்ற தாளமா? அல்லது தாளத்துக்குகேற்ப பாடல்களா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா ?கொடி அசந்தால் காற்று வந்ததா ?  என்பது போல்  புரியாத புதிர்தான்.

அன்பர்களின் சிலர் தாள நுணுக்கங்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை என்பதுதான் உண்மை.அவைகளை நன்கு உணர்ந்து கற்று வழிபாடுகளில் வெளிப்படுத்தினால் அது தனி அனுபவம் தான்.
                                                                                                     
தாள விளக்கத்திற்கு என்று தனியாக வகுப்புகள் கிடையாது.பின் அன்பர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? எல்லாவற்றிற்கும் ஒரே  பதில்".குருவருளும் ,திருவருளும் தான்."

"குருவருளை" ராமமூர்த்தி விளக்குவதை பார்ப்போம்.


                                                                                                     



   
1970 களில்  புய வகுப்பை சொல்லி கொடுத்துவிட்டு ,முதன் முறையாக சரோஜினி நகர் பிள்ளையார் கோவிலில் பஜனை பாடினார்.பாட ஆரம்பிப்பதற்கு முன்னால் ,ஈஸ்வர அய்யரிடம் ,குருஜி "புய வகுப்புன்னு ஒண்ணு பாடறதாக இருக்கேன்"..என்று மேற்கொண்டு பேசுவதற்கு முன்னால் ஈஸ்வர அய்யர் "பேஷ் பேஷ் பாடு "என்று மிருதங்கத்தை தட்ட தொடங்கி விட்டார்.குருஜி சில வினாடிகள் தயங்கி விட்டு பாட ஆரம்பித்தார்.முதல் stanza முடிவதற்குள் ,ஈஸ்வர அய்யருக்கு எண்ணிக்கை தவறி விட்டது.மிருதங்கத்தை கீழே வைத்து விட்டு ராகவா,ராகவா,இது என்ன தாளம்? அனுமார் வால் மாதிரி போயிண்டே இருக்கே '.........குருஜி பாடுவதை நிறுத்தி விட்டு சங்கீத பாஷயில் இவ்வளவு ஏகம்,திஸ்ரம் ,கண்டம் என்று விளக்கமாக சொன்னார்."பேஷ்,பேஷ் என்று   

                                                                   



                                                                                                                             தொடரும்



உதவி அன்பர் மாலதி ஜெயராமன் 

                                                          முருகா சரணம்                                                                                                                              

Friday, 11 January 2019

நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்




                               நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்                                   
                   தில்லி  திரு இராமமூர்த்தியின் அனுபவங்கள்                             
                                               பகுதி ..1
                                                                                                                                      
                                                                                 

ம்மை ஆட்டுவித்து  நம்மை ஆட்கொண்ட குருஜியின் நினைவலைகளில் அன்பர்கள் என்றென்றும் திளைத்து பரவச நிலையில் திகழ்வது கண்கூடு.குறிப்பாக குருஜியுடன் பல ஆண்டுகள் உடனிருந்த பாக்யசாலிககளான டெல்லி அன்பர்களும் சென்னை அன்பர்களும்  மும்பை அன்பர்களும் தான்.அண்மையில்தில்லி மற்றும் சென்னையில்  நடைபெற்ற மணிவிழா நிகழ்ச்சிகளில்  அன்பர்கள் தங்களில் நினைவலைகளை மன நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.அவை UTUBE வடிவங்களில் வெளியாகியுள்ளன. 

அதில் குருஜியின் மகிமையையும்,திருப்புகழ் பற்றி மட்டும் இடம் பெற்றன. சொந்த விவகாரங்கள்,அனாவசிய புகழ்ச்சி போன்றவைகளுக்கு இடமே இல்லை.நண்பர்களில் குரு பக்தியும் பண்பாடு ம்  வெளிப்பட்டன.

அந்த வகையில் டெல்லி அன்பர் என் .ராமமூர்த்தி அவர்கள்சொல்லவொண்ணா தன்னுடைய நினைவலைகளை  தன் கை  வண்ணத்தில் முத்து முத்தாக எழுதி  தற்போது அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அதில்,குருஜி செந்திலாண்டவன் உத்திரவின் படி,உணர்த்திய படி   பாடல்கள் அமைந்தது,வகுப்பு வழிபாடு அனுபவங்கள்,காரில் செல்லும் போதே பாடல்கள் அமைத்தது,பத உச்சரிப்பு,எப்படி பத அர்த்தங்களுக்கு ஏற்ப ஏற்றி இறக்கி பாடுவது,தாள நுணுக்கங்கள்,நிர்வாகத்தில் கணக்கு வழக்கு,நிதானம்,பொறுமை,சங்கீதம் அறியாத அன்பர்களை ராகங்களுடன் பாட வைத்தது,மாணவர்களை ஆசானாக்கியது,குருஜி அஷ்டாங்க யோகம்,சமாதி நிலை ,அதற்கு மேற்பட்ட நிர்விகல்ப சமாதிநிலை,ஸ்ரீ வித்யா தத்வம்,அத்வைத தத்வம் முதலியவற்றை  உட்கொண்டது ,மற்றும்" திருப்புகழ் வழிபாடுகளில் பாடுபவர்கள் வேறு,கேட்பவர்கள்வேறு என்று கிடையாது எல்லோரும் பாடுபர்கள் தான் எல்லோரும் கேட்பவர்கள்" என்ற உயர்  தத்துவத்தை கடை பிடித்தது.அன்பர்களுக்கு உணர்த்தியது 
போன்ற அருமையான குருஜியின் மகிமைகள் வெளிப்படுகின்றன.

சிகரம் வைத்தாற்போல் அன்பர்களுக்கு வழிபாடு நிறைந்தவுடன் விபூதி பிரசாதம் கொடுப்பதை பற்றி, "தான் வழங்கும் விபூதி பிரசாதத்துக்கு கொஞ்சமாவது பலன் இருக்கணும்னா  தன்னை தகுதி படுத்திக்கொள்ள "அண்ண ஆகாரம் தீர்த்தம் அருந்தாமல் வழிபாடு நேரம் முழுவதும் விரதம் கடைபிடித்து சுய கட்டுப்பாடுகளை தமக்கு தானே விதித்து பின்பற்றியது. .இதைப்படிக்கும் போது நெஞ்ச நெகிழ்கிறது.

இறுதியாக .".It is too early to assess to Guruji;s contribution.Generation to come are going to be benifitted from his cassets .After several years only we will be able to assess his contribution to the  Thiruppugazh Movements"  என்று நிறைவு செய்கிறார்.( நிதர்சனமான சத்யம்)

 அன்பர் ராமமூர்த்தியின் நினைவலைகளை நம் வலைத்தளத்தில் வெளியிடுவதை பெருமையாக கருதுகிறோம். சில பகுதிகளாக வெளிவரும்.

அன்பர்கள் பொறுமையாக வாசித்து குரு மஹிமையை அனுபவிக்க வேண்டுகிறோம்.


                                                                                       







                                                                                                                                                                                          ஜெயித்தருளும்இசைப் பிரியனான முருகன்ரக பாவ தாளத்தோடு  பாட முடியாத அன்பர்கள் திருப்புகழை  உரை நடையிலேயே   படித்துச் சொன்னாலும்   மனதளவிலே படித்துத் தெரிந்து கொண்டாலும்   அவர்களது குறைகளை எல்லாம் நீக்கி அருளுகிறான்

                                                                                                                              தொடரும்

உதவி  அன்பர் மாலதி ஜெயராமன்


u tubes published  by us are available in the following link

https://www.youtube.com/channel/UCig4GnMNmCHwvGlQVUHr_NA/videos

Tuesday, 8 January 2019

அபிராமி அந்தாதி - 37



                                                          அபிராமி அந்தாதி - 37 

                                                                                


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே

அன்பரின் விளக்கவுரை 

அம்பிகையை, கேசாதி பாதாந்தம், வர்ணனை செய்கிறார் பட்டர்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் - கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது கரும்பும் பூக்களும்
 மனமாகிய கரும்பு வில்லும் , பஞ்சதன்மாத்திரைகளான (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து மூலப்பொருட்கள்) ஐந்து மலரம்புகளும் அன்னையின் கரங்களில் அணியாக கைவிளங்குகின்றன.

கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை - தாமரை போன்ற திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது வெண்ணிற முத்துமாலைகள்
விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் - நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும் இடைக்கு அணிந்து கொள்வது பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும் பட்டுத்துணியும்
எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே - எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும் எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 32. ரத்ன க்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலான்விதா - ரத்னத்தால் அமைந்த அட்டிகை பதக்கம் அவைகளிலிருந்து தொங்கும் முத்துமாலைகளோடும் கூடியவள். கழுத்தை ஒட்டிய அட்டிகை, அதன் நடுவே பதக்கம், அவற்றின் கீழ் தொங்கும் முத்துச்சரங்கள், 

இம்மூன்றும், மூன்று வகையான பக்தர்களைக் காட்டுவது போல் உள்ளன. சிலருடைய வாய் மட்டும் தேவியை துதிக்குக் கொண்டிருக்கும்ம் அனால் மனம் எங்கோ இருக்கும். அவர்களது நினைவில் தேவி கழுத்தளவு தான் நிற்கிறாள். இவர்கள் க்ரைவேய சிந்தாகர்கள்.

கழுத்திற்கு மேல் தேவியைப் பற்றி நினைப்போடிருப்பவர்கள் அட்டிகையில் தொங்கி ஆடிக் கொண்டிருக்கும் லோலர்கள். அவர்களுடைய மனமும் செயலும் வழிபாட்டில் சிறிது நேரமும் வேறொங்கோ சிறிது நேரமும் ஆடிக்கொண்டிருக்கும்.

மூன்றாவது வகையோ, முக்தா - விடுபட்டவர்கள். வெளிச்சிந்தனைகளும், அதன் விளைவாக செயல்பாடும் நீங்கி மனத்தாலும், செயலாலும் வாக்காலும் தேவியிடம் ஈடுபட்டவர்கள்.

51. ஸர்வாபரண பூஷிதா - எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவள். 

சிவனை திகம்பரனாகச் சொல்லி, அவன் பத்னியை சகலாபரண பூஷிதையாகக் கூறும் அபிராமி பட்டரின் கவிநயம் வெகு அழகு!
இப்படி உடல் முழுக்க ஆபரணங்கள் சூடிக்கொண்டு நமக்கு தரிசனம் தரும் அந்த அன்னை, நம்மை யாரிடம் சேர்க்கிறாள்? எந்த ஒரு ஆடை அணிகலங்களும் சூடிக்கொள்ளாத, திகம்பரனாய்த் திகழும் அந்த ஈசனிடம் நம்மை சேர்ப்பிக்கிறாள். அந்த ஈசன், எட்டுத்திக்குகளையே ஆடையாய் அணிந்து இருப்பவன். இந்த உலகு அனைத்தையும் தனது மேனியாய்ர்க் கொண்டவன். இப்படி, அனைத்து உலகையுமே தனது ஆடையாய்க் கொண்டதனால், அவன் 'திருவுடையான்' ஆகிறான் என்கிறார் பட்டர் 

அபிராமி சமயம் நன்றே!!
                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                                                       காம்போதி ராகம்                          

    
u tubes published  by us are available in the following link

https://www.youtube.com/channel/UCig4GnMNmCHwvGlQVUHr_NA/videos

                              முருகா சரணம் 

Friday, 4 January 2019

சுப்பிரமணிய புஜங்கம் 24


                                                                       சுப்பிரமணிய புஜங்கம்  24


  
अहं सर्वदा दुःखभारावसन्नो
भवान्दीनबन्धुस्त्वदन्यं न याचे ।
भवद्भक्तिरोधं सदा कॢप्तबाधं
ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम् ॥ २४ ॥
அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே |
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் ||


உரை ஆசிரியரின் விளக்கம் 
ஆதி சங்கர பகவத்பாதாள் மஹான், ஞானி. அவருக்கு ஒரு துக்கமும் கிடையாது. இருந்தாலும், நாம இருக்கற நிலைமையை உணர்ந்து, எப்படி பகவான் கிட்ட என்ன வேண்டணும் அப்படீன்னு சொல்லி கொடுக்கறதுக்காக இப்படி ஒரு ஸ்லோகம் சொல்றார்.
 ‘அஹம் ../நான் 
 ‘ஸர்வதா’ – எப்பொழுதும்,
 ‘துக்கபாராவஸந்ன:’ – துக்க பாரத்தை சுமந்துண்டு, அந்த பளு தாங்க முடியாம, பரிதவிச்சிண்டு இருக்கேன், அவஸ்த்தை பட்டுண்டு இருக்கேன்
. ‘பவான்’ – தாங்கள் 
‘தீனபந்து’ – தீனன்னா ஏழை, அனாதை, யாரும் இல்லாதவன் ன்னு அர்த்தம். அந்த மாதிரி இருக்கறவாளுக்கு பந்து நீ தான்
த்வதன்யம் நயாசே’ – உன்னைத் தவிர இன்னொருவர்  கிட்ட போய் நான் கேட்க மாட்டேன். (இது ஒரு முக்கியமான message, பகவான் கிட்டத்  தான் நாம கஷ்டத்தை சொல்லி அழணும்,)
 ‘த்வம்’ – நீ 
க்லுப்த பாதம்’ எனக்கு கஷ்டத்தை கொடுக்க கூடிய,
பவத்பக்தி ரோதம்’ – உன்னுடைய பக்தியை பண்ண முடியாம என்ன ஸ்ரமபடுத்தும், தின்னா உடம்புக்கு வர்ற வ்யாதி, ஆதின்னா மனசுக்கு வரக்கூடிய இந்த கவலைகள், அந்த துக்க பாரம்-ன்னு சொல்றாரே, அதெல்லாம் சேர்த்து ஒரே வார்த்தைல ஆதி-ன்னு சொல்லுவா

(நங்கநல்லூர்-ல எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேய ஸ்வாமி  ‘ஆதிவ்யாதி ஹர ஆஞ்சநேய ஸ்வாமி’ என்று திரு நாமம் கொண்டுள்ளார்.)
ஆதி’ – வ்யா‘த்ருதம்’ – சீக்ரமாக
‘நாஷய’ அப்படீன்னு சொல்லும்போது, இந்த இடத்துல ‘ஹே உமாஸுதா’ ன்னு சொல்றார் , உமையின் மைந்தனே, பார்வதி போல அந்த கருணை உள்ளம், ஸுப்ரமண்ய ஸ்வாமிக்கும் இருக்கறதுனால, நீ எந்தன் துக்க பாரத்தை போக்கு, அப்படீன்னு சொல்றார்.
இந்த இடத்துல தேதியூர் சாஸ்திரிகள் ஒரு ஸ்லோகம் சொல்றார்.
चिता चिन्ता तयोर्मध्ये चिन्ता एव गरीयसि |
चिता दहति निर्जीवं चिन्ता जीवन्तमप्यहो ||
சிதா சிந்தா தயோர்மத்யே சிந்தா ஏவ கரீயஸி |
சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ஜீவந்தம் அப்யஹோ ||
‘சிதாவுக்கும் சிந்தாவுக்கும் தராசுல வெச்சு பார்த்தா, சிந்தா தான் ரொம்ப வந்து பலசாலியா தெரியறது. சிதை – கடைசில, இடுகாட்ல எரிப்பாளே அதுக்கு சிதைன்னு பேரு. அந்த சிதை உயிர் போன பின்ன தான் எரிக்கறது, இந்த சிந்தைங்கற கவலை, உயிரோடு இருக்கும் போதே மனிதனை எரிக்கறதே!’ ன்னு சொல்றார். அப்படி அந்த சிந்தைக்கு இடம் கொடுக்க கூடாது.
நாம துக்கப் படறோம்ன்னு நமக்கு தெரியறது, அந்த துக்கத்துக்கு காரணம் என்ன? நாம ரொம்ப பந்தத்துல மாட்டிண்டு, அதனால தான் சந்துஷ்டி இல்லாம இருக்கோம், அப்ப்டீங்கறத எப்பயோ ஒரு சமயத்துல உணர்றோம், உணர்ந்தா கூட இதெல்லாம் எப்படி விட முடியும், இனிமே எப்படி விட முடியும், அப்படியெல்லாம் நினைச்சிண்டு, ஆசார்யாள் இங்கே சொல்ற இந்த பிராத்தனையே நாம பண்ண மாட்டேங்கறோம்.
 இந்த ஸ்லோகத்துல ‘நான் உன்னையே வேண்டறேன், என்னை இந்த துக்கத்துலேர்ந்து மீட்டு விடு’ அப்படீன்னு பகவான் கிட்ட போய் ப்ரார்த்தனை பண்றது கூட பண்ண மாட்டேங்கறோம், ஏதோ இந்த துக்கத்துக்கு நடுவில சொட்டு சுகம் இருந்தா, அதே போறும்-னு த்ருப்தி ஆயிடறோம். அப்படி ஆகாமல், இந்த கொஞ்சம் கொஞ்சம் பண்ற பகவத் பஜனத்துல கிடைக்கக்கூடிய அந்த ருசியை புரிஞ்சிண்டு, இது அம்ருதம், இந்த அம்ருதமான வாழ்வு தான் வேணும் அப்படீன்னு வேண்டணும்.
நான் இருக்கற நிலைமை எனக்கு துக்கத்தை கொடுக்கறது, இதுலேர்ந்து நான் மீளனும், அப்படீன்னு நினைச்சா தான் மீள முடியும். வ்யாதி என்னன்னு diagnose பண்ணின பிறகு தான் மருந்து கொடுக்க முடியும். அந்த மாதிரி நம்முடைய கஷ்டத்துக்கு காரணமான பந்தங்கள்-எல்லாம் விடணும் அப்படீன்னு நாம வேண்டணும். ‘இதெல்லாம் ok. இது இப்படித்தான் இருக்கும்’ அப்படீன்னு நினைக்கக் கூடாது. எதோ ஒரு வேலையில பளு ஜாஸ்த்தியா இருக்கு, ஒரு இடத்துல இருக்கறது கஷ்டமா இருக்கு, இல்லை ஒரு relationship சரியா இல்லன்னா, நாம பகவான் கிட்ட வேண்டிக்கணும். ‘இந்த மாதிரி பந்தத்துல என்னை வைக்காதே, நான் மோக்ஷம் அடைஞ்சு சந்தோஷமா இருக்கணும், உன்னுடைய பக்தியை பண்ணனும்’ அப்படீன்னு நாம பகவான் கிட்ட வேண்டிக்கணும்.
அப்படி பயப்பட வேண்டாம். உன்னுடைய எல்லா நலன்களையும் பகவான் பார்த்துப்பார் ன்னு அருணகிரிநாதர் சொல்றார்.
 ‘மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே’ ன்னு பாடறார். உனக்கு பணம் வேணுமா. கிடைக்கும், இந்திர பதவி வேணுமா. கிடைக்கும், நீ நல்ல தமிழ் பாடல்கள் பாடணும்னு ஆசைப்படறியா, உனக்கு கிடைக்கும், எமனை விரட்டி விடணும்னு ஆசை படறியா, உன்னால முடியும் அப்படி சொல்லிட்டு,
இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தையினையினி விடும்பெருத்த பாருளீர்’ –
 நீங்க ஏதோ ஒரு வித்தை வெச்சிண்டு இருக்கேள். இதனால, நான் நாலு காசு சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கபோறேன் ன்னு நினைக்கறேளே, அதை விட்டுடுங்கோ ‘மயிலையும் அவன்திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே’ பகவானோட பஜனத்தை பண்ணுங்கோ, அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி, ஆச்சார்யாள் சொல்லி கொடுக்கறார் நமக்கு.
அருணகிரி நமக்காக இந்த மாதிரி நிறைய வேண்டிண்டு இருக்கார். 
ஒரு பழனி பாட்டுல…
“வசன மிகவேற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சர மதாலே
இகபர செளபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநி மலை வீற்று அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே”
“ஏதோ பேச்சுகள் எல்லாம் பேசிப் பேசி உன்னை மறந்து, அதனால மனது துயர் ஆற்றில் உழன்றுண்டு இருக்கு. அதை விட்டுட்டு, ‘இசை பயில் சடாக்ஷரம் அதாலே’ உன்னுடைய சடாக்ஷரத்த இசையோடு கூடி இடையறாம ஜபிச்சு, அதனால ‘இகபர செளபாக்யம் அருள்வாயே’.. எனக்கு இகபர செளபாக்யத்தைக் கொடு… பழநிமலை வீற்று அருளும் வேலா.. அப்படின்னு பாடுறார்.
இதே மாதிரி எனக்கு கவலையினால என் மனமும், உடலும் தளர்ந்து மெலிந்து போகிறதுக்கு முன்னாடி உன்னுடைய தரிசனம் கிடைக்கணும்.
பகர்தற்கரிதான செந்தமிழ் இசையிற் சில பாடலன்பொடு
பயிலப் பல காவியங்களை ……யுணராதே
பவளத்தினை வீழியின் கனியதனைப் பொருவாய் மடந்தையர்
பசலைத் தனமே பெறும்படி …… விரகாலே
சகரக்கடல் சூழும் அம்புவி மிசையிப்படியே திரிந்துழல்
சருகொத்துளமே அயர்ந்துடல் …… மெலியாமுன்
தகதித் திமிதா கிணங்கிண எனவுற்றெழு தோகையம்பரி
தனில் அற்புதமாக வந்தருள் …… புரிவாயே


சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.).

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   

                    நீயே அடைக்கலம்

   அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
      அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
         மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
            மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே.
       ...... 24

   ஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு செந்தூரிலமர்ந்திருக்கும், தேவர்களுக்கெல்லாம் மணியாய் விளங்குபவனே! அடியேனோ எப்பொழுதும் துன்பப்படுபவன். நீயோ ஏழைபங்கன். உன்னைத் தவிர எனக்குத் துணையாக வேறு யாரையும் அறியேன். சிறியேனாகிய என்னை அணுகும் துன்பங்கள் யாவும் பொடிப் பொடியாக அருளுவாயாக.


சுப்பிரமணிய புஜங்கம் இசை வடிவில் 

சிறார்களின் குரலில் 


                                        முருகா சரணம் 





Wednesday, 26 December 2018

வள்ளிகல் யாணவைபவம் காணொளி



                                            வள்ளிகல்யாண வைபவம்  காணொளி

வைபவத்தில் நேரில் கலந்துகொண்டு  களித்த அன்பர்கள் பாக்கிய சாலிகள்.கலந்துகொள்ள முடியாத பல அன்பர்களின் குறையைப் போக்க தற்போது வைபவ நிகழ்ச்சிகளை  UTUBE வடிவில் அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அதன் குறியீடுகள் 



1...       .https://youtu.be/8-BnOUcueSU

2.          https://youtu.be/eH10zlRcACQ

3.          https://youtu.be/R29gkgxqX3Y  

4           https://youtu.be/oXZvxtV-jOM

          https://youtu.be/ow4L2OidR3s

                                                                                  முருகா சரணம் 




1...       .

Tuesday, 18 December 2018

வள்ளி கல்யாணம் நிறைவு


                                             வள்ளி கல்யாணம்  நிறைவு



                                                                                             




                                                                                                         


அடியார்களை சுகப் பட வைக்க கல்யாண சுபுத்திரனாக எழுந்தருளி வள்ளி குறமாதைதிருப்பரங்குன்ற திருத்தலத்தில் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் மணந்த வைபத்தில் வையகமெங்கிலிருந்தும் திரண்டு வந்து கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான அன்பர்களில் அடியேனும் ஒருவனாக பெருமானின் பேரருள் பெற்ற பாக்கிய சாலியானேன்.


கோபால்சாமி திருமண மண்டபத்தில் காலை ஏழரை மணி முதல் நிகழ்வு தொடங்கும் என அறிவித்த போதும்  ஆர்வத்தோடு ஆறு மணியிலிருந்தே இடம் பிடித்து அமர தொடங்கினர். மேடையில் திருப்பரங்கிரி தீரன் திருக்கோவிலில் எவ்வாறு தரிசனம் தருகிறானோ அது மாதியே கல்யாண மேடையில் தரிசனம் தந்தான். 

                                                                                    சந்நிதானம்

                                                                                             


 அரங்கில் கீழும் , மேலும் , படிக்கட்டிகளிலும்,  முன்புறத்திலும் அன்பர்கள் அமர்ந்து கொண்டு ஆனந்தமாக பாடினார்கள் 

கடைசி வரையிலும் அமைதி காத்ததினால் பாட்டு ஒன்றத்தவிர வேறு சத்தமே கேட்கவில்லை.பாஸ்கர ராஜபுரத்திலிந்து வள்ளி தேவசேனா சமேதனாக பரமன் வந்தான். கல்யாண சுபுத்திரனாக தன்னை கண்கவர் அலங்காரதோடு மாப்பிள்ளை கோலத்தில்  தனி இடத்தில் அமர்ந்து கொண்டான்.


திருப்புகழ் இசை வழிபாடுகளில் அன்பர்களை பயபக்தியுடனும்,பரவச நிலையிலும் ,த்யான நிலையிலும்தான் காண்போம்.ஆனால் வள்ளி கல்யாண வைபவத்தில் அன்பர்கள் சிறிது உல்லாச நிலையிலும்,உற்சாக நிலையிலும் ,இருந்ததை காண முடிந்தது. காரணம் பெருமானையும் வள்ளி பிராட்டியையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து தங்கள் இல்லத்து திருமண மாக கொண்டாடியதுதான்.

ஆண்டாள் கல்யாணம் போன்ற வைபவங்களில் தோடய  மங்களம்,குரு கீர்த்தனம்,முத்துக்குத்தல்,நலங்கு,கல்யாண அஷ்டபதி,டோலோத்சம் என்ற வரிசையில் நடைபெறும்.

ஆனால் தமிழ்ப் கடவுளான முருகன் திருக்கல்யாணத்தில் அருணகிரி நாதரின் நவமணிகளிளிருந்துதொகுத்து,எடுத்த பாடல்களிலே வள்ளி கல்யாணத்தில் அமைத்துள்ளது மற்றுமொரு சிறப்பு அம்சம்.

அந்த வகையில் அன்றைய வைபவம் திருப்புகழ் இசை வழிபாடு முறையில்ஆரம்பித்துவிநாயகர்குருவந்தனம்,பரங்குன்றம்,செந்தூர்,பழனி,சுவாமிமலை,திருத்தணி வரை பாடல்கள் இடம் பெற்றபின் கல்யானவைபவம் தொடங்கியது.


.பாஸ்கர ராஜபுரத்திலிந்து வள்ளி தேவசேனா சமேதனாக பரமன் எழுந்தருளினார் 


                             

                       
         
              மாதர்கள் சீர் வரிசையுடன்  


                            
                                
பெருமான் மேளதாளத்தோடு,சீர் வரிசைகளுடன்,சிறுமியர் கும்மி கோலாட்ட குதூகலத்துடன் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

                                        

                     

                                           
பின் முருகனுக்கு வள்ளியையும் வள்ளிக்கு முருகனையும் அறிமுகம் செய்யும் படலம்.தொடந்து மாலை மாற்றல் ஊஞ்சல்,தமிழிலும் வடமொழியிலும் ப்ரவரங்கலோதி கன்னிகா தானம் கூரை அணி வித்து மாங்கல்ய தாரணம் வேதா கோஷங்களுடனும் ,மங்கல இசையுடனும்கல்யாணம்  நிறைவேறியது. 



அன்பர்கள் மனம் உருகி தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தினர்.
பாணிக்ரஹனம்,சப்தபதி என்ற வரிசையில் கல்யாணம் வைபவம் நிறைவுற்றது.

பெருமான் வள்ளி தெய்வயானை சமேதனாக மணக்கோலத்தில் வீற்றிருக்க வாழ்த்துக்கள் பாடி ஷோடசோ பசாரங்களுடன் ஆராதனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பெருமானின் தர்பாரில் பாடல்,வாத்திய இசை ,நடன நிகழ்சிகளும் நடை பெற்றபின் மங்கலாரத்தி பிராத்தனைகள் சாந்தி கீதத்துடன் கல்யாண உத்சவம் இனிதே நிறைவுற்றது




மற்ற முருகன் தளங்களிலிருந்து வந்த பிரசாதங்கள் திருப்புகழ் பாடல்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன.

அடுத்த வருடம் 29-12-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று சோலை மலை அடிவாரத்தில் உள்ள, குளிர் சாதன வசதியோடு கூடின, ஒரு மிகப் பெரிய , புதிய திருமண மண்டபத்தில் வள்ளி கல்யாணம் நடைபெற பகவான் சித்தம் கொண்டுள்ளான் எனும் செய்தியை நமது மணி சார் அறிவித்த போது அன்பர்களின் உள்ளம் சொல்லொணா ஆனந்தம் அடைந்தது .

நாமும் வள்ளியைப்போல் திடமான மனதுடன் முருகனையே அடைய வேண்டுமென்று அருணகிரிநாதர் காட்டிய ஆன்மீக நெறியில் நின்று செயல் படுவோமேயானால் பரமாத்மாவான முருகன் வலியச்சென்று ஜீவாத்மாவான வள்ளியை தன்னிடம் செர்த்துக்கொண்டதுபோல் நம்மையும் ஆட்கொள்வான் என்ற மன நிறைவுடன் அன்பர்கள் பிரியா விடை பெற்றனர்.

அடுத்த வள்ளி கல்யாணத்துக்காக காத்திருப்போம்.

மும்பை வெங்கடராமன். 

                  முருகா சரணம்