Tuesday, 18 December 2018

வள்ளி கல்யாணம் நிறைவு


                                             வள்ளி கல்யாணம்  நிறைவு



                                                                                             




                                                                                                         


அடியார்களை சுகப் பட வைக்க கல்யாண சுபுத்திரனாக எழுந்தருளி வள்ளி குறமாதைதிருப்பரங்குன்ற திருத்தலத்தில் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் மணந்த வைபத்தில் வையகமெங்கிலிருந்தும் திரண்டு வந்து கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான அன்பர்களில் அடியேனும் ஒருவனாக பெருமானின் பேரருள் பெற்ற பாக்கிய சாலியானேன்.


கோபால்சாமி திருமண மண்டபத்தில் காலை ஏழரை மணி முதல் நிகழ்வு தொடங்கும் என அறிவித்த போதும்  ஆர்வத்தோடு ஆறு மணியிலிருந்தே இடம் பிடித்து அமர தொடங்கினர். மேடையில் திருப்பரங்கிரி தீரன் திருக்கோவிலில் எவ்வாறு தரிசனம் தருகிறானோ அது மாதியே கல்யாண மேடையில் தரிசனம் தந்தான். 

                                                                                    சந்நிதானம்

                                                                                             


 அரங்கில் கீழும் , மேலும் , படிக்கட்டிகளிலும்,  முன்புறத்திலும் அன்பர்கள் அமர்ந்து கொண்டு ஆனந்தமாக பாடினார்கள் 

கடைசி வரையிலும் அமைதி காத்ததினால் பாட்டு ஒன்றத்தவிர வேறு சத்தமே கேட்கவில்லை.பாஸ்கர ராஜபுரத்திலிந்து வள்ளி தேவசேனா சமேதனாக பரமன் வந்தான். கல்யாண சுபுத்திரனாக தன்னை கண்கவர் அலங்காரதோடு மாப்பிள்ளை கோலத்தில்  தனி இடத்தில் அமர்ந்து கொண்டான்.


திருப்புகழ் இசை வழிபாடுகளில் அன்பர்களை பயபக்தியுடனும்,பரவச நிலையிலும் ,த்யான நிலையிலும்தான் காண்போம்.ஆனால் வள்ளி கல்யாண வைபவத்தில் அன்பர்கள் சிறிது உல்லாச நிலையிலும்,உற்சாக நிலையிலும் ,இருந்ததை காண முடிந்தது. காரணம் பெருமானையும் வள்ளி பிராட்டியையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து தங்கள் இல்லத்து திருமண மாக கொண்டாடியதுதான்.

ஆண்டாள் கல்யாணம் போன்ற வைபவங்களில் தோடய  மங்களம்,குரு கீர்த்தனம்,முத்துக்குத்தல்,நலங்கு,கல்யாண அஷ்டபதி,டோலோத்சம் என்ற வரிசையில் நடைபெறும்.

ஆனால் தமிழ்ப் கடவுளான முருகன் திருக்கல்யாணத்தில் அருணகிரி நாதரின் நவமணிகளிளிருந்துதொகுத்து,எடுத்த பாடல்களிலே வள்ளி கல்யாணத்தில் அமைத்துள்ளது மற்றுமொரு சிறப்பு அம்சம்.

அந்த வகையில் அன்றைய வைபவம் திருப்புகழ் இசை வழிபாடு முறையில்ஆரம்பித்துவிநாயகர்குருவந்தனம்,பரங்குன்றம்,செந்தூர்,பழனி,சுவாமிமலை,திருத்தணி வரை பாடல்கள் இடம் பெற்றபின் கல்யானவைபவம் தொடங்கியது.


.பாஸ்கர ராஜபுரத்திலிந்து வள்ளி தேவசேனா சமேதனாக பரமன் எழுந்தருளினார் 


                             

                       
         
              மாதர்கள் சீர் வரிசையுடன்  


                            
                                
பெருமான் மேளதாளத்தோடு,சீர் வரிசைகளுடன்,சிறுமியர் கும்மி கோலாட்ட குதூகலத்துடன் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

                                        

                     

                                           
பின் முருகனுக்கு வள்ளியையும் வள்ளிக்கு முருகனையும் அறிமுகம் செய்யும் படலம்.தொடந்து மாலை மாற்றல் ஊஞ்சல்,தமிழிலும் வடமொழியிலும் ப்ரவரங்கலோதி கன்னிகா தானம் கூரை அணி வித்து மாங்கல்ய தாரணம் வேதா கோஷங்களுடனும் ,மங்கல இசையுடனும்கல்யாணம்  நிறைவேறியது. 



அன்பர்கள் மனம் உருகி தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தினர்.
பாணிக்ரஹனம்,சப்தபதி என்ற வரிசையில் கல்யாணம் வைபவம் நிறைவுற்றது.

பெருமான் வள்ளி தெய்வயானை சமேதனாக மணக்கோலத்தில் வீற்றிருக்க வாழ்த்துக்கள் பாடி ஷோடசோ பசாரங்களுடன் ஆராதனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பெருமானின் தர்பாரில் பாடல்,வாத்திய இசை ,நடன நிகழ்சிகளும் நடை பெற்றபின் மங்கலாரத்தி பிராத்தனைகள் சாந்தி கீதத்துடன் கல்யாண உத்சவம் இனிதே நிறைவுற்றது




மற்ற முருகன் தளங்களிலிருந்து வந்த பிரசாதங்கள் திருப்புகழ் பாடல்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன.

அடுத்த வருடம் 29-12-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று சோலை மலை அடிவாரத்தில் உள்ள, குளிர் சாதன வசதியோடு கூடின, ஒரு மிகப் பெரிய , புதிய திருமண மண்டபத்தில் வள்ளி கல்யாணம் நடைபெற பகவான் சித்தம் கொண்டுள்ளான் எனும் செய்தியை நமது மணி சார் அறிவித்த போது அன்பர்களின் உள்ளம் சொல்லொணா ஆனந்தம் அடைந்தது .

நாமும் வள்ளியைப்போல் திடமான மனதுடன் முருகனையே அடைய வேண்டுமென்று அருணகிரிநாதர் காட்டிய ஆன்மீக நெறியில் நின்று செயல் படுவோமேயானால் பரமாத்மாவான முருகன் வலியச்சென்று ஜீவாத்மாவான வள்ளியை தன்னிடம் செர்த்துக்கொண்டதுபோல் நம்மையும் ஆட்கொள்வான் என்ற மன நிறைவுடன் அன்பர்கள் பிரியா விடை பெற்றனர்.

அடுத்த வள்ளி கல்யாணத்துக்காக காத்திருப்போம்.

மும்பை வெங்கடராமன். 

                  முருகா சரணம்



                                                                                                

No comments:

Post a Comment