Sunday, 18 August 2019

ஆடி வெள்ளி வைபவம் -நிறைவு




                                               ஆடி வெள்ளி வைபவம் -நிறைவு


                                                        
                                                                                                                   

ஆடி வெள்ளி வைபவம் லலிதா சஹஸ்ரநாமம் ,திரிசதி அர்ச்சனைகளுடன் தொடங்கி இசை வடிவில் மஹான் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அருளிய ஸ்ரீ துர்கா சந்திர கலா ஸ்துதி ,அபிராமி அந்தாதி,அபிராமி பதிகம் பாடல்களுடன் இனிதே நிறைவுற்றது.மும்பையின் பல பகுதிகளிலுமிருந்து அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

                                                                 சில புகைப்பட தொகுப்புகள்


                                                                 மங்களகரமான வரவேற்பு



                                                அன்பர் கோபால கிருஷ்ணனின் கைவண்ணத்தில்
                                                              எழுந்தருளிய அன்னை அபிராமி

                                                                                                             
                                                                                                           
                                                                                                         
                                                   
                                                                                                           


                                                                                                           
                       

                                                                                                             
         
                                                                                                                                                                                                     


                                                    இசை வடிவில்   ஸ்ரீ துர்கா சந்திர கலா ஸ்துதி   
                                            
                                           

                                                        இசை வடிவில் அபிராமி அந்தாதி 


                                                                                                                                                                                                                                            இசை வடிவில் அபிராமி பதிகம் 

                                                 

                                              அன்னை  அபிராமியே   சரணம் 

                                                               முருகா சரணம்                                                                                                

Monday, 12 August 2019


                                              மும்பையில் அருணகிரிநாதர் நினைவு விழா   
                                                                           18.8.2019                                                                  

                                                                                





                                              மும்பை யில்  18.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடை பெறவுள்ள அருணகிரிநாதர் நினைவு விழா வைபவத்தில் இடம் பெறும் பாடல் தொகுப்பை பக்தியுடன் அளிக்கிறோம்.

    


                                                                                                                 


Sunday, 11 August 2019

ஆடி வெள்ளி வைபவமும் அருணகிரிநாதர் நினைவு விழாவும்



                                     மும்பையில் ஆடி  வெள்ளி வைபவமும்  அருணகிரிநாதர் நினைவு விழாவும்

ஆடி  வெள்ளி வைபவம் வரும்ஆகஸ்ட்  16ம்  நாள் வெள்ளிக் கிழமை பிற்பகல் 4 மணி அளவில் மும்பை செம்பூர் அஹோபில மட ஆலய வளாகத்தில் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி அபிராமி அந்தாதி ,அபிராமி பதிகம் மற்றும் திருப்புகழ் பாடல்களுடன் நடை பெற உள்ளது.

தொடர்ந்து வழக்கம்போல் அருணகிரிநாதர் நினைவு விழா ஆகஸ்ட்  18 ம் நாள்ஞாயிற்றுக்கிழமை   மும்பை செம்பூர் செட்டாநகர்  திரு முருகன் திருக்கோயிலில்  காலை 7.30 அளவில் தொடங்கி 108 திருப்புகழ் பாடல்களுடன் வழிபாடு நடைபெற உள்ளது.

                                                                            அழைப்பிதழ் 

                                                                                  


மும்பை ,புணே ,அன்பர்கள் மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் மற்ற அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் பேரருள் பெற வேண்டுகிறோம்.

                                                      முருகா சரணம் 

Sunday, 4 August 2019

அபிராமி அந்தாதி.... 40



                                                            அபிராமி அந்தாதி....  40



முன் செய் புண்ணியமே (பாடல் 40)


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே

அன்பரின் விளக்கவுரை 

வாள் நுதல் கண்ணி
ஒளி பொருந்திய நெற்றி கொண்டவள் அன்னை : அந்நெற்றியில் கண்ணையும் உடையவள் அவள்.

சிவபிரான் உள்ளது போன்றே உமை அம்மைக்கும் நெற்றியில் கண் உண்டு. இவ்விருவர்க்கு உள்ளது போன்றே இவர்தம் முதல் மதலையான விநாயகருக்கு மூன்று கண்கள் உண்டு. இரண்டாம் பிள்ளையான முருகனுக்கு முகத்துக்கு மூன்று கண்கள் வீதம் ஆறுமுகங்களுக்குப் பதினெட்டு கண்கள் உண்டு. ' வாள் நுதல் கண்ணி' யை என்று குறிப்பிட்டது ஒரு பெருமை.

'வாணுதற் கண்ணி' என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். லலிதாசஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தர்யலஹரியில் ஒளி வீசும் நெற்றி, நெற்றிக் கண் இரண்டு விதத்திலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறாள் சக்தி. சிவனுடைய நெற்றிக்கண்ணே சக்தி தான் என்றும் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சௌந்தர்யலஹரியிலும் அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது ("சிவனுடைய கண்ணின் கனலானவள்").

பட்டரின் சொல்லாட்சியை ரசிப்போம். 'தேவரையும் மூவரையும் பெற்றவள், சிவனுடன் பலவிதங்களில் காமப்போர் புரிபவள்' என்றெல்லாம் முன்பு சொல்லிவிட்டு இங்கே அபிராமியைக் கன்னி என்கிறாரே பட்டர்? கருணையுடையவள், எளியவருக்கும் அருள் புரிபவள் என்று முந்தைய பாடல்களில் சொன்னவர், இங்கே அபிராமியை எளிதில் காணமுடியாதவள் என்பானேன்? கன்னி என்ற சொல்லுக்கு அழிவில்லாத, எல்லாவற்றுக்கும் தொடக்கமான என்று பொருளுண்டு. அபிராமி அழிவில்லாதவள் என்பதால் கன்னி என்றார். 


விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை - விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விருப்படும் எங்கள் தலைவியை,

பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை - ஒன்றுமறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை


 பேதமை என்றால் அறியாதிருத்தல் என்று பொருள். பெண்ணுக்குப் பேதை என்று ஒரு பொருள் உண்டு. பெண்கள் அறிவில்லாதவர்கள் என்று பொருள் அல்ல. சிலவற்றை அறிந்தும் அறியாதவர் போல் காரணம் தொட்டு நடந்து கொள்வதால் பெண்களுக்குப் பேதை எனும் பொருள் வழங்கலாயிற்று. தேவர்களும் கடவுளருமே பணிந்து வணங்கும் அழிவில்லாத அபிராமியை அறிந்தும் நம்பிக்கையிழந்து அறிவில்லாதவர் போல் நடந்து கொள்ளும் பேதைகளுக்கு அபிராமியின் அண்ணியம் கிடைக்காது என்பதால், 'பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள்' என்றார் பட்டர். அண்ணுதல் என்றால் நெருங்குதல்; அண்ணித்தல் என்றால் அருளுதல்.

" நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாதவள் என்றால், அவள் நம் அருகிலேயே இருக்கிறாள்; நாமாக அழைத்தாலும் அவள் வருவாள் ; நாம் அணுகிச் சென்றாலும் அவளருளைப் பெறலாம். அதற்குப் புண்ணியம் பண்ணிட வேண்டும். 


புண்ணியத்தால் அடையத்தக்கவள் நம் பிராட்டி. இனி காணுதற்கு என்றார் அல்லவா. " பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு " என்று அபிராமிபட்டர் சொன்னார் அல்லவா? காணும் என்றால், கோவில் சென்று அர்ச்சாவதார மூர்த்தியைக் கண்டு வணங்குவதை அவர் குறிப்பிடவில்லை. சாமானியர் என்ற பாமரர் பக்தி அது. அதை விடச் சிறந்தது. " நெஞ்சில் காணுதல் " என்ற பக்தி. நெஞ்சில் அவளைக் காணமுடியுமா! அதற்கும் அபிராமிபட்டர் பதில் தந்தார்.
" நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாதவள் என்றால், அவள் நம் அருகிலேயே இருக்கிறாள்; நாமாக அழைத்தாலும் அவள் வருவாள் ; நாம் அணுகிச் சென்றாலும் அவளருளைப் பெறலாம். அதற்குப் புண்ணியம் பண்ணிட வேண்டும். 

காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் 
புண்ணியமே - காணும் அன்பு கொள்ளவேண்டும் என்று எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே.


முன்பிறவியில் புண்ணியம் செய்வோருக்குத் தான் இப்பிறவியில் அவள்பால் பக்தி உண்டாகும். ஸ்ரீவித்யா உபாசனையும், தேவி மந்திரமும் பூர்வ புண்ணியத்தாலேயே உண்டாகும். ஆதிசங்கரர் ஸௌந்தர்யலஹரீ முதல் ஸ்லோகத்திலே " ஹரி - ஹர - விரிஞ்சாதிபி - ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கமதக்ருத - புண்ய : ப்ரபவதி " - என்று ஒரு கேள்வியாகக் கேட்பது வெகு அழகு. அதாவது " விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய உன்னை புண்ணியம் செய்யாதவன், வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்ஙனம் தகுதியுடையவனாவான்? "


லலிதா ஸஹஸ்ரநாமாவளியிலும் அம்பிகையை

543. புண்ய லப்யா - முன் செய்த புண்யத்தால் அம்பாளின் க்ருபை கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னால், நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்து இருந்தால் தான் அம்பாளை இப்பிறவியில் பூஜை செய்யும் பாக்கியம் கிடைக்கும். அதுவும் அவள் அருளாலேயே

அத்தகைய பேற்றையும் பெருமையும் கொண்ட எம்பெருமாட்டியைத் துதித்திட ஒருவர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்; அன்னையைத் துதித்திட நாமும் அத்தகைய புண்ணியத்தை இனியாவது செய்வோமா!!
அபிராமி சரணம் சரணம்!!

                           
                                       பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                            
                                          அபிராமி சரணம் சரணம்!!
                                                   முருகா சரணம்                                                  

Tuesday, 23 July 2019

மும்பையில் ஆடி கிருத்திகை வழிபாடு

                                                                                                                                 மும்பையில் ஆடி கிருத்திகை வழிபாடு 
                                                                                                  


                                                                                                  
 ஆடி கிருத்திகை வழிபாடு வழக்கம்போல்  வரும் ஜூலை  26 ம் நாள் வெள்ளிக்கிழமை  நவி மும்பை ஸ்ரீ வள்ளி தேவா சேனா சமேத பிரசன்ன கல்யாண சுப்ரமணிய ஸ்வாமி திருகி கோயிலில் பிற்பகல் 4 மணி அளவில் ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி  திருப்புகழ் இசை வழிபாடு நடை பெற உள்ளது .மும்பை புனே அன்பர்கள்,மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் மற்ற அன்பர்களும் பெருமளவில்  கலந்துகொண்டு பெருமானின் பேரருள் பெற வேண்டுகிறோம்.

                                                                  அழைப்பிதழ்
                                                                                                  


மற்றும் நம் குருஜியின் ஜெயந்தி விழா வரும் ஆகஸ்ட் மாதம் 25ம்  நாள் ஞாயிற்றுக்கிழமை  மாலை 4 மணி அளவில் அதே  திருக்கோயிலில் நடை பெறஉள்ளதையும் அன்பர்கள்  நினைவு கொள்ள வேண்டுகிறோம் 

                                     முருகா சரணம் 


                                                                                                           

Thursday, 13 June 2019


                                 ஆனி மூலம் வைபவம் 



                                                                               


அருணகிரிநாதரின் அவதார நன்னாளான ஆனி மூலம்   வைபவம்
வழக்கம்போல்  இசை வழிபாடுடன் முலுண்டில் பிரம்மபுரி மண்டபத்தில்  ஜூன்   18ம்  நாள் செவ்வாய் கிழமை அன்று பிற்பகல் 4.15 அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெற உள்ளது .அன்பர்கள் பெருமளவில்  கலந்து கொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் 


                                



அந்த நன்னாள்  நாட்டின் பல திருத்தலங்களில் வெகு சிறப்பாக நடை பெற உள்ளது.

திருவண்ணாமலை தலத்தில்  ஜூன் 17 ம் நாள்  அன்று பல குழுக்கள் இணைந்து வெகு சிறப்பாக கொண்டாட உள்ளார்கள்.

அழைப்பிதழ் 


                                                                  



அதற்கு முன்னோடியாக நம் சென்னை அன்பர்கள் திருவண்ணாமலை திருத்தலத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்  முகாமில் அவர் சன்னிதானத்தில் திருப்புகழ் இசை வழிபாடு ஜூன் 15 ம் நாள் காலை 11மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்க உள்ளார்கள்.

அழைப்பிதழ் 

Special Thiruppuggazh Isauvazipadu will be held at H H Kanchi Shankaracharya:s camp at. Thiruvannamalai.
Date: Saturday 15th June 2019. Time 11 AM to 2 PM
All Anbargal are requested to attend. Anbargal are requested to make their own travel arrangements etc.
From K Muthuswamy, Secretary, Thiruppuggazh Anbargal (Regd), Chennai Region.  

 இந்த சந்தர்ப்பத்தில்  குருஜி "திருப்புகழ் கனி அமுதம்" விழா மலரில் (செப்டம்பர் 1998) எழுதியுள்ள ஓர் ஆங்கில கட்டுரையை அளிக்கிறோம்.


 மற்றும்  அருணகிரியாரின்  வரலாற்றில்  ஒர்  அற்புதமான நிகழ்வை  பார்ப்போம்

# கருணைக்கு அருணகிரி :-

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அறுத்து  விடுவார்.


இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார்.


அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். 


இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர்.


அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

             (கந்தர் அந்தாதி ...54)

இதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார்.


வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார்

 இதனால், "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். 

வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, "வில்லிபாரதம்" என்ற பெயரில் தமிழில் எழுதினார்.


இந்த பாடலின் பொருளை திருமுருக கிருபானந்த வாரியார் பின்வருமாறு விளக்குகிறார்.


திதத்த ததித்த: திதத்த ததித்த     என்னும் தாள வாக்கியங்களை,

திதி:                               தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை:                         உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத:                              மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி:                           புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி:                            பாம்பாகிய ஆதிசேசனின்,
தா:                                 முதுகாகிய இடத்தையும்,
தித:                               இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து:                           அலை வீசுகின்ற,
அத்தி:                           சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய                                                                                             வாசற்தலமாகக் கொண்டு),

ததி:                              ஆயர்பாடியில் தயிர்,

தித்தித்ததே:              மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று                                                                      சொல்லிக்கோண்டு,
து:                                 அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து:                      போற்றி வணங்குகின்ற,
இதத்து:                       போரின்ப சொரூபியாகிய,
ஆதி:                             மூலப்பொருளே,
தத்தத்து:                     தந்தங்களை உடைய,
அத்தி:                          யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை:                       கிளி போன்ற தேவயானையின்,
தாத:                             தாசனே,
திதே துதை:               பல தீமைகள் நிறைந்ததும்,
தாது:                            ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால்                                                            நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி:              மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து:               பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி:              எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ:                                  அக்னியினால்,
தீ:                                  தகிக்கப்படும்,
திதி:                             அந்த அந்திம நாளில்,
துதி தீ:                         உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த                                                         என்னுடைய புத்தி,
தொத்ததே:                உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.  

அன்பர்கள் நிகழ்ச்சிகளில்  பெருமளவில் 
கலந்து கொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

முருகா சரணம் 

U TUBES published by us are available on the following Link

https://www.youtube.com/channel/UCig4GnMNmCHwvGlQVUHr_NA/videos